FOR THIS ONLINE TEST-CLICK HERE
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது
பொருள்: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும் மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
அருஞ்சொற்பொருள்: அறம்-நல்வினை; கூறான்-சொல்லுவதும் செய்யாதவனாய்; அல்ல-தீயனவற்றை, நல்லனவல்லாதவற்றை, ஆகாதவைகளை; செயினும்-செய்தாலும்; ஒருவன்-ஒருவன்; புறம்-புறத்தே, காணாதவிடம்; கூறான்-(இகழ்ந்து)கூறமாட்டான்; என்றல்-என்று சொல்லப்படுதல்; இனிது-நல்லது, நன்றானாது.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை
பொருள்: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்தலைவிட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
அருஞ்சொற்பொருள்: அறன்-நல்லன, நற்செய்கைகள்; அழீஇ-சிதைத்து; அல்லவை-தீயவை; செய்தலின்-செய்தலைக் காட்டிலும்; தீதே-கொடிதே; புறன்-புறத்தே, காணாதவிடம்; அழீஇ-அழித்துச் சொல்லி, இழித்துப் பேசி; பொய்த்து-பொய்பேசி, பொய்யாக; நகை-சிரிப்பு.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்
பொருள்: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
அருஞ்சொற்பொருள்: புறம்-காணாதவிடம்; கூறி-சொல்லி, இகழ்ந்துரைத்து; பொய்த்து-பொய்பேசி, பொய்யாக; உயிர்-உயிர்; வாழ்தலின்-வாழ்க்கை நடத்துவதைக் காட்டிலும்; சாதல்-இறத்தல்; அறம்-(இங்கு)அறநூல்கள்; கூறும்-சொல்லும்; ஆக்கம்-நற்பயன்கள்; தரும்-கொடுக்கும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்
பொருள்: எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
அருஞ்சொற்பொருள்: கண்நின்று-கண்ணெதிரே நின்று; கண்அற-கண்ணோட்டம் இன்றி, இரக்கமில்லாமல்; சொல்லினும்-சொன்னாலும்; சொல்லற்க-சொல்லவேண்டாம்; முன்-எதிரில்; இன்று-இல்லாமல்; பின்நோக்காசொல்-பின்விளைவினைக் கருதாத சொற்கள், பின்பு முன்னே நின்று எதிர் முகம் நோக்க முடியாத சொல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும்
பொருள்: அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
அருஞ்சொற்பொருள்: அறம்-அறம், நற்செயல், நல்வினை; சொல்லும்-கூறும்; நெஞ்சத்தான்-உள்ளம் உடையவன்; அன்மை-அல்லாமை; புறம்-புறத்தே, காணாதவிடம்; சொல்லும்-கூறும்; புன்மையால்-சிறுமையால், கீழ்மையால்; காணப்படும்-அறியப்படும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்
பொருள்: மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
அருஞ்சொற்பொருள்: பிறன்-மற்றவன்; பழி-பழி; கூறுவான்-(காணாவிடத்துச்) சொல்லுவான்; தன்-தனது; பழியுள்ளும்-குற்றங்களுள்ளும், பழிக்கப்படுவதிலும்; திறன்-உளையுந்தன்மையுடைய பழி; தெரிந்து-அறிந்து; கூறப்படும்-சொல்லப்படும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
பொழிப்பு (மு வரதராசன்: மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும் பிரித்துவிடுவர்.
அருஞ்சொற்பொருள்: பக-பிளவு உண்டாக; சொல்லி-(புறங்)கூறி; கேளிர்-நண்பர், சுற்றத்தார்; பிரிப்பர்-பிரித்திடுவர், விலகப்பண்ணுவர்; நக-உள்ளம் மகிழ; சொல்லி-பேசி, உரைத்து; நட்புஆடல்-நட்பு மேற்கொள்ளல், நட்பு பாராட்டுதல்; தேற்றாதவர்-தெளியாதவர், அறியாதவர்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
பொருள்: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
அருஞ்சொற்பொருள்: துன்னியார்-நெருங்கிப் பழகுபவர்; குற்றமும்-தவறுகளையும், பிழையும்; தூற்றும்-இகழ்ந்துசொல்லும்; மரபினார்-பழக்கமாகவே உள்ளவர், இயல்பினையுடையவர்; என்னை-யாது?; கொல்-(ஐயம்) செய்வாரோ; ஏதிலார்-அயலார்; மாட்டு-இடத்தில்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை
பொருள்: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
அருஞ்சொற்பொருள்: அறன்-அறம், நல்வினை; நோக்கி-கருதி; ஆற்றும்கொல்-(ஐயம்) பொறுத்துக் கொண்டிருக்கிறதோ?, தாங்கிக் கொள்கிறதோ?; வையம்-உலகம்-; புறன்-நீங்கின அளவு; நோக்கி-பார்த்து; புன்சொல்-பழித்துரை; உரைப்பான்-சொல்லுபவன்; பொறை-சுமை, உடற்சுமை
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
பொருள்: அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
அருஞ்சொற்பொருள்: ஏதிலார்-அயலார், மற்றவர், பகைவர்; குற்றம்-பிழை; போல்-போன்று; தம்-தமது; குற்றம்-பிழை; காண்கிற்பின்-காண்பார்களானால்; தீது-தீமை, பாவம்; உண்டோ-உளதோ; மன்னும்-நிலைபெறுகின்ற; உயிர்க்கு-உயிருக்கு.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘புறங்கூறாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
புறங்கூறாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️