DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- மொழிநடையை உருவாக்கும் மென்பொருளுக்கு என்ன பெயர்?
வேர்டுஸ்மித்
- வாட்சன் என்பது எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி ?
ஐ.பி.எம்
- “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” எனக் கூறியவர் யார்?
பாரதியார்
- இலா எனும் உரையாடும் மென்பொருளை எந்த வங்கி உருவாகியுள்ளது?
இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி
- ELA என்பதன் விரிவாக்கம் என்ன?
Electronic live assistant
- பெப்பர் என்பது எந்த வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்?
ஜப்பானின் சாப்ட்வங்கி
- சீனாவில் எந்த துறைமுக நகரத்தில் சிவன் கோவில் உள்ளது?
சூவன்சௌ
- சீனாவில் உள்ள சிவன் கோயில் எந்த மன்னரின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது?
குப்லாய்கான்
- சீனாவில் உள்ள சிவன் கோவிலில் எந்த கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது?
சோழர் கால சிற்பங்கள்
- “வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் …”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பெருமாள் திருமொழி
- பெருமாள் திருமொழி என்னும் நூலை எழுதியவர் யார்?
குலசேகர ஆழ்வார்
- வித்துவக்கோடு எனும் ஊர் எங்கு உள்ளது?
கேரள மாநிலம் ,பாலக்காடு மாவட்டம்
- பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
ஐந்தாம் திருமொழி
- பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
105
- குலசேகர ஆழ்வாரின் காலம் என்ன?
எட்டாம் நூற்றாண்டு
- “விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல, கருவளர் வானத்து இசையில் தோன்றி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பரிபாடல்
- “விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல, கருவளர் வானத்து இசையில் தோன்றி” இப்பரிபாடல் பாடலை இயற்றியவர் யார்?
கீரந்தையார்
- எந்த அமெரிக்க வானியல் வல்லுநர் நம் பால்வீதி போன்று பல பால் விதிகள் உள்ளன என நிரூபித்தார்?
எட்வின் ஹப்பிள்,1924
- “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்…” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
திருவாசகம்
- திருவாசகத்தை இயற்றியவர்?
மாணிக்கவாசகர்
- சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது? பரிபாடல்
- பரிபாடலில் எத்தனை பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது?
70 பாடல்கள்
- பரிபாடலில் கிடைக்கப் பெற்றுள்ள பாடல்கள்?
24 பாடல்கள்
- பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1988
- இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை எங்கு உள்ளது?
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம்
- இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை எப்போது தொடங்கப்பட்டது?
2009
- தற்காலத்தின் ஐன்ஸ்டீன் என புகழப்படுபவர் யார்?
ஸ்டீபன் ஹாக்கிங்
- ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எந்த ஆண்டு பக்கவாதம்(amyotrophic lateral sclerosis) எனும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார்?
1963 (21 வயது)
- ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எந்த ஆண்டு மூச்சுக்குழாய் தடங்கலால் பேசும் திறனை இழந்தார்?
1985
- “பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை” எனக் கூறியவர்?
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
- “சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது. அப்படி ஒரு உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் .புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனை எல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன. அதனை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்து கொள்ள முயல்கிறது ” எனக் கூறியவர் யார்?
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
- கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர் யார்?
ஜான் வீலர்
- ஸ்டீபன் ஹாக்கின்ஸின் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹாக்கிங் கதிர்வீச்சு
- கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என நிறுவியவர் யார்?
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
- ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் நியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் என்ன மதிப்புமிக்க பதவியை வகித்திருக்கிறார்?
லூகாசியன் பேராசிரியர்
- ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பெற்ற விருதுகள் என்னென்ன? அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, உல்ஃப் விருது , காப்ளி பதக்கம், அடிப்படை இயற்பியல் பரிசு
- ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் யாருடைய நினைவு நாளில் பிறந்தார்?
கலிலியோ (ஐன்ஸ்டைனின் பிறந்தநாளில் இறந்தார்)
- “தலைவிதி தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என நம்புபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது . விதி தான் தீர்மானிக்கிறது என்றால் சாலையை கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்து கிடக்கிறார்கள்” எனக்கூறியவர்?
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
- எந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளின்” தொடக்க விழா நாயகர்” என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பெற்றார்?
2012
- ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எந்த தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றார்?
அடுத்த தலைமுறை ,பெருவெடிப்புக் கோட்பாடு
- ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எழுதிய நூல்களுள் எந்த நூல் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?
காலத்தின் சுருக்கமான வரலாறு
- காலத்தின் சுருக்கமான வரலாறு எந்த ஆண்டு வெளிவந்தது?
1988
- ” கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” இவ்வரரிகள் இடம் பெற்ற நூல்?
அகநானூறு
- ” கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” இவ்வரரிகளில் குறிப்பிடப்படும் ஊர் எது?
கரூர் மாவட்டத்தின் கருவூர்
- “அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் .ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்துவிடுகிறது .கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்த பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து க்கொள்ளப்போவதையும் உள்ளடக்கியது” எனக் கூறியவர்?
ஐன்ஸ்டீன்
- “வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என ஆராய்ச்சியில் நான் வெல்வேன் அதன் மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்” எனக் கூறியவர்?
ஸ்டீபன் ஹாக்கிங்
- “நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு கோல வெறிபடைத்தோம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பாரதியார்
- பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் என்னும் நூலை எழுதியவர்?
நீலமணி
- அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலை எழுதியவர்?
ச. தமிழ்ச்செல்வன்
- காலம் எனும் நூலை எழுதியவர்?
ஸ்டீபன் ஹாக்கிங்