DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- முன்பின் அறியாத புதியவர்களுக்கு என்ன பெயர்?
விருந்தினர்
- விருந்தே புதுமை என அழைப்பவர் யார்?
தொல்காப்பியர்
- இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே எனக் கூறுபவர்?
திருவள்ளுவர்
- திருவள்ளுவர் ,முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறளில் எடுத்துரைக்கிறார்?
மோப்பக் குழையும் அனிச்சம்
- “…தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என விருந்தினரை போற்றும் முடியாத நிலையை எண்ணி வருந்துவது யார்?
கண்ணகி
- “…தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம்
- கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிட்டுள்ளவர் யார்?
கம்பர்
- “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” இந்த வரிகள் இடம் பெற்ற நூல்?
கம்பராமாயணம்
- “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல” இந்த வரிகள் இடம் பெற்ற நூல்?
கலிங்கத்துப் பரணி
- கலிங்கத்துப்பரணி நூலை இயற்றியவர்?
செயங்கொண்டார்
- தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?
தனித்து உண்ணாமை
- “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
- “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” இவ்வரிகளை இயற்றியவர்?
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” இவ்வரிகள் பெற்ற நூல்?
நற்றிணை
- “காலின் ஏழடி பின் சென்று” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பொருநராற்றுப்படை
- “குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
- “நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இருமுறை பழவாள் வைத்தனன் இன்று” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
- எந்த நாயன்மாரின் வரலாற்றில் வீட்டிற்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் கூறப்படுகிறது?
இளையான்குடிமாற நாயனார்
- நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என கூறும் நூல் எது? சிறுபாணாற்றுப்படை
- “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
குறுந்தொகை
- “மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
கொன்றை வேந்தன்
- கொன்றைவேந்தன் நூலை இயற்றியவர்?
ஔவையார்
- யாருடைய காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோருக்காக மிகுதியாக கட்டப்பட்டன?
நாயக்கர், மராட்டியர் ஆட்சிக்காலம்
- விருந்துக்குப் உணவு பரிமாற பயன்படும் வாழையிலையின் குறுகலான பகுதி எந்த பக்கம் வரவேண்டும்?
உண்பவரின் இடப்பக்கம்
- எந்த தமிழ் சங்கம் “வாழையிலை விருந்து விழா”வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது?
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
- “இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித்து திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இரையுண்ணும்” இவ்வரிகளை இயற்றியவர்?
பாரதிதாசன்
- “விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்..” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
காசிகாண்டம்
- “ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும் ” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
விவேகசிந்தாமணி
- காசி காண்டம் எந்த நகரத்தின் பெருமைகளை கூறுகின்ற நூல்?
காசி நகரம்
- காசி காண்டம் எனும் நூலை எழுதியவர் யார்?
அதிவீரராம பாண்டியர்
- அதிவீரராம பாண்டியர் எந்த இடத்தின் அரசர்?
கொற்கை
- அதிவீரராம பாண்டியன் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
வெற்றிவேற்கை ,நைடதம் ,இலிங்கபுராணம் ,வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி ,கூர்ம புராணம்
- வெற்றிவேற்கை நூலின் வேறு பெயர் என்ன?
நறுந்தொகை
- “நோனாச் செருவின் வலம்படு நோன்றாள் மான விறல்வேள் வயிரியம் எனினே” இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?
நன்னன்
- “நோனாச் செருவின் வலம்படு நோன்றாள் மான விறல்வேள் வயிரியம் எனினே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
மலைபடுகடாம்
- வள்ளலை நாடு எதிர்வரும் கூத்தனை அழைத்து யாம் இவ்விடத்தை சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம் நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக எனக் கூறுவது?
ஆற்றுப்படை
- மலைபடுகடாம் நூலை எழுதியவர் யார்?
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
- மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டது?
583 அடிகள்
- மலைபடுகடாம் வேறு எவ்வாறு வழங்கப்படும்?
கூத்தராற்றுப்படை
- யாரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கூத்தராற்றுப்படை இயற்றப்பட்டுள்ளது?
நன்னன்
- கோபல்லபுரத்து மக்கள் எனும் சிறுகதையை எழுதியவர்?
கி ராஜநாராயணன்
- கோவில்பட்டியை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் என்ன?
கரிசல் இலக்கியம்
- கரிசல் இலக்கியத்தின் எழுத்தாளர்கள் யார்யார்?
கு.அழகிரிசாமி, கி.ராஜ நாராயணன் ,பா.செயப்பிரகாசம் ,பூமணி, வீரவேலுசாமி ,சோ.தர்மன் ,வேல. ராமமூர்த்தி
- கி. ராஜநாராயணனின் சொந்த ஊர் எது?
இடைசெவல்
- கோபல்லபுரத்து மக்கள் எந்த ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது?
1991
- எழுத்துலகில் கி.ரா. எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
கி ராஜநாராயணன்
- கரிசல் வட்டார சொல் அகராதியை உருவாக்கியவர் யார்?
கி ராஜநாராயணன்
- “கறங்கு இசை விழவின் உறந்தை..” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
அகநானூறு
- “கறங்கு இசை விழவின் உறந்தை..” இவ்வரிகளில் இடம் பெற்ற இடம்?
திருச்சி மாவட்டத்தின் உறையூர்
- “மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
முக்கூடற்பள்ளு
- “கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசி வரும் “- இவ்வரிகளை எழுதியவர்?
காளமேகப்புலவர்
- திருக்குறள் தெளிவுரை நூலை எழுதியவர்?
வ. உ. சிதம்பரனார்
- சிறுவர் நாடோடிக் கதைகள் என்னும் நூலை எழுதியவர்?
கி .ராஜநாராயணன்
- ஆறாம் திணை என்னும் நூலை எழுதியவர்?
மருத்துவர் கு சிவராமன்