DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- எழுதும் போது ஏற்படும் பிழைகள் என்ன வகைப்பாட்டில் பிரிக்கப்படுகிறது?
எழுத்துப்பிழை, சொற்பொருட் பிழை ,சொற்றொடர்பிழை, பொதுவானபிழை சில
- உயிர் எழுத்துக்கள் எத்தனை?
12
- உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு: குறில் நெடில்
- மெய் எழுத்துக்கள் எத்தனை?
18
- மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று: வல்லினம் ,மெல்லினம், இடையினம்
- உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை?
216
- உயிர்மெய் குறில் எழுத்துக்கள் எத்தனை?
90
- உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
126
- எந்த மெய்யோடு சொல் முடியாது ?
வல்லினம்
- ஈரொற்றாய் வராத மெய்கள் எது?
வல்லினம்
- எந்த மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை?
ட்,ற்
- எந்த மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க,ச,ப எனும் வரிசைகளுமே வரும்?
ட்,ற்
- என் எழுத்துகள் சொல்லின் முதலில் வராது?
ட,ற
- ஆயுத எழுத்து சொல்லின் எந்த இடத்தில் மட்டும் வரும்?
இடையில்
- மெல்லின எழுத்துக்களில் எந்த எழுத்துகள் சொல்லின் தொடக்கமாக வராது?
ண,ன
- ணகர ஒற்றினை அடுத்து எது வராது?
றகரம்
- னகர ஒற்றினை அடுத்து எது வராது?
டகரம்
- எந்த ஒற்றுகள் மட்டுமே ஈரற்றாய் வரும்?
ய,ர,ழ
- தனிக்குறில் அடுத்து எந்த ஒற்றுகள் வராது?
ரகர,ழகர
- உயிர்வரின் ஒரு, இரு என்ற சொற்கள் முறையே எவ்வாறு மாறும்?
ஓர்,ஈர்
- உயிர் வரின் அது, இது, எது முறையை எவ்வாறு மாறும்?
அஃது,இஃது,எஃது
- வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தை தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் என்னவாக திரியும்?
ற’கரமாக
- லகரத்தை தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் என்னவாக திரியும்?
ன’கரமாக
- ளகரத்தை தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் என்னவாக திரியும்?
ட’கரமாக
- ளகரத்தை தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் என்னவாக திரியும்?
ண’கரமாக
- வருமொழி தகரமாயின் லகரம் மற்றும் தகரம் என்னவாக மாறுகிறது?
லகரம் றகரமாகவும் ,தகரம் றகரமாகவும் மாறும்
- வருமொழி நகரமாயின் லகரம் மற்றும் தகரம் என்னவாக மாறுகிறது?
லகரம் னகரமாகவும் ,நகரம் னகரமாகவும் மாறும்
- அல்வழியில் தனிக்குறில் எடுத்து லகரம் தகரம் வரும்போது என்னவாக மாறும்?
ஆய்தமாக (ஃ)
- இயக்கு, ஓட்டு ,அனுப்பு, பெறு முதலான வினைகள் பெயரிடைநிலையான என்ன எழுத்தை பெரும்?
ந்
- மொழியின் அடிப்படை பண்புகள் என்னென்ன?
திணை, பால், எண் ,இடம்
- உலக மொழிகள் அனைத்திலும் என்ன சொற்கள் மிகுதியாக காணப்படுகிறது?
பெயர்ச்சொற்கள்
- பெயர் சொற்களை திணை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிப்பர்?
இரண்டு : உயர்திணை ,அஃறிணை
- எந்த நூல் மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை என்றும், அவர் அல்லாத பிற அனைத்தும் அஃறிணை என்றும் கூறுகிறது ?
தொல்காப்பியம்
- பொருட் குறிப்பின் அடிப்படையில் யார் என்ற பயனிலை எதைக் குறிக்கிறது?
உயர்திணை
- பொருட் குறிப்பின் அடிப்படையில் எது என்று பயனிலை எதனைக் குறிக்கிறது?
அஃறிணை
- எதனைப் பொறுத்து பால் அறியப்படுகிறது?
வினைமுற்று
- இடம் எத்தனை வகைப்படும்?
மூன்று: தன்மை, முன்னிலை, படர்க்கை
- தன்மைப் பன்மை எத்தனை வகைப்படும் ?
