TNPSC TAMIL 10TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now
Available for Android devices. Click the button to go to the Play Store.

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

 



FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


2852. மொழியை தெளிவுற பேசவும் எழுதவும் உதவுவது எது?
2853. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன?
2854. அளபெடுத்தல் என்பதன் பொருள் என்ன?
2855. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கின்ற உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை தம்மளவில் நீண்டு ஒலிக்கும்?1
2856. உயிரெழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2857. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
2858. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2859. செய்யுளிசை அளபெடை வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
2860. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளவெடுப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
2861. செய்யளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லக திரிந்து அழைப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
2862. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்களான பத்தும் அளபெடுப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
2863. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய் எழுத்துக்கள் என்னென்ன?
2864. ஓர் எழுத்து தனித்தோ பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது எவ்வாறு அழைக்கப்படும்?
2865. மொழி எத்தனை வகைப்படும்?
2866. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது எவ்வாறு அழைக்கப்படும்?
2867. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2868. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லை பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது எவ்வாறு அழைக்கப்படும்?2
2869. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண்,இடம், காலம் ,பால் ஆகியவற்றை குறிப்பாகவும் வெளிப்படையாகவோ,உணர்த்தாமல் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?3
2870. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
2871. தொழிற்பெயர் எதிர்மறைப் பொருளில் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2872. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் எவ்வாறு அழைக்கப்படும்?
2873. விகுதி பெறாமல் முதனிலை திரிந்த தொழிற் பெயர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
2874. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதற்கு என்ன பெயர்?
2875. வினையாலணையும் பெயர் என்ன இடங்களிலும் காலங்களிலும் வரும்?
2876. தொழிலை செய்யும் கருத்தாவை குறிப்பது எது?
2877. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2878. பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர்ச் சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை ,பண்பு முதலியவற்றின் உருபுகள் தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் இருக்குமானால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?4
2879. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
2880. ஒரு தொடரில் வேற்றுமை உருபுகளுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
2881. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2882. காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லை போல் நடப்பது எவ்வாறு அழைக்கப்படும்?5
2883. காலம் கரந்த பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
2884. எந்த சொற்றொடர்களில் வினைத் தொகை அமையும்?
2885. நிறம், வடிவம் ,சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையில் மை என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2886. சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2887. உவமைக்கும் பொருளுக்கும் ( உவமேயம் )இடையில் உவம உருபு மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2888. இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச் சொல் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2889. உம்மைத்தொகை எத்தனை அளவு பெயர்களை தொடர்ந்து வரும்?
2890. வேற்றுமை ,வினை ,பண்பு ,உவமை ,உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2891. ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
2892. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
2893. எழுவாயுடன் பெயர் வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
2894. விளியுடன் வினை தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
2895. வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
2896. முற்றுப்பெறாத வினை பெயர்ச்சொல்லை தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
2897. வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2898. இடை சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
2899. உரிச்சொல் உடன் பெயரோ வினையோ தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
2900. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
2901. வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தினை சேர்ப்பதன் மூலம் என்ன பெயரெச்சங்கள் உருவாகின்றன?6
2902. ஆறு அறிவுடைய மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்?
2903. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் எவ்வாறு வழங்குவர்?
