DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எழுவாய்
- ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்திற்கு பெயர் என்ன?
பயனிலை
- எழுவாய் ஒரு வினையை செய்ய அதற்கு அடிப்படையாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயப்படுபொருள்
- எழுவாய் வெளிப்படையாக தோன்றவில்லை எனில் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தோன்றா எழுவாய்
- வினைமுற்று பயனிலையாக வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
வினைப் பயனிலை
- பெயர்ச்சொல் பயனிலையாக வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
பெயர்ப் பயனிலை
- வினாச்சொல் பயனிலையாக வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
வினாப் பயனிலை
- எழுவாயாக வரும் பெயர்ச் சொல்லுக்கு அடையாக வரும் சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெயரடை
- ஒரு தொடரில் வினைப் பயனிலைக்கு அடையாக வரும் சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வினையடை
- வினையின் வகைகள் என்னென்ன?
தன்வினை ,பிறவினை ,காரண வினை
- வினையின் பயன் எழுவாயை சேருமாயின் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தன் வினை
- வினையின் பயன் எழுவாயையன்றிப் பிறிதொன்றைச் சேருமாயின் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிறவினை
- எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்கு காரணமாக இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காரணவினை
- எழுவாய் ஒரு வினையை செய்தால் அதை எவ்வாறு அழைக்கப்படும்?
தன்வினை
- எழுவாய் ஒரு வினையை செய்யவைத்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
பிறவினை
- பிற வினைகள் என்ன விகுதிகளை கொண்டும், துணை வினைகளை இணைத்தும் உருவாக்கப்படுகிறது?
பிற வினைகள்-வி,பி துணைவிகுதிகள்-செய்,வை,பண்ணு, போன்றவைகள்
- செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை எது?
செய்வினை
- செயப்படுப் பொருளை முதன்மைப்படுத்தும் வினை எது?
செயப்பாட்டுவினை
- வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
இரண்டு: தனிவினை ,கூட்டு வினை
- தனி வினை அடிகளைக் கொண்ட வினைச்சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
தனிவினை
- கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கூட்டுவினை
- கூட்டு வினைகள் பொதுவாக எத்தனை வகைப்படும்?
மூன்று :பெயர்+ வினை =வினை, வினை +வினை= வினை ,இடை+வினை =வினை
- ஒரு கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படை பொருளைத் தரும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதல்வினை
- ஒரு கூட்டு வினையின் இரண்டாவது குறிப்பாக வந்து தன் அடிப்படை பொருளை விட்டு விட்டு முதல் வினைக்கு துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துணைவினை
- தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன?
40
- இரு வகைகளாகவும் செயல்படும் சொற்கள் என்னென்ன?
பார், இரு ,வை,கொள், போ, வா, முடி, விடு ,தள்ளு, போடு ,கொடு ,காட்டு
- தமிழில் துணைவினைகளாக வரும் சொற்கள் என்னென்ன?
ஆம், ஆயிற்று, இடு, ஒழி, காட்டு ,கூடும், கூடாது கொடு ,கொண்டிரு ,கொள்,செய்,தள்ளு,தா,தொலை, படு, பார்,பொறு,போ,வை, வந்து ,விடு, வேண்டாம், முடியும் ,முடியாது, இயலும் ,இயலாது ,வேண்டும் ,உள் போன்றவைகள்
- எந்தெந்த மொழிகளில் துணை வினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம்பெறும்?
தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில்
- எந்த வல்லெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரும்?
க,ச,த,ப
- க,ச,த,ப ஆகிய வல்லெழுத்துக்கள் நிலை மொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துக்கள் தோன்றி புணரும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வல்லினம் மிகுதல்
- விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
மூன்று: தோன்றல் ,திரிதல், கெடுதல்
- வல்லினம் மிகுந்து வருதல் எந்த விகாரப்புணர்ச்சியின் கீழ் வரும்?
தோன்றல் விகாரம் புணர்ச்சி
- வல்லினம் மிகும் இடங்கள் என்னென்ன?
