DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்தே இருக்கின்றான்…”- திருவருட்பா- இராமலிங்க அடிகள்
- “நாய்க்கால் சிறுவிரல்போல் நன் கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார்”- நாலடியார் சமண முனிவர்கள்
- “ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் “-பாரதியார்
- “சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்”- பாரதியார்
- “மனைக்கு விளக்கம் மடவாள் ; மடவாள் தனக்கு தகைசால் புதல்வர்..”- நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
- “மழையே மழையே வா வா- நல்ல வானப் புனலே வா வா- இவ் வையத்தமுதே வா வா”- இசையமுது பாரதிதாசன்
- “தலையா வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் உழுவார் எல்லாம் மலைபோல் எருதை ஓட்டிப் பொன்னேர் பூட்டவும்”- இசையமுது – பாரதிதாசன்
- “ஆற்றவும் கற்றார் அறிவுடையார் ;அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை…ஆற்றுணா வேண்டுவது இல்”- பழமொழி நானூறு -முன்றுறை அரையனார்
- “பிளேட்டோவின் புத்தகங்கள் சுவையானவை சிந்தனையை தூண்டுபவை. கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தைத் தூண்டுபவை. அவை சுருக்கமாகவும் இருக்கும் வாசிக்க எளிதாகவும் இருக்கும்”- நேரு
- “எனக்கு மிகவும் பிடித்தமானவர் பெட்ரண்ட் ரஸல் அவருடைய ஆங்கிலம் அருமையானது. அறிவுப்பூர்வமான எழுத்து அவருடையது”- நேரு
- “வைதோரைக் கூட வையாதே இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே”- கடுவெளிச்சித்தர்
- “கள்ள வேடம் புனையாதே பல கங்கையிலே உன் கடம் நனையாதே”- கடுவெளிச் சித்தர்
- “பிறப்பினால் வரும் கீழ்சாதி மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி மக்கள் அனைவரும் மனிதசாதி எனும் ஓர் இனமாக எண்ண வேண்டும்”-பெரியார்
- “மேல் ஜாதி கீழ் ஜாதி வேற்றுமை, தீண்டாமை கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி அவசியம் எல்லோரும் கல்வி பெற வேண்டும்”- தந்தை பெரியார்
- “மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்கள் அதுபோல மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதிக்க வேண்டும் “-தந்தை பெரியார்
- “பெண்களுக்கு நகைகள் உடைகள் முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் மிக முக்கியம்”- தந்தை பெரியார்
- “அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் எனவே புதியவற்றை ஏற்க வேண்டும்”- தந்தை பெரியார்
- “நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; அயலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!”- புறநானூறு ஔவையார்
- “கடலில் நான் ஒரு துளி என்று நீ கரைந்து போவதில் பயனென்ன ? கடலில் நான் ஒரு முத்து என்று நீ காட்டு; உந்தன் தலைதூக்கு”- திண்ணையை இடித்து தெருவாக்கு -தாராபாரதி
- “எத்தனை உயரம் இமயமலை அதில் இன்னொரு சிகரம் உனது தலை”-திண்ணையை இடித்து தெருவாக்கு -தாராபாரதி
- “பூமிப்பந்து என்ன விலை உன் புகழைத் தந்து வாங்கும் விலை”-திண்ணையை இடித்து தெருவாக்கு -தாராபாரதி
- “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வு படுத்துவது பெருங்கொடுமை. ஆண்டவன் மனிதகுலத்தை தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை ஆன்மீகத்திற்கும் இல்லை”-முத்துராமலிங்கர்
- “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம் ”-பாரதியார்
- “பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு”- முத்துராமலிங்கர்
