TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 06 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 06 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. ஆனந்தரங்கர் எந்த இடத்தின் வரலாற்றினை பதிவு செய்தார்?
  • புதுச்சேரி
  1. ஆனந்தரங்கர் எந்த நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை பதிவு செய்துள்ளார்?
  • 18ம் நூற்றாண்டு
  1. தனி மனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளை பதிவு செய்யும் ஏட்டின் பெயர் என்ன?
  • நாட்குறிப்பு
  1. டைரி என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
  • டைரியம் என்னும் இலத்தீன் சொல்லின் மூலமான டைஸ் எனும் சொலில் இருந்து
  1. நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்கிறது எது?
  • Ephemerides
  1. Ephemerides என்பது எந்த மொழியைச் சேர்ந்த குறிப்பேடு?
  • கிரேக்கம்
  1. Ephemerides என்ற சொல்லின் பொருள் என்ன?
  • ஒரு நாளுக்கான முடிவு
  1. எந்த முகலாய மன்னர் காலத்தில் நாட் குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது?
  • அவுரங்கசீப்
  1. எந்த ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியை போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா கண்டுபிடித்தார்?
  • 1498
  1. வாஸ்கோடகாமாவின் நாட்குறிப்புகள் யாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன?
  • ஆல்வாரோ வெல்லோ
  1. ஆனந்தரங்கர் எந்த பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்?
  • துய்ப்ளே
  1. ஆனந்தரங்கர் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் என்ன பணி செய்தார்?
  • உரை பெயர்ப்பாளர்
  1. ஆனந்தரங்கர் நாட்குறிப்புகள் எத்தனை ஆண்டு கால தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகின்றன?
  • 25 ஆண்டுகள்
  1. பிரான்சுவா மர்த்தேனுக்குப் பிறகு யார் புதுச்சேரியின் தலைமைப் பொறுப்பினை  ஏற்றார்?
  • கியோம் ஆந்த்ரே எபேர்
  1. கியோம் ஆந்த்ரே எபேரின் தரகராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • நைனியப்பர்
  1. ஆனந்தரங்கரின் தந்தை பெயர் என்ன?
  • திருவேங்கடம்
  1. ஆனந்தரங்கர் எப்போது பிறந்தார்?
  • மார்ச்-30 1709
  1. ஆனந்தரங்கர் எங்கு பிறந்தார்?
  • சென்னையில் உள்ள பெரம்பூர்
  1. ஆனந்தரங்கர் தனது எத்தனையாவது வயதில் தந்தையை இழந்தார்?
  • 17 வயது
  1. யாருடைய உதவியால் ஆனந்தரங்கர் பரங்கிப்பேட்டை நெசவு சாலைக்கும் சாயம் துவைக்கும் கிடக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்?
  • மேலதிகாரி அலனுவார்
  1. ஆனந்த ரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன?
  • 12 தொகுதிகள்
  1. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
  • சாமுவேல் பெப்பிசு
  1. சாமுவேல் பெப்பிசு எந்த மன்னர் காலத்து நிகழ்வுகளை குறிப்பாக பதிவு செய்துள்ளார்?
  • இரண்டாம் சார்லஸ் மன்னர்
  1. சாமுவேல் பெப்பிசு எந்த ஆண்டு காலகட்ட நிகழ்வுகளை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார்?
  • 1660-1669
  1. ஆனந்தரங்கர் எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார்?
  • 09.1736-11.01.1761
  1. ஆனந்தரங்கருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
  • இந்தியாவின் பெப்பிசு
  1. எப்போது பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றார்?
  • 09.1736
  1. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை 1746ல் கைப்பற்றிய பிரெஞ்சு கப்பல் தளபதி யார்?
  • லெபூர்தொனே
  1. பிரெஞ்சு சென்னையை கைப்பற்றியதால்,சினமுற்று போரிட்ட ஆற்காடு நவாப் அன்வர்த்தீக்கானின் மூத்தமகன் யார்?
  • மகபூஸ்கான்
  1. 1758 ஆம் ஆண்டு இறுதியில் சென்னை கோட்டை முற்றுகையை தொடங்கியவர் யார்?
  • லல்லி
  1. லல்லி முற்றுகையை எதிர்த்து வெற்றி பெற்ற சென்னை கோட்டையின் கவர்னர் யார்?
  • மேஸ்தர் பிகட்
  1. 06.1739 ஆம் நாள் புதுச்சேரியின் எந்த ஆளுநர் பிறப்பித்த ஆணையில் புதுச்சேரி பட்டணத்திற்கு உள்ளேயும் சம்பா கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் பட்டணத்தின் வீதிகள் எவ்விடத்திலும் காலைக்கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது?
  • துய்மா
  1. “தமிழ்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன ” என ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்து கூறியவர் யார்?
  • உ.வே‌.சா
  1. “அந்த காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் முக்கியமானது முக்கியம் இல்லாதது என்று கூட கவனிக்காமல் ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவை போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர் “எனக் கூறியவர் யார்?
  • வ.வே.சு
  1. ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி என்ன?
  • செய்திகளையே விவரித்துள்ளது வணிக செய்திகள்
  1. புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்கு சென்ற கப்பலில் பணியாற்றிய தமிழ் மாலுமி யார்?
  • அழகப்பன்
  1. ஐரோப்பாவில் இருந்து இந்தியாவை அடைய கப்பல்களுக்கு எத்தனை மாதம் தேவைப்பட்டன?
  • ஆறு மாதம்
  1. துணிகள் வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய ரசீதுகளை பெற்று பாதுகாத்த வணிக கழகத்தின் அதிகாரி யார்?
  • கொர்னே
  1. ஆனந்தரங்கர் காலத்தில் எத்தனை மாற்றுக்கு குறைவான வராக நாணயங்கள் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணை?
  • எட்டு
  1. எந்த ஆண்டு 8 மாற்றுக்குக்    குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கப்பட்டது?
  • 1739, மே மாதம்
  1. ஆனந்தரங்கர் என்னென்ன வராகன்களை குறிப்பிட்டுள்ளார்?

