DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “இன்பம் பொலிகின்ற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் ” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
- நாமக்கல் கவிஞருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
காந்தியக் கவிஞர்
- தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார் ?
நாமக்கல் கவிஞர்
- நாமக்கல் கவிஞர் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி
- தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
தொல்காப்பியம்
- தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
தொல்காப்பியர்
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்?
தொல்காப்பியம்
- தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
மூன்று : எழுத்திலக்கணம் ,சொல்லிலக்கணம் ,பொருளிலக்கணம்
- தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?
ஒன்பது இயல்கள்
- வாயினால் பேசுவதும் கேட்பதும் மொழியின் எந்த நிலை?
முதல் நிலை
- எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் எத்தனையாவது நிலை?
இரண்டாம் நிலை
- எந்த மொழியானது உடனடி பயன்பாட்டுக்கு உரியது?
ஒலிவடிவையுடைய பேச்சுமொழி
- எந்த மொழியானது நீண்டகால பயன்பாட்டிற்கு உரியது?
வரிவடிவமுடைய எழுத்து மொழி
- மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?
பேச்சு மொழி
- “பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் பறிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும் இவையே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது ,இணைக்கப்படுவது கனவு காணப்படுவது ஆகியனவும் மொழியே ஆகும் எனக் கூறியவர்?
மு. வரதராசனார்
- “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” எனக் கூறும் நூல் எது?
நன்னூல்
- மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வட்டாரமொழி
- மூலமொழியில் இருந்து பிரிந்து உருவாகும் புதிய மொழி எவ்வாறு அழைக்கப்படும் ?
கிளைமொழி
- பேச்சு மொழியை என்ன வழக்கு என்று அழைப்பர்?
உலக வழக்கு
- எழுத்து மொழியை என்ன வழக்கு என்று கூறுவர்?
இலக்கிய வழக்கு
- பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
இரட்டை வழக்கு மொழி
- பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தொல்காப்பியர் எவ்வாறு அழைத்துள்ளார்?
உலக வழக்கு மற்றும் செய்யுள் வழக்கு
- தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உள்ளதால் தமிழ் எவ்வாறு அழைக்கப்படும்?
இரட்டை வழக்கு மொழி
- “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்” எனக்கூறியவர்?
பாவேந்தர் பாரதிதாசன்
- “செந்தமிழை செழுந்தமிழாக செய்வதுவும் வேண்டும்” எனக் கூறியவர்?
பாவேந்தர் பாரதிதாசன்
இயல் 02
- “நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி..” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
வாணிதாசன்
- ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
தொடுவானம்
- தமிழகத்தின் வோர்ட்ஸ்மித் புகழப்படுபவர் யார்?
கவிஞர் வாணிதாசன்
- கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
அரங்கசாமி என்ற எத்திராசலு
- கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர்?
பாரதிதாசன்
- கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்?
தமிழ் தெலுங்கு ஆங்கிலம் பிரெஞ்சு
- கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?
கவிஞரேறு ,பாவலர்மணி
- கவிஞர் வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு என்ன விருது வழங்கி கௌரவப்படுத்தியது?
செவாலியர் விருது
- வாணிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
தமிழச்சி ,கொடிமுல்லை, தொடுவானம் ,எழிலோவியம், குழந்தை இலக்கியம்
- “கார்த்திகை தீபமென காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடீ- கிளியே பார்வை குளிருமடீ” இவ்வரிகளை எழுதியவர் யார்?
சுரதா
- சுரதாவின் இயற்பெயர் என்ன?
இராசகோபாலன்
- சுரதா பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை என்னவாக மாற்றிக் கொண்டார்?
சுப்புரத்தினதாசன்
- சுரதாவுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
உவமைக்கவிஞர்
- சுரதா இயற்றிய நூல்கள் என்னென்ன?
அமுதும் தேனும் ,தேன்மழை ,துறைமுகம், சுரதா கவிதைகள்
- இயற்கை எழில் எனும் கவிதை எந்த நூலில் உள்ளது?
தேன்மழை
- கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கி கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசை பாடல் வகையின் பெயர் என்ன?
கிளிக்கண்ணி
- காட்டை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன?
