DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- சென்னைக்கு அருகே உள்ள எந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி மனித நாகரிகத்தின் பழமையை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என நிறுவுகிறது
குடியம் &அதிரம்பாக்கம்
- மூதாதையர் மனித இனத்தின் கல் கோடாரி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
பல்லாவரம்
- சென்னையின் எந்தப் பகுதிகளில் தொல்பழங்கால மானுட எச்சங்கள் கிடைக்கின்றன?
கூடுவாஞ்சேரி பல்லாவரம் புழல்
- மயிலாப்பூர் கிபி இரண்டாம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது?
மல்லியர்பா
- பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது?
முதலாம் மகேந்திரவர்மன்
- சென்னையில் எந்தப் பகுதியில் நந்திவர்மன் கல்வெட்டு கிடைத்துள்ளது?
திருவல்லிக்கேணி
- யாருடைய நாட்குறிப்பில் கூவம் நதிக்கரையில் குளித்ததாக குறிப்பு உள்ளது?
வள்ளல் பச்சையப்பர்
- “சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்சேரி நகர் வரை நீளும் “-இப்பாடலைப் பாடியவர் யார்?
பாரதிதாசன்
- பாரதிதாசன் பக்கிங்காம் கால்வாயில் யாருடன் படகுப் பயணம் செய்தார்?
மயிலை சீனி வேங்கடசாமி ,ப. ஜீவானந்தம்
- மாவலி புரச் செலவு எனும் தலைப்பில் கவிதை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
- எந்த ஆண்டு எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் “தொண்ட மண்டலத்து புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டு சென்னப்பட்டினம் ” என குறிப்பிடப்பட்டுள்ளது?
கி.பி1647
- கூவம் ஆற்றின் வேறு பெயர் என்ன?
திருவல்லிக்கேணி ஆறு
- எப்போது பிரான்சிஸ் டே சென்னப்பரின் இரு மகன்களிடம் இருந்து சென்னை நகரை வாங்கினார்
22-08-1639
- செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
வெள்ளையர் நகரம்
- செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே பணியாளர்கள் வணிகர்கள் போன்றவர்கள் இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
கருப்பர் நகரம்
- வெள்ளையர் நகரம் மற்றும் கருப்பர் நகரம் இரண்டும் சேர்ந்து எவ்வாறு அழைக்கப்பட்டது?
மதராசபட்டினம்
- வடசென்னை பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
மதராசப்பட்டினம்
- தென்சென்னை பகுதிகள் எவ்வாறு வழங்கப்பட்டன?
சென்னைப்பட்டினம்
- 1646 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னை நகரின் மக்கள் தொகை எவ்வளவு?
19000
- சென்னை நகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது?
1688
- சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்?
எலி யேல்
- யாருடைய ஆட்சிக் காலத்தை சென்னையின் பொற்காலம் என அழைப்பர்?
தாமஸ் பிட்
- புனித மேரி தேவாலய தர்ம பள்ளி எப்போது உருவாக்கப்பட்டது?
1715
- ஆசியாவிலேயே உருவான முதல் ஐரோப்பிய கல்வி முறையிலான பள்ளி எது?
புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி
- சென்னை கோட்டை கல்லூரி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1812
- சென்னை கிருத்துவக் கல்லூரி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1837
- பிரசிடென்சி பள்ளி எப்போது உருவாக்கப்பட்டது?
1840
- சென்னை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1857
- பெண்களுக்கென தொடங்கப்பட்ட ராணிமேரி கல்லூரி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
1914
- ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் பெயர் என்ன?
பச்சையப்பன் கல்லூரி
- இந்தோ சராசனிக் கட்டடக்கலை எந்தெந்த கட்டடக் கலையை கலந்து உருவாக்கப்பட்டது?
முகலாய கட்டிடக்கலை பிரித்தானிய கட்டடக்கலை இந்திய பாரம்பரியக் கட்டடக் கலை
- இந்தோ சராசனிக் கட்டடக் கலையின் பாணியில் முதல் கட்டிடம் எப்போது கட்டி முடிக்கப்பட்டது?
1768
- இந்தோ சராசனிக் கட்டிடக்கலையின் பாணியில் முதலில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடம்?
சேப்பாக்கம் அரண்மனை
- இந்தியாவின் முதல் பொது நூலகத்தின் பெயர் என்ன?
கன்னிமரா நூலகம்
- தென்னிந்தியாவின் முதல் தொடர் வண்டி நிலையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1856
- தென்னிந்தியாவின் முதல் தொடர் வண்டி இரயில் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
இராயபுரம்
- சென்னை இலக்கிய சங்கம் எப்போது உருவாக்கப்பட்டது?
1812
- கன்னிமரா நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?
1860
- யாருடைய தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869ல கீழ்த்திசை சுவடிகள் நூலகம் உருவாக்கப்பட்டது?
காலின் மெக்கன்சி
- ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?
அண்ணா நூற்றாண்டு நூலகம்
- அண்ணா நூற்றாண்டு நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?
2010
- தெய்வமணி மாலை நூலை இயற்றியவர் யார்?
இராமலிங்க அடிகள்
- “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
தெய்வமணி மாலை
- தெய்வமணிமாலை திருவருட்பாவில் எத்தனாவது திருமுறையாக இடம்பெற்றுள்ளது?
