விருந்தோம்பல்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

ஊக்கமுடைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
FOR THIS ONLINE TEST-CLICK HERE

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு

பொருள்: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டே ஆகும்.

அருஞ்சொற்பொருள்: இருந்து-நிலைபெற்று இருந்து, தங்கி இருந்து, இருந்துகொண்டு; ஓம்பி- பேணி, பாதுகாத்து; இல்வாழ்வது-இல்லறத்தில் வாழ்தல்; எல்லாம்-அனைத்தும்; விருந்து-விருந்தினர்; ஓம்பி-போற்றி; வேளாண்மை-உதவுதல், பிறவுயிர்க்கு நல்லது செய்கை; செய்தற்பொருட்டு-செய்வதற்காக.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

அருஞ்சொற்பொருள்: விருந்து-விருந்து, விருந்தினர்; புறத்ததா-புறத்தது ஆக, வெளியில் இருப்ப; தான் உண்டல்-தான் (தனியாக) உண்ணுதல்; சாவா-சாவாமை; மருந்து-மருந்து; எனினும்-என்றாலும்; வேண்டல்-விரும்புதல்; பாற்று-பான்மைத்து, தன்மைத்து, முறைமையுடையது; அன்று-அல்ல.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று

பொருள்: தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

அருஞ்சொற்பொருள்: வரு-வருகின்ற; விருந்து-விருந்தினர்; வைகலும்-நாடோறும்; ஓம்புவான்-பேணுபவன்; வாழ்க்கை-வாழ்வு, வாழ்தல்; பருவந்து-துன்புற்று; பாழ்படுதல்-கெட்டுப்போதல்; இன்று-இல்லை

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

அருஞ்சொற்பொருள்: அகன்-உள்ளம், அகம்; அமர்ந்து-மகிழ்ந்து, விரும்பி; செய்யாள்-திருமகள்; உறையும்-வாழும், தங்கும், நீங்காது நிலைத்திருக்கும், வசிக்கும்; முகன்-முகம்; அமர்ந்து-மலர்ந்து; நல்-நல்ல; விருந்து-விருந்து; ஓம்புவான்-பேணுவான்; இல்-மனை, வாழும் இடமாகிய வீடு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சின் மிசைவான் புலம்

பொருள்: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

அருஞ்சொற்பொருள்: வித்தும்-விதையும்; இடல்-தூவுதல்; வேண்டும் கொல்லோ-வேண்டுமோ? கொல்லோ- அசைச்சொல் (ஐயத்தை உணர்த்துவது). எதிர்மறையைச் சுட்ட வந்தது. இரண்டும் ஒன்றுபட்ட வேண்டும் கொல்லோவேண்டாமையை குறிக்கிறது; விருந்து-விருந்தினர்; ஓம்பி–பேணி; மிச்சில்-மிஞ்சியது, மிகுந்தது அதாவது மீதமுள்ளது; மிசைவான்-உண்பான்; புலம்-நிலம், வயல்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு

பொருள்: வந்த விருந்தினரைப் போற்றி அனுப்பிவிட்டு, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

அருஞ்சொற்பொருள்: செல்விருந்து–(தன் வீட்டில் உண்டு) செல்லுகின்ற விருந்தினர்; ஓம்பி-பேணி; வருவிருந்து–வரப்போகிற விருந்தினர்; பார்த்துஇருப்பான்-எதிர் நோக்கி இருப்பவன்; நல்-நல்ல; விருந்து-விருந்தாளி; வானத்தவர்க்கு-வான் உலகில் உள்ளவர்கட்கு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்

பொருள்: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

அருஞ்சொற்பொருள்: இனை-இன்ன; துணைத்து-அளவினையுடையது; என்பது-என்று சொல்லப்படுவது; ஒன்று-ஒன்று; இல்லை-இல்லை; விருந்தின்-விருந்தினது; துணைத்துணை-உதவியஅளவு; வேள்வி-விருந்தோம்பல்; பயன்-நன்மை.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்

பொருள்: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.

அருஞ்சொற்பொருள்: பரிந்து-வருந்தி; ஓம்பி-காத்து; பற்று-பற்றுக்கோடு, தொடர்பு; அற்றேம்=இழந்தேம்; என்பர்-என்று சொல்வர், என்று இரங்குவர்; விருந்து-விருந்தினர்; ஓம்பி-பேணி; வேள்வி-வேட்டல், உதவிசெய்வது; தலைப்படாதார்-ஈடுபடாதவர், எய்தும் பொறியிலாதார்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

பொருள்: செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்

அருஞ்சொற்பொருள்: உடைமையுள்-செல்வத்தில்; இன்மை-இல்லாமை; விருந்து-விருந்தினர்; ஓம்பல்-பேணுதல், புறந்தருதல்; ஓம்பா-செய்யாத, புறக்கணிக்கும், இகழும்; மடமை-அறியாமை; மடவார்கண்-அறிவிலிகளிடத்து; உண்டு-உளது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

பொருள்: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

அருஞ்சொற்பொருள்: மோப்ப-முகர்ந்தால், மோந்தால், முகப்பதனால்; குழையும்-வாடி விடும்; அனிச்சம்-ஒருவகை நுட்பமான மலர்; முகம்-முகம்; திரிந்து-வேறுபட்டு; நோக்க-பார்க்கும்போது; குழையும்-சுருங்கும்; விருந்து-விருந்தினர்.

Telegram Logo GIF விருந்தோம்பல்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page