DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எந்த 4 இடங்களில் ஒன்றில் பொருந்தி எழுத்துக்கள் பிறக்க காரணமாக அமைகிறது?
மார்பு ,தலை, கழுத்து, மூக்கு
- எந்த உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு மொழிகளாக எழுத்துகள் பிறக்கின்றன?
இதழ்,நாக்கு,பல்,மேல்வாய்
- எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகையாக பிரிப்பர்?
இரண்டு :இடப்பிறப்பு ,முயற்சி பிறப்பு
- உயிர் எழுத்துக்கள் 12 எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
கழுத்து
- வல்லின மெய் எழுத்துகள் ஆறும் எதனை இடமாக கொண்டு பிறக்கின்றன?
மார்பு
- மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
மூக்கு
- இடையின மெய் எழுத்துகள் ஆறும் எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
கழுத்து
- ஆயுத எழுத்து எதனை இடமாகக் கொண்டு பிறக்கிறது?
தலை
- எந்த உயிரெழுத்துக்கள் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன?
அ,ஆ
- எந்த உயிர் எழுத்துக்கள் ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல் வாய்ப்பல்லை பொருந்தும் முயற்சியில் பிறக்கின்றன?
இ,ஈ,எ,ஏ,ஐ
- எந்த உயிர் எழுத்துக்கள் ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கின்றன?
உ,ஊ,ஒ,ஓ,ஔ
- எந்த மெய்யெழுத்துக்கள் நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன?
க்,ங்
- எந்த மெய்யெழுத்துக்கள் நாவின் இடைப்பகுதி நடு அண்ணத்தின் இடைப் பகுதியை பொருந்துவதால் பிறக்கின்றன?
ச்,ஞ்
- எந்த மெய் எழுத்துக்கள் நாவின் நுனி அண்ணத்தின் நுனியை பொருந்துவதால் பிறக்கின்றன?
ட்,ண்
- எந்த மெய்யெழுத்துக்கள் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன?
த்,ந்
- எந்த மெய்யெழுத்துக்கள் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன?
ப்,ம்
- நாக்கின் அடிப் பகுதியில் மேல் வாய் அடிப்பகுதியை பொருந்துவதால் எந்த மெய் எழுத்து பிறக்கிறது?
ய்
- எந்த மெய் எழுத்துக்கள் மேல் வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன?
ர்,ழ்
- எந்த மெய் எழுத்துக்கள் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது?
ல்
- எந்த மெய்யெழுத்து மேல்வாயை நாக்கின் ஓரங்களில் தடித்து தடவுதலால் பிறக்கிறது?
ள்
- எந்த மெய் எழுத்து மேல் வாய் பல்லை கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது?
வ்
- எந்த மெய் எழுத்துக்கள் மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன?
ற்,ன்
- வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கும் சார்பெழுத்து எது?
ஆய்த எழுத்து
- செயல் வேறு எவ்வாறு குறிப்பிடப்படும்?
வினை
- ஒன்றன் செயலை குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
வினைச்சொல்
- பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
முற்று வினை அல்லது வினைமுற்று
- வினைமுற்று எந்தெந்த இடங்களில் வரும்?
ஐந்து பால் ,மூன்று காலம் ,மூன்று இடம் ஆகிய அனைத்தும் வரும்
- வினைமுற்று எத்தனை வகைப்படும்?
இரண்டு வகை :தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று
- ஒரு செயல் நடைபெறுவதற்கு எந்த ஆறும் முதன்மையானவை?
செய்பவர், கருவி ,நிலம், செயல் ,காலம் ,செய்பொருள்
- ஒரு செயல் நடைபெறுவதற்குரிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது என்ன வினைமுற்று?
தெரிநிலை வினைமுற்று
- பொருள், இடம், காலம், சினை ,குணம் ,தொழில் ஆகியவற்றில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது ,செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று எவ்வாறு அழைக்கப்படும்?
குறிப்பு வினைமுற்று
- தெரிநிலை குறிப்பு வினைமுற்றுக்கள் அன்றி வேறு என்ன வகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு?
