TNPSC TAMIL 9TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
TNPSC TAMIL 9TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 9TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
2094. சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2095. ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்திற்கு பெயர் என்ன?
2096. எழுவாய் ஒரு வினையை செய்ய அதற்கு அடிப்படையாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2097. எழுவாய் வெளிப்படையாக தோன்றவில்லை எனில் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2098. வினைமுற்று பயனிலையாக வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
2099. பெயர்ச்சொல் பயனிலையாக வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
2100. வினாச்சொல் பயனிலையாக வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
2101. எழுவாயாக வரும் பெயர்ச் சொல்லுக்கு அடையாக வரும் சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2102. ஒரு தொடரில் வினைப் பயனிலைக்கு அடையாக வரும் சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2103. வினையின் வகைகள் என்னென்ன?
2104. வினையின் பயன் எழுவாயை சேருமாயின் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2105. வினையின் பயன் எழுவாயையன்றிப் பிறிதொன்றைச் சேருமாயின் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2106. எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்கு காரணமாக இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2107. எழுவாய் ஒரு வினையை செய்தால் அதை எவ்வாறு அழைக்கப்படும்?
2108. எழுவாய் ஒரு வினையை செய்யவைத்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
2109. பிற வினைகள் என்ன விகுதிகளை கொண்டும், துணை வினைகளை இணைத்தும் உருவாக்கப்படுகிறது?
2110. செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை எது?
2111. செயப்படுப் பொருளை முதன்மைப்படுத்தும் வினை எது?
2112. வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
2113. தனி வினை அடிகளைக் கொண்ட வினைச்சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
2114. கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2115. கூட்டு வினைகள் பொதுவாக எத்தனை வகைப்படும்?
2116. ஒரு கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படை பொருளைத் தரும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2117. ஒரு கூட்டு வினையின் இரண்டாவது குறிப்பாக வந்து தன் அடிப்படை பொருளை விட்டு விட்டு முதல் வினைக்கு துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2118. தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன?
2119. இரு வகைகளாகவும் செயல்படும் சொற்கள் என்னென்ன?
2120. தமிழில் துணைவினைகளாக வரும் சொற்கள் என்னென்ன?
2121. எந்தெந்த மொழிகளில் துணை வினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம்பெறும்?
2122. எந்த வல்லெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரும்?
2123. க,ச,த,ப ஆகிய வல்லெழுத்துக்கள் நிலை மொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துக்கள் தோன்றி புணரும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2124. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2125. வல்லினம் மிகுந்து வருதல் எந்த விகாரப்புணர்ச்சியின் கீழ் வரும்?
2126. வல்லினம் மிகும் இடங்கள் என்னென்ன?
2127. வல்லினம் மிகா இடங்கள் என்னென்ன?
2128. “இடைச்சொற்கள் பெயரையும் ,வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன தாமாக தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல” எனக் கூறுபவர்?
2129. வேற்றுமை உருபுகள் என்னென்ன?
2130. தற்காலத்தில் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் இடைச்சொற்கள் என்னென்ன?
2131. “உம்” என்னும் இடைச்சொல் என்ன பொருள்களில் வரும்?
2132. ஓகார இடைச்சொல் என்னென்ன பொருள்களில் வரும்?
2133. தற்காலத்தில் ஓகார இடைச்சொல் என்ன பொருளில் அதிகமாக வருகின்றது?
2134. ஏகார இடைச்சொல் என்ன பொருள்களில் வருகிறது?
2135. எந்த இடைச்சொல் அழுத்த பொருளில் வந்து, சொற்றொடரில் எந்த சொல்லுடன் வருகிறதோ அதனை முதன்மைப் படுத்துகின்றது?
2136. முடிந்தவரை ,குறிப்பிட்ட நேரம்வரை என்னும் பொருள்களில் வரும் ,வரையறை பொருளைத் தரும் இடைச் சொல் எது?
2137. ஆவது என்னும் இடைச் சொல் எந்தெந்த பொருள்களில் வருகிறது?
2138. கூட என்னும் இடைச் சொல் எந்தெந்த பொருள்களில் வருகிறது?
2139. ஆ என்னும் இடைச் சொல் என்ன பொருளில் வரும்?
2140. சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு ,சாத்தியம் ,பொருத்தம் ஆகிய பொருள்களிலும், தகவலாகவும் செய்தியை கூறுவதற்கும் பயன்படும் இடைச்சொல் எது?
2141. எத்தனை என்பது எதனைக் குறிக்கும்?
2142. எத்துணை என்பது எதனைக் குறிக்கும்?
2143. உரிச்சொற்கள் எதனைச் சார்ந்து வந்து பொருள் உணர்த்தும்?
2144. உரிச்சொற்கள் என்ன பொருள்களுக்கு உரித்தாய் வரும்?
2145. ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு தொன்றுதொட்டு ஆகிவருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2146. தொல்காப்பியர் ஆகுபெயர்களை எத்தனையாக வகை படுத்தியுள்ளார்?
2147. நன்னூலார் ஆகுபெயர்களை எவ்வளவாக வகைப்படுத்தி உள்ளார்?
2148. ஆகு பெயர்கள் என்னென்ன?
2149. இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வதற்கு பெயர் என்ன?
2150. புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொறுத்து எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
2151. புணர்ச்சியில் வருமொழியின் முதலெழுத்தை பொறுத்து எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
2152. எழுத்து வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்?