 பிறை வராகன், சென்னைப்‌ பட்டனத்து நட்சத்திர வராகன், வட்ட வராகன், பரங்கிப்பேட்டை வராகன்,ஆரணி வராகன்

  1. ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்:

  480 காசு –ஒரு ரூபாய்

  1. 60 காசு – ஒரு பணம்
  2. எட்டு பணம் – ஒரு ரூபாய்
  3. 24 பணம் – ஒரு வராகன்
  4. ஒரு பொன் – ½ வராகன்
  5. 1 வராகன் – 3 அல்லது 3.2 ரூபாய்
  6. 1 மோகரி – 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்
  7. 1 சக்கரம் – ½ வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்
  8. புதுச்சேரியை பெருங்காற்று எப்போது சூறையாடியதாக ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்?
  • 1745
  1. ஒழுகரையில் பெருஞ்சோறு அளித்தவர் யார்?
  • கனகராயர்
  1. லெபூர்தொனேவின் 9 கப்பல்கள் எப்போது புதுவைக்கு வந்தன?
  • 06.1746
  1. ஆனந்தரங்கர் எப்போது இறந்தார்?
  • 01.1761
  1. யார் புதுச்சேரியின் ஆளுநராக இருந்தபோது புதுச்சேரியின் ராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும் ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது?
  • ஆளுநர் லெறி
  1. ஆனந்தரங்கர் கோவை என்ற நூலை எழுதியவர் யார்?
  • தியாகராய தேசிகர்
  1. ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?
  • புலவரேறு அரிமதி தென்னகன்
  1. வானம் வசப்படும் என்ற நூலை எழுதியவர் யார்?
  • பிரபஞ்சன்
  1. மதினா நகரத்தில் தீன் நெறியை வளர்த்த பாங்கினை கூறும் காண்டம் எது?
  • செலவியற்காண்டம் ஏற்படும்
  1. செலவியற்காண்டத்தின் வேறு பெயர் என்ன?
  • ஹிஜிறத்துக் காண்டம்
  1. ஹிஜரத் என்ற அரபு சொல்லுக்கு என்ன பொருள்?
  • இடம்பெயர்தல்
  1. மக்கா நகரத்தின் எந்த இன மக்கள் நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்தனர்?
  • குறைசி
  1. “தொலைவிலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர்”-என சிறப்பிக்கப்படும் நகரம் எது?
  • மதீனா
  1. “இடுவிருந்து இனிதின் நல்கலால் வதுவையின் மனையென இருந்த மாநகர்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • சீறாப்புராணம்
  1. இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்கும் நூல் எது?
  • சீறாபுராணம்
  1. சீறா என்பது எந்த அரபு சொல்லின் திரிபு ஆகும்?
  • சீறத்
  1. சீறத் என்பதற்கு என்னப் பொருள்?
  • வாழ்க்கை
  1. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?
  • மூன்று காண்டங்கள்
  1. சீறாப்புராணம் எத்தனை படலங்களை உள்ளடக்கியுள்ளது?
  • 92 படலங்கள்
  1. சீறாப்புராணத்தின் பாடல்கள் என்ன பாவகையால் பாடப்பட்டுள்ளது?
  • விருத்தப்பா
  1. சீறாப்புராணத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
  • 5027 விருத்தப்பாடல்கள்
  1. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
  • உமறுப்புலவர்
  1. உமறுப்புலவர் இறப்பிற்குப்பின் நூலினை முழுமையாக பாடியவர் யார்?
  • பனு அகமது மரைக்காயர்
  1. பனு அகமது மரைக்காயர் பாடிய சீறாப்புராணத்தின் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  • சின்னச்சீறா
  1. உமறுப்புலவர் யாருடைய மாணவர்?
  • கடிகை முத்துப் புலவர்
  1. கடிகைமுத்துப் புலவரின் மாணவர் நபிகள் நாயகத்தின் மீது  எந்த நூலை இயற்றியுள்ளார்?
