DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- தமக்குத் தெரிந்த கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி எது?
மொழி
- முதலில் மனிதர்கள் தம் எண்ணங்களை எவற்றின் மூலமாக பிறருக்கு தெரிவிக்க முயன்றனர்?
மெய்ப்பாடுகள் சைகைகள் ஒலிகள் ஓவியங்கள்
- எவை மனிதர்களை வேறுபட்டு ஒலிப்பு முயற்சிகளை உருவாக்க தூண்டின?
மனித இனம் வாழ்ந்த இடம் அமைப்பும் இயற்கை அமைப்பும்
- உலகத்தில் உள்ள மொழிகள் எல்லாம் என்ன அடிப்படையில் மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
மொழியின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு
- இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
1300க்கும் மேற்பட்டவை
- இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
4
- இந்தியாவில் பேசப்படும் மொழி குடும்பங்கள் என்னென்ன?
இந்தோ- ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ- ஆசிய மொழிகள்,சீன-திபெத்திய மொழிகள்
- திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
குமரிலபட்டர்
- திராவிடம் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து பிறந்ததாக மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்
தமிழ்
- தமிழ் தமிழா தமிலா டிரமிலா ட்ரமிலா த்ராவிடா திராவிடா என மொழி மாற்றத்தை விளக்கியவர் யார்
ஹீரோஸ் பாதிரியார்
- வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்
அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
- எந்த ஆண்டில் பேராசிரியர்கள் பாப் ராஸ்க் கிரிம் முதலானோரால் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன?
1816
- தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்து இவை தனி ஒரு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என முதன் முதலில் கூறியவர் யார்?
பிரான்சிஸ் எல்லிஸ்
- தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளை ஒரே இனமாக கருதி தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்?
பிரான்சிஸ் எல்லிஸ்
- தென்னிந்திய மொழிகளோடு மால்தோ,தோடா,கோண்டி முதலான மொழிகளில் ஆராய்ச்சி செய்து தமிழியன் என பெயரிட்டவர் யார்?
ஹோக்கன்
- ஆரிய மொழிகளில் இருந்து தமிழியன் மொழிகள் மாறுபட்டவை என்று கருதியவர்கள் யார்?
ஹோக்கன் மற்றும் மாக்ஸ்முல்லர்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?
கால்டுவெல்
- கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எப்போது எழுதினார்?
1856
- திராவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்கும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டவர் யார்?
கால்டுவெல்
- திராவிட மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
3
- திராவிட மொழிக்குடும்பம் நில அடிப்படையில் என்னென்ன பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
தென்திராவிடமொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள்
- தென் திராவிட மொழிகள் என்னென்ன?
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு கோத்தா தோடா கொரகா இருளா
- நடுத்திராவிட மொழிகள் என்னென்ன?
தெலுங்கு, கூயி ,கூவி , கோண்டா, கோலாமி ,நாயக்கி ,பெங்கோ ,முண்டா, பர்ஜி, கதபா ,கோண்டி, கோயா
- வடதிராவிட மொழிகள் என்னென்ன?
குரூக், மால்தோ, பிராகுய்
- அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு திராவிட மொழிகள் என்னென்ன?
தங்கா, எருகலா ,குறும்பா ,சோழிகா
- திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை
28
- “தமிழ் வடமொழியின் மகள் அன்று;அது தனி குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி ;தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்” என கூறியவர் யார்?
கால்டுவெல்
- கீழ்க்கண்டவற்றில் அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது எனக் குறிப்பிடுக:
கண்-தமிழ்
- கண்ணு- மலையாளம், கன்னடம்
- கன்னு-தெலுங்கு குடகு
- ஃகன்-குரூக்
- கெண்-பர்ஜி
- கொண்-தோடா
- எண்ணுப் பெயர்களின் திராவிட மொழிகளை குறிப்பிடுக
- மூன்று-தமிழ்
- மூணு-மலையாளம்
- மூடு-தெலுங்கு
- மூரு-கன்னடம்
- மூஜி-துளு
- திராவிட மொழிகளில் உயிர் எழுத்துக்களில் உள்ள எந்த வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்த துணை செய்கின்றன?
குறில் நெடில் வேறுபாடுகள்
- எந்த மொழியில் உயிரற்ற பொருள்களுக்கும் கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களுக்கும் கூட ஆண் பெண் என்று பாகுபடுத்தப் படுகின்றன?
வடமொழி
- வடமொழியில் கைவிரல்கள் மற்றும் கால் விரல்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன?
கைவிரல் பெண்பால் என்றும் கால் விரல்கள் ஆண்பால்
- எந்த மொழியில் திணை பால் எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை?
மலையாள மொழி
- தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணம் நூல் எது?
சங்க இலக்கியம் தொல்காப்பியம்
- கன்னட மொழியின் இலக்கிய இலக்கண நூல் எது?
