FOR THIS ONLINE TEST-CLICK HERE
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
பொருள்: சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
அருஞ்சொற்பொருள்: வகை-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; வல்லவை-கற்றுவல்ல நூற்பொருள்கள், வலியமன்றம்; வாய்சோரார்-வாய் வழுப்படச் சொல்லார்; சொல்லின்-சொல்லினது; தொகை-குழு; அறிந்த-தெரிந்த; தூய்மையவர்-தூய்மையினையுடையார்.
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லுவார்
பொருள்: கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
அருஞ்சொற்பொருள்: கற்றாருள்-கற்றவர்களுள்; கற்றார்-கற்றவர்; எனப்படுவர்-என்று சொல்லப்படுவார்; கற்றார்முன்-கற்றவர் கண்; கற்ற-கற்கப்பட்டவை; செல-மனங்கொள்ள; சொல்லுவார்-சொல்லக்கூடியவர்.
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்
பொருள்: பகைவர் உள்ள போரக்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக் களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே.
அருஞ்சொற்பொருள்: பகை-எதிரி; அகத்து-இடையில்; சாவார்-இறப்பார். (இங்கு இறக்க அஞ்சாதவர்); எளியர்-முயற்சியின்றி கிடைத்தற்குரியர்; அரியர்-அரிய செயலைச் செய்பவர்; அவை-மன்றம், அரங்கம்; அகத்து-இடையில்; அஞ்சாதவர்-பயமற்றவர்.
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
பொருள்: கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: கற்றார்-கற்றவர்; முன்-எதிரில்; கற்ற-கற்றவற்றை; செலச்சொல்லி-மனங்கொள்ள உரைத்து; தாம்-தாம்; கற்ற-கற்றதினும்; மிக்காருள்-மிகக்கற்றவரிடத்தில்; மிக்க-மிக்கவை; கொளல்-அறிக.
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு
பொருள்: அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: ஆற்றின்-நெறியால்; அளவு-அளவு, அளவை நூல்; அறிந்து-தெரிந்து; கற்க-கற்க வேண்டும்; அவை-மன்றம்; அஞ்சா-நடுங்காமல்; மாற்றம்-எதிர் உரை; கொடுத்தல்-தருதல்; பொருட்டு-(அதற்காக).
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
பொருள்: அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?
அருஞ்சொற்பொருள்: வாளொடு-வாட்கருவியுடன்; என்-என்ன?; வன்கண்ணர்-வீரம், தறுகண்மை; அல்லார்க்கு-அல்லாதவர்க்கு; நூலொடு-இலக்கியங்களோடு; என்-என்ன?; நுண்ணவை-நுண்ணிய அறிவினையுடையார் அவை; அஞ்சுபவர்க்கு-நடுங்குபவர்களுக்கு.
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்
பொருள்: அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.
அருஞ்சொற்பொருள்: பகை-எதிரியாந்தன்மை; அகத்து-நடுவே; பேடி-கோழை, பெண்ணியல்பு மிகுந்த ஆடவன், அலி; கை-கை; ஒள்-ஒளிபொருந்திய, கூர் தீட்டியதல் ஒளிவிடும்; வாள்-வாள் என்னும் போர்க்கருவி. அவை-மன்றம்; அகத்து-இடையில்; அஞ்சும்அவன்-நடுங்குபவன்; கற்ற-கற்ற; நூல்-இலக்கியம்.
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
பொருள்: நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
அருஞ்சொற்பொருள்: நல்லவையுள்-நல்ல மன்றத்தில்; நன்கு-நன்றாக; செல-உள்ளங்கொள்ள; சொல்லாதார்-சொல்லமாட்டாதவர்; பல்லவை-பலவற்றை; கற்றும்-கற்றும்; பயம்-பயன்; இலரே-இல்லாதாரே.
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்
பொருள்: நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
அருஞ்சொற்பொருள்: கல்லாதவரின்-கல்லாதவரைக் காட்டிலும்; கடை-கீழ், இழிந்தவர்; என்ப-என்று சொல்லுவர்; கற்று-கற்று; அறிந்தும்-தெரிந்தும்; நல்லார்-நல்லவர்; அவை-மன்றம்; அஞ்சுவார்-நடுங்குபவர்.
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
பொருள்: அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளை (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
அருஞ்சொற்பொருள்: உளர்-இருக்கின்றனர்; எனினும்-என்றாலும்; இல்லாரொடு-இறந்தாரோடு; ஒப்பர்-ஒப்புமையாவார்; களன்-இடம், அவை; அஞ்சி-நடுங்கி; கற்ற-கற்கப்பட்டவை; செல-மனங்கொள்ள; சொல்லாதார்-சொல்லமாட்டாதவர்.
⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அவையஞ்சாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️