இரண்டு : உளப்பாட்டுத் தன்மை பன்மை ,உளப்படுத்தாத தன்மை பன்மை
- பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பேசுவது என்ன வகை?
உளப்பாட்டுத் தன்மை பன்மை
- பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்து தன்மை பன்மையில் பேசுவது என்ன வகை?
உளப்பாடுத்தாதத் தன்மை பன்மை
- எழுதும்போதும் பேசும்போதும் தேவையான இடங்களில் இடைவெளி விடாததும், தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போருக்கும் கேட்போருக்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பொருள்மயக்கம்
- தி இலக்கியங்கள் பெரும்பாலும் என்ன வடிவத்திலேயே தோன்றியது?
வெண்பா
- சொல்லுதலை அடிப்படையாகக்கொண்டு தோன்றியது எது?
வெண்பா
- வெண்பா என்ன ஓசை உடையது ?
செப்பலோசை
- ஏனைய பார்க்கபாக்களை விட வரையறுத்த இலக்கண கட்டுக்கோப்பு உடையதால் வெண்பா வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வன்பா
- வெண்பாவிற்கான தளை எது ?
வெண்டளை
- வெண்டளை எத்தனை வகைப்படும் ?
இரண்டு: இயற்சீர் வெண்டளை ,வெண்சீர் வெண்டளை
- கலைத்தல் என்பதற்கு பொருள் என்ன?
கட்டுதல், பிணித்தல்
- மா முன் நிரை ,விளம் முன் நேர் இது எவற்றிற்கான வாய்ப்பாடு ?
இயற்சீர் வெண்டளை
- வெண்சீர் வெண்டளையின் வாய்பாடு என்ன?
காய் முன் நேர்
- மா விளம் என்பது எத்தனை அசை சீர்கள் ?
ஈரசைச் சீர்கள்
- காய் என்பது எத்தனை அசை சீர்கள் ?
மூவசைச்சீர்
- முதறீசீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் ஆசை என்னவாக இருக்க வேண்டும்?
நிரை
- முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரின் முதலசை என்னவாக இருக்க வேண்டும்?
நேர்
- ஈற்றுச்சீர் எந்த வாய்ப்பாடு ஒன்றில் முடியவேண்டும்?
நாள் ,மலர், காசு, பிறப்பு
- நாள்,மலர் என்பவை எந்த அசைச் சீர்கள்?
ஓரசைச்சீர்கள்
- காசு, பிறப்பு என்பவை என்ன சீர்கள்?
குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள்
- ஈற்று அயற்சீர் ,மாச்சீர் என்றால் என்ன வரும்?
மலர் அல்லது பிறப்பு
- ஈற்று விளச்சீர்,காய்ச்சீர் என்றால் என்ன வரும்?
நாள் அல்லது காசு
- குறள் வெண்பாவின் அடிவரையறை என்ன?
இரண்டடி வெண்பா
- நேரிசை, இன்னிசை சிந்தியல் வெண்பாவின் அடிவரையரை என்ன?
மூன்றடி வெண்பா
- நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும் எத்தனை அடி வரையறை கொண்டது ?
4 அடிக்கு
- 4 அடி முதல் 12 அடி வரை உள்ள வெண்பா எது ?
பஃறொடை வெண்பா
- 13 அடி முதல் அதற்கு மேற்பட்ட அடிகள் வரையறை கொண்டது?
கலிவெண்பா
- வெண்பா எத்தனை வகைப்படும்?
ஏழு: குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா ,நேரிசைச் சிந்தியல் வெண்பா ,இன்னிசை சிந்தியல் வெண்பா ,பஃறொடை வெண்பா, கலி வெண்பா
- நாற்சீர்-முச்சீர்-இடையில் தனிச்சீர் என்பது எதற்குரிய இலக்கணம்?
இன்னிசை வெண்பா
- எந்தப் வெண்பா வகையில் இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில் இரண்டாவது அடியின் ஈற்றுச் சீராக தனியே ஒரு சீர் ஒரு சிறு கோடிட்டு எழுதப்படும் ?
இன்னிசை வெண்பா
- நான்கு-மூன்று-தனிச்சீர்-நான்கு-மூன்று சீர்கள் என்கிற முறையில் எந்த வெண்பா எழுதப்படும் ?
