DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- எழுத்தாளர் ஜெயகாந்தனின் காலம் என்ன?
24.04.1934-08.04.2015
- ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் என்னென்ன?
குடியரசுத் தலைவர் விருது, சாகித்திய அகடமி விருது, சோவியத்து நாட்டு விருது, ஞானபீட விருது
- ஜெயகாந்தன் எதற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றார்?
உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்காக
- ஜெயகாந்தன் சாகித்ய அக்கடமி விருது எதற்காக பெற்றார்?
சில நேரங்களில் சில மனிதர்கள் புதினத்துக்காக
- ஜெயகாந்தன் சோவியத் நாட்டு விருது எதற்காக பெற்றார்?
இமயத்துக்கு அப்பால் எனும் நூலிற்காக
- ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?
குருபீடம், யுகசந்தி ,ஒரு பிடி சோறு ,உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும் ,தேவன் வருவாரா ,புதியவார்ப்புகள்
- ஜெயகாந்தன் எழுதிய குறும் புதினங்கள் என்னென்ன?
பிரளயம் ,கைவிலங்கு ,ரிஷிமூலம் ,பிரம்ம உபதேசம் ,யாருக்காக அழுதான்? ,கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு
- ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் என்னென்ன?
பாரீசுக்கு போ ,சுந்தரகாண்டம் ,உன்னை போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
- ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்புகள் என்னென்ன?
வாழ்விக்க வந்த காந்தி (பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்), ஒரு கதாசிரியரின் கதை ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
- ஜெயகாந்தனின் எந்த படைப்புகள் திரைப்படம் ஆகியுள்ளன?
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான்
- சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் யார்? ஜெயகாந்தன்
- சித்தாளு எனும் கவிதையை எழுதியவர் யார்?
நாகூர் ரூமி
- நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன?
முகமது ரஃபி
- நாகூர் ரூமி எங்கு பிறந்தார்?
தஞ்சை மாவட்டம்
- நாகூர் ரூமி எந்த இதழில் எழுதத் தொடங்கினார்?
கணையாழி
- இதுவரை நாகூர் ரூமியின் வெளிவந்துள்ள கவிதைத் தொகுதிகள் என்னென்ன?
நதியின் கால்கள் ,ஏழாவது சுவை ,சொல்லாத சொல்
- நாகூர் ரூமி படைத்த நாவலின் பெயர் என்ன?
கப்பலுக்கு போன மச்சான்
- கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?
திருமுழுக்கு யோவான் அல்லது அருளப்பன்
- வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் திருமுழுக்கு யோவான் அவர்களுக்கு என்ன பெயரிட்டுள்ளார்?
கருணையன்
- கருணையனின் தாயார் பெயர் என்ன?
எலிசபெத் அம்மையார்
- “உய்முறை அறியேன்; ஓர்ந்த உணர்வினொத்து உறுப்பும் இல்லா மெய்முறை அறியேன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தேம்பாவணி
- வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட எந்த மன்னரை சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியை கற்றுக்கொண்டார்?
சந்தாசாகிப்
- சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு என்ன பட்டம் அளித்தார்?
இஸ்மத் சன்னியாசி
- இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்கு என்ன பொருள்?
தூய துறவி
- தேம்பாவணி என்பதன் பொருள் என்ன?
வாடாத மாலை என்றும் , தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
- தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப் (வளன்)
- தேம்பாவணி எத்தனை காண்டங்களையும் படலங்களையும் கொண்டது?
மூன்று காண்டங்கள் ,36 படலங்கள்
- தேம்பாவணி எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
3615 பாடல்கள்
- தேம்பாவணி எந்த காலகட்டத்தில் படைக்கப்பட்டது?
பதினேழாம் நூற்றாண்டு
- வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
- தமிழின் முதல் அகராதி எது?
சதுரகராதி
- வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலக்கியங்கள் ,உரைநடை நூல்கள், பரமார்த்த குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள்
- ஒருவன் இருக்கிறான் எனும் சிறுகதையை எழுதியவர்?
கு.அழகிரிசாமி
- “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
மதுரைக்காஞ்சி
- “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி” இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள ஊர் எது?
திருவாரூர் மாவட்டத்தின் ஆலங்கானம்
- ஒருவன் இருக்கிறான் என்னும் கதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்
- கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் என அழைக்கப்படுபவர்?
கு.அழகிரிசாமி
- சேரர்களின் பட்டப் பெயர்கள் என்னென்ன?
கொல்லி வெற்பன் ,மலையமான்
- சேரர்களில் எந்த மலையை வென்றவர்கள் கொல்லி வெற்பன் என பட்டப்பெயர்கள் சூட்டிக்கொண்டனர்?
கொல்லிமலை
- சேரர்களில் பிற மலையை வென்றவர்கள் என்ன பட்டம் சூட்டிக் கொண்டனர்?
மலையமான்
- யானை சவாரி எனும் நூலின் ஆசிரியர் யார்?
பாவண்ணன்
- கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
திலகவதி
- அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் நூலின் ஆசிரியர் யார்?
முருகேசபாண்டியன்