TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இலக்கணம் QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இலக்கணம் QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. மொழியை தெளிவுற பேசவும் எழுதவும் உதவுவது எது?

இலக்கணம்

  1. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன?

பத்து: உயிர்மெய் ,ஆய்தம் ,உயிரளபெடை, ஒற்றளபெடை ,குற்றியலுகரம், குற்றியலிகரம் ,ஐகாரக்குறுக்கம் ,ஒளகாரக்குறுக்கம் ,மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்

  1. அளபெடுத்தல் என்பதன் பொருள் என்ன?

 நீண்டு ஒலித்தல்

  1. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கின்ற உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை தம்மளவில் நீண்டு ஒலிக்கும்?

ஏழு எழுத்துக்கள்

  1. உயிரெழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உயிரளபடை

  1. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

மூன்று: செய்யுளிசை அளபெடை ,இன்னிசை அளபெடை ,சொல்லிசை அளபெடை

  1. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

செய்யுளிசை அளபெடை

  1. செய்யுளிசை அளபெடை வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

இசைநிறை அளபெடை

  1. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளவெடுப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

இன்னிசை அளபெடை

  1. செய்யளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லக திரிந்து அழைப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

 சொல்லிசை அளபெடை

  1. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்களான பத்தும் அளபெடுப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

ஒற்றளபெடை

  1. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய் எழுத்துக்கள் என்னென்ன?

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் மற்றும் ஃ

  1. ஓர் எழுத்து தனித்தோ பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது எவ்வாறு அழைக்கப்படும்?

சொல்

  1. மொழி எத்தனை வகைப்படும்?

 3 :தனிமொழி ,தொடர்மொழி ,பொதுமொழி

  1. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது எவ்வாறு அழைக்கப்படும்?

தனிமொழி

  1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?

தொடர்மொழி

  1. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லை பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது எவ்வாறு அழைக்கப்படும்?

பொதுமொழி

  1. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண்,இடம், காலம் ,பால் ஆகியவற்றை குறிப்பாகவும் வெளிப்படையாகவோ,உணர்த்தாமல் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

 தொழிற்பெயர்

  1. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

 விகுதி பெற்ற தொழிற்பெயர்

  1. தொழிற்பெயர் எதிர்மறைப் பொருளில் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

 எதிர்மறை தொழிற்பெயர்

  1. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் எவ்வாறு அழைக்கப்படும்?

 முதனிலை  தொழிற்பெயர்

  1. விகுதி பெறாமல் முதனிலை திரிந்த தொழிற் பெயர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

  1. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதற்கு என்ன பெயர்?

வினையாலணையும் பெயர்

  1. வினையாலணையும் பெயர் என்ன இடங்களிலும் காலங்களிலும் வரும்?

மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்

  1. தொழிலை செய்யும் கருத்தாவை குறிப்பது எது?

வினையாலணையும் பெயர்  

 
  

     

  1. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?

சொற்றொடர் அல்லது தொடர்

  1. பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர்ச் சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை ,பண்பு முதலியவற்றின் உருபுகள் தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் இருக்குமானால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தொகைநிலைத் தொடர்

  1. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

 6 :வேற்றுமைத்தொகை ,வினைத்தொகை ,பண்புத்தொகை ,உவமைத்தொகை ,உம்மைத்தொகை ,அன்மொழித்தொகை

  1. ஒரு தொடரில் வேற்றுமை உருபுகளுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படும்?

வேற்றுமைத் தொகை

  1. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

  1. காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லை போல் நடப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

வினைத்தொகை

  1. காலம் கரந்த பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?

வினைத்தொகை

  1. எந்த சொற்றொடர்களில் வினைத் தொகை அமையும்?

வினைப்பகுதியும் அடுத்து பெயர் சொல்லும் அமைந்த சொற்றொடர்கள்

  1. நிறம், வடிவம் ,சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையில் மை என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

பண்புத்தொகை

  1. சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

  1. உவமைக்கும் பொருளுக்கும் ( உவமேயம் )இடையில் உவம உருபு மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

 உவமைதொகை

  1. இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச் சொல் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

 உம்மைதொகை

  1. உம்மைத்தொகை எத்தனை அளவு பெயர்களை தொடர்ந்து வரும்?

நான்கு: எண்ணல் ,எடுத்தல் ,முகத்தல் நீட்டல்

  1. வேற்றுமை ,வினை ,பண்பு ,உவமை ,உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?

