DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF [TAMIL MEDIUM]
[For best experience, use Chrome, Firefox, or Edge. Some features may not work in other browsers]
- எங்கிருந்து வடமொழியும் தென்மொழியும் பிறந்ததாக ஐதீகம்?
சிவபெருமானின் உடுக்கையிலிருந்து
- வடமொழியை சிவபெருமான் யாருக்கு கொடுத்தார்?
பாணினி
- தென் மொழியை சிவபெருமான் யாருக்கு கொடுத்தார்?
அகத்தியர்
- இடைநிலை விகுதி இல்லாமல் பகுதியாகவே உள்ள சொற்களை கொண்ட மொழி எவ்வாறு அழைக்கபடும்?
தனிநிலை மொழி
- குகைக் கல்வெட்டுகளின் எழுத்து பிராமி என்றும் மொழி தமிழ் என்றும் கூறியவர் யார்?
தே பொ.மீனாட்சி சுந்தரம்
- உலக மொழிகள் எத்தனை மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
எட்டு
- இந்தியாவில் வழங்கும் மொழிக்குடும்பங்கள் மொத்தம் எத்தனை?
நான்கு :திராவிட மொழி குடும்பம் ஆஷ்ட்ராக் மொழிக் குடும்பம் (முண்டா மொழிக்குடும்பம்) , சீனோ-திபெத்திய மொழிக் குடும்பம் ,இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம்
- “இந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்றும் ,ஆரியத் திராவிட மொழிகள் என்றும், ஆரிய மொழிகள் என்றும் மூவகையாகப் பாகுபாடு செய்தலே இன்று மொழி ஆராய்ச்சிக்குப் பொருந்துவதாக உள்ளது”-எனக் கூறியவர்?
மு வரதராசனார்
- இந்தியாவிலுள்ள மொழிக் குடும்பங்களில் மிகத் தொன்மை வாய்ந்தது எது?
திராவிட மொழிக்குடும்பம்
- தமிழ் முதலிய மொழிகள் வடமொழியிலிருந்து வேறுபட்டவை என்று முதன்முதலில் சொன்னவர் யார்?
வில்லியம் கேரி
- தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் ஒரு தனி குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முதன்முதலில் கூறியவர் யார்?
எல்லிஸ்
- திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் பயன்படுத்தியவர் யார்?
குமரிலபட்டர்
- திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை என அழைக்கப்படுபவர்?
கால்டுவெல்
- கால்டுவெல் எழுதிய நூல்?
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்(ஆங்கிலம்)
- தமிழ் முதலான மொழிகளுக்கு திராவிட மொழிக் குடும்பம் என்று முதன்முதலில் பெயர் சூட்டியவர் யார்?
கால்டுவெல்
- திராவிடம் என்ற சொல்லில் இருந்துதான் தமிழ் என்ற சொல் தோன்றியது என்று கருத்துடையவர்?
கால்டுவெல்
- தமிழ் என்ற சொல்லில் இருந்துதான் திராவிடம் என்ற சொல் தோன்றியது என்ற கருத்துடையவர்கள்?
சட்டர்ஜி,வி ஆர் ஆர் தீட்சிதர்
- திராவிட மொழிகளைத் திருந்திய திராவிட மொழிகள், திருந்தா திராவிட மொழிகள் என இரண்டாக பிரித்தவர் யார்?
கால்டுவெல்
- திருந்திய திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
ஆறு :தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு குடகு
- திராவிட மொழிகள் மத்திய ஆசியாவில் வழங்கும் சித்திய மொழியுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று காட்டியவர் யார்?
கால்டுவெல்
- எழுத்து வடிவமும் இலக்கிய வளமும் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் உள்ள திருந்திய திராவிட மொழிகள் எவை?
துளுவும் குடகும்
- “கால்டுவெல்லின் நூல் பெரும்பாலும் தென் திராவிட மொழிகளை பற்றியதாக இருப்பதால் அதனை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று பொது நிலையால் சுட்டுவதை விட தென்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்று அழைப்பதே பொருத்தம் எனக் கூறியவர்?
தெ.பொ. மீனாட்சிசுந்தரம்
- தற்பொழுது எத்தனை மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தை சார்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது?
28
- திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு: பெரு மொழிகள், சிறு மொழிகள்
- எத்தனை பெருமொழிகள் உள்ளன?அவை எவை?
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளும் பெருமொழிகள் மற்றவை சிறுமொழிகள்
- மொழியின் இலக்கண இலக்கிய சிறப்பை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?
இரண்டு:திருந்திய திராவிட மொழிகள், திருந்தா திராவிட மொழிகள்
- திருந்திய திராவிட மொழிகள், திருந்தா திராவிட மொழிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
செப்பமுள்ள திராவிட மொழிகள் ,செப்ப மற்ற திராவிட மொழிகள்
- மொழி வழங்கும் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?
தென் திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள் வட திராவிட மொழிகள் என மூன்று வகை
- தென்திராவிட மொழிகள் எத்தனை?
9: தமிழ், மலையாளம், குடகு, கோடா[கோத்தா], தோடா, படகா, கன்னடம், துளு, இருளா
- நடுத்திராவிட மொழிகள் எத்தனை?
12:தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, பெங்கோ, கோண்டா, முண்டா, கோலமி, நாயக்கி, பர்ஜி, கடப்பா[கதபா]
- வடதிராவிட மொழிகள் எத்தனை?