- அ,இ என்னும் சுட்டெழுத்துக்களுக்கு பின்னும்
- அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும்
- எ என்னும் வினாவெழுத்தின் பின்னும்
- எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும்
- ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களிலும்
- கு எனும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களிலும்
- என, ஆக போன்ற உறுப்புகளின் பின்
- அதற்கு, இதற்கு ,எதற்கு என்னும் சொற்களின் பின்னும்
- இனி, தனி ஆகிய சொற்களின் பின்னும்
- மிக எனும் சொல்லின் பின்னும்
- எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின்னும்
- ஓரெழுத்து ஒரு மொழிக்கு பின்னும்
- ஈறுகட்ட எதிர்மறை எச்சத்தின் பின்னும்
- வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து புணர்கையில்
- (அகர இகர ஈற்று) வினையெச்சங்களின் புணர்கையில்
- ஆறாம் வேற்றுமைத் தொகையில்
- திசை பெயர்களில்
- இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்
- உவமைத் தொகையில்
- சால,தவ,தட,குழ எனும் உரிச்சொற்களின் பின்
- தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகார எழுத்தின்பின்னும்
- சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்
- வல்லினம் மிகா இடங்கள் என்னென்ன?
- அது இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும்
- எது,எவை வினா பெயர்களின் பின்னும்
- எழுவாய்த் தொடரிலும்
- மூன்றாம் ,ஆறாம் வேற்றுமை விரிகளிலும்
- விளித் தொடர்களிலும்
- பெயரெச்சத்திலும்
- இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும்
- படி என்று முடியும் வினையெச்சத்திலும்
- வியங்கோள் வினைமுற்றுத் தொடரிலும்
- வினை தொகையிலும்
- எட்டு பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் இடத்திலும்
- உம்மைத் தொகையிலும்
- அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி போன்ற என்னும் சொற்களின் பின்னும்
- அவ்வளவு ,இவ்வளவு ,எவ்வளவு ,அத்தனை ,எத்தனை, எத்தனை ,அவ்வாறு ,இவ்வாறு ,எவ்வாறு அத்தகைய, இத்தகைய, எத்தகைய ,அப்போதைய ,இப்போதைய ,எப்போதைய ,அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட ,எப்படிப்பட்ட, நேற்றைய ,இன்றைய, நாளைய ஆகிய சொற்களிலும் பின்னும்
- மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமை தொடர்களிலும்
- இரண்டாம் ,மூன்றாம் ,நான்காம் ,ஐந்தாம் வேற்றுமைத் தொகையிலும்
- நிலைமொழி உயர் திணையாய் அமையும் பெயர் தொகையிலும்
- சால,தவ,தட,குழு எனும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின்னும்
- அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றிலும்
- கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது
- ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர ,அவற்றோடு கள் விகுதி சேரும்போது வல்லினம் மிகாது
- “இடைச்சொற்கள் பெயரையும் ,வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன தாமாக தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல” எனக் கூறுபவர்?
தொல்காப்பியர்
- வேற்றுமை உருபுகள் என்னென்ன?
ஐ ,ஆல், கு ,இன் ,அது ,கண்
- தற்காலத்தில் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் இடைச்சொற்கள் என்னென்ன?
உம்,ஓ,ஏ, தான், மட்டும், ஆவது,கூட, ஆ,ஆம்
- “உம்” என்னும் இடைச்சொல் என்ன பொருள்களில் வரும்?
எதிர்மறை ,சிறப்பு ,ஐயம்,எச்சம், முற்று ,அளவை தெரிநிலை ஆக்கம்
- ஓகார இடைச்சொல் என்னென்ன பொருள்களில் வரும்?
ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு),எதிர்மறை ,தெரிநிலை, கழிவு ,பிரிநிலை ,அசைநிலை ஆகிய எட்டுப் பொருள்களில் வரும்(இதுதவிர ஐயம் ,உறுதியாகக் கூற முடியாமை,மிகை,இது அல்லது அது ,இதுவும் இல்லை அதுவும் இல்லை போன்ற பொருள்களிலும் வருகின்றன)
- தற்காலத்தில் ஓகார இடைச்சொல் என்ன பொருளில் அதிகமாக வருகின்றது?
பிரிநிலை பொருள்
- ஏகார இடைச்சொல் என்ன பொருள்களில் வருகிறது?
