DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்” இவ்வரிகள் இயற்றியவர் யார்?
சுந்தரர்
- சுந்தரர் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
நம்பியாரூரர் ,தம்பிரான் தோழர்
- சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன?
ஏழாம் திருமுறை
- யார் இயற்றிய நூலை முதல்நூலாக கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்?
(திருத்தொண்டத்தொகை) சுந்தரர்
- யார் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் என அழைக்கப்படுகிறது?
திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர்
- தேவாரம் என்பதன் பொருள் என்ன?
இறைவனுக்கு சூட்டப்படும் மாலை அல்லது இனிய இசை பொருந்திய பாடல்கள்
- பதிகம் என்பது எத்தனை பாடல்களைக் கொண்டது?
பத்து பாடல்கள்
- “ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
கலித்தொகை
- கலித்தொகை என்ன பாவகையால் ஆன நூல்?
கலிப்பா
- கலித்தொகை எத்தனை பிரிவுகளை உடையது?
ஐந்து: குறிஞ்சிக்கலி ,முல்லைக்கலி, மருதக்கலி ,நெய்தல் கலி, பாலைக்கலி
- கலித்தொகையை தொகுத்தவர் யார்?
நல்லந்துவனார்
- மண் பானை செய்வதற்கு மணலை பக்குவப்படுத்த என்னென்ன கலக்க வேண்டும்?
மெல்லிய மணல் மற்றும் சாம்பல்
- பானை செய்ய பயன்படும் சக்கரத்திற்கு என்ன பெயர்?
திருவை
- எத்தனை வகை மூங்கில்கள் உண்டு?
மூன்று: கல் மூங்கில், மலை மூங்கில், கூட்டு மூங்கில்
- குழந்தைகளை படுக்க வைக்க பயன்படும் பாய் எது?
தடுக்கும் பாய்
- உட்கார்ந்து உண்ண உதவுவது என்ன பாய்?
பந்திப் பாய்
- உட்காரவும் படுக்கவும் உதவுது என்ன பாய்?
திண்ணை பாய்
- திருமணத்துக்கு பயன்படுத்துவது என்ன பாய்?
பட்டுப்பாய்
- இஸ்லாமிய தொழுகைக்கு பயன்படுத்துவது என்ன பாய்?
தொழுகை பாய்
- “கூம்பொடு மீப்பாய் களையாது “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
- பிரம்பின் தாவரவியல் பெயர் என்ன?
கலாமஸ் ரொடாங்
- பிரம்பின் கொடி வகை எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது?
அசாம் ,அந்தமான் ,மலேசியா
- ஒரு சொல்லின் பொருளை அறிய பயன்படுவதற்கு பெயரென்ன?
அகராதி
- ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள பயன்படுவது எது?
கலைக்களஞ்சியம்
- இசைக்கருவி எத்தனை வகையாகப் பிரிப்பர்?
இரண்டு : குரல்வழி இசை, கருவிவழி இசை
- இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பாணர்
- “நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
புறநானூறு
- இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?
4 :தோல் கருவி ,நரம்புக்கருவி , காற்றுக்கருவி,கஞ்சக் கருவி
- விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
தோல் கருவிகள்
- நரம்பு அல்லது தந்திகளை உடைய இசைக்கருவிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
நரம்புக் கருவிகள்
- காற்றை பயன்படுத்தி இசைக்கப்படுபவை எவ்வாறு அழைக்கப்படும்?
காற்றுக் கருவிகள்
- ஒன்றோடொன்று மோதி இசைக்கப்படுபவை எவ்வாறு அழைக்கப்படும்?
கஞ்சக் கருவிகள்
- இடை சுருங்கிய ஒரு கைபறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உடுக்கை
- உடுக்கையின் உடல் பகுதி எதனால் ஆனது?
பித்தளை
- பெரிய உடுக்கைக்கு பெயரென்ன?
தவண்டை
- சிறிய உடுக்கைக்கு பெயரென்ன?
குடுகுடுப்பை
- “தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்” இவ்வரிகள் இடம்பெற்றது?
திருஞானசம்பந்தர் தேவாரம்
- ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்த கருவிக்கு பெயர் என்ன?
குடமுழா
- குடமுழாவிற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன? பஞ்சமகா சத்தம்
- புல்லாங்குழல் எத்தனை துளைகள் உடையதாக இருக்கும்?
ஏழு துளைகள்
- புல்லாங்குழல் எத்தனை விரல் நீளம் உடையதாக இருக்கும்?
20 விரல்
- புல்லாங்குழல் எந்தவகை மரங்களால் செய்யப்படுகிறது?
மூங்கில், சந்தனம், செங்காலி கருங்காலி
- கொன்றைக்குழல், முல்லைக்குழல் , ஆம்பல் குழல் என பல வகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
- இயற்கையான இசைக்கருவி எது?
சங்கு
- “சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
திருப்பாவை
- சாலரா இசைக்கருவியின் வேறு பெயர் என்ன?
பாண்டில்
- வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்த இசைக் கருவி எது?
சேகண்டி
- சேகண்டி இசைக் கருவிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
சேமங்கலம்
- பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்கு தோலினால் கட்டப்படும் கருவிக்கு பெயர் என்ன?
திமிலை
- திமிலைக்கருவி என்ன வடிவத்தில் அமைந்திருக்கும்?
மணல் கடிகாரம் வடிவம்
- திமிலை தோல்கருவிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
பாணி
- “வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பெரியபுராணம்
- பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க என்ன கருவி பயன்படுத்தப்பட்டது?
கோட்பறை
- பகைவர்களின் ஆநிரை கவரச் செல்லும் போது என்ன கருவியை முழக்குவர்?
ஆகோட்பறை
- மத்து என்பது எதனுடைய பெயர்?
ஓசை
- இசைக் கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படையாகும். மத்து+தளம்=மத்தளம் என்று ஆகியது எனக் கூறுபவர் யார்?
அடியார்க்குநல்லார்
- மத்தளம் இரண்டுகைகளாலும் இசைக்கப் படுவதால் இதனை எவ்வாறு அழைப்பர்?
முதற்கருவி
- “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத…”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நாச்சியார் திருமொழி
- தமிழர்கள் போர் துணையாக கொண்ட கருவிகளில் முதன்மையானது எது?
முரசு
- எத்தனை வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன?
படை முரசு, கொடை முரசு,மண முரசு
- தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
- மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல் எது?
மதுரைக்காஞ்சி
- ஒரே முகத்தை உடைய முரசு வகையைச் சேர்ந்த இசைக் கருவி எது?
முழவு
- மண்ணமைமுழவு என எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
பொருநராற்றுப்படை
- “கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- இருபத்தோரு நரம்புகளைக் கொண்ட யாழ் எது?
பேரியாழ்
- 19 நரம்புகள் கொண்ட மீன் வடிவில் அமைந்த யாழ் எது?
மகர யாழ்
- 14 நரம்புகள் கொண்ட யாழ்?
சகோட யாழ்
- எத்தனை நரம்புகளைக் கொண்ட நரம்புக்கருவி வீணையாகும்?
ஏழு நரம்புகள்
- பரிவாதினி எனும் வீணை எந்த பல்லவ மன்னன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது?
மகேந்திரவர்மன்