DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- அன்னை மொழியே எனும் கவிதையை எழுதியவர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- “அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே”எனும் வரிகளை இயற்றியவர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- “தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
கனிச்சாறு
- “உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்- என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்”- இவ்வரிகளை கூறியவர் யார்?
சச்சிதானந்தன்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்தக் இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பினார்?
தென்மொழி ,தமிழ்ச்சிட்டு
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
துரை.மாணிக்கம்
- பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு,எண்சுவை எண்பது ,மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள், திருக்குறள் மெய்ப்பொருளுரை
- தமிழ் சொல் வளம் எனும் உரைநடையை எழுதியவர் யார்?
தேவநேயப்பாவணர்
- “நாடும் மொழியும் நமது இரு கண்கள்” எனக் கூறியவர் யார்?
மகாகவி பாரதியார்
- “தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு தமிழுக்கே சிறப்பாக உரியனவாக கருதப்படும் சொற்கள் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள” எனக் கூறியவர் யார்?
கால்டுவெல்
- திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
கால்டுவெல்
- நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு குறிக்கப்படும்?
தாள்
- கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
தண்டு
- நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி அவ்வாறு அழைக்கப்படும்?
கோல்
- குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
தூறு
- கம்பு, சோளம் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
தட்டு அல்லது தட்டை
- கரும்பின் அடியை குறிக்கப் பயன்படும் சொல் எது?
கழி
- மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
கழை
- புளி மற்றும் வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
அடி
- அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை பிரிவிற்கு பெயர் என்ன?
கவை
- கவையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
கொம்பு அல்லது கொப்பு
- கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
கிளை
- கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
சினை
- சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
போத்து
- போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
குச்சு
- குச்சியின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
இணுக்கு
- காய்ந்த குச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுள்ளி
- காய்ந்த சிறுகிளையின் பெயர் என்ன?
விறகு
- காய்ந்த கழியின் பெயர் என்ன?
வெங்கழி
- காய்ந்த கொம்பும் கவையும் அடியும் எவ்வாறு அழைக்கப்படும்?
கட்டை
- புளி வேம்பு முதலியவற்றின் இலையின் பெயர் என்ன?
இலை
- நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படும்?
தாள்
- சோளம், கரும்பு முதலியவற்றைறின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தோகை
- தென்னை மற்றும் பனை முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓலை
- காய்ந்த தாளும் தோகையும் எவ்வாறு அழைக்கப்படும்?
சண்டு
- காய்ந்த இலையின் வேறு பெயர் என்ன?
சருகு
- நெல் ,புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?
துளிர் அல்லது தளிர்
- புளி,வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?
முறி அல்லது கொழுந்து
- சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?
குருத்து
- கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
கொழுந்தாடை
- பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
அரும்பு
- பூ விரியத் தொடங்கும் நிலைக்கு என்ன பெயர்?
போது
- பூவின் மலர்ந்த நிலை பெயர் என்ன?
மலர் அல்லது அலர்
- மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை எவ்வாறு குறிக்கப்படும்?
வீ
- பூ வாடிய நிலைக்கு பெயரென்ன?
செம்மல்
- சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார்
- திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் யார்?
தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார்
- தமிழ் தென்றல் என அழைக்கப்பட்டவர் யார்?
திரு வி க
- இமைகளை மூடியபடி தமிழில் எழுதும் ஆற்றல் கொண்டவர் யார்?
திரு.வி.க
- விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழ் இழந்துவிடக் கூடாது என திரு வி.க போல் எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் யார்?
தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார்
- தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார் இயற்றிய நூல்கள் என்னென்ன?
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம் ,தனித்தமிழ் இயக்கம் ,பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை,காக்கைபாடினிய உரை,தேவநேயம்
- பூவோடு கூடிய இளம்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?
பூம்பிஞ்சு
- இளம் காயின் வேறு பெயர் என்ன?
பிஞ்சு
- மாம்பிஞ்சு வேறு பெயர் என்ன?
வடு
- பலாப்பிஞ்சு வேறு பெயர் என்ன?
மூசு
- எள்பிஞ்சிற்கு வழங்கும் சொல் என்ன?
கவ்வை
- தென்னை பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?
குரும்பை
- சிறு குரும்பையின் வேறு பெயர் என்ன?
முட்டு குரும்பை
- முற்றாத தேங்காய் எவ்வாறு அழைக்கப்படும்?