பிரிநிலை, வினா, எண்,ஈற்றசை ,தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களிலும் வரும்
- எந்த இடைச்சொல் அழுத்த பொருளில் வந்து, சொற்றொடரில் எந்த சொல்லுடன் வருகிறதோ அதனை முதன்மைப் படுத்துகின்றது?
“தான்”
- முடிந்தவரை ,குறிப்பிட்ட நேரம்வரை என்னும் பொருள்களில் வரும் ,வரையறை பொருளைத் தரும் இடைச் சொல் எது?
மட்டும்
- ஆவது என்னும் இடைச் சொல் எந்தெந்த பொருள்களில் வருகிறது?
குறைந்த அளவு, இது அல்லது அது ,வரிசைப்படுத்துதல் போன்றவை
- கூட என்னும் இடைச் சொல் எந்தெந்த பொருள்களில் வருகிறது?
குறைந்தபட்சம் ,முற்றுப் பொருள், எச்சம் தழுவிய கூற்று போன்றவைகள்
- ஆ என்னும் இடைச் சொல் என்ன பொருளில் வரும்?
வினாப்பொருள்
- சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு ,சாத்தியம் ,பொருத்தம் ஆகிய பொருள்களிலும், தகவலாகவும் செய்தியை கூறுவதற்கும் பயன்படும் இடைச்சொல் எது?
ஆம்
- எத்தனை என்பது எதனைக் குறிக்கும்?
எண்ணிக்கை
- எத்துணை என்பது எதனைக் குறிக்கும்?
அளவையும் காலத்தையும்
- உரிச்சொற்கள் எதனைச் சார்ந்து வந்து பொருள் உணர்த்தும்?
பெயர்கள் ,வினைகள்
- உரிச்சொற்கள் என்ன பொருள்களுக்கு உரித்தாய் வரும்?
இசை, குறிப்பு, பண்பு
- ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு தொன்றுதொட்டு ஆகிவருவது எவ்வாறு அழைக்கப்படும்?
ஆகு பெயர்
- தொல்காப்பியர் ஆகுபெயர்களை எத்தனையாக வகை படுத்தியுள்ளார்?
ஏழு
- நன்னூலார் ஆகுபெயர்களை எவ்வளவாக வகைப்படுத்தி உள்ளார்?
பதினைந்து
- ஆகு பெயர்கள் என்னென்ன?
பொருளாகுபெயர் ( முதலாகுபெயர்),இடவாகுபெயர், காலவாகு பெயர் ,சினையாகு பெயர் ,பண்பாகுபெயர் ,தொழிலாகு பெயர் ,கருவியாகு பெயர் ,கருத்தாவாகு பெயர் ,எண்ணலளவை பெயர், எடுத்தலளவை ஆகுபெயர் ,முகத்தலளவை ஆகுபெயர், நீட்டலளவை ஆகுபெயர்
- இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வதற்கு பெயர் என்ன?
புணர்ச்சி
- புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொறுத்து எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
இரண்டு: உயிரீறு,மெய்யீறு
- புணர்ச்சியில் வருமொழியின் முதலெழுத்தை பொறுத்து எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
இரண்டு :உயிர் முதல் ,மெய் முதல்
- எழுத்து வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்?
நான்குவகைகள்: உயிரீறு, மெய்யீறு,உயிர்முதல் ,மெய்ம்முதல்
- நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் புணர்ச்சி எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
நான்கு: உயிர்முன் உயிர், உயிர்முன்மெய், மெய்ம்முன்உயிர் ,மெய்ம்முன் மெய்
- புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சி எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு : இயல்பு புணர்ச்சி ,விகாரப் புணர்ச்சி
- புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவும் இன்றி இயல்பாக புணர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயல்பு புணர்ச்சி
- புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விகாரப்புணர்ச்சி
- விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
மூன்று :தோன்றல் ,திரிதல், கெடுதல்
- உயிரை ஈறாக உடைய சொற்களின்முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும் ; அப்போது சொற்கள் சேராமல் தனித்து நிற்கும் ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும் அது எவ்வாறு அழைக்கப்படும்?
உடம்படுமெய்
- ‘இ,ஈ,ஐ’ என்னும் உயிர் எழுத்துக்களை உடைய சொற்கள் நிற்கும் பொழுது அவற்றின் முன் வருமொழியில் 12 உயிர்களும் வந்துப் புணர்கையில் என்னமெய் தோன்றும்?
