FOR THIS ONLINE TEST-CLICK HERE
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
பொருள்: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
அருஞ்சொற்பொருள்: சூழ்ச்சி-கலந்தாலோசித்தல்; முடிவு-இறுதி; துணிவு எய்தல்-தெளிவு பெறுதல்; அத்துணிவு-அத்தெளிவு பெற்ற செயல்; தாழ்ச்சியுள்-கால நீட்டிப்பில்; தங்குதல்-நிலை பெறுதல்; தீது-தீமை
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
பொருள்: காலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது.
அருஞ்சொற்பொருள்: தூங்குக-காலம் நீட்டிக்க, நிதானமாகச் செய்க; தூங்கி-நீட்டித்து; செயல்-செய்தல்; பால-பகுதி; தூங்காது-நீட்டியாமல்; செய்யும்-செய்யும்; வினை-செயல்; தூங்கற்க-நீட்டியாதொழிக.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்
பொருள்: இயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும்.
அருஞ்சொற்பொருள்: ஒல்லும்-இயலும்; வாய்-இடம்; எல்லாம்-அனைத்தும்; வினை-செயல்; நன்றே-நன்மையுடையதே; ஒல்லாக்கால்-இயலாதவிடத்து; செல்லும்-முடியும்; வாய்-வழி; நோக்கி-பார்த்து; செயல்-செய்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்
பொருள்: செய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
அருஞ்சொற்பொருள்: வினை-செயல்; பகை-பகைமை; என்ற-என; இரண்டின்-இரண்டினது; எச்சம்-ஒழிவு; நினையுங்கால்-ஆராயும்போது; தீ-நெருப்பு; எச்சம்-ஒழிவு; போல-ஒத்திருப்ப; தெறும்-அழிக்கும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
பொருள்: வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்
அருஞ்சொற்பொருள்: பொருள்-ஆதாரம்; கருவி-சாதனம்; காலம்-பருவம்; வினை-செயல்; இடனொடு-இடமும்; ஐந்தும்-ஐந்தும்; இருள்-மயக்கம்; தீர-அற; எண்ணி-நாடி; செயல்-செய்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
பொருள்: செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: முடிவும்-முற்றுப் பெறுதலும்; இடையூறும்-தடையும்; முற்றியாங்கு-முடிந்த பொழுது; எய்தும்-அடையும்; படு-பெரும்; பயனும்-விளைவும்; பார்த்து-சீர்தூக்கி; செயல்-செய்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்
பொருள்: செயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும்.
அருஞ்சொற்பொருள்: செய்வினை-செய்யத்தகும் செயல்; செய்வான்-செய்பவன்; செயல்முறை-செய்தல்ஒழுங்கு; அவ்வினை-அந்தச் செயல்; உள்-உளப்பாடு; அறிவான்-தெரிபவன்; உள்ளம்-உள்ளம்; கொளல்-அறிதல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
பொருள்: ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
அருஞ்சொற்பொருள்: வினையால்-செயலால்; வினையாக்கி-செயல் ஆகும்படி செய்து; கோடல்-கொள்ளுதல்; நனை-ஈரமான; கவுள்-யானையின் கன்னம்; யானையால்-யானையைக் கொண்டு; யானை-யானை; யாத்து-கட்டுவது; அற்று-அத்தன்மைத்து.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்
பொருள்: பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும்.
அருஞ்சொற்பொருள்: நட்டார்க்கு-நண்பர்க்கு; நல்ல-நன்மையானவை; செயலின்-செய்வதைவிட; விரைந்ததே-விரைந்து செய்யப்படுவதே; ஒட்டாரை-விலகி இருப்பவரை; ஒட்டி-நட்பாக்கி;; கொளல்-கொள்ளுதல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து
பொருள்: வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்.
அருஞ்சொற்பொருள்: உறை-வாழுமிடம்; சிறியார்-சிறிதாகவுடையவர், மெலியர்; உள்-பகுதி; நடுங்கல்-அஞ்சுதல்; அஞ்சி-நடுங்கி; குறை-குறை; பெறின்-(தீரப்)பெற்றால்; கொள்வர்-ஏற்றுக்கொள்வர்; பெரியார்-பெரியநாட்டார், வலியவர்; பணிந்து-வணங்கி.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
வினைசெயல்வகை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️