இளநீர்
- இளம்பாக்கு எவ்வாறு அழைக்கப்படும்?
நுழாய்
- இளநெல் எவ்வாறு அழைக்கப்படும்?
கருக்கல்
- வாழைப்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?
கச்சல்
- அவரை,துவரை முதலியவற்றின் குலையின் பெயர் என்ன?
கொத்து
- கொடிமுந்திரி போன்றவற்றின் குலையின் பெயர் என்ன?
குலை
- வாழைக் குலையின் பெயர் என்ன?
தாறு
- கேழ்வரகு,சோளம் இவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
கதிர்
- நெல், தினை முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
அலகு அல்லது குரல்
- வாழைத் தாற்றின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
சீப்பு
- நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படும்?
சூம்பல்
- சுருங்கிய பழத்தின் பெயர் என்ன?
சிவியல்
- புழு ,பூச்சி அரித்த காய் அல்லது கனி எவ்வாறு அழைக்கப்படும்?
சொத்தை
- சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?
வெம்பல்
- குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படும்?
அளியல்
- குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு அழைக்கப்படும்?
அழுகல்
- பதராய்ப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படும்?
சொண்டு
- கோட்டான் உட்கார்ந்ததனால் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படும்?
கோட்டான் காய் அல்லது கூகைக்காய்
- தேரை அமர்ந்ததினால் கெட்ட காய் இதன் பெயர் என்ன?
தேரைக்காய்
- தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் இதன் பெயர் என்ன?
அல்லிக்காய்
- தென்னையில் கெட்ட காய் அவ்வாறு அழைக்கப்படும்?
ஒல்லிக்காய்
- மிக மெல்லிய பழத்தின் மேற்பகுதியை குறிக்கப் பயன்படும் சொல் எது?
தொலி
- திண்ணமான பழத்தின் மேற்பகுதியை குறிக்க பயன்படும் சொல்?
தோல்
- வன்மையான பழத்தின் மேற்பகுதியை குறிக்கப் பயன்படும் சொல்?
தோடு
- மிக வன்மையான பழத்தின் மேல் பகுதியை குறிக்க பயன்படும் சொல்?
ஓடு
- சுரையின் ஓடு எவ்வாறு அழைக்கப்படும்?
குடுக்கை
- தேங்காய் நெற்றின் மேற்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
மட்டை
- நெல் ,கம்பு முதலியவற்றின் மூடியவாறு அழைக்கப்படும்?
உமி
- வரகு ,கேழ்வரகு முதலியவற்றின் ஒலி எவ்வாறு அழைக்கப்படும்?
கொம்மை
- நெல் புல் கம்பு முதலிய தானியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கூலம்
- அவரை உளுந்து முதலிய தானியங்கள் குறிக்கப் பயன்படும் சொல்?
பயறு
- வேர்க்கடலை கொண்டக்கடலை முதலிய தானியங்கள் குறிக்க பயன்படும்?
கடலை
- கத்தரி மிளகாய் முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
விதை
- புளி,காஞ்சிரை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
காழ்
- வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
முத்து
- மா,பனை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
கோட்டை
- தென்னையின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
தேங்காய்
- அவரை துவரை முதலிய பயிர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
முதிரை
- நெல் கத்தரி முதலியவற்றின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
நாற்று
- மா புளி வாழை முதலியவற்றின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
கன்று
- வாழையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
குருத்து
- தென்னையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
பிள்ளை
- விளாவின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
குட்டி
- பனையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
மடலி அல்லது வடலி
- நெல் ,சோளம் முதலியவற்றின் பசும் பயிர் எவ்வாறு அழைக்கப்படும்?
பைங்கூழ்
- உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
மலேசியா
- உலகத்திலேயே முதல் முறையாக மொழிக்கு உலக மாநாடு நடத்தப்பட்டது எந்த மொழி?
தமிழ்
- க. அப்பாதுரையாரின் சிறப்பு பெயர் என்ன?
பன்மொழிப்புலவர்
- தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலங்கள் என்னென்ன?
வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி
- மொழி ஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?
தேவநேயபாவாணர்
- தமிழ் சொல் வளம் எனும் கட்டுரை எந்த நூலில் உள்ளது?
சொல்லாய்வு கட்டுரைகள்
- சொல்லாய்வு கட்டுரைகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
தேவநேயப்பாவணர்
- செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்?
தேவநேய பாவணர்
- போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர் எது?
