DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- மனித சமூகத்தின் ஆதிநிலம் எது?
- மலை
- தமிழ் அகத்திணையியல் மலை மற்றும் மலைசார்ந்த பகுதியை எவ்வாறு குறிக்கிறது?
- குறிஞ்சி
- மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு எனும் உரைநடையை எழுதியவர் யார்?
- ஆர். பாலகிருஷ்ணன்
- திராவிடர்களை மலை நில மனிதர்கள் என அழைத்தவர் யார்?
- கமில்சுவலபில்
- “சேயோன் மேய மைவரை உலகம்” என உரைக்கும் நூல் எது?
- தொல்காப்பியம்
- “விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- திருமுருகாற்றுப்படை
- மால் பஹாடியா எனும் இனக்குழு எந்த மாநிலத்தில் உள்ளது?
- ஜார்கண்ட்
- மல அரயன் எனும் இனக்குழு எங்கு உள்ளது?
- மேற்கு தொடர்ச்சி மலைகள் கேரளம்
- நெடுமங்காடு- கேரள பகுதிகளில் உள்ள இனக்குழுவின் பெயர் என்ன?
- மல குறவன்
- மல மூத்தன் எனும் இனக்குழு அமைந்துள்ள இடம் எது?
- எர்நாட்-கேரளம்
- மல பணிக்கர் எனும் இனக்குழு எங்கு உள்ளது?
- வட கேரளம்
- மலயன் இனக்குழு காணப்படும் இடம் எது?
- பாலக்காடு கேரளம்
- மல வேடா இனக்குழு உள்ள இடம்?
- இடுக்கி கேரளம்
- தட்சிண கன்னடா மற்றும் கர்நாடக பகுதிகளில் உள்ள இனக்குழுவின் பெயர் என்ன?
- மலேரு
- கோட்டா இனக்குழு உள்ள இடம்?
- நீலகிரி தமிழ்நாடு
- கொண்டா தோரா இனக்குழு காணப்படும் இடம்?
- ஆந்திர பிரதேசம்
- கோண்டு,கொய்ட்டெர் இனக்குழு காணப்படும் இடம்?
- ஒடிஸா
- பால் எருமை கொட்டில்களை புனித இடமாக கருதுபவர்கள் யார்?
- நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர்
- குறும்பர் மொழியில் தாழ்வாரத்தை குறிக்கப் பயன்படும் சொல் எது?
- மெட்டு
- ஜதாப்பு எனப்படும் திராவிட பழங்குடியினரின் குடியிருப்புகள் காணப்படும் இடம் எது?
- ஆந்திரா மற்றும் ஒரிசா
- திராவிட சொல்லான மலை என்பது சமஸ்கிருத மொழியில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
- மலய
- எந்த அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மலையத்துவஜ என அழைக்கப்பட்டான்?
- பாண்டிய மன்னன்
- வடமொழியில் மலய என்ற சொல் எங்கு உள்ள மலைகளை குறிக்கிறது?
- மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை
- தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் உயரமானது என குறிக்கப் பயன்படும் சொல் எது?
- மலை
- தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் உயரம் குறைவானது என பொருள்படும் சொல் எது?
- குன்று
- வரை என்ற சொல் எந்தெந்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது?
- கோடு மலை சிகரம் விளிம்பு கரை எல்லை நுனி
- நுனி முதல் அடிவரை மற்றும் அடி முதல் நுனி வரை என்ற தொடர்களில் வரை என்ற சொல் எந்த பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
- விளிம்பு
- திராவிட சொற்கள் பயன்படுத்தப்படும் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தை குறிப்பிடுக:
மலை எனும் சொல் பயன்படுத்தப்படும் மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் என்னென்ன? 1.உத்தராஞ்சல்-1. சமோலி 2.ஜார்கண்ட்-2. கும்லா
- உத்திரப்பிரதேசம்-3. ஜவுன்பூர்
- வரை எனும் சொல் பயன்படுத்தப்படும் மாவட்டங்கள் எந்தெந்த மாநிலத்தில் உள்ளன?
1.வல்ஸட்-1. குஜராத் 2.தாணே-2. மஹாராஷ்டிரா 3.காங்க்ரா-3. ஹிமாச்சலப் பிரதேசம்
- ஜலந்தர் மாவட்டம் பஞ்சாப் மாநிலம் ,அஜ்மீர் மாவட்டம் ராஜஸ்தான் மாநிலம் ,உடுப்பி மாவட்டம் கர்நாடக மாநிலம் இவற்றில் பயன்படுத்தப்படும் திராவிட சொல் எது?