‘ய’கரம்
- ‘இ,ஈ,ஐ’ தவிர என்னும் உயிர் எழுத்துக்களை உடைய சொற்கள் நிற்கும் பொழுது அவற்றின் முன் வருமொழியில் 12 உயிர்களும் வந்துப் புணர்கையில் என்னமெய் தோன்றும்?
‘வ’கரம்
- நிலைமொழி ஈறாக ஏகாரம் வந்து ,வருமொழியில் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களை உடைய சொற்கள் வந்து புணர்கையில் எந்த மெய் தோன்றும்?
யகரம் / ‘வ’கரம்
- தனிக்குறில் அல்லாது சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பதற்கு என்ன பெயர்?
குற்றியலுகரம்
- குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
ஆறுவகை :வன்தொடர் ,மென்தொடர் ,இடைத்தொடர், உயிர்த்தொடர் ,ஆயுத தொடர் ,நெடில் தொடர்
- எந்த நான்கு எழுத்துக்களால் மெல்லினம் மிகும்?
ங,ஞ,ந,ம
- எந்தெந்த இடங்களில் மெல்லினம் மிகும்?
யகர ஈற்றுச் சொற்கள் முன் மெல்லினம் மிகும் ,வேற்றுநிலை மெய் மயக்கத்தில் ய,ர,ழ முன்னர் மெல்லினம் மிகும், ‘புளி’ என்னும் சுவைப்பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமின்றி மெல்லினமும் மிகும், உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப்பெயர்களுக்கு முன்னர் மெல்லினம் மிகும், பூ என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்
- கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
யாப்பிலக்கணம்
- யாப்பிலக்கணத்தின் உறுப்புகள் எத்தனை?
ஆறு: எழுத்து, அசை ,சீர் ,தளை ,அடி ,தொடை
- யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று: குறில் ,நெடில் ,ஒற்று
- எழுத்துக்களால் ஆனது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அசை
- அசை எத்தனை வகைப்படும்?
இரண்டு: நேரசை, நிரையசை
- அசை பிரிப்பில் எந்த எழுத்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது?
ஒற்றெழுத்து
- ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளின் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சீர்
- பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது எது?
சீர்
- சீர் எத்தனை வகைப்படும்?
நான்கு: ஓரசைச்சீர் ,ஈரசைச்சீர் ,மூவசைச்சீர், நாலசைச்சீர்
- நேர் என்பது உகரம் சேர்ந்து முடிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நேர்பு
- நிரை என்பது உகரம் சேர்ந்து முடிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிரைபு
- ஈரசை சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
இயற்சீர் ,ஆசிரிய உரிச்சீர்
- ஓரசைச்சீரில் நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
நாள்
- ஓரசைச்சீரில் நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
மலர்
- ஓரசைச்சீரில் நேர்பு அசையின் வாய்ப்பாடு என்ன?
காசு
- ஓரசைச்சீரில் நிரைபு அசையின் வாய்ப்பாடு என்ன?
பிறப்பு
- ஈரசைச்சீரில் நேர் நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
தேமா
- ஈரசைச்சீரில் நிரை நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
புளிமா
- ஈரசைச்சீரில் நிரை நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
கருவிளம்
- ஈரசைச்சீரில் நேர் நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
கூவிளம்
- தேமா மற்றும் புளிமா எவ்வாறு அழைக்கப்படும்?
மாச்சீர்
- கருவிளம் மற்றும் கூவிளம் எவ்வாறு அழைக்கப்படும்?
விளச்சீர்
- மூவசைச்சீரில் உள்ள நேர் நேர் நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
தேமாங்காய்
- மூவசைச்சீரில் உள்ள நிரை நேர் நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
புளிமாங்காய்
- மூவசைச்சீரில் உள்ள நிரை நிரை நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
கருவிளங்காய்
- மூவசைச்சீரில் உள்ள நேர் நிரை நேர் அசையின் வாய்ப்பாடு என்ன?
