DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
இயல் 07
- “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ என வினவுதி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- சோழ மன்னன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்?
காவற்பெண்டு
- காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
புறநானூறு
- தேசிங்கு யாருடைய மகன்?
செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சொரூப சிங்
- டில்லி பாதுஷாவுக்கு சொந்தமான யாராலும் அடக்க முடியாத எந்த குதிரையை தேசிங்கு அடக்கினார்?
நீலவேணி
- தேசிங்கு ராஜாவை கப்பம் கட்டுமாறு ஆற்காடு நவாப் யாரை தூது அனுப்பினார்?
தோன்றமல்லன்
- “வீரப் பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேக பேச்சால் எத்தனையோ அறாவாளிகளையும் உண்டாக்கியவர்.உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி” என முத்துராமலிங்கத்தை பாராட்டியவர் யார்?
பெரியார்
- காமராஜர் விருதுநகரில் நடைபெற்ற தேர்தலில் எந்த ஆண்டு போட்டியிட்டார் ?
1936
- முத்துராமலிங்க தனது முதல் உரையை எங்கு ஆற்றினார்?
விவேகானந்தர் வாசகசாலை ,சாயல்குடி (விவேகானந்தரின் பெருமை என்ற தலைப்பில் மூன்று மணி நேரம்)
- “இதுபோன்ற ஒரு பேச்சு இதுவரை நான் கேட்டதில்லை முத்துராமலிங்கரின் வீரமிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்” என பாராட்டியவர் யார்?
காமராஜர்
- பசும்பொன் முத்துராமலிங்கர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்?
1937, 1946
- பசும்பொன் முத்துராமலிங்கர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்?
1952,1957
- எந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும் தேர்தலில் வெற்றி பெற்றார் ?
1962
- முத்துராமலிங்கர் எந்த பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் உரையாற்றினார் ?
காசி ,இந்துப் பல்கலைக்கழகம்
- முத்துராமலிங்கர் இன் ஆங்கில உரையை கேட்டு யார் “ஆங்கிலம் உலகை ஆள்கிறது, நம் முத்துராமலிங்கர் 3 மணிநேரம் ஆங்கிலத்தை அடக்கி ஆண்டார் “என பாராட்டினார்?
சர் சிபி இராமசாமி
- ஆங்கில ஆட்சியில் மக்களை அடிமைப்படுத்த குற்றப்பரம்பரைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1914
- என்ன ஆண்டு குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது?
1948
- ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்ட நபர்கள் யார்?
பாலகங்காதர திலகர் மற்றும் முத்துராமலிங்கர்
- “இன்று அடிமை இந்தியனாக கொடி ஏற்றுகிறேன். நாளை தாயின்மணிக்கொடியைச் சுதந்திர இந்தியாவில் ஏற்றும் காலம் எதுவோ என எண்ணிக் கண்ணீர் விட்டேன்” எனக் கூறியவர் யார்?
முத்துராமலிங்கர்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்கு தடை இருந்தது அந்தத் தடையை எதிர்த்து கோவில் நுழைவு போராட்டம் நடத்தியவர் யார்?
மதுரை வைத்தியநாதர் (முத்துராமலிங்கர் அவருக்குத் துணையாக நின்றார்)
- முத்துராமலிங்கர் தொடங்கி இதழ் என்ன?
நேதாஜி
- நேதாஜி இதழின் தொடக்க விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் எப்போது நடைபெற்றது?
ஜனவரி 23,1949
- முத்துராமலிங்கரின் சிறப்பு பெயர்கள் என்ன?
தேசியம் காத்த செம்மல், வேதாந்த பாஸ்கர்,பிரணவ கேசரி,சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை
- ” தென்னாட்டு சிங்கம் என்று முத்துராமலிங்கரை சொல்கிறார்களே அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தை பார்த்தவுடனேயே நினைத்தேன் அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது” என பாராட்டியவர் யார்?
அறிஞர் அண்ணா
- “முத்துராமலிங்கர் பேச்சு உள்ளத்திலிருந்து வெளிவருகிறது உதடுகளிலிருந்து அல்ல; உள்ளதால் எதிலும் பற்றற்று உண்மையென பட்டதை மறைக்காமல் அப்படியே பேசி விடுவது அவர் வழக்கம்” என பாராட்டியவர் யார்?
மூதறிஞர் ராஜாஜி
- பசும்பொன் முத்துராமலிங்கர் இம் மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் எவ்வளவு?
20,075
- முத்துராமலிங்கர் சுதந்திர போராட்டத்திற்காக சிறையில் கழித்த நாட்கள் எவ்வளவு?
4000
- சுதேச கப்பல் கம்பெனியின் தலைவராக விளங்கியவர் யார்?
பாண்டித்துரை
- சுதேச கப்பல் கம்பெனியின் செயலாளராக பணிபுரிந்தவர் யார்?
வ.உ. சிதம்பரனார்
- “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்று கூறியவர் யார்?
பாலகங்காதர திலகர்
- “வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என பாடியவர் யார்?
பாரதியார்
- “சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும் புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” எனக் கூறியவர் யார்?
சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹே
- “தொல்காப்பியத்தை படித்து படித்து என் தொல்லை எல்லாம் மறந்தேன் இன்னிலையை கற்று என் இன்னல்கள் எல்லாம் வென்றேன் ” எனக் கூறியவர் யார்?
வ.உ. சிதம்பரனார்
- வ உ சிதம்பரனார் ஆங்கில மொழியில் ஆலன் இயற்றிய நூலை தமிழில் என்ன பெயரில் மொழிபெயர்த்தார்?
மனம் போல் வாழ்வு
- வ உ சிதம்பரனார் இயற்றிய நூல்கள் என்னென்ன?