- “செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம்”-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- “காயும் ஒரு நாள் கனியாகும் நம் கனவும் ஒருநாள் நனவாகும்”-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?”- இராமச்சந்திரக் கவிராயர்
- “நினைத்ததை எல்லாம் எழுதி வச்சது அந்தக்காலம் எதையும் நேரில் பார்த்தே நிச்சயிப்பது இந்த காலம்”-உடுமலை நாராயணகவி
- “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி
- “ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம் ..”-குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயர்
- “பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும்”- அழகிய சொக்கநாதப் புலவர்
கவிஞர்கள்/ஆசிரியர்கள் – காலம்
- இராமலிங்க அடிகளார் 5.10. 1823 -30.01.1874
- உ.வே.சா 19.2.1 855 -28.4.1942
- பாரதியார் காலம் 11.12.1882- 11.09.1921
- தந்தை பெரியார் – 17.9.1879 – 24.12.1973
- கவிஞர் தாராபாரதி 26.2.1947 -13.5.2000
- பசும்பொன் முத்துராமலிங்கர் அக்டோபர் 30 1908-அக்டோபர் 30,1930
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 13.04.1930-08.10.1959
- மேரி கியூரி – போலந்து 1867-1934
- உடுமலை நாராயணகவி 25.09.1899-23.05.1981
- அழகிய சொக்கநாதப் புலவர் – கிபி 19ஆம் நூற்றாண்டு
நூல்கள் –ஆசிரியர்
- என் சரிதம் -உ.வே.சா
- டென் லிட்டில் பிங்கர்ஸ் – அரவிந்த குப்தா
- அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்- ஜானகி மணாளன்
- பாண்டியன் பரிசு அழகின் சிரிப்பு குடும்பவிளக்கு கவிதை நூல்கள் பாரதிதாசன்
- போரும் அமைதியும் -டால்ஸ்டாய்
- -புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு ,தாராபாரதி கவிதைகள் – கவிஞர் தாராபாரதி
- ஊரும்-பேரும் – ரா.பி.சேதுபிள்ளை
- ஜீவகாருண்ய ஒழுக்கம் மனுமுறை கண்ட வாசகம், திருவருட்பா இராமலிங்க அடிகளார்
நூல்கள் –வேறு பெயர்
- நாலடியார் -நாலடி நானூறு
கவிஞர்கள்/ஆசிரியர்கள் – இயற்பெயர்கள்
- உ.வே.சா இயற்பெயர் வேங்கட ரத்தினம்
- பாரதிதாசன் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்
சிறப்பு / புனைபெயர்கள் – கவிஞர்கள்/ஆசிரியர்கள்
- புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன்
- தேசியம் காத்த செம்மல் -முத்துராமலிங்க தேவர் ,பாராட்டியவர் திருவிக
- மக்கள் கவிஞர்- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- பகுத்தறிவுக் கவிராயர் -உடுமலை நாராயணகவி
கவிஞர்கள்/ஆசிரியர்கள் – இடம்
- இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் மருதூர்
- உ.வே.சா உத்தமதானபுரம்
- பசும்பொன் முத்துராமலிங்கர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்
- அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர்
பெற்றோர்– கவிஞர்கள்/புலவர்கள்
- இராமலிங்க அடிகளார் பெற்றோர் இராமையா சின்னம்மையார்
- ஈவே ராமசாமி பெற்றோர் வெங்கடப்பர்- சின்னத்தாயம்மாள்
- பசும்பொன் முத்துராமலிங்கர் பெற்றோர் உக்கிரபாண்டி தேவர் இந்திராணி
நூல்கள் – பிரிவுகள்/பாடல்கள் – பாவகை
- நாலடியார் 400 பாடல்கள்
- பழமொழி நானூறு 400 பாடல்கள்
இதர :
- உ.வே.சா ஆசிரியர் பெயர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- மீனாட்சிசுந்தரம் பிள்ளை உ.வே.சா விற்க்கு வைத்த பெயர் சாமிநாதன்
- விளம்பிநாகனார் விளம்பி ஊர்பெயர், நாகனார் புலவரின் இயற்பெயர்
- முன்றுரை அரையனார் முன்றுறை என்பது ஊர்ப்பெயர், அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்
- முத்துராமலிங்கரின் ஆசிரியர் குறைவற வாசித்தான் பிள்ளை