DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
குமரகுருபரர்
- “கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நீதிநெறி விளக்கம்
- குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
பதினேழாம் நூற்றாண்டு
- குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
கந்தர் கலிவெண்பா ,கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை ,மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் ,முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- “கல்வி கரையில கற்பவர் நாள் சில ” என கூறும் நூல் எது?
நாலடியார்
- “கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு ” என்பது யாருடைய பாடல் வரிகள்?
ஆலங்குடி சோமு
- ஆலங்குடி சோமு எங்கு பிறந்தார்?
சிவகங்கை மாவட்டம் ஆலங்குடி
- ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் என்ன விருது பெற்றார்?
கலைமாமணி
- “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல. அது மெய்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறையாகும்” எனக் கூறியவர்?
விஜயலட்சுமி பண்டிட்
- ஐநா அவையின் முதல் பெண் தலைவர் யார்?
விஜயலட்சுமி பண்டிட்
- “தமிழிலேயே கல்வி போதிக்க தமிழில் போதிய கலைகள் இல்லையே; சிறப்பான அறிவியல் கலைகள் இல்லையே என சிலர் கூக்குரலிடுகின்றனர்” எனக் கூறியவர் யார்?
திரு.வி.க
- இயற்கை ஓவியம் என அழைக்கப்படுவது?
பத்துப்பாட்டு
- இயற்கை இன்பக்கலம் என அழைக்கப்படுவது?
கலித்தொகை
- இயற்கை வாழ்வில்லம் என அழைக்கப்படுவது?
திருக்குறள்
- இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படுவது?
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
- இயற்கை தவம் என அழைக்கப்படுவது?
சிந்தாமணி
- இயற்கை பரிணாமம் என அழைக்கப்படுவது?
கம்பராமாயணம்
- இயற்கை அன்பு என அழைக்கப்படுவது?
பெரியபுராணம்
- இயற்கை இறையுறையுள் என அழைக்கப்படுவது எது?
தேவார திருவாசக வரிகள்
- “இயற்கை கழகத்தில் பயின்று பயின்று சங்கப்புலவர் இளங்கோ ,திருத்தக்கதேவர் ,திருஞானசம்மந்தர், ஆண்டாள் ,சேக்கிழார், கம்பர் ,பரஞ்சோதி முதலியோர் இயற்கை கோலத்தை எவ்வாறு எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கின்றனர் என ஆராயுங்கள்” எனக் கூறியவர் யார்?
திரு.வி.க
- “ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி ;ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி ;அது வளர்ச்சி வாயில் இவ்வரிகளை எழுதியவர் யார்?
குலோத்துங்கன்
- திரு வி க வின் இயற்பெயர் என்ன?
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்
- திரு வி க வின் சிறப்பு பெயர் என்ன?
தமிழ்தென்றல்
- திரு.வி.க இயற்றிய நூல்கள் என்னென்ன?
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ,பெண்ணின்பெருமை ,தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல் ,முருகன் அல்லது அழகு,இளமை விருந்து
- ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு எனும் நூலை எழுதியவர் யார்?
பி.ச. குப்புசாமி
- ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
பி.ச. குப்புசாமி