மெய்யறிவு, மெய்யறம்
- சொல்லின் செல்வர் என போற்றப்படுபவர் யார்?
ரா.பி .சேதுபிள்ளை
- செய்யுளுக்கே உரிய எதுகை மோனை என்பவற்றை உரைநடைக்கு கொண்டு வந்தவர் யார்?
ரா பி சேதுப்பிள்ளை
- ரா பி சேதுப்பிள்ளை இயற்றிய எந்த நூல் இந்திய அரசின் சாகித்திய அகடமி விருது பெற்ற முதல் நூலாகும்?
தமிழ் இன்பம்
- ரா.பி சேதுப்பிள்ளை இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
ஆற்றங்கரையினிலே ,கடற்கரையிலே ,தமிழ் விருந்து ,தமிழகம் ஊரும் பேரும் ,மேடைப்பேச்சு
இயல் 08
- “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பொய்கை ஆழ்வார்
- பொய்கையாழ்வார் எங்கு பிறந்தார்?
காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா
- நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பொய்கை ஆழ்வார் பாடியது?
முதல் திருவந்தாதி
- “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா” இவ்வரிகளை இயற்றியவர்?
பூதத்தாழ்வார்
- பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம்
- பூதத்தாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எதை இயற்றியுள்ளார்?
இரண்டாம் திருவந்தாதி
- ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ சொல்லோ அடுத்துவரும் பாடலுக்கு முதலாக அமைவதற்கு என்ன பெயர்?
அந்தாதி
- திருமாலைப் போற்றி பாடியவர்கள் யார்?
பன்னிரு ஆழ்வார்கள்
- பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நாலாயிர திவ்ய பிரபந்தம்
- நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
நாதமுனி
- பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுபவர்கள் யார்?
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
- ” இன்செல் விளைநிலனா ஈதலே வித்தாக” இவ்வரிகளை இயற்றியவர் ?
முனைப்பாடியார்
- “பைங்கூழ் சிறுகாலை செய்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
அறநெறிச்சாரம்
- அறநெறிச்சாரம் எனும் நூலை இயற்றியவர் யார்?
முனைப்பாடியார்
- முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
திருமுனைப்பாடி
- முனைப்பாடியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?
சமணம்
- முனைப்பாடியாரின் காலம் என்ன?
பதின்மூன்றாம் நூற்றாண்டு
- அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
225 பாடல்கள்
- “செல்வத்தை தனியே அனுபவித்தல் இழத்தலுக்கு சமம் “எனக் கூறும் நூல்?
புறநானூறு
- தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம் ,ஆலயங்கள் சமுதாய மையங்கள்
- தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்னென்ன இதழ்களை நடத்தியுள்ளார்?
அருளோசை அறிக அறிவியல்
- ஜென் என்ற ஜப்பானிய மொழி சொல்லுக்கு என்ன பொருள்?
தியானம் செய்
இயல் 09
- “இமைக்கும் நொடியில் ஆயிரம் போட்டி எத்தனை வீண்கனவு-தினம் இவை இல்லாது அமைதிகள் செய்தால் இதயம் மலையளவு” இவ்வரிகளை எழுதியவர்?
கண்ணதாசன்
- கண்ணதாசனின் இயற்பெயர்?
முத்தையா
- கண்ணதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
கவியரசு
- சே.பிருந்தா இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன?
மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்கு சொன்ன கதை
- “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்துகொள்ள மாட்டேன்” என கூறியவர் யார்?
காயிதே மில்லத்
- கண்ணியமிகு காயிதே மில்லத் இயற்பெயர் என்ன?
முகமது இஸ்மாயில்
- இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எந்த ஆண்டு போர் மூண்டது?
1962
- காயிதேமில்லத் என்பது என்ன மொழிச் சொல்?
அரபு சொல்
- காயிதேமில்லத் என்னும் அரபிச் சொல்லுக்கு பொருள் என்ன?
சமுதாய வழிகாட்டி
- “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராக காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்” எனக் கூறியவர் யார்?
அறிஞர் அண்ணா
- “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர்” என காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயிலை பாராட்டியவர் யார்?
தந்தை பெரியார்
- காயிதே மில்லத் எந்த ஆண்டு சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்?
1946 முதல் 1952 வரை
- காயிதேமில்லத் எந்த கல்லூரி தொடங்க காரணமாக இருந்துள்ளார்?
திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி ,கேரளாவில் ஃபரூக் கல்லூரி
- பாவண்ணன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
வேர்கள் தொலைவில் இருக்கின்றன ,நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம்
- பாவண்ணன் எந்த மொழியிலிருந்து பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்?
கன்னடம்
- பயணம் என்னும் சிறுகதை எந்த நூலில் உள்ளது?
பிரயாணம் NEW EDITION UPDATES
- “வான்புகழ் கொண்ட குறளோடு அகம்புறமும் செம்பொருள் கண்ட தமிழ்ச் சங்க இலக்கிய பெருஞ்செல்வம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
உடுமலை நாராயணகவி
- பகுத்தறிவு கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
உடுமலை நாராயணகவி
- ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ் என்ன?
கொல்லிப் பாவை
- ராஜமார்த்தாண்டன் எந்த நூலுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்?
ராஜமார்த்தாண்டன் கவிதைகள்
- சிறந்த தமிழ் கவிதைகள் தொகுத்து என்ன தலைப்பில் ராஜமார்த்தாண்டன் நூலாக்கியுள்ளார்?
கொங்குதேர் வாழ்க்கை
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலை எழுதியவர் யார்?
ராஜமார்த்தாண்டன்
- வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் நூலை தொகுத்தவர் யார்?
நா .வானமாமலை