TNPSC 6th Std TNSCERT TERM 1 SOCIAL: Did You Know? PDF DOWNLOAD

TNPSC 6th Std TNSCERT TERM 1 SOCIAL: Did You Know? PDF DOWNLOAD


Telegram Logo GIF TNPSC 6th Std TNSCERT TERM 1 SOCIAL: Did You Know? PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


TNPSC 6th Std TNSCERT TERM 1 SOCIAL: Did You Know? PDF DOWNLOAD
TNPSC 6th Std TNSCERT TERM 1 SOCIAL: Did You Know? PDF DOWNLOAD

PDF DOWNLOAD : CLICK HERE

 

வரலாறு என்றால் என்ன?

வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு.

»»——⍟——««

வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான ‘இஸ்டோரியா (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “விசாரிப்பதன் மூலம் கற்றல்” என்பதாகும்.

»»——⍟——««

நாணயவியல் – நாணயம், அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறையாகும்.

»»——⍟——««

கல்வெட்டியல் -கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை.

»»——⍟——««

தம்மா என்பது பிராகிருத சொல். இது சமஸ்கிருதத்தில் ‘தர்மா’ எனப்படுகிறது இதன் பொருள் ‘அறநெறி’ ஆகும்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையைத் தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றின் உதவியுடன் நாம் அறிவியல் நோக்கில் பயில முடியும்.

»»——⍟——««

வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும். தொல்லியல் ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அகழ்வாராய்ச்சிப் பொருள்கள் உதவுகின்றன.

»»——⍟——««

குகையில் வாழ கற்றுக் கொண்ட குரோமேக்னான்ஸ் மனிதர்கள் பிரான்சில் உள்ள லாஸ்காஸ் என்னுமிடத்தில் உள்ள குகைகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்களிடம் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்தது.

»»——⍟——««

மானுடவியல் (anthropology) மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி படிப்பது மானுடவியல் ஆகும்

மானுடவியல் என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

anthropos என்பதன் பொருள் மனிதன், logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம். மானுடவியல் ஆய்வாளர்கள், மனித குலத்தின் வளர்ச்சியையும். நடத்தையையும் ஆராய்ந்து மனிதனின் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகள் பற்றிய முழு விளக்கத்தையும் அடைவதற்கு முயல்கின்றனர்.

»»——⍟——««

மனிதர்களும் அவர்கள் வாழ்விடங்களும்

ஆஸ்ட்ரலோபிதிகஸ்-கிழக்கு ஆப்பிரிக்கா

ஹோமோ ஹேபிலிஸ் – தென் ஆப்பிரிக்கா

ஹோமோ எரக்டஸ் – ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா

நியாண்டர்தால் – யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா)

குரோமேக்னான்ஸ் – பிரான்ஸ்

பீகிங் மனிதன் -சீனா

ஹோமோ சேப்பியன்ஸ் – ஆப்பிரிக்கா

ஹைடல்பர்க் மனிதன் – லன்டன்

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘     

சிந்து நாகரிகம்

நாகரிகம் என்ற சொல் பண்டைய லத்தீன் மொழிச் சொல்லான ‘சிவிஸ்’ (CIVIS) என்பதிலிருந்து வந்தது இதன் பொருள் ‘நகரம்’ஆகும்.

»»——⍟——««

இந்தியத் தொல்லியல் துறை ASI (Archaelogical Survey of India).

1861 ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நிலஅளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.

இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.

»»——⍟——««

வெண்கலக் காலம் என்பது, மக்கள் வெண்கலத்தாலான பொருள்களைப் பயன்படுத்திய காலம் ஆகும்

»»——⍟——««

செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.

»»——⍟——««

மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட உலோகம் செம்பு.

»»——⍟——««

மொகஞ்ச-தாரோவில் வெண்கலத்தால் ஆன இந்த சிறிய பெண் சிலை கிடைத்தது. ‘நடன மாது’ என்று குறிப்பிடப்படுகிற இந்தச் சிலையைப் பார்த்த சர் ஜான் மார்ஷல் “முதலில் இந்தச் சிலையை நான் பார்த்த பொழுது இது வரலாற்றிற்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையைச் சார்ந்தது என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஏனெனில் இதுபோன்று உருவாக்கம் பண்டையமக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை. இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன் இச்சிலைகள் அக்காலகட்டத்துக்கு உரியதாகவே இருந்தன” என்றார்.

»»——⍟——««

கே.வி.டி (கொற்கை – வஞ்சி -தொண்டி) வளாகம்: பாகிஸ்தானில் இன்றும்

கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, ‘கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளான காவ்ரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழ்ச் சொற்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.

»»——⍟——««

சிந்துவெளி மக்கள் இரும்பு மற்றும் குதிரையை அறிந்திருக்கவில்லை

»»——⍟——««

சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் (camelian) பயன்படுத்தினர்.

»»——⍟——««

முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.

»»——⍟——««

மொஹஞ்சதாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப் பாரம்பரியத் அமைப்பால் தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

»»——⍟——««

கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறைதொல்லியல் ஆய்வாளர்களுக்கான தரப்படுத்தப்பட்ட முறை

கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பன்14 ஐப் பயன்படுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும் முறை அல்லது கதிரியக்க கார்பன்14 (C14) முறை கார்பன், (c, )முறை என்று அழைக்கப்படுகிறது.

»»——⍟——««

கட்டடங்கள் கட்டுவதற்கு ஏன் சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன?

