TNPSC 6th Std TNSCERT TERM 2 SOCIAL: Did You Know? PDF DOWNLOAD
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
PDF DOWNLOAD : CLICK HERE
வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறை (Slash and Burn Agriculture)
இம்முறையில் நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும். அந்நிலத்தில் குறுகிய காலகட்டத்திற்கு வேளாண்மை செய்து அதன்பின் அந்நிலம் கைவிடப்படும். பின்னர் மக்கள் மற்றொரு இடத்தில் இதே போன்று வேளாண்மை செய்யத் தொடங்குவர்.
»»——⍟——««
நான்கு வேதங்கள்: ரிக், யஜுர், சாம, அதர்வ
»»——⍟——««
இந்தியாவின் தேசிய குறிக்கோள்
“சத்யமேவ ஜெயதே” (“வாய்மையே வெல்லும்”) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
»»——⍟——««
ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்
தங்கம் (ஹிரண்யா)
இரும்பு (சியாமா)
தாமிரம்/செம்பு (அயாஸ்)
»»——⍟——««
பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது. Megalith என்பது கிரேக்கச் சொல்லாகும். Mega என்றால் பெரிய, lith என்றால் “கல்” என்று பொருள். இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
»»——⍟——««
தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பன குறித்தும் பெரிப்பிளஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
சமணம் (Jain) என்னும் சொல் ஜினா (Jina) என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.
»»——⍟——««
கர்மா அல்லது கர்மவினை என்றால் என்ன?
இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய/ அவளுடைய இப்பிறவியின் பிற்பகுதி வாழ்க்கையையும், அடுத்த பிறவியில் அவர் வாழப்போகும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்ற நம்பிக்கை ஆகும்.
»»——⍟——««
மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதமசுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார். அதன் பெயர் ஆகம சித்தாந்தம் எனப்படும்.
»»——⍟——««
சைத்தியம் – ஒரு பௌத்தக் கோவில் அல்லது தியானக்கூடம்.
விகாரைகள் – மடாலயங்கள்/துறவிகள் வாழும் இடங்கள்
ஸ்தூமி -புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம். இவை கலைத்திறமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் ஆகும்.
»»——⍟——««
மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகைகளின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதக கதைகளை சித்தரிக்கின்றன.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
16 மகாஜனபதங்கள்
குரு, பாஞ்சாலம், அங்கம், மகதம், வஜ்ஜி, காசி, மல்லம், கோசலம், அவந்தி, சேதி, வத்சம், மத்சயம், சூரசேனம், அஸ்மகம், காந்தாரம் மற்றும் காம்போஜம்,
»»——⍟——««
நாளந்தா-யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னம்
நாளந்தா பண்டைய மகத நாட்டில் இருந்த பௌத்த மடாலயம் ஆகும். குப்தர்களின் காலத்தில் அது மிகப் புகழ் பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது நாளந்தா என்னும் சமஸ்கிருதச் சொல் நா+அலம்+தா என்ற மூன்று சமஸ்கிருத சொற்களின் இணை’ப்பில் உருவானது. இதன் பொருள் ‘வற்றாத அறிவை அளிப்பவர் என்பதாகும்.
»»——⍟——««
மெகஸ்தனிஸ்
கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக, சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர். பதினான்கு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார். அவர் எழுதிய நூலின் பெயர் இண்டிகா. இந்நூல் மௌரியப் பேரரசைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள ஒரு முக்கியச் சான்றாகும்.
»»——⍟——««
மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன
»»——⍟——««
“அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்” – H.G வெல்ஸ் – வரலாற்றறிஞர்.
»»——⍟——««
சிங்கமுகத் தூண்
சாரநாத்திலுள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியின் மையச் சக்கரமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
»»——⍟——««
அசோகர் கல்வெட்டுகளில் எழுத்துமுறை
சாஞ்சி – பிராமி
காந்தகார் கிரேக்கம் மற்றும் அராமிக்
வடமேற்குப் பகுதிகள் – கரோஸ்தி
பேராணை – அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் ஆகும்.