  • முதுமொழிமாலை
  1. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் யார்?
  • சீதக்காதி மற்றும் அப்துல் காசிம் மரைக்காயர்
  1. சொல்ல வந்த கருத்தை உள்ளுரை வழியாக உரைப்பது எந்த பாடல்களின் சிறப்பு?
  • அகநானூற்றுப் பாடல்கள்
  1. “பெருங்கடல் முகந்தஇருங்கிளைக் கொண்மூ”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • அகநானூறு
  1. “குறமகள் காக்கும் ஏனல் புறமும் தகுதியோ? வாழிய,மழையே”இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • வீரை வெளியன் தித்தனார்
  1. அகநானூறு எத்தனை புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு?
  • 145
  1. அகநானுறு எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
  • மூன்று
  1. அகநானூறு என்னென்ன பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
  • களிற்றியானை நிரை ,மணிமிடை பவளம், நித்திலக்கோவை
  1. அகநானூற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன?
  • நெடுந்தொகை நானூறு
  1. அகநானூற்றில் பாலைத்திணை பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • 200
  1. அகநானூற்றில் குறிஞ்சித்திணை பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
  • 80
  1. அகநானூற்றில் முல்லைத்திணை பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
  • 40
  1. அகநானூற்றில் மருதத்திணை பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
  • 40
  1. அகநானூற்றில் நெய்தல் திணைப் பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
  • 40
  1. பிரபஞ்சன் பிறந்த இடம் இது?
  • புதுச்சேரி
  1. பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?
  • வைத்தியலிங்கம்
  1. பிரபஞ்சனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
  • வானம் வசப்படும்
  1. பிரபஞ்சன் எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்?
  • 1995
  1. இரசிகமணி டி கே சிதம்பரனாரின் காலம் என்ன?
  • 1882 1954
  1. டி கே சி யின் வீட்டுக் கூடத்தில் வட்டவடிவமான தொட்டிகட்டு ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு கூடிய கூட்டம் இலக்கியத்தைப் பற்றி பேசியது அந்த அமைப்பு என்ன பெயர்பெற்றது?
  • வட்டத்தொட்டி
  1. டி கே சி எழுதிய நூல்கள் என்னென்ன?
  • இதய ஒலி ,கம்பர் யார்?
  1. டி கே சி எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?
  • முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம்
  1. யாருடைய பிறந்த நாள் உலக முழுவதும் புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது?
  • ஷேக்ஸ்பியர்
  1. ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் எப்போது?
  • ஏப்ரல் 23
  1. “பிரிவுகள் பேசியே பூசலிட்டு- பழம் பேதமை தனைதள்ளி அனைவருமே ஒரு குடும்பமாய் வாழ்ந்திடுவோம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • பெ.தூரன்
  1. “தமிழர் திருநாள் பொங்கலென்றால்- அதில் தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

பெ.தூரன்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 06 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page