DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- கணக்கு என்பது?
நூலின் பெயர்
- மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
- வெள்ளக்கால் சுப்பிரமணியனார் எந்த திண்ணைப் பள்ளியில் படித்தார்?
திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணை பள்ளி
- ப இராசமாணிக்கனார் யாரிடம் படித்திருக்கிறார்?
மௌனகுரு
- பின்னத்தூர் நாராயணசாமி எந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடம்
- சோமசுந்தர பாரதியார் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம்
- ந மு வேங்கடசாமி எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?
வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளி
- வ.சுப.மாணிக்கம் எந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்
மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளி
- இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை என்ற நூலின் ஆசிரியர் யார்?
பேராசிரியர் அ கா பெருமாள்
- பள்ளி எனும் சொல் எந்த மதத்தில் இருந்து வந்தது
சமணம்
- ஊர்தோறும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய மரத்தின் அடியில் இருக்கும் மேடை எவ்வாறு அழைக்கப்படும்
மன்றம் அல்லது அம்பலம்
- உபாத்தியாயர் ஒன்றை சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதற்கு பெயர் என்ன
முறை வைப்பது
- உபாத்தியாயர்க்கு பிரதியாக சில சமயங்களில் இருக்கும் முறையின் பெயர் என்ன
சட்டாம்பிள்ளை முறை
- எழுத்துக்கள் தெரிவதற்கு சுவடியில் தடவப்படும் மை எவற்றால் ஆனது?
வசம்பு மஞ்சள் மணத்தக்காளி இலை சாறு மாவிலைக்கரி தர்ப்பைக்கரி
- “ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்” எனக் கூறும் நூல் எது?
சிந்தாமணி
- “மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் ” எனக் கூறும் நூல் எது?
தமிழ்விடு தூது
- வரி எழுத்தின் உறுப்புகள் என்னென்ன?
புள்ளி கால் கொம்பு விலங்கு
- கீழ்வாயிலக்கம் மேல்வாயிலக்கம் குழிமாற்று நெல் இலக்கம் முதலிய வாய்ப்பாடுகளை கட்டாயம் மனப்பாடம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட புத்தகம் எது ?
பிரபாவதி சுவடி
- இரட்டை துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கில் குச்சியை செருகி கட்டுவார்கள் அதற்கு பெயர் என்ன
நாராசம்
- ஆசிரியர்கள் தனித்தனியே ஏடுகளில் தாம் மேல் எழுதி அதைப் போல எழுதி வரச் சொல்வார்கள் அதற்கு பெயர் என்ன?
சட்டம்
- பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருபவனை எவ்வாறு அழைப்பார்கள்?
வேத்தான்
- மிகச் சிறந்த நூல் பயிற்சி உடையவர்கள் அரசவைகளில் வாதம் புரிந்து நம் கலைத்திறமையை நிலைநாட்டுவார் அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டி இருப்பர் என்று கூறும் நூல் எது
மதுரைக்காஞ்சி
- ” வினாதல் வினாயக விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நன்னூல்
- ஓதற்ப்பிரிவிற்கான கால எல்லை எவ்வளவு
மூன்று வருடம்
- எந்த நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு பண்டிதர்கள் படிக்க வந்து சென்றனர்
நவத்வீபம்
- ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சாவூரிலிருந்த யாரிடம் அந்நிய தேசத்து மாணவர்கள் கல்வி கற்று சென்றனர்?
ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதர்
- உ.வே.சாவின் இலக்கிய கட்டுரைகள் எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன?
உயிர் மீட்சி
- உ.வே சா பெற்றுள்ள பட்டங்கள் என்னென்ன?
மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி
- உ வே சா எந்தக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்
கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி
- உ.வே.சா விற்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது
சென்னைப் பல்கலைக்கழகம்
- உ.வே. சாவிற்கு எந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது?
1932
- உ வே சா நூலகம் எந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது
திருவான்மியூர் சென்னை
- மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவதற்கு பெயர் என்ன
உரைநடை
- சொற்கள் எதுகை மோனை இயைபு முரண் சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவதற்கு பெயர் என்ன
கவிதை
- “விண்வேறு ; விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
துறைமுகம்
- துறைமுகம் என்ற நூலை எழுதியவர் யார்
சுரதா
- சுரதாவின் சிறப்பு பெயர் என்ன
உவமைக் கவிஞர்
- சுரதாவின் இயற்பெயர் என்ன
இராசகோபாலன்
- சுரதா யாரின் மீது கொண்ட பற்றுதலால் தனது பெயரை மாற்றிக்கொண்டார்
பாரதிதாசன்
- சுரதா முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்டு நடத்திய இதழின் பெயர் என்ன
காவியம்
- சுரதா நடத்திய இலக்கிய ஏடுகள் என்னென்ன?
இலக்கியம் விண்மீன் ஊர்வலம்
- சுரதா எழுதிய நூல்கள் என்னென்ன?
தேன்மழை துறைமுகம் மங்கையற்கரசி அமுதும் தேனும்
- சுரதா பெற்றுள்ள விருதுகள் என்னென்ன?
தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது,தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராசராசன் விருது
- “சொல்ல விரும்பியதெல்லாம் சொல்லில் வருவதில்லை”- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
இதுவரை
- இடையீடு என்ற கவிதையை எழுதிய சி மணியின் இயற்பெயர் என்ன ?
சி பழனிச்சாமி
- சி மணி நடத்திய சிற்றிதழின் பெயர் என்ன?
நடை
- சி மணி எழுதிய நூல்கள் என்னென்ன?
யாப்பும் கவிதையும் வரும் போகும் ஒளிச்சேர்க்கை
- சி.மணி எந்த நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் சீன மெய்யியல் நூல்
தாவோ தே ஜிங்
- புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாக பயன்படுத்தியவர் மற்றும் இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாக சொன்னவர் யார்?
சி. மணி
- சி.மணி எந்தப் புனைபெயர்களில் எழுதியுள்ளார்
வே.மாலி,செல்வம்
- சி.மணி பெற்ற விருதுகள் என்னென்ன?
விளக்கு இலக்கிய விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக விருது ,ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது
- “வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி…” என தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,வறுந்தலை உலகமும் அன்றே;”இவ்வரிகளை கூறியவர்
ஔவையார்
- “எத்திசைச் செலினும்,அத்திசைச் சோறே”இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?இயற்றியவர்?
புறநானூறு ஔவையார்
- “வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி…” என தொடங்கும் புறநானூற்றுப் பாடல் எந்த அரசனைப் பற்றிக் கூறுகிறது?
அதியமான் நெடுமான் அஞ்சி
- புறநானூற்றின் வேறு பெயர்கள் என்னென்ன?
புறம் புறப்பாட்டு
- அதியமானின் அரசவைப் புலவர் யார்?
ஔவையார்
- ஔவையார் எந்தெந்த நூல்களில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
அகநானூறு 4, குறுந்தொகை 15, நற்றிணை 7,புறநானூறு 33 மொத்தம் 59 பாடல்கள்
- சாலைப் போக்குவரத்து உதவி எண்?
103
- எங்கு எப்போது முதல் பன்னாட்டு சாலை அமைப்பு மாநாடு நடைபெற்றது?
பாரிஸ் 1909