நேரிசை வெண்பா
- தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை என்ன வகை வெண்பா?
இன்னிசை வெண்பா
- படிமம் என்பதன் பொருள் என்ன ?
காட்சி
- விளக்க வந்த ஒரு காட்சியையோ ,கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி எவ்வாறு அழைக்கப்படும்?
படிமம்
- படிமத்தை உருவாக்க எவை பயன்படுகின்றன?
உவமை, உருவகம் ,சொல்லும் முறை
- படிமம் எவற்றின் அடிப்படையில் தோன்றும்?
உவமை, உருவகம் போல படிமமும் வினை ,பயன் ,மெய்( வடிவம்),உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்
- தொல்காப்பியர் எந்த ஒன்றை மட்டும் அணியாக கூறினார்?
உவமை
- காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
EPIC
- EPIC என்ற ஆங்கில வார்த்தை எந்த மொழியில் இருந்து தோன்றியது?
கிரேக்க சொல் EPOS
- EPOS என்பதன் பொருள் என்ன?
சொல் அல்லது பாடல்
- காப்பியம் என்பதன் பொருள் என்ன ?
காப்பு+இயம் என பிரித்து மரபை காப்பது ,இயம்புவது ,வெளிப்படுத்துவது என்றும் மொழியைச் சிதையாது என்றும் காரணம் கூறுவர்
- ஐம்பெருங்காப்பியம் என தன்னுடைய நன்னூல் உரையில் குறிப்பிட்டவர் யார்?
மயிலைநாதர்
- பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ள நூல்கள் என்னென்ன?
பொருள் தொகை நிகண்டு, திருத்தணிகையுலா
- சூளாமணியை பதிப்பித்தவர் யார்?
சி.வை. தாமோதரனார் (1895)
- காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன?
பொருட்டொடர்நிலைச் செய்யுள் ,கதை செய்யுள் , அகலக்கவி ,தொடர்நிலைச் செய்யுள், விருத்தச் செய்யுள் ,உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகாவியம்
- காப்பிய சிற்றுறுப்புகளாக அமைந்திருப்பவை என்ன?
காதை, சருக்கம், இலம்பகம் ,படலம் போன்றவை
- காப்பிய பேருறுப்புகளாக அமைந்திருப்பவை?
காண்டம்
- காதை என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
சிலப்பதிகாரம் ,மணிமேகலை
- சருக்கம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
சூளாமணி ,பாரதம்
- இலம்பகம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
சீவக சிந்தாமணி
- படலம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
கந்தபுராணம் ,கம்பராமாயணம்
- காண்டம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
சிலப்பதிகாரம் கம்பராமாயணம்
- வடமொழியில் எந்த நூலை தழுவி தமிழில் தண்டியலங்காரம் என்ற அணி இலக்கண நூல் எழுதப்பட்டது?
காவியதரிசம்
- வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றினில் ஒன்றினை தொடக்கத்தில் பெற்று வருவது எது?
பெருங்காப்பியம்
- அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பொருள்களும் அமைந்திருப்பது ?
பெருங்காப்பியம்
- பெருங் காப்பியத்தில் எத்தனை உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்?
18 உறுப்புகள்
- பெருங்காப்பிய அமைப்பு முறையில் உட்பிரிவுகள் எந்த பெயர்களில் ஒன்றை பெற்றிருத்தல் வேண்டும்?
சருக்கம், இலம்பகம் ,பரிச்சேதம்
- பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதி பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப் பெற்று விளங்கும் காப்பியமாக எந்த நூலை குறிப்பிடுவர்?
சீவகசிந்தாமணி
- அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ,இரண்டோ குறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும் ?
சிறுகாப்பியம்
- காப்பியத்தின் பண்பாக பாவிகம் என்பதை எந்த நூல் குறிக்கின்றது?
தண்டியலங்காரம்
- காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படை கருத்து எவ்வாறு அழைக்கப்படும் ?
பாவிகம்
- “பிறனில் விழைவோர் கிளையோடுங் கெடுப்ப” என்பது எந்த நூலினுடைய பாவிகம்?
கம்பராமாயணம்
- “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ,உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் “என்பது எந்த நூலினுடைய பாவிகம் ?
சிலப்பதிகாரம்
- அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையான எந்த நூல் முத்தகம்,குளகம்,தொகைநிலை,தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளை கூறுகிறது?