அன்மொழித் தொகை  

 
  

          

  1. ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படும்?

தொகாநிலைத் தொடர்

  1. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

ஒன்பது : எழுவாய்த்தொடர், விளித்தொடர் ,வினைமுற்றுத் தொடர் ,பெயரெச்சத் தொடர் ,வினையெச்சத் தொடர் ,வேற்றுமைத் தொடர் ,இடைச்சொல் தொடர் ,உரிச்சொல் தொடர்,அடுக்குத்தொடர்

  1. எழுவாயுடன் பெயர் வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?

எழுவாய்த்தொடர்

  1. விளியுடன் வினை தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?

விளித் தொடர்

  1. வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?

வினைமுற்றுத்தொடர்

  1. முற்றுப்பெறாத வினை பெயர்ச்சொல்லை தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?

பெயரெச்சத் தொடர்

  1. வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள்

  1. இடை சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?

இடைச்சொல் தொடர்

  1. உரிச்சொல் உடன் பெயரோ வினையோ தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?

உரிச்சொல் தொடர்

  1. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?

அடுக்குத்தொடர்

  1. வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தினை சேர்ப்பதன் மூலம் என்ன பெயரெச்சங்கள் உருவாகின்றன?

கூட்டுநிலை பெயரெச்சங்கள்        

  1. ஆறு அறிவுடைய மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்?

உயர்திணை

  1. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் எவ்வாறு வழங்குவர்?

அஃறிணை

  1. திணையின் உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?

பால்

  1. பால் எத்தனை வகைப்படும்?

5 : ஆண்பால் ,பெண்பால் ,பலர்பால் ,ஒன்றன்பால், பலவின்பால்

  1. உயர்திணை பால் பகுப்பில் எத்தனை பிரிவுகளை உடையது?

 3: ஆண்பால் ,பெண்பால் பலர்பால்

  1. அஃறிணை பால் பகுப்பில் எத்தனை பிரிவுகளை உடையது?

2: ஒன்றன்பால், பலவின்பால்

  1. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

ஒன்றன்பால்

  1. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

 பலவின்பால்

  1. இடம் எத்தனை வகைப்படும்?

 3 : தன்மை ,முன்னிலை ,படர்க்கை

  1. இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?

 வழா நிலை

  1. இலக்கணமுறையின்றி பேசுவதும் எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?

வழுநிலை

  1. இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வழுவமைதி        

  1. வினா எத்தனை வகைப்படும்?

ஆறு: அறிவினா, அறியாவினா ,ஐய வினா ,கொளல் வினா ,கொடை வினா,ஏவல் வினா

  1. தான் விடை அறிந்திருந்தும் அவ்விடை பிறருக்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது என்ன வகை வினா?

அறிவினா

  1. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது என்ன வகை?

அறியா வினா

  1. ஐய்யம் நீங்கி தெளிவு பெறுவதற்காக கேட்கப்படுவது என்ன வகை?

ஐயவினா

  1. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது என்ன வகை?

கொளல் வினா

  1. பிறருக்கு கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது என்ன வகை?

கொடை வினா

  1. ஒரு செயலை செய்யுமாறு ஏவுதற்பொருட்டு வினவுவது என்ன வகை?

ஏவல் வினா

  1. விடை எத்தனை வகைப்படும்?

எட்டு: சுட்டுவிடை,மறைவிடை, நேர் விடை,ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை

  1. சுட்டுவிடை,மறைவிடை, நேர் விடை ஆகிய விடைகள் எவ்வாறு அழைக்கப்படும்?

வெளிப்படை விடைகள்

  1. குறிப்பு விடைகள் என அழைக்கப்படுபவை என்னென்ன?

ஐந்து:ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை

  1. ஒன்றினை சுட்டிக் கூறும் விடை என்ன வகை?

சுட்டுவிடை

  1. ஒன்றனை மறுத்துக் கூறும் விடை என்ன வகை?

 மறை விடை

  1. ஒன்றனக்கு உடன்பட்டு கூறும் விடை என்ன வகை?

நேர் விடை

  1. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாக கூறும் விடை என்ன வகை?

ஏவல் விடை

  1. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவை கேட்பது என்ன வகை?

 வினா எதிர் வினாதல் விடை

  1. வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறுதல் என்ன விடை?

உற்றது உரைத்தல் விடை

  1. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதை கூறல் என்ன வகை?

உறுவது கூறல் விடை

  1. வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறுதல் என்ன வகை?

 இனமொழி விடை

  1. செய்யுளில் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ, மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு என்ன பெயர்?

பொருள்கோள்

  1. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

 8 :ஆற்றுநீர்ப் பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள், நிரல்நிறை பொருள்கோள், கூட்டுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள் ,அளைமறிபாப்பு பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், அடிமறி மாற்றுப் பொருள்கள்

  1. பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கை போல் நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

  1. ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக ) அமைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

நிரல்நிறை பொருள்கோள்

  1. நிரல்நிறை பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

இரண்டு: முறை நிரல்நிறைப் பொருள்கோழ், எதிர் நிரல் நிறை பொருள்கோள்

  1. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும், அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் எவ்வாறு அழைக்கப்படும்?

 முறை நிரல்நிறைப் பொருள்கோள்

  1. செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர்ஸஎதிராக கொண்டு பொருள் கொள்ளுதல் எவ்வாறு அழைக்கப்படும்?

எதிர் நிரல்நிறை பொருள்கோள்

  1. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது எவ்வாறு அழைக்கப்படும்?

கொண்டுகூட்டு பொருள்கோள்  

 
  

 

  1. வாழ்க்கை முறைகளை அகம் , புறம் என வகுத்ததை பற்றி கூறும் இலக்கணம்?

 அகப்பொருள் இலக்கணம்

  1. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளை கூறுவது என்ன வகை?

அகத்திணை

  1. அன்பின் ஐந்திணைகள் என்னென்ன?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை

  1. நிலமும் பொழுதும் எவ்வாறு அழைக்கப்படும்?

முதற்பொருள்

  1. நிலம் எத்தனை வகைப்படும்?

5 :குறிஞ்சி, முல்லை, மருதம் ,நெய்தல், பாலை

  1. மலையும் மலை சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?

குறிஞ்சி

  1. காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?

முல்லை

  1. வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?

மருதம்

  1. கடலும் கடல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?

நெய்தல்

  1. சுரமும் சுரம் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?

பாலை

  1. பொழுது எத்தனை வகைப்படும்?

 இரண்டு : பெரும்பொழுது ,சிறுபொழுது

  1. ஓராண்டின் ஆறு கூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பெரும் பொழுது

  1. பெரும்பொழுது என்னென்ன?

கார்காலம், குளிர்காலம் ,முன்பனிக்காலம் ,பின்பனிக்காலம் ,இளவேனிற்காலம் ,முதுவேனிற்காலம்

  1. கார்காலத்தின் மாதம் என்ன?

ஆவணி, புரட்டாசி

  1. குளிர்காலத்தின் மாதம் என்ன?

ஐப்பசி கார்த்திகை

  1. முன் பனிக்காலத்தின் காலம் என்ன?

மார்கழி தை

  1. பின்பனிக் காலத்தின் காலம் என்ன?

 மாசி பங்குனி

  1. இளவேனிற் காலத்தின் காலம் என்ன?

 சித்திரை வைகாசி

  1. முதுவேனில் காலத்தில் காலம் என்ன?

 ஆனி ஆடி

  1. ஒரு நாளில் ஆறு கூறுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

 சிறு பொழுது

  1. சிறுபொழுது என்னென்ன?

காலை, நண்பகல் ,எற்பாடு ,மாலை, யாமம், வைகறை

  1. காலை 6 மணி முதல் 10 மணி வரை உள்ள பொழுது எவ்வாறு அழைக்கப்படும்?

காலை

  1. காலை 10 மணி முதல் 2 மணி வரை உள்ள பொழுது எவ்வாறு அழைக்கப்படும்?

நண்பகல்

  1. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படும்?

எற்பாடு

  1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படும்?

 மாலை

  1. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படும்?

 யாமம்

  1. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படும்?

 வைகறை

  1. ஏற்பாடு என்பதன் பொருள் என்ன?

எல் என்றால் -ஞாயிறு ,பாடு என்றால் மறையும் நேரம்

  1. குறிஞ்சித் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?

குளிர்காலம் முன்பனிக்காலம்- சிறுபொழுது :யாமம்

  1. முல்லைத் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?

கார்காலம்- சிறுபொழுது :மாலை

  1. மருதத் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?

ஆறு பெரும்பொழுதுகள்- சிறுபொழுது :வைகறை

  1. நெய்தல் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?