2904. திணையின் உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
2905. பால் எத்தனை வகைப்படும்?
2906. உயர்திணை பால் பகுப்பில் எத்தனை பிரிவுகளை உடையது?
2907. அஃறிணை பால் பகுப்பில் எத்தனை பிரிவுகளை உடையது?
2908. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
2909. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
2910. இடம் எத்தனை வகைப்படும்?
2911. இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?
2912. இலக்கணமுறையின்றி பேசுவதும் எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?
2913. இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?7
2914. வினா எத்தனை வகைப்படும்?
2915. தான் விடை அறிந்திருந்தும் அவ்விடை பிறருக்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது என்ன வகை வினா?
2916. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது என்ன வகை?
2917. ஐய்யம் நீங்கி தெளிவு பெறுவதற்காக கேட்கப்படுவது என்ன வகை?
2918. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது என்ன வகை?
2919. பிறருக்கு கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது என்ன வகை?
2920. ஒரு செயலை செய்யுமாறு ஏவுதற்பொருட்டு வினவுவது என்ன வகை?
2921. விடை எத்தனை வகைப்படும்?
2922. சுட்டுவிடை,மறைவிடை, நேர் விடை ஆகிய விடைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
2923. குறிப்பு விடைகள் என அழைக்கப்படுபவை என்னென்ன?
2924. ஒன்றினை சுட்டிக் கூறும் விடை என்ன வகை?
2925. ஒன்றனை மறுத்துக் கூறும் விடை என்ன வகை?
2926. ஒன்றனக்கு உடன்பட்டு கூறும் விடை என்ன வகை?
2927. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாக கூறும் விடை என்ன வகை?
2928. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவை கேட்பது என்ன வகை?
2929. வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறுதல் என்ன விடை?
2930. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதை கூறல் என்ன வகை?
2931. வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறுதல் என்ன வகை?
2932. செய்யுளில் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ, மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு என்ன பெயர்?
2933. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
2934. பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கை போல் நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
2935. ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக ) அமைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2936. நிரல்நிறை பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
2937. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும், அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் எவ்வாறு அழைக்கப்படும்?8
2938. செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர்ஸஎதிராக கொண்டு பொருள் கொள்ளுதல் எவ்வாறு அழைக்கப்படும்?
2939. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது எவ்வாறு அழைக்கப்படும்?
2940. வாழ்க்கை முறைகளை அகம் , புறம் என வகுத்ததை பற்றி கூறும் இலக்கணம்?
2941. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளை கூறுவது என்ன வகை?
2942. அன்பின் ஐந்திணைகள் என்னென்ன?
2943. நிலமும் பொழுதும் எவ்வாறு அழைக்கப்படும்?
2944. நிலம் எத்தனை வகைப்படும்?
2945. மலையும் மலை சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
2946. காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
2947. வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
2948. கடலும் கடல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
2949. சுரமும் சுரம் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
2950. பொழுது எத்தனை வகைப்படும்?
2951. ஓராண்டின் ஆறு கூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2952. பெரும்பொழுது என்னென்ன?
2953. கார்காலத்தின் மாதம் என்ன?
2954. குளிர்காலத்தின் மாதம் என்ன?
2955. முன் பனிக்காலத்தின் காலம் என்ன?
2956. பின்பனிக் காலத்தின் காலம் என்ன?
2957. இளவேனிற் காலத்தின் காலம் என்ன?
2958. முதுவேனில் காலத்தில் காலம் என்ன?
2959. ஒரு நாளில் ஆறு கூறுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
2960. சிறுபொழுது என்னென்ன?
2961. காலை 6 மணி முதல் 10 மணி வரை உள்ள பொழுது எவ்வாறு அழைக்கப்படும்?
2962. காலை 10 மணி முதல் 2 மணி வரை உள்ள பொழுது எவ்வாறு அழைக்கப்படும்?
2963. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படும்?
2964. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படும்?
2965. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படும்?
2966. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படும்?
2967. ஏற்பாடு என்பதன் பொருள் என்ன?
2968. குறிஞ்சித் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?
2969. முல்லைத் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?
2970. மருதத் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?
2971. நெய்தல் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?
2972. பாலைத் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என்ன?
2973. கருப்பொருள்கள் என அழைக்கப்படுபவை எவை?
2974. புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது எது?
2975. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