3:குருக்,மால்தோ, பிராகூய்
- அண்மையில் கண்டுபிடிக்கபட்ட திராவிட மொழிகள் என்ன?
எருகா,தங்கா,குறும்பா,சோழிகா
- இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி எது?
பிராகுயி (பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாவட்டத்தில்)
- திராவிட மக்களில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
தெலுங்கு
- இந்திய நாட்டில் இந்திக்கு அடுத்து அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
தெலுங்கு
- திராவிட மொழிகளில் அதிக ஒலிகளைக் கொண்ட மொழி எது?
தோடா
- மொகஞ்சதாரோ ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மொழி திராவிட மொழியே என்று கூறியவர் யார்?
ஹீராஸ் பாதிரியார்
- தமிழின் முதல் இலக்கியமாக கருதப்படுவது எது?
சங்க இலக்கியம்
- மலையாளத்தின் முதல் இலக்கியம் எது?
ராம சரிதம்
- ராம சரிதம் நூலை எழுதியவர் யார்?
ஸ்ரீ வீர ராமவர்மா
- கன்னடத்தின் முதல் நூல் எது?
கவிராஜ மார்க்கம்
- கவிராஜ மார்க்கம் நூலை இயற்றியவர் யார்?
நிர்பதுங்கர்
- தெலுங்கின் முதல் நூல் எது?
பாரதம்
- பாரதம் என்ற நூலை எழுதியவர் யார்?
நன்னயப்பட்டர்
- தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் யார்?
அகத்தியர் அல்லது தொல்காப்பியர்
- தெலுங்கிற்கு இலக்கண நூல் எழுதியவர் யார்?
கேசவர்
- மலையாளத்திற்கு இலக்கணம் எழுதியவர் யார்?
எழுத்தச்சன்
- தமிழின் இலக்கண நூல் என்ன?
தொல்காப்பியம்
- தெலுங்கின் இலக்கணநூலான ஆந்திர சப்த சிந்தாமணி எந்த மொழியில் எழுதப்பட்டது?
சமஸ்கிருதத்தில்
- தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கண நூல் எது?
ஆந்திர பாஷா பூஷணம்
- மலையாளத்தின் இலக்கண நூல் எது?
லீலா திலகம்
- மீட்டுருவாக்கம் மூலம் திராவிட மொழியின் ஒலியன் அமைப்பை ஆய்வு செய்தவர் யார்?
டாக்டர் எமினோ
- திராவிட மொழிகளின் அடிச்சொல் அகராதியை இயற்றியவர் யார்?
டாக்டர் பரோ மற்றும் எமினோ
- திருந்தாத திராவிட மொழிகளுக்கு முதன்மை கொடுத்து ஆய்வு செய்தவர் யார்?
தாமஸ் பரோ
- திராவிட மொழிகளை மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம் எது?
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- கன்னட மொழியின் முதல் இலக்கண நூல் எது?
பாஷா பூஷணம் [சமஸ்கிருதம்]
- கன்னட மொழியில் எழுதப்பட்ட கன்னட இலக்கண நூல் எது?
சப்தமணி தர்ப்பணா
- மூலத் திராவிட மொழியிலிருந்து முதலில் பிரிந்த மொழி எது?
துளு ,இறுதியாக பிரிந்தது மலையாளம்
- பழந்தமிழகம் பற்றி குறிப்பிடும் கிரேக்க நூலாசிரியர்கள் யார்?
தாலமி,பிளினி,மெகஸ்தனீஸ்
- இடைக்கால தமிழகம் பற்றி குறிப்பிடுபவர் யார்?
சீன யாத்திரிகர் யுவான் சுவாங்
- ஊர் என்று முடியும் 23 இடப் பெயர்களை குறித்த கிரேக்க நூலாசிரியர் யார்?
தாலமி
- திராவிட மொழியுடன் ஆரிய மொழி கலக்க எந்த மொழி தோன்றியது?
பிராகிருதம் பாலி மொழியும்
- இந்தியாவில் தோன்றிய மிகப் தொன்மையான மொழி எது?
தமிழ்
- வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட மொழி என்று தமிழை முதன்முதலில் கூறியவர் யார்?
கால்டுவெல்
- திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரிவடிவ எழுத்து கொண்ட மொழி எது?
தமிழ்
- திராவிட மொழிகளிலேயே மிக தொன்மையான இலக்கண இலக்கியங்களைக் கொண்ட மொழி எது?
தமிழ்
- திராவிடர்களின் புனித மொழி தமிழ் என்று சொன்னவர் யார்?
சிஆர் ரெட்டி
- திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி எது?
தமிழ்
- மூல திராவிட மொழிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி எது?
தமிழ்
- இன்று இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் பிறமொழிக் கலப்பு குறைந்த மொழி எது?
தமிழ்
- யார் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்?
தெலுங்கர்களும், கன்னடர்களும்
- அரவாலு என்றால் என்ன பொருள்?
அறம் நிறைந்தவர்/ ஒலி அதிகமாக பேசுபவர்
- தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் யார்?
தேவநேயப் பாவாணர் (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கியவர்)
- தமிழ் எந்த நாடுகளில் பேசப்படுகிறது?
இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, பிஜி தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது
MULTIPLEX- இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே இந்திய மொழி எது?
தமிழ்
- முதலில் கணினியுள் சென்ற இந்திய மொழி எது?
தமிழ்
- உலக அளவில் ஆங்கில மொழிக்கு அடுத்து அதிக அளவில் மென்பொருளை உடைய மொழி எது?
தமிழ்