ஏனென்றால், அவை வலுவானவை, கடினமானவை, நிலைத்து நிற்கக் கூடியவை, நெருப்பைக் கூட தாங்குபவை. மேலும், அவை நீரினால் கரைவதில்லை.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘     

பண்டைய நாகரிகங்கள்

உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் மெசபடோமியா நாகரிகம். இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

»»——⍟——««

புகார் – துறைமுக நகரம்

மதுரை – வணிக நகரம்

காஞ்சி – கல்வி நகரம் ஆகும்

»»——⍟——««

சோழ நாடு – சோறுடைத்து,

பாண்டிய நாடு -முத்துடைத்து,

சேர நாடு – வேழமுடைத்து,

தொண்டை நாடு – சான்றோருடைத்து.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘     

பேரண்டமும் மற்றும் சூரியக் குடும்பம்

பேரண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு பிரபஞ்சவியல்(Cosmology) என்று பெயர்.

காஸ்மாஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும்.

»»——⍟——««

ஓர் ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும். ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ ஆகும். ஆனால், ஒலியானது வினாடிக்கு 330 மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.

»»——⍟——««

கற்பனை செய்து பார்க்கவும். சூரியன் 1.3 மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கக்கூடிய வகையில் மிகப்பெரியதாகும்.

»»——⍟——««

பண்டைத் தமிழர்கள் சூரியன் மற்றும் பிற கோள்களைப் பற்றி அறிந்திருந்தனர் என்பது சங்க இலக்கியங்கள் வாயிலாக நமக்குப் புலனாகிறது. உதாரணமாக, சிறுபாணாற்றுப்படையில் காணப்படும் வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறுஎன்று பாடல் வரிகளிலிருந்து நாம் தெரிந்துகொள்வோம்.

»»——⍟——««

சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 150 மில்லியன் கிலோ மீட்டராகும். மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய 21 வருடங்கள் ஆகும்.

»»——⍟——««

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதியை ஆராய்வதற்காக 24.09.2014 அன்று மங்கள்யான்  (Mars Orbiter Mission) எனப்படும் விண்கலத்தை அனுப்பியது. இதனால் இந்தியா செவ்வாய்க் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாஸா (USA), ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் உள்ளது.

»»——⍟——««

நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திராயன்-1 ஆகும். இது 2008ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

 

புவியின் சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி.மீ/மணி ஆகவும்,

60° வடக்கு அட்சரேகையில் 845 கி.மீ/மணி ஆகவும், துருவப் பகுதியில்

சுழலும் வேகம் சுழியமாகவும் இருக்கும்.

»»——⍟——««

சூரிய அண்மை புள்ளி‘ (Perihelion) என்பது புவி தன் சுற்றுப்பாதையில்

சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். சூரிய தொலைதூர புள்ளி

(Aphelion) என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்குத் தொலைவில் காணப்படும் நிகழ்வாகும்.

»»——⍟——««

மன்னார் வளைகுடா உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘     

நிலப்பரப்பும் பெருங்கடலும்

தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகளாகும்.

»»——⍟——««

ஆற்றுச் சமவெளிகள் பண்டைய நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கின. இந்தியாவில் சிந்து நதி மற்றும் எகிப்தின் நைல் நதி போன்ற ஆற்றுச் சமவெளிகளில் நாகரிகங்கள் தோன்றி செழித்தோங்கி வளர்ந்தன.

»»——⍟——««

உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் (8,848 மீ) மரியானா அகழியில் (10,994 மீ) மூழ்கிவிடும்

கடலின் ஆழத்தை மீஎன்ற குறியீட்டால் குறிப்பிட வேண்டும்.

»»——⍟——««

ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன் பசிபிக் என பெயரிட்டார். பசிபிக் என்பதன் பொருள் அமைதி என்பதாகும்.

»»——⍟——««

6° கால்வாய் – இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கிறது.

8° கால்வாய் மாலத் தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது

9° கால்வாய் லட்ச தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது.

10° கால்வாய் அந்தமான் தீவையும் நிக்கோபார் தீவையும் பிரிக்கிறது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘     

பன்முகத்தன்மை அறிவோம்

மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதி ஆகும். ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.

»»——⍟——««

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி” அறிவிக்கப்பட்டது. தற்போது 6 மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் 2005 ஆம் ஆண்டும் தெலுங்கு மற்றும் கன்னடம் 2008 ஆம் ஆண்டும் மலையாளம் 2013 ஆம் ஆண்டும் ஒரியா 2016 ஆம் ஆண்டும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன

»»——⍟——««

இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.

»»——⍟——««

இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” உள்ள நாடாக விளங்குகிறது. இச்சொற்றொடரானது நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

»»——⍟——««

இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால், இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம்என வரலாற்றாசிரியர் வி.ஏ. ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

சமத்துவம் பெறுதல்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரன நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார்.

இவர் தென்னாப்பிரிக்காவிலிருந்த இன நிறவெறிக்கு முடிவு கட்டினார்.

தென்னாப்பிரிக்காவில் உலகளவில் அமைதி நிலவவும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்

»»——⍟——««

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

இவர் பாபா சாஹேப் என பிரபலமாக அழைக்கப்படுகிறார்.

இவர் இந்திய சட்ட நிபுணராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.

இவர் 1915 இல் எம்.ஏ. பட்டத்தை பெற்றார். பின்னர் 1927 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டத்தை பெற்றார். அதற்கு முன்னர் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் D.Sc பட்டத்தையும் பெற்றிருந்தார்.

இவர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தார். எனவே, இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார்.

இவரது மறைவுக்குப் பின்னர், 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘     

TNPSC 6th Std TNSCERT TERM 1 SOCIAL: Did You Know? PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page