2153. நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் புணர்ச்சி எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
2154. புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சி எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
2155. புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவும் இன்றி இயல்பாக புணர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2156. புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2157. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2158. உயிரை ஈறாக உடைய சொற்களின்முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும் ; அப்போது சொற்கள் சேராமல் தனித்து நிற்கும் ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும் அது எவ்வாறு அழைக்கப்படும்?
2159. ‘இ,ஈ,ஐ’ என்னும் உயிர் எழுத்துக்களை உடைய சொற்கள் நிற்கும் பொழுது அவற்றின் முன் வருமொழியில் 12 உயிர்களும் வந்துப் புணர்கையில் என்னமெய் தோன்றும்?
2160. ‘இ,ஈ,ஐ’ தவிர என்னும் உயிர் எழுத்துக்களை உடைய சொற்கள் நிற்கும் பொழுது அவற்றின் முன் வருமொழியில் 12 உயிர்களும் வந்துப் புணர்கையில் என்னமெய் தோன்றும்?
2161. நிலைமொழி ஈறாக ஏகாரம் வந்து ,வருமொழியில் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களை உடைய சொற்கள் வந்து புணர்கையில் எந்த மெய் தோன்றும்?
2162. தனிக்குறில் அல்லாது சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பதற்கு என்ன பெயர்?
2163. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
2164. எந்த நான்கு எழுத்துக்களால் மெல்லினம் மிகும்?
2165. எந்தெந்த இடங்களில் மெல்லினம் மிகும்?
2166. கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2167. யாப்பிலக்கணத்தின் உறுப்புகள் எத்தனை?
2168. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
2169. எழுத்துக்களால் ஆனது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2170. அசை எத்தனை வகைப்படும்?
2171. அசை பிரிப்பில் எந்த எழுத்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது?
2172. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளின் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2173. பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது எது?
2174. சீர் எத்தனை வகைப்படும்?
2175. நேர் என்பது உகரம் சேர்ந்து முடிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2176. நிரை என்பது உகரம் சேர்ந்து முடிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2177. ஈரசை சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
2178. ஓரசைச்சீரில் நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
2179. ஓரசைச்சீரில் நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
2180. ஓரசைச்சீரில் நேர்பு அசையின் வாய்ப்பாடு என்ன?
2181. ஓரசைச்சீரில் நிரைபு அசையின் வாய்ப்பாடு என்ன?
2182. ஈரசைச்சீரில் நேர் நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
2183. ஈரசைச்சீரில் நிரை நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
2184. ஈரசைச்சீரில் நிரை நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
2185. ஈரசைச்சீரில் நேர் நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
2186. தேமா மற்றும் புளிமா எவ்வாறு அழைக்கப்படும்?
2187. கருவிளம் மற்றும் கூவிளம் எவ்வாறு அழைக்கப்படும்?
2188. மூவசைச்சீரில் உள்ள நேர் நேர் நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
2189. மூவசைச்சீரில் உள்ள நிரை நேர் நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
2190. மூவசைச்சீரில் உள்ள நிரை நிரை நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
2191. மூவசைச்சீரில் உள்ள நேர் நிரை நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
2192. மூவசைச்சீரில் உள்ள நேர் நேர் நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
2193. மூவசைச்சீரில் உள்ள நிரை நேர் நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
2194. மூவசைச்சீரில் உள்ள நிரை நிரை நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
2195. மூவசைச்சீரில் உள்ள நேர் நிரை நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
2196. வெண்பாவில் என்ன சீர் மட்டுமே இடம்பெறும்?
2197. தளைகளில் எது மட்டுமே இடம்பெறும்?
2198. ஈற்றடியின் ஈற்றுச் சீர் எந்த சீர்களில் முடியும்?
2199. பாடலில் நின்ற சீரின் ஈற்றசையும் அதனை அடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் எவ்வாறு அழைக்கப்படும்?
2200. தளை எத்தனை வகைப்படும்?
2201. நேரொன்றாசிரியத்தளையின் வாய்ப்பாடு என்ன?
2202. நிரையொன்றாசிரியத்தளையின் வாய்ப்பாடு என்ன?
2203. இயற்சீர் வெண்டளையின் வாய்ப்பாடு என்ன?
2204. வெண்சீர் வெண்டளையின் வாய்ப்பாடு என்ன?
2205. கலித்தளையின் வாய்ப்பாடு என்ன?
2206. ஒன்றிய வஞ்சித்தளையின் வாய்ப்பாடு என்ன?
2207. ஒன்றா வஞ்சித்தளையின் வாய்ப்பாடு என்ன?
2208. இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2209. அடி எத்தனை வகைப்படும்?
2210. இரண்டு சீர்களைக் கொண்டது?
2211. மூன்று சீர்களைக் கொண்டது?
2212. நான்கு சீர்களைக் கொண்டது?
2213. ஐந்து சீர்களைக் கொண்டது?
2214. ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது?
2215. பாடலின் அடிகளிலோ சீர்களிலோ எழுத்துக்கள் ஒன்றி வரத் தொடுப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
2216. செய்யுள் உறுப்பு பாடலிலுள்ள அடிகள் தோறும் அல்லது சீர்கள் தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைவது எது?
2217. தொடை எத்தனை வகைப்படும்?
2218. அடிகளிலோ சீர்களிலே முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி அமைவதற்கு பெயர் என்ன?
2219. அடிகள் தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ,அடியோ ஒன்றி அமைவதற்கு பெயர் என்ன?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :