DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகளை எழுதியவர் யார்?
மகாகவி பாரதியார்
- “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
தமிழ்மொழி வாழ்த்து , பாரதியார் கவிதைகள் தொகுப்பு
- சி.சுப்ரமணிய பாரதியார் நடத்திய இதழ்கள் என்னென்ன?
இந்தியா, விஜயா
- பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் என்னென்ன? சந்திரிகையின் கதை, தராசு
- பாரதியாரை பாரதிதாசன் எவ்வாறு புகழ்ந்துள்ளார்?
சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ ,புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன்
- “முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே எழில்மகவே எந்தம் உயிர்” என செந்தமிழ் அந்தாதியை பாடியவர் யார்?
து.அரங்கன்
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
தொல்காப்பியம்
- தொல்காப்பியத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
தொல்காப்பியர்
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்?
தொல்காப்பியம்
- தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
மூன்று: எழுத்து, சொல், பொருள்
- தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?
9 இயல்கள்
- புலியின் இளமைப் பெயர் என்ன?
பறழ்
- சிங்கத்தின் இளமைப் பெயர் என்ன?
குருளை
- யானையின் இளமை பெயர் என்ன?
கன்று
- பசுவின் இளமைப் பெயர் என்ன?
கன்று
- கரடியின் இளமைப் பெயர் என்ன?
குட்டி
- புலியின் ஒலிமரபு என்ன?
உறுமும்
- சிங்கத்தின் ஒலிமரபு என்ன?
முழங்கும்
- யானையின் ஒலிமரபு என்ன?
பிளிரும்
- பசுவின் ஒலி மரபு என்ன?
கதறும்
- கரடியின் ஒளிமரபு என்ன?
கத்தும்
- தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவத்தைக் குறிப்பதாக அமைந்தது இவ்வரிவடிவம் எவ்வாறு அழைக்கப்படும்?
ஓவிய எழுத்து
- ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை எவ்வாறு அழைப்பர்?
ஒலி எழுத்து நிலை
- கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
கி.மு . மூன்றாம் நூற்றாண்டு
- செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
கி.பி ஏழாம் நூற்றாண்டு
- கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு முறை எவ்வாறு உள்ளது?
‘ஸ’ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது,மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை,எகர,ஒகர குறில் நெடில் வேறுபாடில்லை
- கல்வெட்டுகள்,செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
இரண்டுவகை: வட்டெழுத்து, தமிழெழுத்து
- வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வட்டெழுத்து
- சேர மண்டலம் ,பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எந்த நூற்றாண்டு காலத்தில் கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன?
8 நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை
- எந்த நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன?
11ம் நூற்றாண்டு
- பதினோராம் நூற்றாண்டு எந்த சோழனின் ஆட்சிக் காலமாகும்?
முதலாம் இராஜராஜ சோழன்
- கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கண்ணெழுத்துக்கள்
- “கண்ணெழுத்து படுத்த எண்ணுப் பல்பொதி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம்
- எந்த கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் எழுதப்பட்டுள்ளன?
அரச்சலூர் கல்வெட்டு
- எகர ஒகர குறில் எழுத்துகளை குறிக்க என்ன வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது? எழுத்துக்களின் மேல் புள்ளி வைப்பது
- அகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துகளை நெடில் எழுத்தாக கருத என்ன வழக்கம் பின்பற்றப்பட்டது?
குறில் எழுத்துக்களுக்கு இடதுபக்க புள்ளி இடப்படுவது
- ஐகார எழுத்துக்களை குறிப்பிட என்ன பழக்கம் பின்பற்றப்பட்டது?
எழுத்துக்களின் முன் இரட்டை புள்ளி
- எகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துக்களை ஔகார எழுத்துக்களாக கருதப்பட பின்பற்றப்பட்ட விளக்கம் என்ன?
குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளிகள் இடப்படுவது
- மகர எழுத்தை குறிப்பிட என்ன விளக்கம் பின்பற்றப்பட்டது?
பகர எழுத்தின் உள்ளே புள்ளி இடுவது
- தமிழ் எழுத்துக்களின் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர்?
வீரமாமுனிவர்
- எ என்னும் இடத்திற்கு கீழ் கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்கு சுழியிட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கியவர் யார்?
வீரமாமுனிவர்
- ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துக்களை குறிக்க இரட்டை கொம்பு ,இரட்டை கொம்பு டன் கால் சேர்த்து புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
வீரமாமுனிவர்
- யார் செய்த எழுத்து சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
தந்தை பெரியார்
- தமிழில் சொல் என்பதற்கு என்ன பொருள்?
நெல்
- எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று?
தொல்காப்பியர்
- மொழியை எத்தனை வகைப்படுத்துவர்?
மூன்று: ஓரெழுத்து மொழி ,ஈரெழுத்து மொழி ,இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி
- நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி எனக் கூறுபவர் யார்?
தொல்காப்பியர்
- குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல்லாவது இல்லை என்பதை குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே எனக் கூறுபவர் யார்?
தொல்காப்பியர்
- நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் எனக் கூறுபவர் யார்?
பவனந்தி முனிவர்
- நொ,து என்னும் உயிர்மெய் எழுத்துக்களும் பொருளுடைய ஓரெழுத்து மொழி ஆகும் எனக் கூறுபவர் யார்?
பவனந்தி முனிவர்
- அம்பு விரைந்து செல்வது போல சென்று உரிய கடமை புரிபவன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
ஏவலன்
- அம்புவிடும் கலையை எவ்வாறு அழைப்பர்?
ஏகலை
- அம்பு விடுவதில் வல்லவனை எவ்வாறு அழைப்பர்?
ஏகலைவன்
- ஏவுகின்ற அம்பைப் போல கூர்முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் என்ன?
எய்ப்பன்றி
- அம்பையை எயபவர் எவ்வாறு அழைக்கப்படுவர்?
எயினர்
- எயினரது மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர்?
எயினியர்
- செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்? இரா.இளங்குமரனார்
- இரா.இளங்குமரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம் ,தனித்தமிழ் இயக்கம், தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்
- இரா.இளங்குமரனார் தொகுத்த நூல் எது?
தேவநேயம்
- இரா இளங்குமரனார் எந்த ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் அமைத்துள்ளார்?
திருச்சிக்கு அருகில் உள்ள அல்லூர்