DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- கலைகளின் உச்சம் எது?
- கவிதை
- “கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்று கூறியவர் யார்?
- மகாகவி பாரதி
- “மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன” என கூறியவர் யார்?
- எர்னஸ்ட் காசிரர்
- மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளவை என்னென்ன?
- கை கால் அசைவுகள், முகத்தின் தசை நார் சுருக்கங்களின் அபிநயங்கள் ஆகிய உடம்பின் செயல்பாடுகள்
- எந்த நிலையில் மொழியானது பதிவு செய்யப்படுகிற போது உறைந்துபோன பனிக்கட்டியை போன்று திட நிலையை அடைந்துவிடுகிறது?
- எழுத்துமொழி
- “உலகை மொழி கட்டி எழுப்பியது என்று சொல்கிறபோது உலகம் மொழியின் கைப்பிடியில் இருந்து நழுவுவதற்கு தொடர்ந்து முயல்வதாகவும் தெரிகிறது” என கூறியவர்?
- இந்திரன்
- எழுத்து மொழியைக் காட்டிலும் எது உணர்ச்சிக்கு மிக அருகில்?
- பேச்சு மொழி
- கவிதையின் மொழி அதிக வெளிப்பாட்டு சக்தி கொண்டதாக எப்போது மாறுபடுகிறது?
- பேச்சு மொழி
- எந்த மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது?
- எழுத்து மொழி
- தனக்குத் தானே பேசிக் கொள்கிற பேச்சு என்பது என்ன?
- எழுத்து
- _____என்பது தன்னைத் திறந்து கொள்கின்ற ஒரு செயல்பாடு.
- பேச்சு
- கவிதைகளை எதிரில் இருக்கும் வாசகர்களுடன் பேசுவதுபோல
அமைக்கும் மொழிநடைக்கு பெயர் என்ன?
- நேரடி மொழி
- “நேரடி மொழி தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது” எனக் கூறியவர் யார்?
- மலையாள கவி ஆற்றூர் ரவிவர்மா
- பேச்சு மொழியை கவிதையில் பயன்படுத்துபவர்களில் எத்தனை வகையினர் உண்டு?
- மூன்று வகையினர்
- யாருடைய கவிதைகளில் எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகி விடுவதில்லை?
- வால்ட் விட்மன்/முதல் வகையினர்
- யாருடைய பேச்சு எதிராளியை விளித்து பேசுவது போன்றது அன்று?
- கவிஞர் மல்லார்மே/இரண்டாம் வகையினர்
- வால்ட் விட்மன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
- அமெரிக்கா
- புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்
- வால்ட் விட்மன்
- வால்ட் விட்மனுடைய எந்த நூல் உலகப் புகழ்பெற்றது?
- புல்லின் இதழ்கள்
- தனிமையை சாட்சியாக வைத்து தங்களுக்கு தாங்களே உதடு பிரித்து பேசிக் கொள்ளும் வகை கவிஞர்கள் யார்?
- கவிஞர் மல்லார்மே/ இரண்டாம் வகையினர்
- ஸ்டெஃபான் மல்லார்மே எந்த நாட்டைச் சார்ந்தவர்?
- பிரான்ஸ்
- யாரை புரிந்து கொள்வதன் மூலம் குறியீட்டியத்தையும் புரிந்து கொள்ளமுடியும்?
- மல்லார்மே
- ____என்பது பொருளை பதிவுசெய்வது அன்று நினைவு கூறத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.
- குறியீட்டு கவிதை
- வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையை பற்றி பேசும் கவிதை வகைகள் யாருடையது?
- பாப்லோ நெரூடா /மூன்றாவது வகையினர்
- மல்லார்மே எந்த மொழி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
- ஆங்கில ஆசிரியர்
- பாப்லோ நெருடா எங்கு பிறந்தவர்?
- தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாடு
- பாப்லோ நெருடா எந்த நாட்டின் மிகச் சிறந்த கவிஞர்?
- இலத்தீன் அமெரிக்கா
- பாப்லோ நெருடா எந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார்?
- 1971
- “கவிதை என்பது ஒரு பொருளன்று அது மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்து விடுவதற்காக முயலும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு” என கூறியவர் யார்?
- இந்திரன்
- தமிழின் கவிதையியல் எனும் நூலை எழுதியவர் யார்?
- கா.சிவத்தம்பி
- இந்திரனின் இயற்பெயர் என்ன
- இராசேந்திரன்
- மனோரமா பிஸ்வாஸ் எந்த மொழி கவிஞர்
- ஒரிய மொழி கவிஞர்
- ராஜேந்திரன் மொழிபெயர்த்த மனோரமா பிஸ்வாசின் மொழிபெயர்ப்பு நூலின் பெயர் என்ன?
- பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம்
- பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம் எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக எந்த ஆண்டு ராஜேந்திரன் சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளார்?
- 2011
- ராஜேந்திரன் எழுதிய கவிதைத் தொகுப்புகளின் பெயர் என்ன?
- முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள்
- ராஜேந்திரன் இயற்றிய கட்டுரை நூல்களின் பெயர்கள் என்னென்ன?
- தமிழ் அழகியல், நவீன ஓவியம்
- இந்திரன் வெளியிட்ட இதழ்கள் என்னென்ன?
- வெளிச்சம், நுண்கலை
- வால்ட் விட்மன் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
- சங்கர் ஜெயராமன்
- மல்லார்மே கவிதைகளை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் யார்?
- ஸ்ரீராம்
- பாப்லோ நெருடா கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
- ஆ.இரா.வெங்கடசலபதி
- மனித இனத்தின் ஆதி அடையாளம் எது?
- மொழி
- “என் அம்மை,ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே”-என தமிழைப் பாடியவர் யார்?
- சு.வில்வரத்தினம்
- “வழிவழி நினதடி தொழுதவர்,உழுதவர், விதைத்தவர் ,வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே என தமிழைப் பாராட்டியவர் யார்?
- சு.வில்வரத்தினம்
- சு.வில்வரத்தினம் எங்கு பிறந்தார்?
- யாழ்ப்பாணத்திலுள்ள புங்குடுதீவு
- சு.வில்வரத்தினம் கவிதைகள் மொத்தமாக எந்த தலைப்பில்
தொகுக்கப்பட்டுள்ளது?
- உயிர்த்தெழும் காலத்துக்காக
- உயிர்த்தெழும் காலத்துக்காக எப்போது தொகுக்கப்பட்டது?
- 2001
- “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை” என கூறியவர் யார்?
- ரசூல் கம்சதேவ்
- “பாயிரம்” என்பதன் பொருள் என்ன?
- வரலாறு
- “காலம் களனே காரணம் என்றுஇம் மூவகை ஏற்றி மொழிநரும் உளரே”-இவ்வரிகளை இயற்றியவர் யார்?
- பவணந்தி முனிவர்
- நூலைப் புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்க உதவுவது எது?
- பாயிரம்
- தமிழின் முதல் கிடைக்கப்பெற்ற இலக்கண நூல் எது?
- தொல்காப்பியம்
- “…ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோடு ஆயஎண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே…”இவ்வரிகளில் உள்ள ஆக்கியோன்,வழி, எல்லை, நூல் பெயர், யாப்பு, நுதலிய பொருள்,கேட்போர் ,பயன், காலம், களன், காரணம் ஆகியவற்றை குறிப்பிடுக?
1.ஆக்கியோன் பெயர்- பவனந்தி 2.வழி- தொல்காப்பிய வழி
- எல்லை- கன்னியாகுமரி குடகுநாடு
4.நூல் பெயர் –நன்னூல்
- யாப்பு- தொகை வகை விரி
6.நுதலிய பொருள்- எழுத்து சொல் பொருள் யாப்பு அணி இலக்கணங்கள்
- கேட்போர்- கேட்டவர் அனைவரும்
8.பயன் –மொழித்திறன் பெறுதல் 9.காலம்- சீய கங்கமன்னன் காலம்
- களன்-சீயகங்கன் மன்னன் அவை
- காரணம்- சீயகங்கன் வேண்டிக் கொண்டதற்கிணங்க
- பாயிரத்தின் வேறு பெயர்கள் என்னென்ன?
- முகவுரை, அணிந்துரை, புனைந்துரை, புறவுரை, புறவுரை, பதிகம், நூல் முகம்,தந்துரை
- “பாயிரம் பொது ,சிறப்பு என இரு பாற்றே”-வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?
- நன்னூல்
- நூலுக்கு முன் சொல்லப்படுவது?
- முகவுரை
- ஐந்து பொதுவும் பதினோரு சிறப்பும் ஆகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்து சொல்வது?
- பதிகம்
- நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்து சொல்வது?
- அணிந்துரை மற்றும் புனைந்துரை
- நூலுக்கு முகம்போல் முற்பட்டிருப்பது?
- நூன்முகம்
- நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது?
- புறவுரை
- நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை தந்து சொல்வது?
- தந்துரை
- பாயிரம் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன?
- இரண்டு வகைப்படும் பொதுப்பாயிரம் மற்றும் சிறப்புப்பாயிரம்
- நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை எனும் ஐந்தும் கூறுவது?
- பொதுப் பாயிரம்
- எந்த ஆண்டு முதன்முதலில் நன்னூல் பதிப்பிக்கப்பட்டது?
- 1834
- சிறப்புப்பாயிரம் எத்தனை செய்திகளை தெரிவிக்கிறது?
- 8 செய்திகள்
- நன்னூல் எந்த நூலை முதல் நூலாகக் கொண்ட வழிநூல் ஆகும்?
- தொல்காப்பியம்
- நன்னூல் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
- பதிமூன்றாம் நூற்றாண்டில்
- நன்னூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது அவை
என்னென்ன?
