DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- தமிழர் குடும்ப முறை என்ற உரைநடையை எழுதியவர் யார் ?
பக்தவச்சல பாரதி
- குடும்பம் எனும் சொல் முதன்முதலில் எந்த நூலில் பயின்று வருகிறது?
திருக்குறள் 1029
- சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் எவை?
குடம்பை,குடும்பு,கடும்பு
- சங்க இலக்கியத்தில் குடம்பை எனும் சொல் எத்தனை இடங்களில் பயின்று வந்துள்ளது?
20 இடங்கள்
- குடும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?
கூடி வாழ்தல்
- “இரவுக் குறியே இல்லகத்துள்ளும்” எனும் தொல்காப்பிய நூற்பா குறிப்பிடும் இரண்டு வாழிடங்கள் என்னென்ன?
இல், மனை
- சங்க இலக்கியத்தில் வாழிடம் பற்றிய சொற்கள் என்னென்ன?
இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர்,மாடம்
- மகளிர் தம்மனை,நும்மனை என மனைவியின் இல்லத்தையும்
கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கு எந்த பாடலில் காணப்படுகிறது? மருதத் திணைப் பாடல் அகநானூறு
- புறநானூற்றுப் பாடலில் தற்காலிக தங்கும் இடத்தின் பெயர் என்னவாக குறிப்பிடப்பட்டுள்ளது?
புக்கில்
- திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் எவ்வாறு வழங்கப் பெற்றுள்ளது?
தன்மனை
- மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட கூடிய தொடக்க காலகட்டத்தில் பெயர் என்ன?
மணந்தகம்
- இளம் தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குறியது எனக் கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
- சங்க காலத்தில் கண சமூகத்துக்கு யார் தலைமை ஏற்றிருந்தார்?
தாய்
- சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றி கூறும் நூல் எது?
பதிற்றுப்பத்து
- “சிறுவர்தாயே பேரிற் பெண்டே”- வரிகள் இடம் பெற்ற நூல்
புறநானூறு
- “செம்முது பெண்டின் காதலனஞ்சிறா அன்” -வரிகள் இடம் பெற்ற நூல்
புறநானூறு
- “வானரை கூந்தல் முதியோள் சிறுவன்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
புறநானூறு
- ” முளரி மருங்கின் முதியோள் சிறுவன்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
புறநானூறு
- ” என் மகள் ஒருத்தியும் பிறர் மகன் ஒருவனும்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?
கலித்தொகை
- திருமணத்திற்கு பின் மனைவியின் இல்லத்துக்கு சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்தது எனக் கூறும் நூல் எது?
அகநானூறு
- தாய்வழி சொத்துக்கள் பெண்டிருக்கு போய் சேர்ந்தன என்பதை கூறும் நூல் எது?
மருதத் திணைப் பாடல் குறுந்தொகை
- “நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நன்மணம் கலிக” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
ஐங்குறுநூறு
- “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” வரிகள் இடம் பெற்ற நூல் எது?
குறுந்தொகை
- எந்த நூலில் இடம்பெற்றிருந்த பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது?
குறுந்தொகை
- “மறியிடைப்படுத்த மாண்பினை போல” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
ஐங்குறுநூறு
- கணவன் மனைவி மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை பற்றி எந்த நூலிலுள்ள பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்தப் பாடலின் ஆசிரியர் யார்?
புறநானூறு ஒக்கூர் மாசாத்தியார்
- தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரை எந்த இதழில் வெளிவந்தது
பனுவல் 2010
- பக்தவச்சல பாரதி எழுதிய நூல்கள் என்னென்ன?
இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழக பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு
- ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்?
கோல்மன் பார்க்ஸ்
- ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்தவர்?
என் சத்தியமூர்த்தி
- ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் தமிழில் என்ன தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது?
தாகங்கொண்ட மீனொன்று
- ஜலாலுதீன் ரூமி எந்த ஆண்டு பிறந்தார்
கி பி 1207
- ரூமியின் சூஃபி தத்துவ படைப்பின் பெயரென்ன?
மஸ்ணவி
- மஸ்னவி எத்தனை பாடல்களைக் கொண்டதாக கூறப்படுகிறது
25,600
- ரூமியின் மற்றொரு நூலின் பெயர் என்ன?
திவான் ஈ ஷம்ஸ் ஈ தப்ரீஸி
- “யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா, சிறியோரை இகழ்தல் இலமே பெரியோரை வியத்தல் இலமே” கூற்றுகளை கூறியவர் யார்?
கணியன் பூங்குன்றனார்
- “காக்கை குருவி எங்கள் ஜாதி” எனக் கூறியவர்?
பாரதியார்
- “அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான”-இவ்வரிகளில் அமலன் என்பது யாரை குறிப்பிடுகிறது?
இராமன்
- “என் உயிர் அனையாய் நீ ” என ராமன் யாரை குறிப்பிடுகின்றான்
குகன்
- “நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்” இவ்வரிகள் யாருடைய கூற்று?
இராமன்
- “அன்பு உள,இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்”- இக்கூற்றை ராமன் யாரிடம் கூறினான்?
குகன்
- சவரி பிறப்பு நீங்கு படலம் எந்த காண்டத்தில் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது?
ஆரண்ய காண்டம்
- “….உடுபதி, இரவி ஒத்தார்”-இவ்வரிகளில் உடுபதி ,இரவி என்பதன் பொருள் என்ன?
சந்திரன் சூரியன்
- கம்பராமாயணத்தை இயற்றியவர் ?
கம்பர்
- கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்?
இராமாவதாரம்
- கம்பரின் காலம்?
12ஆம் நூற்றாண்டு
- கம்பர் இயற்றிய வேறு நூல்கள்?
சடகோபர் அந்தாதி, சிலையெழுபது, ஏரெழுபது,திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி
- கம்பர் பிறந்த ஊர்?
சோழநாட்டுத் திருவழுந்தூர்
- உரிமைத்தாகம் என்னும் சிறுகதையை எழுதியவர்?
பூமணி
- “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” இவ்வரிகளை பாடியவர்?
ஔவையார்
- பேச்சு வழக்கு சொற்களின் அர்த்தங்களை குறிப்பிடுக?
1.கெராமுனுசு- கிராம நிர்வாக அலுவலர் 2.பிஞ்சை- புன்செய் 3.வாந்தக்கமாக-இணக்கமாக 4.வெள்ளங்காட்டி-விடியற்காலை
- கடகம்- ஓலைப்பட்டி
- உரிமைத்தாகம் எனும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது
பூமணி சிறுகதைகள்
- பூமணியின் இயற்பெயர்
பூ மாணிக்கவாசகர்
- பூமணியின் சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?
அறுப்பு,வயிறுகள்,ரீதி, நொறுங்கல்கலள்
- பூமணி எழுதிய புதினங்கள் என்னென்ன?
வெக்கை, பிறகு ,அஞ்ஞாடி,கொம்மை
- பூமணி இயக்கிய திரைப்படத்தின் பெயர் என்ன?
கருவேலம்பூக்கள்
- பூமணியின் எந்த நூல் எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளது?
அஞ்ஞாடி 2014