- மலா
- தமிழ்நாட்டில் மட்டும் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்கள் முன்னொட்டாக இடம்பெறுகின்றது?
- 17
- தமிழ்நாட்டில் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்கள் பின்னொட்டாக இடம்பெறுகின்றது?
- 84
- எந்த மாநிலத்தில் மல் எனும் வேர்ச் சொல் மலை என்று வழங்கப் படுவதற்கு பதிலாக மலா என வழங்கப்படுகிறது?
- ஆந்திரா
- மலை என்ற வடிவம் தோணி மலை எனும் இடத்தில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படும் மாநிலம் எது?
- கர்நாடகம்
- கர்நாடகத்தில் மலையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான மலே
எத்தனை இடப்பெயர்களில் இடம்பெறுகிறது?
- 15
- கேரள மாநிலத்தில் எத்தனை மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன
- 10
- தமிழ் மொழியில் காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பை குறிக்கும் சொல் எது?
- கோட்டை
- கோட்டை, கோடு ஆகிய தமிழ் சொற்கள் மற்ற மொழிகளில் எவ்வாறு திரிந்து உள்ளன என்பதை குறிப்பிடுக:
1.மலையாளம் -கோட்ட,கோடு 2.கன்னடம் -கோட்டே,கோண்டே 3.தெலுங்கு-கோட்ட 4.துளு -கோட்டே 5.தோடா -க்வாட்
- இந்தியாவில் கோட்டை என்று முடியும் எத்தனை இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன?
- 248
- கோடு என்ற சொல்லின் பொருள் என்னென்ன?
- மலை உச்சி, சிகரம் ,மலை,வல்லரண், கோட்டை
- KVT Complex என்பவற்றில் இடம்பெற்றுள்ள பழந்தமிழ் ஊர்கள் என்னென்ன?
- கொற்கை வஞ்சி தொண்டி
- திராவிடர்களின் மலை பெருமிதத்தின் சாட்சியாக வடமேற்கு நாடுகளான எவற்றில் நெடுமலைகளோடு பொருந்திப்போகும் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன?
- ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்
- ஆர் பாலகிருஷ்ணன் எத்தனை ஆண்டுகளாக இடப்பெயர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்?
- 28 ஆண்டுகள்
- வடமேற்கு இந்தியாவில் இன்று வரை வழக்கில் உள்ள கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை ஆய்வு உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர்?
- ஆர்.பாலகிருஷ்ணன்
- ஆர் பாலகிருஷ்ணன் எந்த நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
- தினமணி
- ஆர் பாலகிருஷ்ணன் எந்த இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவில் பங்காற்றியிருக்கிறார்?
- கணையாழி
- 1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வை முதல் முதலாக முழுவதுமாக தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர் யார்?
- ஆர்.பாலகிருஷ்ணன்
- மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு என்னும் உரைநடை ஆர் பாலகிருஷ்ணனின் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
- ” அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம்”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- காவடிசிந்து
- சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடி சிந்து யாருடைய தாக்கத்தால் விளைந்தது?
- அருணகிரியாரின் திருப்புகழ் தாக்கத்தால்
- முதன்முதலில் வண்ண சிந்து பாடியவர் யார்?
- சென்னிகுளம் அண்ணாமலையார்
- சென்னிகுளம் அண்ணாமலையார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- காவடி சிந்தின் தந்தை
- சென்னிகுளம் அண்ணாமலையார் யாரிடம் அரசவை புலவராக இருந்தார்?
- ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்
- சென்னிகுளம் அண்ணாமலை யார் எழுதிய வேறு நூல்கள் என்னென்ன?
- வீரை தலபுராணம் ,வீரை நவநீத கிருஷ்ண சாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக் கோவை, கோமதி அந்தாதி
- “அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- குறுந்தொகை
- “தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்”- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
- வெள்ளிவீதியார்
- “அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர்”என்னும் குறுந்தொகை பாடல் இயற்றப்பட்ட திணை எது?
- குறிஞ்சித்திணை
- குறுந்தொகை எந்தத் துறை சார்ந்த பாடல்களை உடையது?
- அகத்திணை
- குறுந்தொகை நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன?
- 401
- குறுந்தொகை எவ்வாறு சிறப்பித்து உரைக்கப்படுகிறது?
- நல்ல குறுந்தொகை
- உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது?
- குறுந்தொகை
- முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படும் நூல் எது?
- குறுந்தொகை
- “உண்டால் அம்ம…”எனத் தொடங்கும் பிறருக்கென வாழ்வதே பிறவிப்பயன் என்ற கருத்தை விளக்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது?
- புறநானூறு
- குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
- பூரிக்கோ
- குறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்?
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- வெள்ளிவீதியார் இயற்றிய பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் எத்தனை உள்ளன?
- பதிமூன்று பாடல்கள்
- தமிழரின் வாழ்வியல் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது?
- புறநானூறு
- “..இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே..”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- புறநானூறு
- ”தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”- வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- புறநானூறு
- “…பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர்.. “-இவ்வரிகளை இயற்றியவர் யார்?
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பொதுவான செய்திகளையும்த் தொகுத்துக் கூறும் திணை?
பொதுவியல் திணை
- மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் எந்தத் துறை?
பொருண்மொழிக் காஞ்சித் துறை
- “உண்டால் அம்ம இவ்வுலகம்…” எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டுள்ள திணை எது?
பொதுவியல் திணை
- “உண்டால் அம்ம இவ்வுலகம்…” எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டுள்ள துறை எது?
பொருண்மொழிக் காஞ்சித் துறை
- புறநானூற்றை the four hundred songs of war and wisdom an anthology of poems from classical Tamil the purananooru என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்
- ஜி யு போப் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை எந்த தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்?
- extracts from purananuru and puraporul venbamalai
- புறநானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
- 400 பாடல்கள்
- புறநானூற்றுப் பாடல்கள் எந்த பாவகையால் ஆனது?
- அகவற்பா
- புறநானூறு நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
- புறம், புறப்பாட்டு
- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எத்தனை பாடல்களை எழுதியுள்ளார்?
- புறநானூற்றில் ஒரு பாடலும் பரிபாடலில் ஒரு பாடலும்
- வாடிவாசல் எனும் சிறுகதை இயற்றியவர் யார்?
- சி சு செல்லப்பா
- “..கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் ..”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- கலித்தொகை
- அளவில் சிறுகதையை விட நீளமாகவும் புதினத்தை விட சிறியதாகவும் இருக்கும் கதை எவ்வாறு அழைக்கப்படும்?
- குறும்புதினம் அல்லது குறுநாவல்
- சி சு செல்லப்பா எந்த இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றி உள்ளார்?
- சந்திரோதயம் தினமணி
- சி சு செல்லப்பா எந்த இதழைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்?
- எழுத்து
- சி சு செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள் என்னென்ன?
- வாடிவாசல், சுதந்திர தாகம், ஜீவனாம்சம், பி எஸ் ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ் சிறுகதை பிறக்கிறது
- சி சு செல்லப்பாவின் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது கிடைத்தது?
- சுதந்திரதாகம் (2001)
- தமிழ் பதிப்புலகின் தலைமகன் என போற்றப்படுபவர் யார்?
- சி.வை தாமோதரனார்
- தமிழ் பதிப்புலகின் தலைமகன் எங்கு பிறந்தார்?
- இலங்கை யாழ்ப்பாணம்
- தமிழ் பதிப்புலகின் தலைமகனின் காலம் என்ன?
- 1832 – 1901
- தாமோதரனார் தனது 20வது வயதிலேயே எந்த நூலுக்கு உரையுடன் பதிப்பித்து வெளியிட்டார்?
- நீதிநெறிவிளக்கம்
- எந்த ஆண்டு தொல்காப்பியர் சொல்லதிகாரத்திற்கு சேனாவரையர் உரையை பதிப்பித்து தாமோதரனார் வெளியிட்டார்?
- 1868
- தாமோதரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
- கட்டளைக்கலித்துறை, நட்சத்திர மாலை ,சூளாமணி வசனம், ஆறாம் வாசகப் புத்தகம்
- தினவர்த்தமானி என்னும் இதழினை நடத்தியவர் யார்?
- பெர்சிவல் பாதிரியார்
- தாமோதரனார் எந்த இதழுக்கு ஆசிரியராக பணியாற்றினார்?
- தினவர்த்தமானி
- தாமோதரனார் எந்த கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்?
- சென்னை மாநிலக் கல்லூரி
- தாமோதரனார் பி எல் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் எங்கு வழக்கறிஞராக பணியாற்றினார்?
- கும்பகோணம்
- தாமோதரனார் எந்த ஆண்டு புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?
- 1884