FOR THIS ONLINE TEST-CLICK HERE
நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
பொருள்: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறு இல்லை.
அருஞ்சொற்பொருள்: நாடாது-ஆராயாமல்; நட்டலின்-நட்புச்செய்தலைவிட; கேடு-அழிவு; இல்லை-இல்லை; நட்டபின்-தோழமை கொண்ட பிறகு; வீடு-விடுதல்; இல்லை-இல்லை; நட்பு-தோழமை; ஆள்பவர்க்கு-மேற்கொள்வார்க்கு, கைக்கொள்ள விரும்பியவர்க்கு.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
பொருள்: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.
அருஞ்சொற்பொருள்: ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து; ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து, தேர்ந்தெடுத்து; கொள்ளாதான்-அடையாதவன்; கேண்மை-நட்பு; கடைமுறை-முடிவின்கண்; தான்-தான்; சாம்-இறத்தற்கேதுவாய; துயரம்-துன்பம்; தரும்-உண்டாக்கும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு
பொருள்: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
அருஞ்சொற்பொருள்: குணனும்-நற்பண்புகளும்; குடிமையும்-குடிப்பிறப்பும்; குற்றமும்-குற்றமும்; குன்றா-குறையாத, (குறையில்லாத); இனனும்-சுற்றமும்; அறிந்து-தெரிந்து; யாக்க-செய்க, கட்டுக, சேர்த்துக் கொள்ளுக; நட்பு-தோழமை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
பொருள்: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்
அருஞ்சொற்பொருள்: குடி-நற்குடி; பிறந்து-தோன்றி; தன்கண்-தன் இடத்தில்; பழி-பழிக்கப்படுதல்; நாணுவானை-வெட்கப்படுபவனை, அஞ்சுபவனை; கொடுத்தும்-தந்தும்; கொளல்வேண்டும்-பெறுதல் வேண்டும்; நட்பு-தோழமை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்
பொருள்: நன்மையில்லாத செயலைக் கண்டபோது வருந்தும் படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும்.
அருஞ்சொற்பொருள்: அழச்சொல்லி-அழுமாறு உரைத்து; அல்லது-நல்லது அல்லாததை; இடித்து-கடிந்து சொல்லி, நெருக்கி; வழக்கு-உலகவழக்கு, உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல்; அறிய-தெரிய; வல்லார்-திறமையுடையவர்; நட்பு-தோழமை; ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து; கொளல்-பெறுதல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
பொருள்: கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
அருஞ்சொற்பொருள்: கேட்டினும்-கெடுதியின் கண்ணும்; உண்டு-உளது; ஓர்-ஒரு; உறுதி-நல்லறிவு; கிளைஞரை-நட்பாளரை; நீட்டி-எஞ்சாமல்; அளப்பது-அளக்கும் கருவியாவது; ஓர்-ஒரு; கோல்-அளவுகோல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்
பொருள்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்
அருஞ்சொற்பொருள்: ஊதியம்-ஆதாயம், இலாபம், பேறு; என்பது-என்று சொல்லப்படுவது; ஒருவற்கு-ஒருவர்க்கு; பேதையார்-அறிவுகேடர்; கேண்மை-நட்பு; ஒரீஇ-ஒழிந்து; விடல்-விடுதல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
பொருள்: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்கவேண்டும்; அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: உள்ளற்க-நினையாதொழிக; உள்ளம்-ஊக்கம், மனம்; சிறுகுவ-சுருங்குவதற்குக் காரணமானவை; கொள்ளற்க-கொள்ளாதொழிக; அல்லற்கண்-துன்பத்தில்; ஆற்று அறுப்பார்-துணை வலியாய் அமையாமல் கைவிடுபவர்; நட்பு-தோழமை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்
பொருள்: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
அருஞ்சொற்பொருள்: கெடுங்காலை-கெடுகின்ற காலத்தில்; கைவிடுவார்-விட்டு நீங்குகின்றவர்; கேண்மை-நட்பு; அடும்-கொல்லும், வருத்தும்; காலை-காலத்தில்; உள்ளினும்-நினைத்தாலும்; உள்ளம்-நெஞ்சம்; சுடும்-சுடும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு
பொருள்: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.
அருஞ்சொற்பொருள்: மருவுக-கொள்க, பொருந்துக, ஏற்றுக்கொள்க; மாசற்றார்-கறைஅற்றார்; கேண்மை-நட்பு; ஒன்று-ஒரு பொருள்; ஈத்தும்-கொடுத்தும்; ஒருவுக-விடுக, விட்டுவிடுக; ஒப்பிலார்-பொருந்துதல் இலார், ஒவ்வாதார்; நட்பு-தொடர்பு.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
நட்பாராய்தல்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️