TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. நிறைமொழிமாந்தர் என்னும் சொல் எந்த நூலில் காணப்படுகிறது?
  • தொல்காப்பியம் மற்றும் திருக்குறள்
  1. சித்தன் எனும் சொல் சிலப்பதிகாரத்தில் எந்த காதையில் இடம்பெறுகிறது?
  • நாடுகாண் காதை
  1. பிறப்பறுத்தவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
  • சித்தர்கள்
  1. “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • அகத்திய ஞானம்
  1. சித்தர்கள் என்றால் என்ன பொருள்?
  • நிறைவடைந்தவர்
  1. மனம் கருத்து ஆன்மா என்ற பொருளைக் கொண்ட தமிழில் உள்ள சொல் எது?
  • சித்து
  1. தமிழ் பேரகராதிப்படி  சித்தி என்ற சொல் என்ன பொருளில் வரும்?
  • மெய்யறிதல் வெற்றி காரியம் கைகூடல்
  1. சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
  • திருமூலர்
  1. திருமூலரின் காலம் என்ன?
  • கிபி ஐந்தாம் நூற்றாண்டு அல்லது ஆறாம் நூற்றாண்டு
  1. சித்தர்களில் கலகக்காரர் என கருதப்படுபவர் யார்?
  • சிவவாக்கியர்
  1. சிவவாக்கியரின் காலம் என்ன?
  • கிபி ஒன்பதாம் நூற்றாண்டு
  1. “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” இவ்வரிகளை எழுதியவர் யார்?
  • பாரதியார்
  1. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது யாருடைய கடவுள் கொள்கை?
  • திருமூலர் கடவுள் கொள்கை
  1. “ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” இவ்வரிகளை பாடியவர்?
  • பட்டினத்தார்
  1. “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • சிவவாக்கியர்
  1. “ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
  • திருமந்திரம்
  1. “தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்கு தலைவனாய் நிற்கும்” என்பது யாருடைய வாக்கு?
  • திருமூலர்
  1. “…நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • சிவவாக்கியர்
  1. சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கூறியவர் யார்?
  • க. கைலாசபதி
  1. “சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?”இவ்வரிகளை பாடியவர் யார்?
  • சிவவாக்கியர்
  1. “சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்” என பாடியவர் யார்?
  • பாம்பாட்டிசித்தர்
  1. “ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” இவ்வரிகளை பாடியவர் யார்?
  • பத்திரகிரியார்
  1. அட்டமாசித்திகள் என அழைக்கப்படும் சக்திகள் என்னென்ன?
  • அணிமா, மகிமா ,லகிமா, கரிமா ,பிராகாமியம் ,ஈசத்துவம் ,வசித்துவம் ,காமாவசாயித்வம்
  1. அணுவைப் போல் சிறுத்து நிற்கும் ஆற்றலுக்கு என்ன பெயர்?
  • அணிமா
  1. வரையறையற்ற விரிந்து படரும் ஆற்றலின் பெயர் என்ன?
  • மகிமா
  1. காற்றில் மிதக்கும் ஆற்றலின் பெயர் என்ன?
  • லகிமா
  1. எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றலின் பெயர் என்ன?
  • கரிமா
  1. இயற்கை தடைகளை கடக்கும் ஆற்றலின் பெயர் என்ன?
  • பிராகாமியம்
  1. படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றலின் பெயர் என்ன?
  • சத்துவம்
  1. உலகப் படைப்புகளை எல்லாம் அடக்கியாளும் ஆற்றலின் பெயரென்ன?
  • வசித்துவம்
  1. விரும்பியதை முடிக்கும் ஆற்றலின் பெயரென்ன?
  • காமாவசாயித்வம்
  1. “உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
  • திருமந்திரம்
  1. “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
  • திருமந்திரம்
  1. “நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி” இவ்வரகளை எழுதியவர் யார்?
  • கடுவெளி சித்தர்
  1. குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும் சொல் எது?
  • மாங்காய்ப்பால்
  1. “தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
  • வள்ளலார்
  1. ” விழுந்த மலர் கிளைக்கு திரும்புகிறது அடடா வண்ணத்துப்பூச்சி” இக் ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
  • மோரிடாகே
  1. “பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம் இலையுதிர்கால மாலை”-இக் ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
  • பாஷோ
  1. “பெட்டிக்கு வந்தபின் எல்லா காய்களும் சமம்தான் சதுரங்க காய்கள்”இக் ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
  • இஸ்ஸா
  1. இறகுகளின் தொகுதியை எவ்வாறு அழைப்பர்?
  • சிறகு
  1. “சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது” கவிதையை எழுதியவர் யார்?
  • பிரமிள்
  1. பிரமிள் அவர்களின் இயற்பெயர் என்ன?
  • சிவராமலிங்கம்
  1. சிவராமலிங்கம் எங்கு பிறந்தவர்?
  • இலங்கை
  1. சிவராமலிங்கம் என்ன புனைப்பெயரில் எழுதினார்?
  • பானுச்சந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்
  1. சிவராமலிங்கம் கவிதைகள் என்ன பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது?