கூவிளங்காய்
- மூவசைச்சீரில் உள்ள நேர் நேர் நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
தேமாங்கனி
- மூவசைச்சீரில் உள்ள நிரை நேர் நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
புளிமாங்கனி
- மூவசைச்சீரில் உள்ள நிரை நிரை நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
கருவிளங்கனி
- மூவசைச்சீரில் உள்ள நேர் நிரை நிரை அசையின் வாய்ப்பாடு என்ன?
கூவிளங்கனி
- வெண்பாவில் என்ன சீர் மட்டுமே இடம்பெறும்?
இயற்சீர் ,வெண்சீர்
- தளைகளில் எது மட்டுமே இடம்பெறும்?
இயற்சீர் வெண்டளை ,வெண்சீர் வெண்டளை
- ஈற்றடியின் ஈற்றுச் சீர் எந்த சீர்களில் முடியும்?
ஓரசைச்சீர்
- பாடலில் நின்ற சீரின் ஈற்றசையும் அதனை அடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் எவ்வாறு அழைக்கப்படும்?
தளை
- தளை எத்தனை வகைப்படும்?
ஏழு வகை: நேரொன்றாசிரியத்தளை ,நிரையொன்றாசிரியத்தளை ,இயற்சீர் வெண்டளை ,வெண்சீர் வெண்டளை, கலித்தளை ,ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை
- நேரொன்றாசிரியத்தளையின் வாய்ப்பாடு என்ன?
மா முன் நேர்
- நிரையொன்றாசிரியத்தளையின் வாய்ப்பாடு என்ன?
விளம் முன் நிரை
- இயற்சீர் வெண்டளையின் வாய்ப்பாடு என்ன?
மா முன் நிரை ,விளம் முன் நேர்
- வெண்சீர் வெண்டளையின் வாய்ப்பாடு என்ன?
காய் முன் நேர்
- கலித்தளையின் வாய்ப்பாடு என்ன?
காய் முன் நிரை
- ஒன்றிய வஞ்சித்தளையின் வாய்ப்பாடு என்ன?
கனி முன் நிரை
- ஒன்றா வஞ்சித்தளையின் வாய்ப்பாடு என்ன?
கனி முன் நேர்
- இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
அடி
- அடி எத்தனை வகைப்படும்?
ஐந்து: குறளடி ,சிந்தடி ,அளவடி ,நெடிலடி ,கழிநெடிலடி
- இரண்டு சீர்களைக் கொண்டது?
குறளடி
- மூன்று சீர்களைக் கொண்டது?
சிந்தடி
- நான்கு சீர்களைக் கொண்டது?
அளவடி
- ஐந்து சீர்களைக் கொண்டது?
நெடிலடி
- ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது?
கழிநெடிலடி
- பாடலின் அடிகளிலோ சீர்களிலோ எழுத்துக்கள் ஒன்றி வரத் தொடுப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
தொடை
- செய்யுள் உறுப்பு பாடலிலுள்ள அடிகள் தோறும் அல்லது சீர்கள் தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைவது எது?
தொடை
- தொடை எத்தனை வகைப்படும்?
எட்டு: மோனை, எதுகை ,இயைபு ,அளபெடை ,முரண்,இரட்டை ,அந்தாதி ,செந்தொடை
- அடிகளிலோ சீர்களிலே முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி அமைவதற்கு பெயர் என்ன?
எதுகைத் தொடை
- அடிகள் தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ,அடியோ ஒன்றி அமைவதற்கு பெயர் என்ன?
இயைபுத்தொடை
- செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
அணி
- உவமையின் தன்மையை பொருள் மேல் ஏற்றிக் கூறும் தன்மைக்கு என்ன பெயர்?
உருவகம்
- உவமை உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது எந்த அணி?
உருவக அணி
- ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பின்வருநிலையணி
- பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?
மூன்று: சொல் பின்வருநிலையணி ,பொருள் பின்வருநிலையணி ,சொற்பொருள் பின்வருநிலையணி
- முன்வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
சொல் பின்வருநிலையணி
- செய்யுளில் முன் வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது எவ்வாறு் அழைக்கப்படும்?
பொருள் பின்வருநிலையணி
- முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களில் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
சொற்பொருள் பின்வருநிலையணி
- புகழ்வது போல பழிப்பதும் பழிப்பது போல புகழ்வதும் எவ்வாறு அழைக்கப்படும்?
வஞ்சப்புகழ்ச்சி அணி