கா, கால் ,கான், கானகம், அடவி,அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு,பழவம்,முளரி,வல்லை,விடர், வியல்,வனம்,முதை,மிளை, இறும்பு,சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல்,பதுக்கை, கணையம்
- “வாய்ச்சொல்லில் வீரரடி கூட்டத்தில் கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடீ!- கிளியே” இவ்வரிகளை எழுதியவர்?
பாரதியார்
- தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது?
முண்டந்துறை புலிகள் காப்பகம்
- உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?
இரண்டு:ஆசிய யானை ,ஆப்பிரிக்க யானை
- ஆசிய யானைகளில் எந்த யானைக்கு மட்டும் தந்தம் உண்டு?
ஆண் யானை
- யானை நாள் ஒன்றுக்கு எத்தனை கிலோ மற்றும் தண்ணீரை உணவாக எடுத்துக் கொள்ளும் ?
250 கிலோ உணவு 65 லிட்டர் தண்ணீர்
- கரடி என்ன உணவு வகை விலங்கு?
அனைத்துண்ணி
- தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்
- நன்கு வளர்ந்த கரடி எத்தனை கிலோ வரை இருக்கும்?
160 கிலோ
- கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில் குட்டிகளை ஈனும்?
90 நாட்கள்
- உலகில் எத்தனை வகை சிங்கங்கள் உண்டு?
ஆசிய சிங்கம் ,ஆபிரிக்க சிங்கம்
- ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் எங்கு மட்டும் காணப்படுகிறது ?
குஜராத் மாநிலத்தில் ,கிர் சரணாலயம்
- இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர் யார்?
ஜாதவ் பயேங்
- ஜாதவ் பயேங் எந்த இடத்தைச் சார்ந்தவர்?
அசாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டம்
- ஜாதவ் பயேங் எந்த ஆற்றின் நடுவே 30 ஆண்டுகளில் ஒரு காட்டை உருவாக்கினார்?
பிரமபுத்திரா
- மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டும் எனில் மண்ணின் தன்மை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும் அதற்கு மண்புழுக்கள் மட்டுமின்றி சிவப்பு கட்ட எறும்புகளும் உதவும் என ஜாதவ் பயேங்கிற்கு ஆலோசனை கூறியவர் யார்?
ஜாதுநாத்
- எந்தப் பல்கலைக்கழகம் இந்திய வனமகன் எனும் பட்டத்தை ஜாதவ் பயேங் வழங்கியது?
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், 2012
- எந்த ஆண்டு இந்திய அரசு ஜாதவ் பயேங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது?
2015
- எந்த பல்கலைக்கழகம் ஜாதவ் பயேங்கிற்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது?
கவுகாத்தி பல்கலைக்கழகம்
- ஜாதவ் பயேங்கைப் பற்றி எந்த இதழில் செய்துவந்தது?
டைம்ஸ் ஆப் இந்தியா
இயல் 03
- “வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- உருத்திரங்கண்ணனார் எந்த ஊரில் வாழ்ந்தவர்?
கடியலூர்
- உருத்திரங்கண்ணனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்?
பெரும்பாணாற்றுப்படை ,பட்டினப்பாலை
- பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
தொண்டைமான் இளந்திரையன்
- வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர் பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற பிறருக்கு வழிகாட்டுவதாக பாடப்படுவது என்ன இலக்கிய வகை?
ஆற்றுப்படை இலக்கியம்
- பத்துப்பாட்டு நூல்கள் என்னென்ன?
திருமுருகாற்றுப்படை ,மதுரைக் காஞ்சி ,பொருநராற்றுப்படை ,நெடுநல்வாடை ,பெரும்பாணாற்றுப்படை ,குறிஞ்சிப்பாட்டு ,சிறுபாணாற்றுப்படை பட்டினப்பாலை , முல்லைப்பாட்டு,மலைபடுகடாம்
- ” உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
மருதனிளநாகனார்
- கலித்தொகையின் மருதத் திணையில் உள்ள எத்தனை பாடல்களை மருதனிளநாகனார் பாடியுள்ளார்?
35 பாடல்கள்
- அகநானுறு எத்தனை பாடல்களைக் கொண்டது?