  • பிரமிள் கவிதைகள்
  1. பிரமிள் எழுதிய சிறுகதை தொகுப்பின் பெயர் என்ன?
  • லங்காபுரி ராஜா
  1. பிரமிள் எழுதிய நாடகத்தின் பெயர் என்ன?
  • நட்சத்திரவாசி
  1. பிரமிள் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் என்ன?
  • வெயிலும் நிழலும்
  1. “கற்றேன் என்பாய் கற்றாயா?-வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை”இவ்வரிகளை எழுதியவர் யார்?
  • அப்துல் ரகுமான்
  1. “நான் என்பாய் அது நீ இல்லை – வெறும் நாடக வசனம் பேசுகிறாய் ஏன்” இவ்வரிகளை எழுதியவர் யார்?
  • அப்துல் ரகுமான்
  1. மௌலானா ரூமி எங்கு பிறந்தார்?
  • ஆப்கானிஸ்தான்
  1. மௌலானா ரூமி எப்போது பிறந்தார்?
  • 1207
  1. ரூமியினுடைய உலகப் புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் எது?
  • மஸ்னவி
  1. வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றியவர் யார்?
  • அப்துல் ரகுமான்
  1. அப்துல் ரகுமான் எழுதிய நூல்கள் என்னென்ன?
  • பால்வீதி, நேயர் விருப்பம் ,பித்தன் ,ஆலாபனை
  1. அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள் என்னென்ன?
  • பாரதிதாசன் விருது, தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது, சாகித்திய அகடமி விருது
  1. அப்துல்ரகுமானின் எந்த நூலிற்க்கு சாகித்ய அகடமி விருது  கிடைத்தது?
  • ஆலாபனை
  1. அப்துல் ரகுமானின் ‘’தொலைந்து போனவர்கள்’’ எனும் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
  • சுட்டுவிரல்
  1. மகாபாரதத்தின் எத்தனையாவது நாள் போரில் கன்னன் இறந்தான்?
  • 17வது நாள்
  1. “நன்றுஎன நகைத்துத் தரத்தகு பொருள்நீ நவில்க”எனக் கூறியவர் யார்?
  • கர்ணன்
  1. இலியட், ஒடிசி ஆகிய இதிகாசங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன?
  • கிரேக்கம்
  1. தமிழில் எழுதப்பட்ட முதல் இரு காப்பியங்கள் என்ன?
  • சிலப்பதிகாரம், மணிமேகலை
  1. வில்லிபுத்தூரார் எந்த மன்னனால் ஆதரிக்கப்பட்டார்?
  • வரபதி ஆட்கொண்டான்
  1. வரபதி ஆட்கொண்டான் எந்த இடத்தின் மன்னராவார்?
  • வக்கபாகை
  1. வில்லிபாரதம் எத்தனை பருவங்களைக் கொண்டது?
  • பத்து
  1. ‌ வில்லிபாரதம் முதல் மற்றும் இறுதி பருவம் என்ன?
  • ஆதி பருவம் முதல் சௌப்திக பருவம்
  1. வில்லிபாரதம் எத்தனை பாடல்களால் ஆனது?
  • 4351 விருத்தப் பாடல்கள்
  1. புதுமைப்பித்தன் கதைகள் வெளிவந்த பத்திரிகை எது?
  • கலைமகள்
  1. ‘’இங்கிலீஷ் இலக்கியத்திலே கடைசி கொழுந்து’’ என்று கருதப்படுகிறவர் யார்?
  • ஜேம்ஸ் ஜாய்ஸ்
  1. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
  • சோ விருத்தாசலம்
  1. புதுமைப்பித்தனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
  • சிறுகதை மன்னர்
  1. புதுமைப்பித்தனின் மொத்த கதைகளும் என்ன பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது?
  • புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  1. ‘’வாடியப் பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என கூறியவர் யார்?
  • ராமலிங்க அடிகள்
  1. இராமலிங்க அடிகளாரின் காலம் என்ன?
  • 1823-1874
  1. வள்ளலார் எத்தனை வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றார்?
  • 7வயது
  1. வள்ளலார் எழுதிய நூல்கள் என்னென்ன?
  • தெய்வமணிமாலை, கந்தர் சரணப்பத்து, மநுமுறை கண்ட வாசகம்
  1. வள்ளலார் பதிப்பித்த நூல்கள் என்னென்ன?
  • ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மய தீபிகை
  1. “ஒன்றிலிருந் தொன்றென்னும் உலகநிலை அறிந்தேன்” இவ்வரிகளில் எழுதியவர்?
  • சுரதா
  1. ‘என் வாழ்க்கை என் கையில்’ நூலின் ஆசிரியர் யார்?
  • ஞாநி
  1. ‘மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள்’ நூலின் ஆசிரியர் யார்?
  • ஆர். கே. வி கோபாலகிருஷ்ணன்
  1. ‘ மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள்’ நூலினை மொழிபெயர்த்தவர் யார்?
  • அய்யாசாமி

TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page