JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :
50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS]
40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS]
320+ LESSONS BOOKBACK FREE TESTS
3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல் 07
4527. ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு திருவள்ளுவர் எந்த அதிகாரத்தின் வழியே வழிகாட்டுகிறார்?
4528. “பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4529. “பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன்” இப்புறநானூற்றுப் பாடலில் யார் யாரைப் பற்றி பாடியுள்ளார்?
4530. “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4531. “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” இவ்வரிகளில் கம்பர் யாரை புகழ்ந்துள்ளார்?
4532. “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4533. கடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன?
4534. உரோமாபுரி சிப்பாய்கள் பாண்டிய போர் படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது?
4535. குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி ” நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் “என குறிப்பிடும் நூல் எது?
4536. காவிரிப்பூம்பட்டினத்தில் மாரி காலத்து மழை மேகம் போல பொருட்கள் பண்டகசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன என்பதை “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்” எனக் கூறும் நூல் எது?
4537. பாண்டியநாட்டு தூதுக்குழு ஒன்று அகஸ்டஸ் சீசர் கி.மு 20 ஆம் ஆண்டு சந்தித்ததை பற்றி தெரிவிப்பவர் யார்?
4538. புறநானூற்றில் எந்த பாடலில் யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது?
4539. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனை தொழிலாளர்கள் ஆக்கி கட்டுப்படுத்தினான் என்ற செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
4540. “கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4541. “ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4542. நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?
4543. 126 ஒற்றை வரிகளில் துளிகள் எனும் நூலை எழுதியவர் யார்?
4544. இலக்கியத்தில் மேலாண்மை எனும் நூலை எழுதியவர் யார்?
4545. வெ.இறையன்பு எழுதிய நூல்கள் என்னென்ன?
4546. வெ.இறையன்பு எழுதிய வாய்க்கால் மீன்கள் எனும் கவிதை நூல் எந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசை பெற்றது?
4547. அதிசய மலர் என்னும் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது?
4548. அதன்பிறகும் எஞ்சும் எனும் கவிதை தொகுப்பு எழுதியவர் யார்?
4549. தமிழ் நதி எங்கு பிறந்தார்?
4550. தமிழ்நதி எழுதிய நூல்கள் என்னென்ன?
4551. தேயிலைத் தோட்டப் பாட்டு எனும் கவிதையை எழுதியவர் யார்?
4552. பாரத மக்களின் பரிதாப சிந்து என அழைக்கப்படுவது எது?
4553. இயல்பாக தங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களை பாடல்கள் கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துவதற்கு என்னென்ன பெயர்கள்?
4554. “காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4555. “யானை புக்க புலம் போல தானும் உண்ணான் உலகமும் கெடுமே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4556. புறநானூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4557. புறநானூற்றை உ.வே.சா எந்த ஆண்டு பதிப்பித்தார்?
4558. “the four hundred songs of war and wisdom and anthology of poems from classical Tamil the purananooru” என்ற நூலை ஜார்ஜ் எல் ஹார்ட் எந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்?
4559. பிசிர் என்பது எந்த நாட்டில் இருந்து ஓர் ஊர்?
4560. பிசிராந்தையார் யாருடைய ஆட்சிக்காலத்தில் புறநானூற்றுப் பாடலை இயற்றினார்?
4561. ஆறுநாட்டார் குன்றின்மீது பொறிக்கப்பட்டுள்ள சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகள் எங்கு உள்ளது?
4562. ஐராவதம் மகாதேவன் எந்த ஆண்டு முதல் கைத்தறித் துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்?
4563. தென் தமிழ்நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளை எந்தெந்த வரிவடிவங்கள் கண்டறியப்பட்டது?
4564. “எர்லி தமிழ் எபிகிராபி”என்பது யாருடைய ஆய்வுநூல்?
4565. மதுரைக்கு அருகே உள்ள மாங்குளம் கல்வெட்டுகள் யாருடைய காலத்தது?
4566. ஐராவதம் மகாதேவன் மாங்குளம் கல்வெட்டுகளை எந்த ஆண்டு பாண்டிய மன்னனுடையது எனக் கண்டுபிடித்தார்?
4567. தமிழ்நாட்டிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர் யார்?
4568. “சங்க காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்” என்னும் இக்கட்டுரை எந்த இதழில் வெளிவந்தது?
4569. ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகள் என்னென்ன?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