ஆறு பெரும்பொழுதுகள்- சிறுபொழுது :எற்பாடு

  1. பாலைத் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?

இளவேனில் ,முதுவேனில், பின்பனி- சிறுபொழுது :நண்பகல்

  1. கருப்பொருள்கள் என அழைக்கப்படுபவை எவை?

ஒரு நிலத்தின் தெய்வம் ,மக்கள் ,தொழில் ,விலங்கு  

 
  

 

  1. புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது எது?

புறத்திணை

  1. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

 12 வகை

  1. புறத்திணைகளின் வகைகள் என்னென்ன?

வெட்சித் ,கரந்தை வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை ,தும்பை, வாகை,  பாடாண் ,பொதுவியல்  ,கைக்கிளை ,பெருந்திணை

  1. ஆநிரை கவர்தல் என்னத் திணை?

வெட்சித் திணை

  1. வெட்சிப்பூ என்ன நிறம் உடையது?

சிவப்பு

  1. வெட்சிப்பூ வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 இட்லி பூ

  1. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்க செல்வது என்ன வகை திணை?

 கரந்தை திணை

  1. கரந்தை பூவின் நிறம் என்ன?

செம்மை ,நீலம், இளஞ்சிவப்பு ,நீலம் கலந்த சிவப்பு

  1. கரந்தைப் பூ வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

 கொட்டை கரந்தை

  1. பகைவர் நாட்டைக் கைப்பற்றுவது என்னத் திணை?

 வஞ்சித் திணை

  1. வஞ்சி பூவின் நிறம் என்ன?

வெள்ளிய பஞ்சுபோன்ற நிறம்

  1. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்ற அரசனோடு எதிர்த்து போரிடுவது என்னத் திணை?

காஞ்சித்திணை

  1. காஞ்சி பூவின் நிறம் என்ன?

நீலநிறம்

  1. கோட்டையை காற்றில் வேண்டி உள்ளிருந்து போரிடுதல் என்னத் திணை?

நொச்சி திணை

  1. நொச்சி பூவின் நிறம் என்ன?

நீலநிறம்

  1. மாற்றரசனின் கோட்டையை கைப்பற்ற அதனை சுற்றிவளைத்து போராடுவது என்னத் திணை?

உழிஞைதிணை

  1. உழிஞைப் பூவின் நிறம் என்ன?

மஞ்சள் நிறம்

  1. உழிஞைக் கொடி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

முடக்கத்தான்

  1. போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது என்னத் திணை?

 தும்பைத் திணை

  1. தும்பைப் பூவின் நிறம் என்ன?

தூய வெண்ணிறம்

  1. போரிலே வெற்றி பெறுவது என்னத் திணை?

வகைத்திணை

  1. வாகைப் பூவின் நிறம் என்ன?

மங்கிய வெண்ணிறம்

  1. படுவதற்கு தகுதியுடையோர் ஆளுமைகளின் கல்வி, வீரம் ,செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது என்ன திணை?

பாடாண் திணை

  1. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது எது?

பொதுவியல் திணை

  1. கைக்கிளை என்பது என்ன?

ஒருதலைக் காமம்

  1. பெருந்திணை என்பது எதனைக் குறிக்கிறது?

பொருந்தாக் காமம்        

  1. யாப்பு எத்தனை உறுப்புகளை கொண்டது?

ஆறு: எழுத்து, அசை, சீர் ,தளை, அடி ,தொடை

  1. எத்தனை வகை பாக்கள் உள்ளன?

நான்கு: வெண்பா, ஆசிரியப்பா,கலிப்பா, வஞ்சிப்பா

  1. ஓசை எத்தனை வகைப்படும்?

 நான்கு: செப்பல்,அகவல்,துள்ளல் ,தூங்கல்,

  1. செப்பலோசை எதற்கு உரியது?

 வெண்பா

  1. அகவல் ஓசை எதற்கு உரியது?

 ஆசிரியப்பா

  1. இலக்கண கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது எது?

அகவற்பா என்னும் ஆசிரியப்பா

  1. செய்யுள்களில் இடையிடையே உயர்ந்து வருவது எது?

துள்ளலோசை

  1. துள்ளலோசை எதற்கு உரியது?

கலிப்பா

  1. தூங்கலோசை எதற்கு உரியது?

வஞ்சிப்பா

  1. வெண்பாக்கள் எத்தனை வகைப்படும்?