லிசுபன்
- கார்டிலா எனும் நூல் முதன்முதலாக தமிழ் மொழியில் எந்த ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது?
1554
- இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
தமிழ்
- “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்..”என ஆழிக்கு இணையாக தமிழ் கூறப்பட்டுள்ளது எந்த நூல்?
தனிப்பாடல் திரட்டு
- மூன்று வகையான சங்குகள் என்னென்ன?
வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம்
- ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவதற்கு என்ன பெயர்?
இரட்டுறமொழிதல் அணி
- இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் என்ன?
சிலேடையணி
- சந்தக்கவிமணி என குறிப்பிடப்படுபவர் யார்?
தமிழழகனார்
- தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
சண்முகசுந்தரம்
- முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1983 செப்டம்பர்
- முதல் தமிழ் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?
டிசிஎம் டேட்டா புரொடக்ட்ஸ்
- முதல் தமிழ்வழிக் கணினியின் பெயர் என்ன?
திருவள்ளுவர்
- குறிஞ்சி மலர் என்னும் நூலை எழுதியவர் யார்?
நா.பார்த்தசாரதி
- “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்” என உருவகத்தை பற்றி கூறியவர் யார்?
தண்டி
- “களம்புக துடித்து நின்ற உனக்கு வெற்றி சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகை தான் அதற்கு சான்று” இவ்வரிகளை எழுதியவர் யார்?
அறிஞர் அண்ணா
- எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதற்கு என்ன பெயர்?
இணை ஒப்பு
- மழையும் புயலும் எனும் நூலை எழுதியவர் யார்?
வ. ராமசாமி
- உயிர் இல்லாத பொருள்களை உயிருள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வதற்கு என்ன பெயர்?
இலக்கணை
- தமிழ் இன்பம் எனும் நூலை எழுதியவர் யார்?
இரா.பி.சேதுபிள்ளை
- இரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கும் சிறப்பு பெயர் என்ன?
சொல்லின் செல்வர்
- நாட்டுப்பற்று எனும் கட்டுரை எழுதியவர் யார்?
மு.வரதராசனார்
- சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுவதற்கு பெயரென்ன?
எதிரிணை இசைவு
- “பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல -ஒரு சகாப்தம்- ஒரு கால கட்டம் -ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்” எனக் கூறியவர் யார்?
அறிஞர் அண்ணா
- “இந்தியாதான் என்னுடைய மோட்சம்” எனக் கூறியவர் யார்?
மகாகவி பாரதியார்
- உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரை எந்த நூலில் உள்ளது?
புதிய உரைநடை
- புதிய உரைநடை எனும் நூலை எழுதியவர் யார்?
எழில்முதல்வன்
- எழில்முதல்வன் இயற்பெயர் என்ன?
மா.ராமலிங்கம்
- எழில்முதல்வன் எங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்?
குடந்தை அரசு ஆடவர் கல்லூரி ,பாரதிதாசன் பல்கலைகழகம்
- எழில்முதல்வன் எழுதிய நூல்கள் என்னென்ன?
இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய்
- எழில்முதல்வன் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றார்?
புதிய உரைநடை
- “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம் காடுகாண் காதை
- “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”இவ்வரிகளில் குறிப்பிடப்படும் சிறுமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
திண்டுக்கல்
- “மரமது மரத்தில் ஏறி மரமதை தோளில் வைத்து..” தனிப்பாடல் திரட்டு எழுதியவர் யார்?
சுந்தர கவிராசர்
- மரம் எனும் சொல்லிற்கு வழங்கப்படும் பொருள்கள் என்ன?
அரசமரம் குதிரை வேல் அரசன் புலி கருவேலம் காட்டுவழி ஆலமரம் அத்திமரம் குதிரை மாமரம்
- “தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” என கூறியவர் யார்?
கவிமணி தேசிய விநாயகம்
- “தேனினும் இனிய நற் செந்தமிழ் மொழியே” இவ்வரிகளை எழுதியவர் யார்?
கா.நமச்சிவாயர்
- நாம் ஏன தமிழ் காக்க வேண்டும் என் நூலின் ஆசிரியர் யார்?
முனைவர் சேதுமணி மணியன்
- தவறின்றித் தமிழ் எழுதுவோம் நூலின் ஆசிரியர் யார்?
மா.நன்னன்
- பச்சை நிழல் எனும் நூலின் ஆசிரியர் யார்?
உதயசங்கர்