»»——⍟——««
ருத்ரதாமனின் ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு சுதர்சனா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் சந்திரகுப்த மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டது. அசோகரின் காலத்தில் பணிகள் நிறைவு பெற்றன.
»»——⍟——««
யக்ஷன் என்பது நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார். யக்ஷி என்பது யக்க்ஷாவின் பெண்வடிவமாகும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
வளங்கள்
ஒரு பொருளின் பயன்பாட்டினைக் கண்டறிந்த பின்புதான் அப்பொருள் வளமாக மாறுகிறது. மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் மாறுபடக்கூடியவை. தேவையானது மாறுபடும்பொழுது அதை நிறைவு செய்கின்ற வளங்களும் மாறுகிறது. ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணிகள் காலமும் தொழில் நுட்பமும் ஆகும். உதாரணமாக நிலக்கரியும், பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வரும் இக்காலகட்டத்தில், புதிய கண்டுபிடிப்பான சூரியத்தகடுகள், சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்ற உதவுகிறது எனவே தற்போது இது ஒரு சிறந்த வளமாகவே நீடிக்கிறது.
»»——⍟——««
கடல் ஈஸ்ட்டானது (Marine Yeast) நிலப்பரப்பிலுள்ள ஈஸ்ட்டைவிட (Terrestrial Yeast) மிகுந்த ஆற்றல் உடையது. இச்சத்தை ரொட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது.
»»——⍟——««
வெப்ப மண்டல மழைக்காடுகள் “உலகின் பெரும் மருந்தகம்” (world’s largest pharmacy) என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் தாவரங்களில் 25% தாவரங்கள் மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும். (எ.கா) சின்கோனா.
»»——⍟——««
ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருளே திமிங்கலப் புனுகு ஆகும். ஒரு பவுண்டு (0.454 கி.கி) திமிங்கலப் புனுகின் விலை 63,000 அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும். இது வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
தேசிய சின்னங்கள்
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
»»——⍟——««
தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள்
விலங்கு – வரையாடு
பறவை – மரகதப் புறா
மலர் – செங்காந்தள் மலர்
மரம் – பனை மரம்
»»——⍟——««
இந்திய தேசியக்கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார்.
விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில் (வேலூர் மாவட்டம்) நெய்யப்பட்டது.
இக்கொடியைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார்.
இக்கொடி தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
»»——⍟——««
திருப்பூர்க் குமரன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். இளவயதிலிருந்தே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1932இல் காந்தியடிகளைக் கைது செய்ததைக் கண்டித்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்றன. காந்தியை விடுதலை செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் திருப்பூர்க் குமரன் கலந்து கொண்டார். காவல் துறையினரின் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு உயிர்துறந்தார். போராட்டக்களத்தில் உயிர்நீத்தபோதும் மூவர்ணக்கொடியைக் கீழே விடவில்லை. இதனால் திருப்பூர்க் குமரன் “கொடி காத்த குமரன்” என அழைக்கப்படுகிறார். அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.
»»——⍟——««
அசோகர் காலத்தில் சாரநாத் தூணின் உச்சியில் அமைந்திருந்த நான்முகச் சிங்கம் தற்போது சாரநாத் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
»»——⍟——««
1911, டிசம்பர் 27ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது இப்பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.
»»——⍟——««
இந்தியக் குடியரசு நாளின் மூன்றாவது நாளான ஜனவரி 29, அன்று பாசறைக்கு திரும்புதல் என்ற விழா சிறப்பாக நடைபெறும். அந்நாளில் தரைப்படை, கடற்படை, விமானப்படையைச்சேர்ந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்துவர். குடியரசு தலைவர் இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர் ஆவார். இவ்விழாவின் ஒரு பகுதியாக மாலை 6 மணிக்கு குடியரசுத்தலைவர் மாளிகை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
இந்திய அரசமைப்பு சட்டம்
அண்ணல் அம்பேத்கர் ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை‘ என அழைக்கப்படுகிறார்.
»»——⍟——««
இந்தியஅரசியலமைப்புச்சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