DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கி பணியாற்ற வேண்டும் என்பதற்கு திருவள்ளுவர் எந்த அதிகாரத்தின் வழியே வழிகாட்டுகிறார்?
மடியின்மை
- “பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- “பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன்” இப்புறநானூற்றுப் பாடலில் யார் யாரைப் பற்றி பாடியுள்ளார்?
கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளி பற்றி
- “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பாலகாண்டம் கம்பராமாயணம்
- “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” இவ்வரிகளில்? கம்பர் யாரை புகழ்ந்துள்ளார்
தசரதன்
- “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
அறநெறிச்சாரம்
- கடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன?
அரலை, அரி ,அலை, அழுவம் ,அளம்,அளக்கர்,ஆர்கலி,ஆழி,ஈண்டுநீர், உவரி,திரை,பானல், பெருநீர்,சுழி,நீராழி,புணர்ப்பு,தென்நீர்,திரை,பௌவம், முந்நீர்,வரி,ஓதம்,வலயம்
- உரோமாபுரி சிப்பாய்கள் பாண்டிய போர் படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது?
சிலப்பதிகாரம்
- குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி” நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் “என குறிப்பிடும் நூல்?
பட்டினப்பாலை
- காவிரிப்பூம்பட்டினத்தில் மாரி காலத்து மழை மேகம் போல பொருட்கள் பண்டகசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன என்பதை “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்” எனக் கூறும் நூல் எது?
பட்டினப்பாலை
- பாண்டியநாட்டு தூதுக்குழு ஒன்று அகஸ்டஸ் சீசர் கி.மு 20 ஆம் ஆண்டு சந்தித்ததை பற்றி தெரிவிப்பவர் யார்?
ஸ்ட்ரேபோ
- புறநானூற்றில் எந்த பாடலில் யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது?
56வது பாடல்
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனை தொழிலாளர்கள் ஆக்கி கட்டுப்படுத்தினான் என்ற செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
இரண்டாம் பத்து,பதிற்றுப்பத்து
- “கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
நாலடியார்
- “ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
நல்வழி
- நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?
ஔவையார்
- 126 ஒற்றை வரிகளில் துளிகள் எனும் நூலை எழுதியவர் யார்?
ஹிராக்ளிடஸ்
- இலக்கியத்தில் மேலாண்மை எனும் நூலை எழுதியவர் யார்?
வெ.இறையன்பு
- வெ.இறையன்பு எழுதிய நூல்கள் என்னென்ன?
வாய்க்கால் மீன்கள், ஐஏஎஸ் வெற்றிப்படிகட்டுகள் ,ஏழாவது அறிவு ,உள்ளொளிப் பயணம் ,மூளைக்குள் சுற்றுலா
- வெ.இறையன்பு எழுதிய வாய்க்கால் மீன்கள் எனும் கவிதை நூல் எந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசை பெற்றது?
1995
- அதிசய மலர் என்னும் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது?
அதன்பிறகும் எஞ்சும்
- அதன்பிறகும் எஞ்சும் எனும் கவிதை தொகுப்பு எழுதியவர் யார்?
தமிழ்நதி ( கலைவாணி)
- தமிழ் நதி எங்கு பிறந்தார் ?
ஈழத்தின் திருகோணமலை
- தமிழ்நதி எழுதிய நூல்கள் என்னென்ன?
நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது( சிறுகதை) சூரியன் தனித்தலையும் பகல் ,இரவுகளில் பொழியும் துயரப்பணி (கவிதைகள்) கானல் வரி (குறுநாவல்) ஈழம் :கைவிட்ட தேசம் ,பார்த்தீனியம் (நாவல்)
- தேயிலைத் தோட்டப் பாட்டு எனும் கவிதையை எழுதியவர்?
முகமது ராவுத்தர்
- பாரத மக்களின் பரிதாப சிந்து என அழைக்கப்படுவது எது?
தேயிலை தோட்ட பாட்டு
- இயல்பாக தங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களை பாடல்கள் கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துவதற்கு என்னென்ன பெயர்கள்?
வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம் ,குஜிலி நூல்கள் ,காலணா அரையணா பாட்டு புத்தகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள் ,தெருப்பாடல்கள்
- “காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பிசிராந்தையார், புறநானூறு
- “யானை புக்க புலம் போல தானும் உண்ணான் உலகமும் கெடுமே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பிசிராந்தையார்,புறநானூறு
- புறநானூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புறம் புறப்பாட்டு
- புறநானூற்றை உ.வே.சா எந்த ஆண்டு பதிப்பித்தார்?
1894
- “the four hundred songs of war and wisdom and anthology of poems from classical Tamil the purananooru” என்ற நூலை ஜார்ஜ் எல் ஹார்ட் எந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்?
1999
- பிசிர் என்பது எந்த நாட்டில் இருந்து ஓர் ஊர்?
பாண்டிய நாடு
- பிசிராந்தையார் யாருடைய ஆட்சிக்காலத்தில் புறநானூற்றுப் பாடலை இயற்றினார்?
அறிவுடைநம்பி பாண்டிய மன்னன்
- ஆறுநாட்டார் குன்றின்மீது பொறிக்கப்பட்டுள்ள சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகள் எங்கு உள்ளது?
கரூரை அடுத்த புகளூர்
- ஐராவதம் மகாதேவன் எந்த ஆண்டு முதல் கைத்தறித் துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்?
1962
- தென் தமிழ்நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளை எந்தெந்த வரிவடிவங்கள் கண்டறியப்பட்டது?
பிராம்மி, தமிழி, தரமிழி,திராவிடி
- “எர்லி தமிழ் எபிகிராபி”என்பது யாருடைய ஆய்வுநூல்?
ஐராவதம் மகாதேவன்
- மதுரைக்கு அருகே உள்ள மாங்குளம் கல்வெட்டுகள் யாருடைய காலத்தது?
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்
- ஐராவதம் மகாதேவன் மாங்குளம் கல்வெட்டுகளை எந்த ஆண்டு பாண்டியமன்னனுடையது எனக் கண்டுபிடித்தார்?
1965 நவம்பர் 3
- தமிழ்நாட்டிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர் யார்?
திரு கே வி சுப்பிரமணியனார்
- “சங்க காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்” என்னும் இக்கட்டுரை எந்த இதழில் வெளிவந்தது?
கல்வெட்டு
- ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகள் என்னென்ன? ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970 ) ஃஇந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992 ) ஃதாமரை திரு விருது (2009)