ஈகை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

பொருள் : வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.

அருஞ்சொற்பொருள்: வறியார்க்கு-இல்லாதவர்க்கு; ஒன்று-ஒருபொருள் (உணவு); ஈவதே-கொடுப்பதே; ஈகை-கொடை; மற்று-பிறுது; எல்லாம்-அனைத்தும்; குறிஎதிர்ப்பை-திரும்பப்பெறுதலைக் குறியாக உடையது-பிறிதொரு பயனை எதிர்பார்த்து(கொடுத்தல்); நீரது-தன்மையை; உடைத்து-உடையது

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று

பொருள் : பிறரிடமிருந்து பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.

அருஞ்சொற்பொருள்: நல்-நல்ல; ஆறு-நெறி; எனினும்-என்றாலும்; கொளல்-ஏற்றல்; தீது-கொடிது; மேல்உலகம்-உயர்வாகிய உலகம் (வீட்டுலகம்); இல்லெனினும்-இல்லை என்றாலும்; ஈதலே-கொடுத்தலே; நன்று-நன்மையுடையது

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள

பொருள் : `யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.

அருஞ்சொற்பொருள்: இலன்-இல்லாதவன்; என்னும்-என்கின்ற; எவ்வம்-துயரம்; உரையாமை-சொல்லாதிருத்தல்; ஈதல்-கொடுத்தல்; குலன்-நற்குடிப்பண்பு; உடையான்கண்ணே-உடையவனிடத்தில்; உள-இருக்கின்றன

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணும் அளவு

பொருள் : பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.

அருஞ்சொற்பொருள்: இன்னாது-இனிதன்று; இரக்கப்படுதல்-ஏற்கப்படுதல்; இரந்தவர்-ஏற்றவர்; இன்-இனிய; முகம்-முகம்; காணும்-பார்க்கும்; அளவு-வரை.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்

பொருள் : தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

அருஞ்சொற்பொருள்: ஆற்றுவார்-செய்யவல்லவர்க்கு; ஆற்றல்-வலிமை; பசி-பசி; ஆற்றல்-பொறுத்தல்; அப்பசியை-அந்தப் பசியை; மாற்றுவார்-ஒழிப்பவர்; ஆற்றலின்-வலியைவிட; பின்-பிறகு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி

பொருள் : வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

அருஞ்சொற்பொருள்: அற்றார்-பொருள் இல்லாதவர்; அழி-மிக்க; பசி-பசி; தீர்த்தல்-போக்குதல்; அஃது-அது; ஒருவன்-ஒருவன்; பெற்றான்-அடைந்தவன்; பொருள்-உடைமை; வைப்புழி-வைக்கும் இடம்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது

பொருள் : தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.

அருஞ்சொற்பொருள்: பாத்து-பகுத்து; ஊண்-உண்ணுதல்; மரீஇயவனை-தழுவுவனை அல்லது பயின்றவனை; பசி-பசி; என்னும்-என்கின்ற; தீப்பிணி-கொடிய நோய்; தீண்டல் அரிது-உண்டாகாது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

வைத்துஇழக்கும் வன்க ணவர்

பொருள் :  தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?

அருஞ்சொற்பொருள்: ஈத்து-கொடுத்து; உவக்கும்-மகிழ்தலால்; இன்பம்-இன்பம்; அறியார் கொல்-அறியமாட்டாரோ?; தாம்-தாங்கள்; உடைமை-பொருள்; வைத்து-வைத்து; இழக்கும்-இழந்துபோம்; வன்கணவர்- கொடியவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்

பொருள் : பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.

அருஞ்சொற்பொருள்: இரத்தலின்-ஏற்பதைவிட; இன்னாது-கொடியது; மன்ற-திண்ணமாக(உறுதிப் பொருள்); நிரப்பிய-நிரப்ப வேண்டி; தாமே-தாங்களாகவே; தமியர்-தனியராக; உணல்-உண்ணுதல்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை

பொருள் :  சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.

அருஞ்சொற்பொருள்: சாதலின்-இறத்தலைவிட; இன்னாதது-கொடியது; இல்லை-இல்லை; இனிது-நன்றானது; அதூஉம்-அதுவுங்கூட; ஈதல்-கொடுத்தல்; இயையாக்கடை-முடியாதவழி.

Telegram Logo GIF ஈகை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page