DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என கூறியவர்?
மணவை முஸ்தபா
- “ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும். உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என கூறியவர்?
மூ.கு. ஜகந்நாதராஜா
- மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் எங்கு குறிப்பிட்டுள்ளார்?
மரபியல்
- “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம்வைத்தும் ..”இக்குறிப்பு காணப்படும் செப்பேடு?
சின்னமனூர்ச் செப்பேடு
- வடமொழி கதைகளை தழுவி தமிழில் படைக்கப்பட்ட காப்பியங்கள் என்னென்ன?
பெருங்கதை ,சீவகசிந்தாமணி ,கம்பராமாயணம் ,வில்லிபாரதம்
- ஷேக்ஸ்பியர் எந்த மொழியில் மொழி பெயர்ப்பின் மூலம் அறிமுகமானார்?
ஜெர்மன்
- கீதாஞ்சலி நூலை எழுதியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
- கீதாஞ்சலி நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
வங்கமொழி
- ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை எதனைக் கொண்டு மதிப்பிடுவார்கள்?
ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலை பயன்படுத்துகிறது என்பதை கொண்டு
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர் யார்?
ராகுல் சாங்கிருத்யாயன்
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எந்த மொழியில் எப்போது எழுதப்பட்டது?
இந்திமொழி, 1942
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை யார் தமிழில் மொழிபெயர்த்தார்?
கண முத்தையா
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது?
1949
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை யார் 2016ஆம் ஆண்டு மொழிபெயர்த்தவர்?
டாக்டர் என். ஸ்ரீதர், முத்து மீனாட்சி
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை யார் 2018ஆம் ஆண்டு மொழிபெயர்த்தவர்?
யூமா வாசுகி
- ஜெர்மனியில் ஓராண்டில் பிறமொழிகளிலிருந்து எத்தனை நூல்கள் வரை மொழிபெயர்க்கப் படுகின்றன?
5000
- ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்படும் வரிசையில் எந்த மொழி முதலிடம் வகிக்கிறது?
ஆங்கிலம்
- கருத்துப் பகிர்வு தருவதால் மொழிபெயர்ப்பை எவ்வாறு குறிப்பிடுவார்கள்?
பயன்கலை
- “காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகள் எல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் என குறிப்பிடுபவர் யார்?
குலோத்துங்கன்
- “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என கூறியவர் யார்?
பாரதியார்
- “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” எனக் கூறியவர்?
பாரதியார்
- எங்குள்ள தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன?
பிரான்ஸ்
- “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் ,சரளிப்புத்தகம் ,புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களும் பிரான்ஸ் தேசிய நூலகத்தில் உள்ளதாக கூறியவர் யார்?
தனிநாயக அடிகள்
- “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை யகற்றி மதிக்கும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நீதிநெறி வெண்பா
- ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடையிளித்தலுக்கு என்ன பெயர்? சதாவதானம்
- செய்குதம்பி பாவலர் எங்கு பிறந்தார்?
கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி
- செய்குத்தம்பி பாவலரின் காலம் என்ன?
1874 -1950
- செய்குதம்பி பாவலர் எந்த வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றிருந்தார்?
15
- செய்கு தம்பி பாவலர் சென்னை விக்டோரியா அரங்கத்தில் எப்போது சதாவதானி பட்டம் பெற்றார்?
மார்ச் 10, 1907
- செய்குதம்பி பாவலரின் மணிமண்டபமும் பள்ளியும் எங்கு உள்ளது?
இடலாக்குடி
- இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தில் எந்த காண்டத்தில் உள்ளது?
திரு ஆலவாய் காண்டம்
- இடைக்காடனை அவமதித்த மன்னன் யார்?
குசேல பாண்டியன்
- இடைக்காடன் யாருடைய நண்பர்?
கபிலர்
- “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுதுணர்ந்த கபிலன்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
திருவிளையாடல் புராணம்
- மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார்?
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- “மாசற விசித்த வார்புறு வள்பின்..” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- திருவிளையாடற்புராணம் நூலை இயற்றியவர் யார்?
பரஞ்சோதி முனிவர்
- திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
மூன்று :மதுரைக்காண்டம் கூடற்காண்டம் திருவாலவாய்க் காண்டம்
- திருவிளையாடல் புராணம் எத்தனை படலங்கள் உடையது?
64 படலங்கள்
- பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?
திருமறைக்காடு (வேதாரண்யம்)
- பரஞ்சோதி முனிவரின் காலம் என்ன?
பதினேழாம் நூற்றாண்டு
- பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
- உனக்கு படிக்க தெரியாது என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
கமலாலயன்
- உனக்கு படிக்க தெரியாது என்ற தலைப்பில் யாருடைய வாழ்க்கையை நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன்?
அமெரிக்க கருப்பின பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்
- கமலாலயன் இயற்பெயர் என்ன?
வே. குணசேகரன்
- “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
ஐங்குறுநூறு
- “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை “இவர்களில் குறிப்பிடப்படும் ஊர்?
தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்க்கை
- “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
வெற்றிவேற்கை
- “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என கூறியவர்?
பாரதியார்
- “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என கூறியவர்?
பாரதியார்
- “அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன் பேத்தி நெட்டுருப் பண்ணினாள் நீதி நூல் திரட்டையே” இவ்வரிகளை எழுதியவர்?
பாரதிதாசன்
- சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று எனும் நூலை எழுதியவர் யார்?
தமிழில் -வல்லிக்கண்ணன்
- குட்டி இளவரசன் என்னும் நூலை எழுதியவர் யார்?
தமிழில் -வே. ஸ்ரீராம்
- ஆசிரியரின் டைரி என்ற நூலை எழுதியவர் யார்?
தமிழில்- எம் பி அகிலா