கூடா ஒழுக்கம்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்

பொருள்: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

அருஞ்சொற்பொருள்: வஞ்ச-ஏமாற்றும்; மனத்தான்-உள்ளமுடையவன்; படிற்று-மறைவான; ஒழுக்கம்-ஒழுக்கம்; பூதங்கள்-மண், நீர், எரி, கால், விசும்பு என்ற இயற்கைப் பெரும் படைப்புகள்; ஐந்தும்-ஐந்தும்; அகத்தே-மனத்தில்; நகும்-எள்ளி நகைக்கும்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றம் படின்

பொருள்: தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவக்கோலம், ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?

அருஞ்சொற்பொருள்: வான்-விசும்பு; உயர்-உயர்ந்த; தோற்றம்-தோற்றம், உருவம்; எவன்-என்னத்தை; செய்யும்-செய்யும்; தன்-தனது; நெஞ்சம்-உள்ளம்; தான்-தான்; அறி-அறிந்த; குற்ற-குற்றம்; படின்-உண்டாயின்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

பொருள்: மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றது.

அருஞ்சொற்பொருள்: வலி-வலிமை அல்லது உறுதி; இல்-இல்லாத; நிலைமையான்-இயல்பினையுடையவன்; வல்-வலிய; உருவம்-தோற்றம்; பெற்றம்-பசு; புலியின்-வேங்கையினது; தோல்-தோல்; போர்த்து-போர்வையாகச் செய்து; மேய்ந்து-மேய்ந்தால்; அற்று-அத்தன்மைத்து.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று

பொருள்: தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தவம் அல்லாத தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

அருஞ்சொற்பொருள்: தவம்-தவவேடம்; மறைந்து-மறைந்து; அல்லவை-தீய செயல்கள்; செய்தல்-இயற்றல்; புதல்-புதர்; மறைந்து-ஒளிந்து; வேட்டுவன்-வேடன்; புள்-பறவை; சிமிழ்த்து-பிணித்து; அற்று-அத்தன்மைத்து.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவும் தரும்

பொருள்: பற்றுக்களைத் துறந்தோம்’ என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், என்ன செய்தோம் என்ன செய்தோம்’ என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.

அருஞ்சொற்பொருள்: பற்று-விருப்பம்; அற்றேம்-இழந்தேம்; என்பார்-என்று சொல்லுபவர்; படிற்று-மறைந்த ஒழுக்கம்-ஒழுக்கம்; எற்றுஎற்று-என் செய்தோம்! என் செய்தோம்!! என்று-என்பதாக; ஏதம்-துன்பம்; பலவும்-பலவற்றையும்; தரும்-கொடுக்கும்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்

பொருள்: மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.

அருஞ்சொற்பொருள்: நெஞ்சில்-உள்ளத்தில்; துறவார்-துறவு கொள்ளமாட்டார்; துறந்தார்-பற்றினை விட்டவர்; போல்-போல; வஞ்சித்து-ஏமாற்றி; வாழ்வாரின்-வாழ்வாரைப் போல; வன்கணார் -கொடியார்; இல்-இல்லை.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி

மூக்கின் கரியார் உடைத்து

பொருள்: புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு.

அருஞ்சொற்பொருள்: புறம்-வெளியிடம்; குன்றி-குன்றிமணி; கண்டனையரேனும்-பார்த்ததில் (தோற்றத்தில்) ஒப்பரேனும்; அகம்-நெஞ்சம்; குன்றி-குறைந்து; மூக்கின்-மூக்குப் போல; கரியார்-இருண்டிருப்பவர்; உடைத்து-உடைத்து.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி

மறைந்தொழுகும் மாந்தர் பலர்

பொருள்: மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

அருஞ்சொற்பொருள்: மனத்தது-நெஞ்சத்துள்ளது; மாசாக-குற்றமாக; மாண்டார்-மாட்சிமைப் பட்டவர்; நீர்-நீர்; ஆடி-முழுகி; மறைந்து-ஒளிந்து; ஒழுகும்-நடந்து கொள்ளும்; மாந்தர்-மக்கள்; பலர்-பலர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்

பொருள்: நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அருஞ்சொற்பொருள்: கணை-அம்பு; கொடிது-தீயது; யாழ்-வீணை போன்ற ஒரு வகை நரம்பு இசைக்கருவி; கோடு-வளைவு, கொம்பு; செவ்விது-நேரானது; ஆங்கு-அவ்வகையே; அன்ன-அதுபோன்ற; வினைபடுபாலால்-செயலின் விளைவுப் பகுதி; கொளல்-அறிக.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

பொருள்: உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால், மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக் கோலங்களும் வேண்டா.

அருஞ்சொற்பொருள்: மழித்தலும்-மொட்டையடித்தலும்; நீட்டலும்-நீளவளர்த்தலும்; வேண்டா-வேண்டுவதில்லை; உலகம்-உலகத்தார்; பழித்தது-குற்றம் எனக் கூறியதை; ஒழித்து-நீக்கி; விடின்-விட்டால்.

Telegram Logo GIF கூடா ஒழுக்கம்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page