கண்ணோட்டம்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு

பொருள்: கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

அருஞ்சொற்பொருள்: கண்ணோட்டம்-இரக்கம்; என்னும்-என்கின்ற; கழிபெரும்-மிகப்பெரிய, மிகச்சிறப்பான; காரிகை-அழகு; உண்மையான், உள்ளமையால், இருத்தலால், உண்டாகலான்; உண்டு-உளது, இருக்கிறது; இவ்வுலகு-இந்த உலகம்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை

பொருள்:  கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை.

அருஞ்சொற்பொருள்: கண்ணோட்டத்து-இரக்கத்தில்; உள்ளது-இருக்கின்றது; உலகியல்-உலகநடை.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்ணென்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்?

பொருள்:  பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?

அருஞ்சொற்பொருள்: பண்-இசை; என்னாம்-சொல்லோம்; பாடற்கு-பாடுதல் தொழிலோடு; இயைபு-பொருத்தம்; இன்றேல்-இல்லையாயின்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்

பொருள்:  தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்?

அருஞ்சொற்பொருள்: உள-இருக்கின்றவை; போல்-நிகராக; முகத்து-முகத்தின் கண்; எவன்-என்ன பயன்?; செய்யும்-செய்யும்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்

புண்என்று உணரப் படும்

பொருள்:  ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

அருஞ்சொற்பொருள்: கண்ணிற்கு-கண்ணுக்கு; அணிகலம்-அணியப்படும் நகை; கண்ணோட்டம்-இரக்கம்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு

இயைந்துகண் ஓடா தவர்

பொருள்: கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.

அருஞ்சொற்பொருள்: மண்ணோடு-மண்ணுடன்; இயைந்த-பொருந்தி நிற்கின்ற; மரத்துஅனையர்-மரம்போன்றவர், மரத்தைஒப்பர்; கண்ணோடு-கண்களோடு, கண்ணுடன்; இயைந்து-பொருந்தி இருந்து; கண்ஓடாதவர்-இரக்கம் காட்டாதவர்

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்

பொருள்:  கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர். கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை.

அருஞ்சொற்பொருள்: கண்ணோட்டம்-இரக்கம்; இல்லவர்-இல்லாதவர்; கண்-விழி; இலர்-இல்லாதார்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்துஇவ் வுலகு

பொருள்: தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.

அருஞ்சொற்பொருள்: கருமம்-முறை செய்தல், செயற்பாடு, தொழில்; சிதையாமல்-அழியாமல்; கண்ணோட-இரக்கப்பட; வல்லார்க்கு-திறமையுடையவர்க்கு; உரிமை உடைத்து-உரிமை உடையது; இவ்வுலகு-இந்த உலகம்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை

பொருள்:  தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

அருஞ்சொற்பொருள்: ஒறுத்தாற்றும்-தண்டித்துச் செய்யக்கூடிய; பண்பினார்கண்ணும்- இயல்பினாரிடத்தும்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்

பொருள்: யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

அருஞ்சொற்பொருள்: பெய-இடப்படுவதை, ஊற்றுதலை; கண்டும்-நேரில்பார்த்தும்; நஞ்சு-நஞ்சு, (கொல்லும் தன்மை கொண்ட பொருள் குறித்தது); உண்டு-உண்டு, உட்கொண்டு; அமைவர்-மேவுவர், அமைதியாய் இருப்பர்; நயத்தக்க-நயக்கத்தக்க, விரும்பத்தகுந்த; நாகரிகம்-உயர்ந்த பண்பு, கண்ணோட்டம்; வேண்டுபவர்-விரும்புபவர், விழைபவர்.

Telegram Logo GIF கண்ணோட்டம்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page