TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே .” இவ்வரிகளை உடைய நூல் எது?

திருமந்திரம்  

  1. “படமாடக் கோயில் பகவற்குஒன்று, ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

திருமூலர்

  1. திருமூலர் இயற்றிய நூல் என்ன?

திருமந்திரம்

  1. திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்ட நூல்?

3000

  1. திருமந்திரம் வேறு பெயர் என்ன?

 தமிழ் மூவாயிரம்

  1. திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

பத்தாம் திருமுறை

  1. “கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞான ஒளி பராபரமே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

குணங்குடி மஸ்தான் சாகிபு

  1. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?

சுல்தான் அப்துல் காதர்

  1. மஸ்தான் சாகிபு எந்த மலைகளில் தவம் இயற்றிக் ஞானம் பெற்றார்?

சதுரகிரி ,புறாமலை, நாகமலை

  1. குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நூல்கள் என்னென்ன?

 எக்காலக் கண்ணி ,மனோன்மணிக்கண்ணி ,நந்தீஸ்வர கன்னி,குணங்குடியார் பாடற்கோவை

  1. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

அயோத்திதாச பண்டிதர்

  1. அயோத்திதாச பண்டிதர் எப்போது எங்கு பிறந்தார்?

மே 20, 1845 சென்னை

  1. அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் என்ன?

காத்தவராயன்

  1. காத்தவராயன் யாரிடம் கல்வியும் சித்த மருத்துவமும் பயின்றார்?

அயோத்திதாச பண்டிதர்

  1. காத்தவராயன் யாருடைய பெயரை தன்னுடைய பெயராக மாற்றிக்கொண்டார்?

தனது ஆசிரியர் அயோத்திதாச பண்டிதர்

  1. அயோத்திதாசர் என்னென்ன மொழிகளைக் கற்றிருந்தார்?

தமிழ், பாலி ,வடமொழி, ஆங்கிலம்

  1. அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய வார இதழ் என்ன?

ஒரு பைசா தமிழன்

  1. அயோத்திதாச பண்டிதர் எப்போது ஒரு பைசா தமிழன் எனும் வார இதழைத் தொடங்கினார்?

1907 சென்னையில்

  1. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் என்னென்ன?

போகர் 700 ,அகத்தியர் 200, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்

  1. “என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்த கருத்துக்களுக்கு முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசர் ,தங்கவயல் அப்பாதுரையார் ஆவார்கள்” எனக் கூறியவர் யார்?

தந்தை பெரியார்

  1. “வானம் பொய்ப்பதற்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே; ஞானிகள் இல்லாமைக்கு காரணம் நீதியும் நேர்மையும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையே ஆகும். அறிவாளிகள் இல்லாமைக்கு காரணம் ஆட்சித்திறனும் அன்பும் உடைய அரசர்கள் இல்லாமையே ” எனக் கூறியவர் யார்?

அயோத்திதாச பண்டிதர்

  1. அயோத்திதாச பண்டிதர் எழுதிய நூல்கள் என்னென்ன?

புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம் ,விவாக விளக்கம் ,புத்தர் சரித்திரப்பா மற்றும் திருவள்ளுவரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்கள்

  1. அயோத்திதாச பண்டிதர் பெயரில் மருத்துவமனை எங்கு உள்ளது?

 சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனை

  1. திராவிட மகாஜன சங்கம் எனும் அமைப்பை அயோத்திதாசர் எப்போது தொடங்கினார்?

 1892

  1. “விடுதலை என்பது ஒரு ஆட்சிமாற்றம்  மட்டுமன்று அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்” எனக் கூறியவர் யார்?

அயோத்திதாசர்

  1. “சுயராஜ்ஜியத்த் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டும் இருக்கக்கூடாது மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய நாடு முன்னேற முடியாது எனக் கூறியவர் யார்?

அயோத்திதாசர்

  1. அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணய பெயர்கள் என்னென்ன? 

அணா,சல்லி,துட்டு

  1. எத்தனை அணா கொண்டது ஒரு ரூபாய்?

16 அணா

  1. சிறுகதை மன்னன் என போற்றப்படுபவர் யார்?

புதுமைப்பித்தன்

  1. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?

சோ விருத்தாசலம்

  1. புதுமைப்பித்தன் இயற்றிய நூல்கள் என்னென்ன?

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ,சாபவிமோசனம் ,பொன்னகரம் ,ஒரு நாள் கழிந்தது


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page