ஐந்து: குறள் வெண்பா ,சிந்தியல் வெண்பா ,நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா

  1. எத்தனை வகை ஆசிரியர் பாக்கள் உள்ளன?

நான்கு: நேரிசை ஆசிரியப்பா ,இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா

  1. ஈற்றடி முச்சீர் ஆகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும், இயற்சீர் ,வெண்சீர் மட்டும் பயின்று வருவது எது?

  வெண்பா

  1. ஈரசைச்சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வருவது எது?

ஆசிரியப்பா

  1. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வருவது எது?

 வெண்பா

  1. ஆசிரியதளை மிகுதியாகவும் வெண்டளை ,கலித்தளை ஆகியவை விரவியும் வருவது எது?

ஆசிரியப்பா

  1. இரண்டடி முதல் 12 அடி வரை அமைவது எது?

வெண்பா

  1. கலிவெண்பா எத்தனை அடிக்கு மேற்பட்டுவரும்?

13 அடி

  1. ஆசிரியப்பா எத்தனை அடியில் அமையும்?

 3 அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப

  1. ஈற்றுச்சீர் நாள், மலர் ,காசு ,பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிவது எது?

வெண்பா

  1. ஏகாரத்தில் முடிதல் எது?

ஆசிரியப்பா

  1. வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வருவது எது?

குறள் வெண்பா

  1. இருவர் உரையாடுவது போன்ற ஓசை எது?

செப்பலோசை

  1. ஒருவர் பேசுதல் போன்ற ,சொற்பொழிவு ஆற்றுவது போன்ற ஓசை?

அகவல் ஓசை

  1. கன்று துள்ளினாற் போல் சீர்தோறும் துள்ளிவரும் ஓசை ,அதாவது தாழ்ந்து உயர்ந்து வரும் ஓசை எது?

துள்ளலோசை

  1. சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை,தாழ்ந்தே வருவது?

 தூங்கலோசை

  1. யாப்பதிகாரம் எனும் நூலை எழுதியவர் யார்?

புலவர் குழந்தை

  1. ஓரசைச்சீரில் நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?

நாள்

  1. ஓரசைச்சீரில் நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?

 மலர்

  • ஓரசைச்சீரில் நேர்பு என்பதன் வாய்ப்பாடு என்ன?

காசு

  1. ஓரசைச்சீரில் நிரைபு என்பதன் வாய்ப்பாடு என்ன?

பிறப்பு

  1. ஈரசைச்சீரில் நேர் நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?

 தேமா

  1. ஈரசைச்சீரில் நிரை நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?

புளிமா

  1. ஈரசைச்சீரில் நிரை நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?

கருவிளம்

  1. ஈரசைச்சீரில் நேர் நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?

கூவிளம்

  1. மூவசைச்சீரில் நேர் நேர் நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?

தேமாங்காய்

  1. மூவசைச்சீரில் நிரை நேர் நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?

புளிமாங்காய்

  1. மூவசைச்சீரில் நிரை நிரை நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?

கருவிளங்காய்

  1. மூவசைச்சீரில் நேர் நிரை நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?

கூவிளங்காய்

  1. மூவசைச்சீரில் நேர் நேர் நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?

தேமாங்கனி

  1. மூவசைச்சீரில் நிரை நேர் நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?

புளிமாங்கனி

  1. மூவசைச்சீரில் நிரை நிரை நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?

கருவிளங்கனி

  1. மூவசைச்சீரில் நேர் நிரை நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?

 கூவிளங்கனி  

 
  

     

  1. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சி மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது எவ்வாறு அழைக்கப்படும்?

 தற்குறிப்பேற்ற அணி

  1. செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களில் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருளை விளக்குவது எவ்வாறு அழைக்கப்படும்?

 தீவக அணி

  1. தீவக அணி எத்தனை வகைப்படும்?

மூன்று:முதல் நிலைத் தீவகம் ,இடைநிலை தீவகம், கடை நிலைத் தீவகம்

  1. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது என்ன அணி?

நிரல்நிறை அணி

  1. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு புதிய சொற்களை அமைத்துப் பாடுவது என்ன அணி?

 தன்மையணி

  1. தன்மையணி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

தன்மை நவிற்சி அணி

  1. தன்மையணி எத்தனை வகைப்படும்?

 4: பொருள் தன்மை அணி ,குண தன்மையணி, சாதி தன்மையணி, தொழிற் தன்மையணி


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இலக்கணம் QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page