2976. புறத்திணைகளின் வகைகள் என்னென்ன?
2977. ஆநிரை கவர்தல் என்னத் திணை?
2978. வெட்சிப்பூ என்ன நிறம் உடையது?
2979. வெட்சிப்பூ வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2980. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்க செல்வது என்ன வகை திணை?
2981. கரந்தை பூவின் நிறம் என்ன?
2982. கரந்தைப் பூ வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
2983. பகைவர் நாட்டைக் கைப்பற்றுவது என்னத் திணை?
2984. வஞ்சி பூவின் நிறம் என்ன?
2985. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்ற அரசனோடு எதிர்த்து போரிடுவது என்னத் திணை?
2986. காஞ்சி பூவின் நிறம் என்ன?
2987. கோட்டையை காற்றில் வேண்டி உள்ளிருந்து போரிடுதல் என்னத் திணை?
2988. நொச்சி பூவின் நிறம் என்ன?
2989. மாற்றரசனின் கோட்டையை கைப்பற்ற அதனை சுற்றிவளைத்து போராடுவது என்னத் திணை?
2990. உழிஞைப் பூவின் நிறம் என்ன?
2991. உழிஞைக் கொடி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
2992. போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது என்னத் திணை?
2993. தும்பைப் பூவின் நிறம் என்ன?
2994. போரிலே வெற்றி பெறுவது என்னத் திணை?
2995. வாகைப் பூவின் நிறம் என்ன?
2996. படுவதற்கு தகுதியுடையோர் ஆளுமைகளின் கல்வி, வீரம் ,செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது என்ன திணை?
2997. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது எது?
2998. கைக்கிளை என்பது என்ன?
2999. பெருந்திணை என்பது எதனைக் குறிக்கிறது?
3000. யாப்பு எத்தனை உறுப்புகளை கொண்டது?
3001. எத்தனை வகை பாக்கள் உள்ளன?
3002. ஓசை எத்தனை வகைப்படும்?
3003. செப்பலோசை எதற்கு உரியது?
3004. அகவல் ஓசை எதற்கு உரியது?
3005. இலக்கண கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது எது?
3006. செய்யுள்களில் இடையிடையே உயர்ந்து வருவது எது?
3007. துள்ளலோசை எதற்கு உரியது?
3008. தூங்கலோசை எதற்கு உரியது?
3009. வெண்பாக்கள் எத்தனை வகைப்படும்?
3010. எத்தனை வகை ஆசிரியர் பாக்கள் உள்ளன?
3011. ஈற்றடி முச்சீர் ஆகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும், இயற்சீர் ,வெண்சீர் மட்டும் பயின்று வருவது எது?
3012. ஈரசைச்சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வருவது எது?
3013. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வருவது எது?
3014. ஆசிரியதளை மிகுதியாகவும் வெண்டளை ,கலித்தளை ஆகியவை விரவியும் வருவது எது?
3015. இரண்டடி முதல் 12 அடி வரை அமைவது எது?
3016. கலிவெண்பா எத்தனை அடிக்கு மேற்பட்டுவரும்?
3017. ஆசிரியப்பா எத்தனை அடியில் அமையும்?
3018. ஈற்றுச்சீர் நாள், மலர் ,காசு ,பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிவது எது?
3019. ஏகாரத்தில் முடிதல் எது?
3020. வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வருவது எது?
3021. இருவர் உரையாடுவது போன்ற ஓசை எது?
3022. ஒருவர் பேசுதல் போன்ற ,சொற்பொழிவு ஆற்றுவது போன்ற ஓசை?
3023. கன்று துள்ளினாற் போல் சீர்தோறும் துள்ளிவரும் ஓசை ,அதாவது தாழ்ந்து உயர்ந்து வரும் ஓசை எது?
3024. சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை,தாழ்ந்தே வருவது?
3025. யாப்பதிகாரம் எனும் நூலை எழுதியவர் யார்?
3026. ஓரசைச்சீரில் நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?
3027. ஓரசைச்சீரில் நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?
3028. ஓரசைச்சீரில் நேர்பு என்பதன் வாய்ப்பாடு என்ன?
3029. ஓரசைச்சீரில் நிரைபு என்பதன் வாய்ப்பாடு என்ன?
3030. ஈரசைச்சீரில் நேர் நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?
3031. ஈரசைச்சீரில் நிரை நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?
3032. ஈரசைச்சீரில் நிரை நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?
3033. ஈரசைச்சீரில் நேர் நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?
3034. மூவசைச்சீரில் நேர் நேர் நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?
3035. மூவசைச்சீரில் நிரை நேர் நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?
3036. மூவசைச்சீரில் நிரை நிரை நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?
3037. மூவசைச்சீரில் நேர் நிரை நேர் என்பதன் வாய்ப்பாடு என்ன?
3038. மூவசைச்சீரில் நேர் நேர் நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?
3039. மூவசைச்சீரில் நிரை நேர் நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?
3040. மூவசைச்சீரில் நிரை நிரை நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?
3041. மூவசைச்சீரில் நேர் நிரை நிரை என்பதன் வாய்ப்பாடு என்ன?
3042. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சி மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது எவ்வாறு அழைக்கப்படும்?
3043. செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களில் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருளை விளக்குவது எவ்வாறு அழைக்கப்படும்?
3044. தீவக அணி எத்தனை வகைப்படும்?
3045. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது என்ன அணி?
3046. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு புதிய சொற்களை அமைத்துப் பாடுவது என்ன அணி?
3047. தன்மையணி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
3048. தன்மையணி எத்தனை வகைப்படும்?

 


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


 

TNPSC TAMIL 10TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page