தண்டியலங்காரம்
- தண்டியலங்காரம் கூறும் செய்யுள் வகைகளுள் எது காப்பியத்தை குறிக்கிறது ?
தொடர்நிலை
- ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையை குறிக்கும் சொல் எது?
தொடர்நிலை
- தொடர்நிலை எத்தனை வகைப்படும்?
இரண்டு :பொருள் தொடர்நிலை, சொல் தொடர் நிலை
- சிலப்பதிகாரம் கம்பராமாயணம் எந்த தொடர் நிலையைக் கொண்டுள்ளது?
பொருள் தொடர்நிலை
- அந்தாதி இலக்கியங்கள் என்ன தொடர் நிலையைக் கொண்டுள்ளது?
சொல் தொடர்நிலை
- விருத்தம் என்னும் ஒரே வகை செய்யுளில் அமைந்த நூல்கள் என்னென்ன?
சீவகசிந்தாமணி கம்பராமாயணம்
- பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகை செய்யுள்களில் அமைந்தது எது?
சிலப்பதிகாரம்
- இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்கள் சிலவற்றை பின்பற்றி இயற்றப்பட்டது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குறுங்காப்பியம் அல்லது குறுங்காவியம்
- பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு நூல்களை எழுதியவர் யார்?
பாரதியார்
- பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இரண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,வீரத்தாய், புரட்சிக்கவி ஆகிய நூல்களை எழுதியவர் ?
பாரதிதாசன்
- மருமக்கள் வழி மான்மியம் எனும் நூலை எழுதியவர்?
கவிமணி
- ஆட்டனத்தி ஆதிமந்தி மாங்கனி இயேசு காவியம் ஆகிய நூல்களை எழுதியவர் ?
கண்ணதாசன்
- பாரத சக்தி மகா காவியம் எனும் நூலை எழுதியவர் யார் ?
கவியோகி சுத்தானந்த பாரதியார்
- இராவண காவியம் எனும் நூலை எழுதியவர் யார்?
புலவர் குழந்தை
- தொன்மம் என்பதன் பொருள் என்ன?
பழங்கதை, புராணம்
- தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளில் ஒன்று?
தொன்மை
- கடவுளர்கள், தேவர்கள் மக்கள் விலங்குகள் ஆகிய பல்வகை உயிரினங்களையும் ஒருங்கிணைத்து படித்தால் நம்ப முடியாதது போல் தோன்றுகின்ற செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு இயங்குகின்ற பழமையான கதைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
தொன்மம்
- ராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து புதுமைப்பித்தன் என்ன கதையை எழுதினார்?
சாபவிமோசனம்,அகலிகை
- திருவிளையாடற்புராணத்தில் சிவன் நக்கீரனை கொண்டு அழகிரிசாமி என்ன சிறுகதைகளைப் படைத்துள்ளார் ?
விட்டகுறை, வெந்தழலால் வேகாது
- தொன்மங்களைக் கொண்டு பத்மவியூகம் எனும் நூலை எழுதியவர் யார் ?
ஜெயமோகன்
- தொன்மங்களைக் கொண்டு அரவாண் எனும் நூலை எழுதியவர் யார் ?
எஸ்.ராமகிருஷ்ணன்
- கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் குறியீடு என்ற உத்தி ஆங்கிலத்தில் எவ்வாறு ஆளப்படுகிறது?
Symbol
- Symbol என்பதற்கு பொருள் என்ன?
ஒன்று சேர்
- குறியீட்டால் பொருளை உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குறியீட்டியம் (Symbolism)
- குறியீட்டியம் கோட்பாட்டை விளக்கி வளர்த்தவர்கள் யார்?
பொதலர்,ரைம்போ,வெர்லேன்,மல்லார்மே
- சங்க இலக்கியத்தில் அகத்திணை மாந்தர்களில் உள்ளத்து உணர்வுகளை குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உள்ளுறை உவமம்
- தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப்பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிடுபவர் யார்?
ஹார்ட்
- குறியீட்டின் அடிப்படை எது?
உவமேயத்தை கேட்போர் ஊகித்துக் கொள்ளுமாறு விட்டு உண்மை மட்டும் கூறுவது உள்ளுறை உவமத்தின் அடிப்படை அதுவே குறியீட்டின் அடிப்படையாகும்