நடுவுநிலைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்

பொருள்: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

அருஞ்சொற்பொருள்: தகுதி- (அதிகாரம் நோக்கி) நடுவு நிலைமை; என-என்று சொல்லப்படுகின்ற, எனப்படும்; ஒன்று நன்றே-ஒப்பற்ற நன்மையுடையதே; பகுதியால்-வகைதோறும்; பாற்பட்டு-முறைமை விடாமல்; ஒழுக-நடந்துகொள்வார், நடந்துகொள்ள; பெறின்-எனின், நேர்ந்தால்

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து

பொருள்: நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

அருஞ்சொற்பொருள்: செப்பம்-நடுவுநிலைமை; உடையவன்-பெற்றுள்ளவன், நடந்துகொள்பவன்; ஆக்கம்-செல்வம், பெருக்கம், ஈட்டம், படைப்பு; சிதைவின்றி-அழிதல் இல்லாமல்; எச்சத்திற்கு-வழியினர்க்கு; ஏமாப்பு-பாதுகாப்பு, அரண், வலியாதல்; உடைத்து-உடையது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்

பொருள்: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

அருஞ்சொற்பொருள்: நன்றே-நன்மையே; தரினும்-தரும் என்றாலும், கொடுத்தாலும்; நடுவு- நடுவுநிலைமை; இகந்தாம்- நீங்குதலால்; ஆக்கத்தை-செல்வத்தை, முன்னேற்றத்தை, மேம்பாட்டை, ஆதாயத்தை; அன்றே-அப்பொழுதே, அந்த நாளில்; ஒழிய-நீங்க; விடல்-விட்டொழிக, கைவிடுக.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்

பொருள்: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

அருஞ்சொற்பொருள்: தக்கார்-நடுநிலைமையுடையவர்; தகவு-நடுவு நிலைமை; இலர்-இல்லாதவர்; என்பது-என்று சொல்லப்படுவது; அவரவர்-அவரவர், ஒவ்வொருவரின்; எச்சத்தால்-எஞ்சுவதால்; காணப்படும்-அறியப்படும்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி

பொருள்: கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்

அருஞ்சொற்பொருள்: கேடும்-அழிவும், கெடுதலும், தாழ்வும்; பெருக்கமும்-ஆக்கமும்; இல்லல்ல-இல்லாதவை அல்ல; நெஞ்சத்து-உள்ளத்தில்; கோடாமை-(நடுநிலை) கோணாதிருத்தல், தவறாமை; சான்றோர்க்கு-சால்புடையாக்கு; அணி-அழகு, ஆபரணம்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின்

பொருள்: தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கி நினைக்குமாயின், ‘நான் கெடப்போகின்றேன்என்று ஒருவன் அறிய வேண்டும்

அருஞ்சொற்பொருள்: கெடுவல்-அழிந்துபடுவேன், அழியக்கடவேன்; யான்-நான்; என்பது-என்று; அறிக-உணரவேண்டும், தெரிந்து கொள்க; தன்-தனது; நெஞ்சம்-உள்ளம்; நடுவு-நடுவு நிலைமை; ஒரீஇ-ஒழிந்து; அல்ல-அல்லன, தீயவை, ஆகாதவைகளை; செயின்-செய்தால்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

பொருள்: நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.

அருஞ்சொற்பொருள்: கெடு-கெடுதல்; ஆக-ஆக; வையாது-கருதாது; உலகம்-உலகோர்; நடுவு-நடுவுநிலைமை, நேர்மை; ஆக-ஆகும்படி; நன்றிக்கண்-நன்னெறின்கண், அறத்தின் கண்; தங்கியான்-தங்கினவன்; தாழ்வு-குறைவு, வறுமை, செயலின் காலத்தாழ்ச்சி.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி

பொருள்: முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

அருஞ்சொற்பொருள்: சமன்-சரிநிலை, சமஅளவில்; செய்து-செய்து, இயற்றி; சீர்-அளவு; தூக்கும்-வரையறுக்கும், சரியாகக் காட்டும்; கோல்தராசு; போல்-போன்று, நிகராக; அமைந்து-பொருந்தி; ஒருபால்-ஒருபக்கம்; கோடாமை-கோணாதிருத்தல்; சான்றோர்க்கு-சான்றோர்க்கு; அணி-ஆபரணம், அழகு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்

பொருள்: உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல் நடுவுநிலைமையாம்

அருஞ்சொற்பொருள்: சொல்- மொழி; கோட்டம்-கோணுதலுடைமை; இல்லது-இல்லாமல் இருப்பது, இல்லாதது; செப்பம்-செம்மை, நடுவு நிலைமை; ஒருதலையா-உறுதியாக, திண்ணிதாக, ஒரு பக்கம் சாய்ந்து, ஒருவழிப்பட; உள்-நெஞ்சம்; கோட்டம்-கோணுதலுடைமை; இன்மை-இல்லாதிருத்தல்; பெறின்-அடைந்தால்

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்

பொருள்: பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.

அருஞ்சொற்பொருள்: வாணிகம்-வணிகம்; செய்வார்க்கு-செய்பவர்களுக்கு; வாணிகம்-பெருகும் வணிகம், ஆதாயம், ஊதியம்; பேணி-கருதி; பிறவும்-பிறர் பொருளையும், மற்றவையும்; தமபோல்-தம்முடையவை போன்று; செயின்-செய்தால்.

Telegram Logo GIF நடுவுநிலைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page