- இரண்டு :எழுத்ததிகாரம் சொல்லதிகாரம்
- எழுத்ததிகாரம் எத்தனை பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது அவை என்னென்ன?
- ஐந்து பகுதிகள்: எழுத்தியல் ,பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்று புணரியல், உருபு புணரியல்
- சொல்லதிகாரம் எத்தனைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை என்னென்ன?
- ஐந்து பகுதிகள்: பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல்
- பவணந்தியாரின் உருவ சிற்பம் எங்கு உள்ளது?
- சந்திரபிரபா கோவில்
- எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரபிரபாவின் கோவில் எங்கு உள்ளது?
- மேட்டுப்புதூர் ரோடு மாவட்டம்
- ராபின்சன் குரூசோ என்னும் நூலை எழுதியவர் யார்?
- டேனியல் டிஃபோ
- “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி வாழ்வோர் போகிய பேர்
ஊர்ப் பாழ்” எனும் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- நற்றிணை,153வதுபாடல்
- “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்” – எனும் பாடலை இயற்றியவர் யார்?
- தனிமகனார்
- திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
- ஜி.யு போப்
- ஜி யு போப் திருக்குறளையும் ,திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு எது?
- 1886, 1900
- ஜி யு போப் எங்கு பிறந்தார்?
- கனடா
- “ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை அழித்தால் போதும் அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்று விடும்” எனக் கூறும் நூல் எது?
- ஃபாரன்ஹீட் 451
- தமிழர் பாரம்பரிய நாள் எது?
- ஜனவரி 14
- எந்த ஆண்டு முதல் தமிழர் பாரம்பரிய நாள் கொண்டாடப்பட்டு வருகிறது?
- 2012
- வன்னி வீதி என்று பெயர் கொண்ட சாலை எங்கு உள்ளது?
- கனடா
- காகத்துக்கு பறக்கும் எல்லை எவ்வளவு?
- இரண்டு மைல் தூரம்
- எழுத்தாளர் அ முத்துலிங்கம் எங்கு பிறந்தார்?
- கொக்குவில் கிராமம் யாழ்ப்பாணம்
- அ.முத்துலிங்கம் இயற்றிய சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?
- அக்கா, மகாராஜாவின் ரயில் வண்டி, திகட சக்கரம்
- அ முத்துலிங்கம் எந்த நூலுக்காக தமிழ்நாடு அரசின் முதல் பரிசை 1996ஆம் ஆண்டு பெற்றார்?
- வம்சவிருத்தி எனும் சிறுகதைத் தொகுப்பு
- இலங்கை அரசின் சாகித்திய அகாடமி பரிசு வென்ற
அ.முத்துலிங்கத்தின் நூல் என்ன?
- வடக்கு வீதி
- அ முத்துலிங்கம் எந்த ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய பரிசை பெற்றார்?
- 1999
- ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பருக்கு பின்னர் ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த கதிரவன்’ என தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- மீனாட்சி சுந்தரனாரின் காலம் என்ன?
- 06-04-1815 முதல் 01-02-1876
- மீனாட்சிசுந்தரனார் எங்கு பிறந்தார்?
- திருச்சிராப்பள்ளி அருகிலுள்ள அதவத்தூர்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் எந்த மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்?
- திருவாவடுதுறை
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் ஆசிரியர்கள் யார்?
- திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர் ,சென்னை தாண்டவராயர் ,திருத்தணிகை விசாகப் பெருமாள்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் இயற்றிய நூல் என்ன?
- சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் எதை பாடுவதில் வல்லவர்?
- தலபுராணங்கள்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் மாணவர்கள் யார்?
- உ.வே சாமிநாதர், தியாகராசர், குலாம் காதிறு நாவலர்
- “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” எனக் கூறும் நூல் எது?
- பிங்கல நிகண்டு
- “அதுஊம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்”-இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
- புறநானூறு
- “அதுஊம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்”எனும் புறநானூற்று பாடல் அடியில் தமிழ் எனும் சொல் எந்த பொருளில் ஆளப்பட்டுள்ளது?
- பல்கலை புலமை
- “தமிழ் தழீஇய சாயலவர்”-இவ்வரிகளை இயற்றியவர் யார்?
- கம்பன்
- “தமிழ் தழீஇய சாயலவர்”இவ்வரிகளில் தமிழ் என்பதற்கு என்ன பொருள்?
- அழகு ,மென்மை
- தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் தமிழ் என்ற பொருளில் ஆளப்படுகிறது?
- பாட்டு
- திருப்பாவை எத்தனை பாட்டுக்களால் ஆனது?
- 30
- திருப்பாவையை தமிழ்மாலை எனக் கூறியவர் யார்?
- ஆண்டாள்
- பண்பாட்டு அசைவுகள் எனும் நூலின் ஆசிரியர் யார்?
- தோ பரமசிவன்
- நாடற்றவன் என்ற நூலின் ஆசிரியர் யார்?
- அ.முத்துலிங்கம்
- நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ.கி பரந்தாமனார்