400
- அகநானூற்றின் வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
நெடுந்தொகை
- எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன?
நற்றிணை ,குறுந்தொகை, பரிபாடல் ,கலித்தொகை, ஐங்குறுநூறு ,அகநானூறு, பதிற்றுப்பத்து ,புறநானூறு
- முந்நீர் வழக்கம் என்னும் கடற் பயணத்தை பற்றி குறிப்பிடும் நூல் எது?
தொல்காப்பியம்
- புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை எந்த நூல் விரிவாக விளக்குகிறது?
பட்டினப்பாலை
- ” உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
- “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருவணிகம் வங்கம் “இவ்வரிகழ் இடம்பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து
- எந்த நிகண்டு நூலில் பல வகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
சேந்தன் திவாகரம்
- எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து எடுத்துவிட்டு மிதக் பயன்படுத்தப்பட்டது எவ்வாறு அழைக்தப்பட்டது?
தோணிகள்
- பழங்கால தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
நியூசிலாந்து , வெலிங்டன் அருங்காட்சியகம்
- கப்பல் கட்டும் கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
கம்மியர்
- “கலஞ்செய் கம்மியர் வருக என கூஇய்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
மணிமேகலை
- கப்பல்களின் நீர்மட்ட வைப்பிற்கு என்ன மரங்களை பயன்படுத்தினர்?
வேம்பு ,இலுப்பை, புன்னை, நாவல்
- கப்பல்களின் பக்கங்களுக்கு என்ன மரங்களை பயன்படுத்தினார்?
தேக்கு ,வெண்தேக்கு
- மரத்தின் வெட்டப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வெட்டுவாய்
- இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கண்ணடை
- கப்பல்களை என்ன நீட்டலவையில் கணக்கிட்டனர்?
தச்சுமுழம்
- கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைக்க கப்பலின் அடிப்பகுதியில் எவற்றை அரைத்து பூசினர்?
சுண்ணாம்பும் சணலையும் அரைத்து எண்ணெய் கலந்து பூசினர்
- சுண்ணாம்பும் சணலையும் அரைத்து பூசும் செயல்முறையை இத்தாலி நாட்டின் எந்தப் கடற் பயணி வியந்து பாராட்டியுள்ளார்?
மார்க்கோபோலோ
- இரும்பு அணிகளுக்கு பதிலாக மரத்திலான ஆணிகள் பயன்படுத்தப்பட்டன இந்த ஆணிகளுக்கு பெயர் என்ன?
தொகுதி
- “ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும் ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறிய ஆங்கிலேயர் யார்?
வாக்கர்
- பாய்மரக் கப்பலின் பாய் கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?
பரிபாடல்
- கப்பலின் உறுப்புகள் என்னென்ன?
எரா,பருமல்,வங்கு, கூம்பு ,பாய்மரம் ,சுக்கான் ,நங்கூரம்
- கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரா
- கப்பலின் குறுக்கு மரத்தை எவ்வாறு அழைப்பர்?
பருமல்
- கப்பலை செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி என்ன பெயர்?
சுக்கான்
- கப்பலை நிலையாக ஒரு இடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பின் பெயர் என்ன?
நங்கூரம்
- சமுக்கு எனும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?
கப்பல் சாஸ்திரம்
- கப்பல் செலுத்துபவரை எவ்வாறு அழைப்பர்?
மாலுமி, மீகாமன் ,நீகான், கப்பலோட்டி
- “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக” இவ்வரிகளை இயற்றியவர் &நூல் எது?
வெண்ணிக்குயத்தியார் ,புறநானூறு
- கலங்கரை விளக்கம் என்றால் பொருள் என்ன?
கப்பலை அழைக்கும் விளக்கு
- “பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது எனவே கப்பலில் வரும் பொருட்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்” எனும் செய்தியை கூறும் நூல் எது?
புறநானூறு
- “கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரைசேர்க்குந்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என அழைக்கப்படுபவர் யார்?
ஜுல்ஸ் வெர்ன்
- ஜுல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரான்ஸ் நாடு
- ஜுல்ஸ் வெர்னின் வேறு புதினங்கள் என்னென்ன ?
என்பது நாளில் உலகத்தை சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் ,ஆழ்கடலின் அடியில்