அன்புடைமை -திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்

பொருள் : அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

அருஞ்சொற்பொருள் : அன்பிற்கும்-உள்ள நெகிழ்ச்சிக்கும்; உண்டோ-உளதோ; அடைக்கும்-அடைத்து வைக்கும்; தாழ்-தாழ்ப்பாள்; ஆர்வலர்-முதிர்ந்த அன்புடையவர்; புன்-துன்பம்; கணீர்-கண்+நீர், கண்(ணில் பெருகும்) நீர்; பூசல்-ஆரவாரம்; தரும்-கொடுக்கும்..

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

அருஞ்சொற்பொருள் : அன்பிலார்-அன்பு இல்லாதவர், தொடர்புடையார் மாட்டு உள்ள நெகிழ்ச்சி இல்லாதவர்; எல்லாம்-அனைத்தும்; தமக்குரியர்-தமக்கு உரியனவாகக் கொள்வர், தங்களுக்கு உரிமையுடையார்; அன்புடையார்-அன்புடையவர்; என்பும்-எலும்பும், உடம்பும்; உரியர்–உரிமையுடையார்; பிறர்க்கு-மற்றவர்க்கு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

அருஞ்சொற்பொருள் : அன்போடு-அன்புடன்; இயைந்த-பொருந்திய; வழக்கு-நெறி, வழி, பழக்க முறை, பயன், முறைமை; என்ப-என்று சொல்லுவர்; ஆருயிர்க்கு-அருமையான உயிருக்கு; என்போடு-உடம்போடு, எலும்புடன் கூடிய உடலோடு; இயைந்த-உண்டாகிய; தொடர்பு- உறவு, தொடர்ச்சி, நட்பு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு

பொருள்: அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் தேடாத சிறப்பைத் தரும்.

அருஞ்சொற்பொருள்: அன்பு-உள்ள நெகிழ்ச்சி; ஈனும்-பயக்கும்; ஆர்வம்-விருப்பம்; உடைமை-உடையனாந் தன்மை .

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள் : உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

அருஞ்சொற்பொருள் : அன்புற்று-உள்ள நெகிழ்ச்சியுடன், அன்பு செய்யப்பட்டு, அன்பின் வழியே, அன்பில் ஒன்றி; அமர்ந்த-பொருந்திய; வழக்கு- பொருந்திய முறை, வழங்கும் நெறி, நெறி, வழி, பழக்க முறை, பயன், நெறியின் பயன், முறைமை, பண்பு மரபு; என்ப-என்று சொல்லுவர்; வையகத்து-உலகத்தில்; இன்புற்றார்-மகிழ்ச்சியடைந்தவர்; இன்பம் நுகர்ந்தவர், மகிழ்ச்சி பெற்றவர்; எய்தும்-அடையும்; சிறப்பு-சிறப்பு, பெருமை.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை

பொருள்: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

அருஞ்சொற்பொருள் : அறத்திற்கே-நற்செயலுக்கே; அன்பு-உள்ள நெகிழ்ச்சி; சார்பு-சார்ந்து நிற்பது, துணை; என்ப-என்று சொல்லுவர்; அறியார்-அறியாதவர்; மறத்திற்கும்-மறத்திற்கும், அறச்செயல் அல்லாததற்கும்; அஃதே-அதுவே; துணை-உதவி.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்

பொருள்: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

அருஞ்சொற்பொருள் : என்பு-எலும்பு; இலதனை-இல்லாததை; வெயில்-ஞாயிற்றின் வெப்பம்; போல-ஒத்திருப்ப; காயுமே-எரிக்குமே, கருக்கிவிடுமே; அன்பு-அன்பு, உள்ள நெகிழ்ச்சி; இலதனை-இல்லாததை; அறம்-அறம்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று

பொருள்: அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

அருஞ்சொற்பொருள் : அன்பு-தொடர்புடையார்மாட்டு உள்ள நெகிழ்ச்சி; அகத்து-உள்ளே; இல்லா-இல்லாத; உயிர்-உயிர்; வாழ்க்கை-வாழ்தல்; வன்-வலியதாகிய; பாற்கண்-நிலத்தில்; வற்றல்-உலர்ந்தாகிய; மரம்-மரம்; தளிர்த்து-தளிர்த்து, கொழுந்துவிட்டு; அற்று-போலும், அத்தன்மைத்து.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு

பொருள்: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

அருஞ்சொற்பொருள் : புறத்துஉறுப்பு-வெளிஉறுப்பு; எல்லாம்-அனைத்தும், எவையும்; எவன்செய்யும்-என்ன செய்யும்?, என்னத்துக்கு?; யாக்கை-உடம்பு; அகத்துஉறுப்பு – உள் உறுப்பு; அன்பு–அன்பு, உள்ள நெகிழ்ச்சி; இலவர்க்கு-இல்லாதவர்க்கு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

அருஞ்சொற்பொருள் : அன்பின் வழியது-அன்பின் வழியது அல்லது அன்பை அடிப்படையாகக் கொண்டது; உயிர்நிலை-உயிர் நிற்பது; அஃதிலார்க்கு-அது இல்லாதவருக்கு (அதாவது அன்பு இல்லாதவர்களுக்கு); என்பு-எலும்பு; தோல்-தோல்; போர்த்த-சுற்றி மூடிய; உடம்பு-உடம்பு

Telegram Logo GIF அன்புடைமை -திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page