ஐந்தாம் திருமுறை
- தெய்வமணிமாலை எந்தக் கடவுளைப் பற்றி பாடப்பட்டுள்ளது?
கந்தகோட்டத்து முருகப்பெருமான்
- வள்ளலார் பிறந்த இடம்?
சிதம்பரத்தை அடுத்த மருதூர்
- திருவருட்பா எத்தனை திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது?
ஆறு
- வள்ளலார் எழுதிய வேறு உரைநடை நூல்கள்?
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்
- திருமயிலை என்று அழைக்கப்படும் ஊர் எது?
மயிலாப்பூர்
- “மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் .” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
தேவாரம்
- “கற்றோர்கள் ஏத்தும் கபாலீச்சரம்” எனப்போற்றப்படும் ஊர் எது?
மயிலாப்பூர்
- “இருளகற்றும் சோதித் தொன்மயிலை” எனச் சிறப்பிக்கப்படும் ஊர் எது?
மயிலாப்பூர்
- “மடலாரந்த தெங்கின் மயிலை“,”கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்“,” கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்“,”மங்குல் மதிதவழ் மாடவீதி மயிலாப்பூர்“,” ஊர்திரை வேலை உலாவும் உயிர் மயிலை” இவ்வரிகளில் சிறப்பிக்கப்படும் ஊர்?
மயிலாப்பூர்
- மயிலை பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள் நடைபெறும் மாதங்களை குறிப்பிடுக:
- ஓண விழா-1. ஐப்பசி
2.விளக்கு திருவிழா-2.கார்த்திகை 3.திருவாதிரை விழா-3.மார்கழி 4.தைப்பூச விழா-4.தை 5.கடலாட்டு விழா-5.மாசி
- பங்குனி உத்திர விழா-6.பங்குனி
- திருமயிலாப்பூர் பதிகம் எந்த திருமுறையில் இடம் பெற்றுள்ளது?
இரண்டாம் திருமுறை
- முதல் மூன்று திருமுறைகள் யாரால் பாடப்பட்டுள்ளது?
திருஞானசம்பந்தர்
- திருமுறைகளில் உள்ள யாருடைய பாடல்கள் இசை பாடல்களாகவே திகழ்கின்றன?
திருஞானசம்பந்தர்
- தேவாரம் யாரால் தொகுக்கப்பட்டுள்ளது?
நம்பியாண்டார் நம்பி
- சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள் தமிழுக்கு இருந்த உயர்நிலைத் தத்துவம் சமயக் கோட்பாடுகள் முதலிய தகவல்கள் யாருடைய பாடலில் விரவிக்கிடக்கின்றன?
திருஞானசம்பந்தர்
- “பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்” எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
- உப்பு விளையும் களத்திற்கு பெயர் என்ன?
அளம்
- கடலுக்கு அருகில் மணல் திட்டுக்களில் கடல் நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு பெயர் என்ன?
உப்பங்கழி
- பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல் எது?
அகநானூறு
- அகநானூறு எத்தனை பிரிவுகளை உடையது?
மூன்று
- அகநானூற்றின் பிரிவுகள் மற்றும் பாடல்கள் என்னென்ன?
களிற்றியானை நிறை 120 மணிமிடை பவளம் 180 நித்திலக்கோவை 100
- அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் யார்?
அம்மூவனார்
- அம்மூவனார் எந்த திணை பாடல்கள் பாடுவதில் வல்லவர்?
நெய்தல் திணை
- அம்மூவனார் இயற்றிய பாடல்கள் எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன?
எட்டு தொகை, நற்றிணை, குறுந்தொகை ,அகநானூறு ”ஐங்குறுநூறு
- எழுத்தாளர்களின் வட்டார மொழிகளை குறிப்பிடுக :
1.புதுமைப்பித்தன் –1. நல்லை தமிழ் 2.சண்முகசுந்தரம் –2.கோவை தமிழ் 3.ஜெயகாந்தன் –3.சென்னை வட்டார தமிழ் 4.தி ஜானகிராமன் –4.தஞ்சை தமிழ் 5.தோப்பில் முகமது மீரான் –5.குமரி தமிழ்
- கி. ராஜநாராயணன்-6.கோவில்பட்டி வட்டார தமிழ்
- தம்முடைய வட்டார எழுத்திற்கு கரிசல் இலக்கியம் என பெயரிட்டவர் யார்?
கி.ராஜநாரயணன்
- ஒரு குட்டித் தீவின் வரைபடம் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
தோப்பில் முகமது மீரான்
- தலைக்குளம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
தோப்பில் முகமது மீரான்
- தோப்பில் முகமது மீரான் எப்போது பிறந்தார்?
1944
- தோப்பில் முகமது மீரான் எங்கு பிறந்தார்?
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம்
- தோப்பில் முகமது மீரான் எழுதிய எந்த புதினம் சாகித்திய அகாடமி விருது பெற்றது சாய்வு?
நாற்காலி
- தோப்பில் முஹம்மது மீரான் எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்?
1997
- தோப்பில் முகமது மீரான் எழுதிய எந்த நூல்கள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளது?
துறைமுகம் ,கூனன் தோப்பு