வியங்கோள் வினைமுற்று, ஏவல் வினைமுற்று
- தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலை செய்யுமாறு ஏவும் வினைமுற்று எவ்வாறு அழைக்கப்படும்?
ஏவல் வினைமுற்று
- ஏவல் வினைமுற்று எத்தனை வகைகளில் வரும்?
ஒருமை ,பன்மை
- வியங்கோள் வினைமுற்று என்னென்ன பொருள்களில் வரும்?
வாழ்த்துதல், வைதல் ,விதித்தல் ,வேண்டல்
- வியங்கோள் வினைமுற்று எவற்றை காட்டும்?
இரு திணைகள், ஐந்து பால்கள் ,மூன்று இடங்கள்
- வியங்கோள் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
க,இய,இயர்,அல்
- விகுதி பெற்றும் பெறாமலும் வரும் வினைமுற்று எது?
ஏவல் வினைமுற்று
- விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று என்ன இடத்தில் வராது?
தன்மை இடம்
- எந்த வியங்கோள் வினைமுற்று விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை?
இயர்,அல்
- பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
எச்சம்
- எச்சம் எத்தனை வகைப்படும்?
இரண்டு :பெயரெச்சம் ,வினையெச்சம்
- பெயரைக் கொண்டு முடியும் எச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
பெயரெச்சம்
- பெயரெச்சம் எந்த காலத்தில் வரும்?
மூன்று காலமும்
- செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
தெரிநிலை பெயரெச்சம்
- செயலையோ காலத்தையோ தெளிவாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
குறிப்பு பெயரெச்சம்
- வினையைக் கொண்டு முடியும் எச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
வினையெச்சம்
- செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் வினையெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
தெரிநிலை வினையெச்சம்
- காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் எது?
குறிப்பு வினையெச்சம்
- ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முற்றெச்சம்
- பெயர்ச் சொல்லுடன் ஐ, ஆல், கு ,இன், அது போன்ற அசைகள் இணைந்து அச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைக்கு என்ன பெயர்?
வேற்றுமை
- பெயர்ச் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
வேற்றுமை உருபுகள்
- சில இடங்களில் உருபுகளுக்கு பதிலாக முழு சொற்களே வேற்றுமை உருவாக வருவதும் உண்டு அவை எவ்வாறு அழைக்கப்படும்?
சொல்லுருபுகள்
- சொல்லுருபுகளுக்கு எடுத்துக்காட்டு?
ஆல், கொண்டு
- வேற்றுமை எத்தனை வகைப்படும்?
எட்டு
- வேற்றுமையின் வகைகள் என்னென்ன?
முதல் வேற்றுமை ,இரண்டாம் வேற்றுமை ,மூன்றாம் வேற்றுமை ,நான்காம் வேற்றுமை ,ஐந்தாம் வேற்றுமை ,ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை
- வேற்றுமை உருபுகள் இடம்பெற்றுள்ள தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வேற்றுமை தொடர்கள்
- வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
வேற்றுமைத்தொகை
- எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
முதல் வேற்றுமைக்கும் ,எட்டாம் வேற்றுமைக்கும்
- பெரும்பாலான சொற்றொடர்களில் எந்த மூன்று உறுப்புகள் இடம்பெற்றிருக்கும்?
எழுவாய், செயப்படுபொருள் ,பயனிலை
- எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது என்ன வேற்றுமை?
முதல் வேற்றுமை
- முதல் வேற்றுமைக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
எழுவாய் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை உருபு என்ன?
ஐ
- ஒரு பெயரை செயப்படு பொருளாக வேறுபடுத்திக் காட்டுவது என்ன வேற்றுமை?
இரண்டாம் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமைக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
செயப்படுபொருள் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை எத்தனை வகையான பொருள்களில் வரும்?
ஆறு
- இரண்டாம் வேற்றுமை என்னென்ன பொருள்களில் வரும்?
ஆக்கல் ,அழித்தல், அடைதல் ,நீத்தல் ,ஒத்தல் ,உடைமை
- மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் என்னென்ன?
