DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- ” பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக!” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
தகடூர் யாத்திரை
- தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தர்மபுரி
- பஞ்சம் ஏற்படும் காலங்களில் மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று உப்பில்லா சோற்றை வாங்கி பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர் .இதனை கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை இந்நிகழ்வுக்கு என்ன பெயர்?
மழைச்சோற்று நோன்பு
- பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?
அ.கௌரன்
- “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு”எனக் கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
- மூவேந்தர்களின் எந்த மரபினர் பழமையானவர்கள்?
சேரர்கள்
- “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
தொல்காப்பியம்
- சேரர்களின் நாடு என்ன நாடாக அறியப்பட்டது?
குடநாடு
- சேரர்களின் தலைநகராக விளங்கிய நகரம் எது?
வஞ்சி /கருவூர்
- சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்களாக விளங்கிய நகரங்கள் எவை?
தொண்டி, முசிறி ,காந்தளூர்
- சேரர்களின் கொடி மற்றும் பூ எது?
வில்கொடி ,பனம் பூ
- பண்டைய சேர நாடு என்பது இன்றைய எந்தெந்த பகுதிகளை இணைத்து வழங்கியதாக கூறுவார்கள்?
கேரளப்பகுதிகள், தமிழ்நாட்டின் சேலம் ,கோவை மாவட்டங்கள்
- எந்த நூலில் கொங்கு மண்டலம் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி மலை ,மேற்கே வெள்ளி மலை, கிழக்கே மதிற்க்கரை என நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக விளங்கியதாக கூறுகிறது?
கொங்கு மண்டல சதகம்
- கொங்கு மண்டல சதகம் எனும் நூலை இயற்றியவர் யார்?
கார்மேக கவிஞர்
- கொங்கு மண்டலத்தின் இன்றைய பகுதிகள் என்னென்ன?
நீலகிரி, கோயம்புத்தூர் ,திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் சேலம்,கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது
- கொங்கு நாட்டுப் பகுதியை என்ன ஆறுகள் வளம் செழிக்க செய்தன?
பவானி ,காவிரி ,நொய்யல் ,ஆண்பொருநை என அழைக்கப்படும் அமராவதி
- கடம்பர் இன கடற் கொள்ளையர்களை அடக்கிய மன்னர்கள் யார்?
சேரமன்னர்கள்
- “களம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- “நெல்லும் உப்பும் நேரே ஊரீர் ” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
அகநானூறு
- தேயிலை தொழிற்சாலைகள் ,புகைப்படச் சுருள் தயாரிப்பு தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை ,தைலமரம் எண்ணெய் தொழிற்சாலை முதலியவை எந்த பகுதியில் உள்ளன?
நீலகிரி
- பஞ்சாலைகள், நூற்பாலைகள் ,மின்சார பொருட்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
கோயம்புத்தூர்
- தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படுவது எது?
திண்டுக்கல்
- சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவை?
திண்டுக்கல்
- பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது எது?
ஈரோடு
- தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம் எது?
ஈரோடு
- பின்னலாடை நகரம் என அழைக்கப்படுவது எது?
திருப்பூர்
- இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா எது?
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா
- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா எங்கு உள்ளது?
திருப்பூர்
- முட்டைக் கோழி வளர்ப்பிலும் ,முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதன்மையான இடம் எது?
நாமக்கல்
- மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட நகரம் எது?
சேலம்
- இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது?
சேலம்
- தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது?
சேலம்
- ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது எது?
ஏற்காடு
- முத்து நகரம் என அழைக்கப்படுவது?
தூத்துக்குடி
- குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது?
சிவகாசி
- தூங்கா நகரம் என அழைக்கப்படுவது?
மதுரை
- தீப நகரம் என அழைக்கப்படுவது?
திருவண்ணாமலை
- வஞ்சிமாநகரம் என அழைக்கப்படும் ஊர் எது?
கரூர்
- கரூரை தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டுள்ளவர் யார்?
கிரேக்க அறிஞர் தாலமி
- பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் ஊர் எது?
கரூர்
- சீரங்கராயன் சிவக்குமார் எங்கு பிறந்தார்?
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடி
- சீரங்கராயன் சிவகுமார் பெற்ற விருதுகள் என்னென்ன? சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருது
- கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
கன்னிவாடி , குணச்சித்திரங்கள், உப்புக்கடலை குடிக்கும் பூனை