ஊக்கமுடைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE

உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்

உடையது உடையரோ மற்று

பொருள் : ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?

அருஞ்சொற்பொருள்: உடையர்-பெற்றுள்ளவர்; எனப்படுவது-என்று (சிறப்பித்துச்) சொல்லப்படுவது; ஊக்கம்-மனவெழுச்சி; அஃது-அது; இல்லார்-இல்லாதவர்; உடையது-உடைமையாகக் கொண்டது; உடையரோ-உடையராவரோ; மற்று-வேறு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்

பொருள் :  ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

அருஞ்சொற்பொருள்: உள்ளம்-(ஊக்கமுள்ள) உள்ளம்; உடைமை-பெற்றிருப்பது; உடைமை-சொத்து; பொருளுடைமை-செல்வப் பொருள்; நில்லாது-நிலைக்காமல்; நீங்கிவிடும்-நீங்குவது திண்ணம்

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துஉடை யார்

பொருள் : ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.

அருஞ்சொற்பொருள்: ஆக்கம்-செல்வம்; இழந்தேம்-இழந்துவிட்டோமே; என்று-என்பதாக; அல்லாவார்-அலமந்து வருந்தமாட்டார்; ஊக்கம்-மனவெழுச்சி; ஒருவந்தம்-உறுதியாக; கைத்து-கையகத்து; உடையார்-உடையவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை

பொருள் : சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

அருஞ்சொற்பொருள்: ஆக்கம்-செல்வம்; அதர்-வழி; வினாய்-வினவிக்கொண்டு; செல்லும்-போகும்; அசைவு-சோம்புதல்; இலா-இல்லாத; ஊக்கம்-மனவெழுச்சி; உடையான்-உடையவன்; உழை-இடத்தில்

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு

பொருள் : நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

அருஞ்சொற்பொருள்: வெள்ளத்து-நீர்ப்பெருக்கத்து; அனைய-அளவின; மலர்-பூ; நீட்டம் -நீளங்கள்; மாந்தர்-மக்கள்; தம்-தமது; உள்ளத்து-ஊக்கத்தினது; அனையது-அளவினது; உயர்வு-உயர்ச்சி.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து

பொருள் : எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

அருஞ்சொற்பொருள்: உள்ளுவது-நினைப்பது; எல்லாம்-அனைத்தும்; உயர்வு-உயர்ச்சி; உள்ளல்-கருதுக; மற்று-(அசைநிலை) அது-அது; தள்ளினும்-கூடாவிடுனும்; தள்ளாமை-தவறாமை; நீர்த்து-தன்மையுடையது.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்

பட்டுப்பாடு ஊன்றும் களிறு

பொருள் :  உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.

அருஞ்சொற்பொருள்: சிதைவு-அழிதல்; இடத்து-இடத்தில்; ஒல்கார்-தளரார்; உரவோர்-ஊக்கமுடையவர்; புதை-அம்புக்கட்டு; அம்பின்-அம்பால்; பட்டு-பட்டால்; பாடு-பெருமை; ஊன்றும்-நிலை நிறுத்தும்; களிறு-ஆண் யானை.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு

பொருள் : ஊக்கம் இல்லாதவர், ‘இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார்.

அருஞ்சொற்பொருள்: உள்ளம்-(உள்ள)ஊக்கம்; இலாதவர்-இல்லாதவர்; எய்தார்-அடையமாட்டார்; உலகத்து-உலகத்தில்; வள்ளியம்-வண்மை(ஈகைக் குணம்)யுடையோம்; என்னும்-என்கின்ற; செருக்கு-பெருமிதம்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

பரியது கூர்ங்கோட்டது ஆயினும்

யானை வெரூஉம் புலிதாக் குறின்

பொருள் :  யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

அருஞ்சொற்பொருள்: பரியது-பெரிய உடம்பினையுடையதாய்; கூர்-கூர்மையாகிய; கோட்டது-கொம்பினையுடையது (தந்தங்களையுடையது); ஆயினும்-ஆனாலும்; யானை-வேழம்; வெரூஉம்-அஞ்சும்; புலி-வேங்கை; தாக்கு-எதிர்த்தல்; உறின்-உற்றால்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார்

மரம்மக்கள் ஆதலே வேறு

பொருள் : ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

அருஞ்சொற்பொருள்: உரம்-அறிவாற்றல்; ஒருவற்கு-ஒருவற்கு; உள்ள-ஊக்க; வெறுக்கை-மிகுதி; அஃது-அது; இல்லார்-இல்லாதவர்; மரம்-மரம்; மக்கள்-மாந்தர்; ஆதலே-ஆகுதலே; வேறு-பிறுது.

Telegram Logo GIF ஊக்கமுடைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page