ஆல், ஆன், ஒடு ,ஓடு
- மூன்றாம் வேற்றுமையின் எந்த உருபுகள் கருவிப்பொருள், கருத்தாப்பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்?
ஆல்,ஆன்
- கருவிப் பொருள் எத்தனை வகைப்படும்?
இரண்டு: முதற்கருவி,துணைக்கருவி
- கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவதற்கு என்ன பெயர்?
முதற்கருவி
- ஒன்றை செய்வதற்கு துணையாக இருப்பது எது?
துணைக்கருவி
- கருத்தா பொருள் எத்தனை வகைப்படும்?
இரண்டு: ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா
- பிறரை செய்ய வைப்பது என்ன வகை கருத்தா பொருள்?
ஏவுதல் கருத்தா
- தானே செய்வது என்ன வகை கருத்தாப்பொருள்?
இயற்றுதல் கருத்தா
- ஆன் எனும் உருபு பெரும்பாலும் என்ன வழக்கில் இடம் பெறும்?
செய்யுள் வழக்கு
- உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் மூன்றாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன?
ஒரு,ஓடு
- நான்காம் வேற்றுமைக்குரிய உருபு எது?
கு
- நான்காம் வேற்றுமை உருபு என்ன பொருள்களில் வரும்?
கொடை, பகை, நட்பு, தகுதி ,அதுவாதல் ,பொருட்டு ,முறை ,எல்லை
- நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக என்ன அசை சேர்ந்து வருவதும் உண்டு?
ஆக
- ஐந்தாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன?
இன்,இல்
- ஐந்தாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன பொருள்களில் வரும்?
நீங்கல் ,ஒப்பு ,எல்லை, ஏது
- ஆறாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன?
அது,ஆது,அ
- உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை எது?
ஆறாம் வேற்றுமை
- உரிமை பொருளை வேறு எவ்வாறு அழைப்பர்?
கிழமை பொருள்
- இக்காலத்தில் பயன்படுத்தப்படாத ஆறாம் வேற்றுமை உருபுகள் எது?
ஆது,அ
- ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு எது?
கண்,மேல்,கீழ்,கால்,இல்,இடம்
- இல் எனும் உருபானது எந்த இரண்டு வேற்றுமைகளுக்கு பொதுவானது?
ஐந்தாம் வேற்றுமை , ஏழாம் வேற்றுமை
- இல் உருபு என்ன பொருளில் ஐந்தாம் வேற்றுமையில் இடம்பெறும்?
நீங்கல்
- இல் உருபு என்ன பொருளில் ஏழாம் வேற்றுமையில் இடம்பெறும்?
இடப்பொருள்
- எவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்?
இடம்,காலம்
- விளிப்பொருளில் வரும் வேற்றுமை எது?
எட்டாம் வேற்றுமை
- படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதற்கு என்ன பெயர்?
விளி வேற்றுமை
- முதல் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?
ஆனவன், ஆவான், ஆகின்றவன்
- மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபு என்ன?
கொண்டு ,வைத்து, உடன், கூட
- நான்காம் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?
ஆக, பொருட்டு, நிமித்தம்
- ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?
இலிருந்து, நின்று ,காட்டிலும், பார்க்கிலும்
- ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?
உடைய
- இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை ,பண்பு
முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்? தொகைநிலைத்தொடர்
- தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
ஆறு
- தொகைநிலைத் தொடரின் வகைகள் என்னென்ன?
வேற்றுமைத்தொகை ,வினைத்தொகை ,பண்புத்தொகை ,உவமைத்தொகை ,உம்மைத்தொகை ,அன்மொழித்தொகை
- இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
வேற்றுமைத்தொகை
- ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
வினைத்தொகை
- பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய எனும் பண்புருபுகள் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
பண்புத்தொகை
- சிறப்பு பெயர் முன்னும் ,பொதுப்பெயர் பின்னும் நிற்க இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- உவமைக்கு உவமேயத்துக்கும் இடையில் போல ,போன்ற, நிகர ,அன்ன முதலிய உவம உருபுகள் ஒன்று மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
உவமைத்தொகை
- ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
எண்ணும்மை
- சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச் சொல் மறைந்து நின்று பொருள் தருவது எவ்வாறு் அழைக்கப்படும்?
