TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அறநெறிக் காலம்

  1. கவிதை வாழ்க்கையின் திறனாய்வு எனக் கூறுபவர் யார் திறனாய்வாளர்?

 ஆர்னால்டு

  1. “இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

புறநானூறு

  1. “இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்” இவ்வரிகளை  இயற்றியவர்?

முடமோசியார்

  1. “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” எனக் கூறும் நூல் எது?

மதுரைகாஞ்சி

  1. “செம்மை சான்ற காவிதி மாக்கள்” என்று அமைச்சர்களை போற்றுபவர் யார்?

 மாங்குடி மருதனார்

  1. “அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்” எனக் கூறும் நூல் எது?

புறநானூறு

  1. எங்கு இருந்த அற அவையம் தனிச்சிறப்பு பெற்றது?

உறையூர்

  1. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது எனக் கூறுபவர் யார்?

ஆவூர் மூலங்கிழார்

  1. “எறியார் எறிதல் யாவணது எறிந்தார் எதிர் சென்று எறிதலும் செல்லான்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

புறநானூறு

  1. “செல்வத்தின் பயனே ஈதல்” என குறிப்பிடும் நூல் எது?

 புறநானூறு

  1. “செல்வத்தின் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே “இவ்வரிகள் இயற்றியவர் யார்?

மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்

  1. எழுவரின் கொடை பெருமை எந்த நூல்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளது?

சிறுபானாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடலிலும்

  1. கொடை பெருமைகளாக பேசப்படுகின்றனவை எவை?

அரியன என்று கருதாது ,தயங்காது கொடுத்தலும் ,ஈதலால் வரும் இழப்புக்கு வருந்தாமையும், நாள்தோறும் கொடுத்தலும்

  1. வள்ளலின் பொருள் இரவலனின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை எனக் குறிப்பிடுபவர் யார்?

 பெரும்பதுமனார்

  1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் எனக் கூறுபவர் யார்?

அவ்வையார்

  1. இரவலர் வராவிட்டாலும் அவர்களை தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இயல்பு எனக் கூறுபவர் யார்?

நச்செள்ளையார்

  1. பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன் என கூறுபவர் யார்? பரணர்
  2. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன் வருந்துவதாக எந்த புலவர் குறிப்பிட்டுள்ளார்?

பெருந்தலைச் சாத்தனார்

  1. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை பாராட்டியவர் யார்?

கபிலர்

  1. இரப்பாரோர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டு விடுதல் மேலானது எனக் கூறும் நூல் எது?

கலித்தொகை

  1. தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் எந்த நூலில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது?

 புறநானூறு

  1. உதவி செய்தலை உதவியாண்மை என குறிப்பிடுபவர் யார்?

ஈழத்துப் பூதன் தேவனார்

  1. “பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன் ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

கலித்தொகை

  1. பிறர் துன்பத்தையும் தன் துன்பமாக கருதி உதவுதல் பற்றி குறிப்பிடுபவர் யார்?

நல்லந்துவனார்

  1. “உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்” என கூறுபவர் யார்?

நல்வேட்டனார்

  1. “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

நற்றிணை

  1. உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும் என கூறுபவர் யார்?

பெருங்கடுங்கோ

  1. “நிறைவடைகிறவனே செல்வன்” என கூறுவது எது?

சீன நாட்டு தாவோயியம்

  1. “பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல் எது?

நற்றிணை

  1. போதிதர்மர் எந்த மாநகரத்தின் சிற்றரசர்? 

காஞ்சி

  1. போதிதர்மர் எந்த ஆண்டு சீனாவுக்குச் சென்றார்?

கி.பி. ஆறாம் நூற்றாண்டு தொடக்கம்

  1. ஞானம் எனும் கவிதை எந்த நூலில்  இடம்பெற்றுள்ளது?

கோடை வயல்

  1. கோடை வயல் எனும் நூலை இயற்றியவர் யார்?

தி.சொ. வேணுகோபாலன்

  1. தி.சொ. வேணுகோபாலனின் மற்றும் ஒரு கவிதை தொகுப்பு எது?

மீட்சி விண்ணப்பம்

  1. “இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை இவ்வரிகளை இயற்றியவர்?

கவிஞர் கண்ணதாசன்

  1. “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என கூறியவர்?

கவிஞர் கண்ணதாசன்

  1. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

முத்தையா

  1. கண்ணதாசன் எங்கு பிறந்தார்?

சிவகங்கை மாவட்டம் ,சிறுகூடல்பட்டி

  1. கண்ணதாசனின் பெற்றோர் பெயர் என்ன?

சாத்தப்பன் -விசாலாட்சி

  1. எந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் ஆனார் கவிஞர் கண்ணதாசன்?

1949, கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதி

  1. கவிஞர் கண்ணதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?

சேரமான் காதலி

  1. “நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே”  இவ்வரிகளை எழுதியவர்?

கம்பன்

  1. நாளுக்கு ஒருமுறை மலருவது எது?

 சண்பகம்

  1. ஆண்டுக்கு ஒருமுறை மலருவது எது?

பிரம்மகமலம்

  1. 12 ஆண்டுக்கு ஒருமுறை மலருவது எது?

குறிஞ்சி

  1. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலருவது எது?

மூங்கில்

  1. “கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

  1. “கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே ” இவ்வரிகளில் இடம் பெறும் ஊர் எது?

சிவகங்கை மாவட்டத்தின் பிரான்மலை அல்லது பரம்புமலை

  1. “மரம் தேடிய கலைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி” இவ்வரிகளை இயற்றியவர்?

 நாணற்காடன்

  1. “விற்பனையில் காற்று பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்…” இவ்வரிகளை இயற்றியவர்?

 புதுவைத் தமிழ்நெஞ்சன்

  1. “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

வள்ளலார்

  1. அறமும் அரசியலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?

மு.வரதராசனார்

  1. அபி கவிதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அபி

  1. எண்ணங்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

எம்.எஸ்.உதயமூர்த்தி


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page