DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- கரகம் எனும் பித்தளை செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவது எவ்வாறு அழைக்கப்படும்?
கரகாட்டம்
- கரகாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
கரகம், கும்பாட்டம்
- “நீரற வறியாக் கரகத்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- 11 வகை ஆடல்கள் பற்றி குறிப்பிடும் நூல்?
சிலப்பதிகாரம்
- மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் எந்த ஆடல் கரகாட்டத்திற்கு அடிப்படை என்று கருதப்படுகிறது?
குடக்கூத்து
- மயில் வடிவ கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டத்திற்கு பெயரென்ன?
மயிலாட்டம்
- கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்படுவது எது?
மயிலாட்டம்
- கா என்பதற்கு என்ன பொருள்?
பாரம் தாங்கும் கோல்
- ஒரே நிறத் துணியை முண்டாசு போல கட்டியும் காலில் சலங்கை அணிந்து கையில் வைத்துள்ள சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடும் ஆட்டத்திற்கு பெயர் என்ன?
ஒயிலாட்டம்
- ஒயிலாட்டத்தை பெரும்பாலும் யார் ஆடுவார்கள்?
ஆண்கள்
- வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் என பொருள் கொள்ளப்படுவது?
தேவராட்டம்
- ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் எது?
தேவராட்டம்
- தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி எது?
உறுமி
- உறுமி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
தேவதுந்துபி
- தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது பொது மரபாக உள்ளது?
8 முதல் 13 கலைஞர்கள்
- தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை எது?
சேவையாட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
புரவியாட்டம் ,புரவி நாட்டியம்
- பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படுகிறது?
மராட்டியர் காலம்
- எந்த ஆட்டத்திற்கு பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை?
பொய்க்கால் குதிரை ஆட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கச்சிக்கொடி
- பொய்க்கால் குதிரையாட்டம் கேரளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குதிரைக்களி
- தப்பு என்றதோர் கருவியை இசைத்துக் கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடப்படும் நிகழ்கலைக்கு பெயர் என்ன?
தப்பாட்டம்
- “தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்& ஆசிரியர் யார்? திருப்புகழ் ,அருணகிரிநாதர்
- ஒன்றை சொல்வதென்றே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக் கருவி எது?
பறை
- எந்த நூலில் கருப்பொருள்களில் ஒன்றாக பறை இடம்பெற்றுள்ளது?
தொல்காப்பியம்
- நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலைக்கு என்ன பெயர்?
தெருக்கூத்து
- எந்தக் கலையில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல் மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்?
தெருக்கூத்து
- திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக எந்த கலை இருக்கிறது?
தெருக்கூத்து
- “நாடகக் கலையை மீட்டெடுப்பது தமது குறிக்கோள்” என கூறியவர் யார்?
கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலை ஞாயிறு
- ந.முத்துசாமி பெற்ற விருதுகள் என்னென்ன?
இந்திய அரசின் தாமரைத்திரு விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
- வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது எது?
தெருக்கூத்து
- தோலாலான பாவையை கொண்டு நிகழ்த்தும் கலைக்கு என்ன பெயர்?
தோற்பாவைக் கூத்து
- மரப்பாவையை பற்றி குறிப்பிடும் நூல் எது?
திருக்குறள்
- எந்த நூலில் தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளை காண முடிகிறது?
திருவாசகம் ,பட்டினத்தார் பாடல்
- எந்த நாட்டில் இராச சோழன் தெரு என்பது இன்றும் உள்ளது?
மலேசிய தலைநகர் கோலாலம்பூர்
- “சாந்தமானதொரு பிரபஞ்சத்தை சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்” இவ்வரிகளை இயற்றியவர்?
உமா மகேஸ்வரி
- கவிஞர் உமா மகேஸ்வரி எங்கு பிறந்தார்?
மதுரை மாவட்டம்
- கவிஞர் உமா மகேஸ்வரி படைத்த கவிதைத் தொகுதிகள் என்னென்ன?
நட்சத்திரங்களின் நடுவே ,வெறும் பொழுது ,கற்பாவை
- “செம்பொ னடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?
குமரகுருபரர்
- செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை எந்த மாதங்களில் மென்மையாக அசையும்?