உம்மைத்தொகை
- வேற்றுமை, வினை, பண்பு ,உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
அன்மொழித்தொகை
- ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
தொகாநிலைத் தொடர்
- தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
ஒன்பது வகை
- தொகாநிலை தொடரின் வகைகள் என்னென்ன?
எழுவாய்த்தொடர், விளித்தொடர் ,வினைமுற்றுத் தொடர் ,பெயரெச்சத் தொடர் ,வினையெச்சத் தொடர் ,வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ,இடைச்சொல் தொடர்,உரிச்சொல் தொடர், ,அடுக்குத்தொடர்
- எழுவாய் ஐ தொடர்ந்து பயனிலை அமைந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்தால் அது என்ன தொடர்?
எழுவாய் தொடர்
- விளிபெயர் பயனிலையைக்கொண்டு முடிந்து எந்த சொல்லும் மறையாமல் வந்தால் அது என்ன தொடர்?
விளித்தொடர்
- வினைமுற்று பெயரைக்கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
வினைமுற்றுத் தொடர்
- எச்சவினை பெயர்ச்சொல் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
பெயரெச்சத் தொடர்
- வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்தினால் அது என்ன வகை தொடர்?
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
- இடைச்சொல் வெளிப்படையாக வரும் சொல்தொடர் எவ்வாறு அழைக்கப்படும்?
இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் வெளிப்படையாக வரும் சொல்தொடர் எவ்வாறு அழைக்கப்படும்?
உரிச்சொல் தொடர்
- ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது என்னவகை தொடர்?
அடுக்குத்தொடர்
- இரு சொற்கள் அமைந்த சொல்லில் முதலில் உள்ள சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
நிலைமொழி
- இரு சொற்கள் நிலைமொழியுடன் வந்து சேரும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
வருமொழி
- நிலைமொழி ஈறும் ,வருமொழி முதலும் இணைவதற்கு என்ன பெயர்?
புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதியில் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
உயிரீற்றுப் புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதியில் மெய்யெழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
மெய்யீற்றுப் புணர்ச்சி
- வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
உயிர் முதல் புணர்ச்சி
- வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
மெய் முதல் புணர்ச்சி
- நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவதற்கு என்ன பெயர்?
இயல்பு புணர்ச்சி
- இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ, வருமொழியிலோ அல்லது இரண்டிலுமே மாற்றங்கள் நிகழுமாயின் அது எவ்வாறு அழைக்கப்படும்?
விகாரப்புணர்ச்சி
- விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
மூன்று :தோன்றல் ,திரிதல், கெடுதல்
- நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படும்?
தோன்றல் விகாரம்
- நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?
திரிதல் விகாரம்
- நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது எவ்வாறு அழைக்கப்படும்?
கெடுதல் விகாரம்
- ஒரு சொல்லின் முதலெழுத்து எந்த வல்லின எழுத்துக்களுள் ஒன்றாக இருந்தால் அதற்கு முன்னாலுள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய் எழுத்தை சேர்த்து எழுத வேண்டும்?
க,ச,த,ப
- சொல்லின் இறுதியில் இலக்கண விதிப்படி பொருந்தும் வல்லின மெய் எழுத்தை சேர்த்த எழுதுவது எவ்வாறு அழைக்கப்படும்?
வல்லினம் மிகல்
- வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் ,மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?
சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை
- வல்லினம் மிகும் இடங்கள் என்னென்ன?
