FOR THIS ONLINE TEST-CLICK HERE
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
பொருள் : பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளியது என்று கூறுவர்.
அருஞ்சொற்பொருள்: எண்-எளிய; பதத்தால்-செவ்வியால், செவ்வியராதலால், காட்சிக்கு எளியராதலால், அணுகக்கூடிய தன்மையால்; எய்தல்-பெறுதல்; எளிது-வருந்தாமல் கிட்டக்கூடியது; என்ப-என்று சொல்லுவர்; யார்மாட்டும்-எல்லாரிடத்தும்; பண்புடைமை-பண்புடைமை, பாடறிந்தொழுகுந்தன்மை உடைமை; என்னும்-என்கின்ற; வழக்கு-நன்னெறி.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
பொருள் : அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
அருஞ்சொற்பொருள்: அன்புடைமை- அன்பு உடையனாதல்; ஆன்ற-(உலகத்தோடு, நல்லியல்புகள்) அமைந்த; குடிப்பிறத்தல்-நற்குடியில் தோன்றுதல்; இவ்விரண்டும்-இவை இரண்டும்; பண்புடைமை-பண்புடைமை; என்னும்-என்கின்ற; வழக்கு-நன்னெறி.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
பொருள் : உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
அருஞ்சொற்பொருள்: உறுப்பு-உடம்பு; ஒத்தல்-ஒத்திருப்பது, –நிகர்த்தல்; மக்கள்-மக்கள்; ஒப்பு-ஒத்திருப்பது, நிகர்த்தல், பொருந்துதல்; அன்று-இல்லை; ‘ஆல்‘ அசைநிலை; வெறுத்தக்க-செறியத்தக்க, நிலையான. நிறைந்த, நெருங்கத்தக்க; பண்பொத்தல்-பண்பு நிகர்த்தல்; ஒப்பதாம்-பொருந்துவதாம்; ஒப்பு- ஒப்பு, நிகர்த்தல், பொருந்துதல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
பொருள் : நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன் பட வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
அருஞ்சொற்பொருள்: நயனொடு-விருப்பத்தோடு, நீதியோடு; நன்றி-நன்மை, அறம்; புரிந்த-செய்த, விரும்பிய; பயனுடையார்-பயன்படும்படி வாழ்பவர், பயனளிக்கக் கூடியவர்கள்; பண்பு-குணம்; பாராட்டும்-கொண்டாடும்; உலகு-உலகு, உலகத்தார்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு
பொருள் : ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்ல பண்புகள் உள்ளன.
அருஞ்சொற்பொருள்: நகையுள்ளும்-விளையாட்டின் கண்ணும்; இன்னாது-இனிதன்று, தீது; இகழ்ச்சி-பழித்தல்; பகையுள்ளும்-பகைமையுள் வழியும்; பண்பு-பண்பு; உள-இருக்கின்றன; பாடு-பெருமை, துன்பம், உலகஒழுக்கம்; அறிவார்மாட்டு-அறிந்து நடப்பவர்கண்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
பொருள் : பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது; அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்துபோகும்.
அருஞ்சொற்பொருள்: பண்புடையார்- பண்புடையவர்கள்; பட்டு-அமைந்து, பொருந்தி இருத்தலால்; உண்டு-உளது; உலகம்-உலகம்,உலகியல்; அது-அஃது; இன்றேல்-இல்லாவிடில்; மண்-மண்; புக்கு-புகுந்து; மாய்வது-அழிவது; மன்-ஒழியிசை(சொல்லாதொழிந்த சொற்களால் பொருளை இசைப்பது), நிலை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கள்பண்பு இல்லா தவர்.
பொருள் : மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவராயினும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
அருஞ்சொற்பொருள்: அரம்-அராவுங் கருவி, அராவுங் கருவியின் கூர்மை; போலும்-ஒத்திருக்கின்ற; கூர்மையரேனும்-நுட்பமதியுடையவராயினும்; மரம்-மரம்; போல்வர்-ஒத்திருப்பர்; மக்கள்பண்பு-மக்களுக்கு இருக்கவேண்டிய நல்ல குணம். மனிதத் தன்மை; இல்லாதவர்-இலாதவர்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
நண்பாற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை
பொருள் : நட்புக் கொள்ள முடியாதவராய்த் தீயவை செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
அருஞ்சொற்பொருள்: நண்பு-தோழமை; ஆற்றார்-மாட்டார்; ஆகி-ஆய்; நயம்-விருப்பம், ஈரம், அருள், நன்மை, அன்பு, இனிமை; இல-இல்லாதவைகளை; செய்வார்க்கும்-செய்பவர்க்கும்; பண்பு-பண்பு; ஆற்றார்-ஒழுகாதவர்; ஆதல்-ஆகுதல்; கடை-இழிபு.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
பொருள் : பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
அருஞ்சொற்பொருள்: நகல்-(உள்) மகிழ்தல், கூடி இருந்து நகுதல்; வல்லர்அல்லார்க்கு-தெரியாதவர்க்கு, திறனில்லாதார்க்கு, மாட்டாதார்க்கு; மா-பெரிய; இரு-பெரியதாகிய; ஞாலம்-உலகம்; பகலும்-பகற்பொழுதும்; பால்-இடத்தில், பகுப்பு, பிரிவு; பட்டன்று-கிடந்தது; இருள்-இருட்டு.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந்து அற்று
பொருள் : பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.
அருஞ்சொற்பொருள்: பண்பு-பண்பு; இலான்-இல்லாதவன்; பெற்ற-அடைந்த; பெரும்-மிக்க; செல்வம்-பொருள்மிகுதி; நன்-நல்ல; பால்-பால்; கலம்-ஏனம், பாண்டம், பாத்திரம்; தீமையால்-கெடுதியால், குற்றத்தால்; திரிந்து-கெட்டுப்போதல்; அற்று-அத்தன்மைத்து.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பண்புடைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️