ஐந்து முதல் ஆறாம் மாதங்களில்
- சிற்றிலக்கிய வகைகள் எத்தனை?
96
- இறைவனையோ,தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரை குழந்தையாகக் கருதி பாடப்படும் இலக்கியம் எது?
பிள்ளைத்தமிழ்
- பிள்ளைத்தமிழில் எத்தனை பருவங்கள் இடம்பெறும்?
10
- பிள்ளைத்தமிழில் பருவங்களுக்கு எத்தனை பாடல்கள் இடம்பெறும்?
பத்து பாடல்
- பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் மொத்த பாடல்கள் எண்ணிக்கை?
நூறு பாடல்கள்
- குமரகுருபரரின் காலம் எது?
பதினேழாம் நூற்றாண்டு
- குமரகுருபரர் எந்தெந்த மொழிகளில் புலமை பெற்றவர்?
தமிழ் வடமொழி இந்துஸ்தானி
- குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம் ,சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் ,திருவாரூர் மும்மணிக்கோவை
- பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் என்னென்ன?
காப்பு ,செங்கீரை, தால், சப்பாணி ,முத்தம், வருகை, அம்புலி
- ஆண்பாற் பிள்ளைத்தமிழ்க்குரிய கடைசி மூன்று பருவங்கள் என்னென்ன?
சிற்றில், சிறுபறை ,சிறுதேர்
- பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கு உரிய கடைசி மூன்று பருவங்கள் என்னென்ன?
கழங்கு, அம்மானை ,ஊசல்
- “கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்” எனப் பெருமை படுபவர் யார்?
பாரதியார்
- “தாதுகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்…” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
பால காண்டம் -ஆற்றுப்படலம், கம்பராமாயணம்
- “தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க..” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
பால காண்டம் -நாட்டுப்படலம், கம்பராமாயணம்
- “வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
பால காண்டம் -நாட்டுப்படலம், கம்பராமாயணம்
- “வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறைய” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
அயோத்தியா காண்டம் -கங்கைப்படலம், கம்பராமாயணம்
- “ஆளு நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
அயோத்தியா காண்டம் கங்கைகாண் படலம், கம்பராமாயணம்
- “”உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்றது…” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
யுத்த காண்டம் -கும்பகருணன் வதைப் படலம், கம்பராமாயணம்
- கம்பர் ராமனது வரலாற்றை தமிழில் வழங்கி தன் நூலுக்கு என்ன பெயரிட்டார்?
இராம அவதாரம்
- கம்ப ராமாயணம் எத்தனை காண்டங்கள் கொண்டது?
ஆறு காண்டங்கள்
- கம்பரை பாராட்டி வழங்கப்படும் முதுமொழிகள் என்னென்ன?
கல்வியில் பெரியவர் கம்பர் ,கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒன்பாவிற்கு உயர் கம்பன்
- கம்பர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
சோழநாட்டு திருவழுந்தூர்
- கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
- கம்பர் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
சரஸ்வதி அந்தாதி ,சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது ,சிலையெழுபது
- பாய்ச்சல் எனும் சிறுகதை எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
தக்கையின் மீது நான்கு கண்கள்
- தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் நூலை இயற்றியவர் யார்?
சா கந்தசாமி
- சா.கந்தசாமி எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
மயிலாடுதுறை ,நாகப்பட்டினம்
- சா.கந்தசாமி தனது எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்?
சாயாவனம்
- சா.கந்தசாமியின் எந்த புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?
விசாரணை கமிஷன்
- சா கந்தசாமி எழுதிய நூல்கள் என்னென்ன?
தொலைந்து போனவர்கள், சூரியவம்சம் ,சாந்தகுமாரி மற்றும் 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 11 க்கும் மேற்பட்ட புதினங்கள்
- “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம் ஊர்காண் காதை
- “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்”இவ்வரிகளில் குறிப்பிடப்படும் ஊர் எது?
ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி
- தேன்மழை நூலின் ஆசிரியர்?
சுரதா
- திருக்குறள் நீதி இலக்கியம் நூலின் ஆசிரியர்?
க.த.திருநாவுக்கரசு
- நாட்டார் கலைகள் நூலின் ஆசிரியர்?
கா.பெருமாள்