- அந்த ,இந்த என்னும் சுட்டு திரிபுகள் அடுத்து வல்லினம் மிகும்,
- எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்,
- இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்
- நான்காம் வேற்றுமை உருபு கு வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்,
- இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்,
- உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்,
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும் ,
- உவமைத் தொகையில் வல்லினம் மிகும்,
- உருவகத்தில் வல்லினம் மிகும்,
- எண்ணுப்பெயர்களில் எட்டு,பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்,
- அப்படி ,இப்படி ,எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும் ,
- திசை பெயர்களை அடுத்து வல்லினம் மிகும் ,
- மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால் ,
- அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்
- எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
- வல்லினம் மிகா இடங்கள் என்னென்ன?
- எழுவாய்சொற்களை அடுத்து வல்லினம் மிகாது,
- அது,இது,எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது,
- பெயரெச்சம் ,எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது,
- 2ஆம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் வல்லினம் மிகாது,
- உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென் தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது,
- வினைத்தொகையில் வல்லினம் மிகாது
- அப்படி இப்படி எப்படி ஆகிய சொற்களை தவிர படி என முடியும் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது,
- உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
- குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
மரபுக்கவிதைகள்
- இலக்கண கட்டுப்பாடுகளின்றி கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
புதுக்கவிதைகள்
- மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் எவ்வாறு அழைக்கப்படும்?
யாப்பிலக்கணம்
- யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புகள் எத்தனை?
ஆறு
- யாப்பிலக்கணம் குறிப்பிடும் செயலுக்குரிய ஆறு உறுப்புகள் என்னென்ன?
எழுத்து ,அசை, சீர் ,தளை, அடி, தொடை
- யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிப்பர்?
மூன்று: குறில், நெடில் ,ஒற்று
- எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது என்ன?
அசை
- அசை எத்தனை வகைப்படும்?
இரண்டு :நேரசை, நிரையசை
- குறில் அல்லது நெடில் எழுத்து தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் அது என்ன அசை?
நேரசை
- இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில் நெடில் எழுத்துக்களை இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் அது என்ன அசை?
நிரை அசை
- ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவதற்கு பெயர் என்ன?
சீர்
- சீர் எத்தனை வகைப்படும்?
நான்கு: ஓரசைச்சீர், ஈரசைச்சீர் ,மூவசைச்சீர் ,நாலசைச்சீர்
- சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
தளை
- தளைகள் எதனடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
முதல் சீர் இறுதியிலும் ,வரும் சீரின் முதலிலும் உள்ள அசைகள் பொருத்து
- தளைகள் எத்தனை வகைப்படும்?
ஏழு
- இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவதற்கு பெயர் என்ன?
அடி
- அடி எத்தனை வகைப்படும்?
ஐந்து வகை
- செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ ,அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமை எவ்வாறு அழைக்கப்படும்?
தொடை
- தொடைகள் எத்தனை வகைப்படும்?
எட்டு
- முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பதற்கு பெயரென்ன?
மோனை
- இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது பெயர் என்ன?
எதுகை
- இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவர தொடுப்பதற்கு பெயர் என்ன?
இயைபு
- ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடுவது?
அந்தாதித் தொடை
- பா எத்தனை வகைப்படும்?
நான்கு: வெண்பா, ஆசிரியப்பா ,கலிப்பா, வஞ்சிப்பா
- வெண்பா என்ன ஓசை உடையது?
செப்பலோசை
- அறநூல்கள் பலவும் எந்த பாவகையால் அமைக்கப்பட்டுள்ளது?
வெண்பா
- ஆசிரியப்பாவின் ஓசை எது?
அகவலோசை
- ஆசிரியப்பாவில் அமைந்த நூல்கள் எவை? சங்க இலக்கியங்கள் பல
- கலிப்பா என்ன ஓசை உடையது?
துள்ளலோசை
- கலிப்பாவால் இயற்றப்பட்ட இலக்கியம் எது?
கலித்தொகை
- வஞ்சிப்பா என்ன ஓசை உடையது?
தூங்கலோசை
- உவமை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது என்ன அணி?
பிறிதுமொழிதலணி
- இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை கூறி ,பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது என்ன அணி?
வேற்றுமை அணி
- ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமையும் அணி என்ன?
இரட்டுரமொழிதல்
- இரட்டுறமொழிதலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
சிலேடை