செங்கோன்மை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை

பொருள்: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

அருஞ்சொற்பொருள்: அருஞ்சொற்பொருள்: ஓர்ந்து-ஆராய்ந்து, நாடி; கண்ணோடாது-இரக்கம் காட்டாமல்; இறை புரிந்து-இறையாண்மை செலுத்தி, நடுவு நிலைமையைப் பொருந்தி; யார்மாட்டும்-எவரிடத்தும்; தேர்ந்து-தெளிந்து, ஆராய்ந்து; செய்வஃதே-செய்தலே, இங்கு ஆளுதலைச் செய்வதே; முறை-நீதி, ஒழுங்கு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி

பொருள்: உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

அருஞ்சொற்பொருள்: வான்-மழை; நோக்கி-நம்பி; வாழும்-வாழ்கின்றன, உளவாக நிற்கும்; உலகு-உலகம், உலகத்தார்; எல்லாம்-அனைத்தும்; மன்னவன்-ஆட்சியாளர், வேந்தன்; கோல்-செங்கோல்; முறை செய்யுங் கோல்; நோக்கி-எதிர்பார்த்து; வாழும்-வாழும்; குடி-குடிமக்கள்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்

பொருள்: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

அருஞ்சொற்பொருள்: அந்தணர்-அறவோர்; நூற்கும்-நூலுக்கும்; அறத்திற்கும்-அறத்திற்கும்; ஆதியாய்-முதலாய், முதலாய், மூலமாய், காரணமாய்; நின்றது-நிலைபெற்றது; மன்னவன்-வேந்தன்; கோல்-முறை செய்யுங் கோல், செங்கோல்ஆட்சி அதாவது நல்லாட்சி.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு

பொருள்: குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலைபெறும்.

அருஞ்சொற்பொருள்: குடிதழீஇ-குடி மக்களை அணைத்து, குடிமக்களின் கருத்தை மதித்து அவர்கள் நன்மைக்காக; கோல்ஓச்சும்–முறை செய்யுங்கோல் செலுத்தும், செங்கோல்ஆட்சி அதாவது நல்லாட்சி செய்யும்; மாநில மன்னன்-பெருநிலம் முழுமையயும் ஆளுகை செய்யும் ஆட்சியர்; அடி-வழி; தழீஇ-பொருந்தி; நிற்கும்-நிலைத்திருக்கும்; உலகு-உலகத்தார், உலகு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு

பொருள்:  நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படுவனவாகும்.

அருஞ்சொற்பொருள்: இயல்புளி-இயல்பால்=இலக்கணத்தால்; கோல்-முறை செய்யுங் கோல்; ஓச்சும்-செலுத்தும்; மன்னவன்-வேந்தன்; நாட்ட-நாட்டில் உள்ளன.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாது எனின்

பொருள்:  ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்; அச்செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

அருஞ்சொற்பொருள்: வேல்-படைக்கலப் பொது; அன்று-இல்லை; வென்றி-வெற்றி; தருவது-கொடுப்பது; மன்னவன்-வேந்தன்; கோல்-முறைசெய்யுங்கோல்

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்

பொருள்:  உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

அருஞ்சொற்பொருள்: இறை-வேந்தன்(அரசு); காக்கும்-காப்பாற்றும்; வையகம்-மண்ணுலகம்; எல்லாம்-அனைத்தும்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்

பொருள்:  எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் காலத் தாழ்ச்சியால், (பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.

அருஞ்சொற்பொருள்: எண்-எளிய; பதத்தான்-செவ்வியுடையவனாய்; ஓரா-ஆராய்ந்து; முறை-நீதி; செய்யா-இயற்றாத; மன்னவன்-வேந்தன்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுஅன்று வேந்தன் தொழில்

பொருள்:  குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத், தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.

அருஞ்சொற்பொருள்: குடி-குடிமக்கள்; புறம்-பிறர்; காத்து-காப்பாற்றி; ஓம்பி-பேணி; குற்றம்-பிழை; கடிதல்-ஒறுத்தல்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர்

பொருள்: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.

அருஞ்சொற்பொருள்: கொலையில்-கொலையினும், கொலைத் தொழிலினால்; கொடியாரை-தீயவரை, கொடிய செயல்கள் செய்தவரை; வேந்து-அரசு, மன்னவன்; ஒறுத்தல்-தண்டித்தல்; பைங்கூழ்-பசிய பயிர், பசுமையாகிய பயிர்; களை-வேண்டாப் பூண்டு(களையப்படுவது); கட்டதனோடு-நீக்குதலோடு, களைவதோடு; நேர்-ஒக்கும், நிகர்.

Telegram Logo GIF செங்கோன்மை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page