கவிராஜ மார்க்கம்
- கவிராஜ மார்க்கம் நூலின் காலம் என்ன?
கிபி 9 ஆம் நூற்றாண்டு
- தெலுங்கு மொழியின் இலக்கிய இலக்கண நூல் எது?
இலக்கியம்-பாரதம் இலக்கணம் ஆந்திரபாஷா பூஷணம்
- பாரதம் நூலின் காலம் என்ன?
கி பி 11ம் நூற்றாண்டு
- ஆந்திரபாஷா பூஷணம் நூலின் காலம் என்ன?
கிபி 12ம் நூற்றாண்டு
- மலையாள மொழியின் இலக்கிய இலக்கண நூல் எது?
ராமசரிதம், லீலா திலகம்
- ராமசரிதம் நூலின் காலம் என்ன?
கிபி 12ஆம் நூற்றாண்டு
- லீலாதிலகம் எனும் இலக்கண நூலின் காலம் என்ன?
கிபி 15ஆம் நூற்றாண்டு
- இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?
செ.வை சண்முகம்
- மரம் என்று சொல்லின் ஒற்றுமை எந்தெந்த திராவிட மொழிகளில் காணப்படுகிறது?
தமிழ் மலையாளம் கன்னடம்
- நூறு என்ற சொல்லின் ஒற்றுமை எந்தெந்த திராவிட மொழிகளில் காணப்படுகிறது
தமிழ் மலையாளம்
- நீ என்ற சொல்லின் ஒற்றுமை எந்தெந்த திராவிட மொழிகளில் காணப்படுகிறது
தமிழ் மலையாளம்
- தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள் எந்த விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறி இருக்கின்றன?
ஒலி இடம்பெயர்தல்
- எந்த நாடுகளின் பண தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
மொரீசியஸ் இலங்கை
- “காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!” என தமிழை வாழ்த்தியவர் யார்?
ஈரோடு தமிழன்பன்
- “தமிழ் ஏந்தி வளர்த்தது தாயெனவே, சித்தர் மரபில் தீதறுக்கும்- புது சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
தமிழோவியம்
- “விரலை மடக்கியவன் இசை இல்லை -எழில் வீணையில் என்று சொல்வதுபோல்”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
ஈரோடு தமிழன்பன்
- “குறைகள் சொல்வதை விட்டு விட்டு புது கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!” வரிகளை எழுதியவர் யார்?
ஈரோடு தமிழன்பன்
- “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என கூறியவர் யார்?
ஈரோடு தமிழன்பன்
- ஈரோடு தமிழன்பன் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
2004
- ஈரோடு தமிழன்பன் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றார்?
வணக்கம் வள்ளுவ எனும் கவிதை நூல்
- ஈரோடு தமிழன்பனின் எந்த நூல் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்?
தமிழன்பன் கவிதைகள்
- “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்”- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
பிங்கல நிகண்டு
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”இவ்வரிகளை கூறியவர் யார்?
பாரதியார்
- உலகத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது
பிப்ரவரி 21
- தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை?
இலங்கை மற்றும் சிங்கப்பூர்
- “தித்திக்கும் தெள்ளமுதாய் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தமிழ்விடு தூது
- “என்றும் சிந்தாமணியாய் இருந்த உன்னை சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தமிழ் விடு தூது
- “முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ குற்றம் இலாப் பத்துக் குணம் பெற்றாய்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தமிழ் விடு தூது
- “ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தமிழ் விடு தூது
- “ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு ஆன நவரசம்உண் டாயினாய்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தமிழ் விடு தூது
- “அழியா வனப்பு ஒன்று அலது அதிகமுண்டோ ஒழியா வனப்பு எட்டு உடையாய்..”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தமிழ் விடு தூது
- “குறம் என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு உறவுஎன்று மூன்றும்இனத்தும் உண்டோ”- இவ்வரிகளில் மூன்று இனம் என குறிப்பிடப்படுவது எவை?
துறை, தாழிசை ,விருத்தம்
- முக்குணங்கள் என குறிப்பிடப்படுவது எது?
சத்துவம் ,ராஜசம், தாமசம்
- தமிழ்விடு தூது குறிப்பிடப்படும் ஐந்து வண்ணங்கள் என்னென்ன?
வெள்ளை, சிவப்பு, கருப்பு ,மஞ்சள் ,பச்சை
- இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு என்ன பெயர்?
கண்ணி
- தமிழில் இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செயல் வகைக்கு பெயர் என்ன?
கண்ணி
- தமிழ் மொழி பெற்றுள்ள பத்து குணங்கள் என்னென்ன?
செறிவு ,தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி
- தூது சிற்றிலக்கியத்திற்க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
வாயில் இலக்கியம் சந்து இலக்கியம்
- தூது சிற்றிலக்கியம் என்ன பாவகையால் இயற்றப்படுகிறது?
கலிவெண்பா
- தமிழ்விடு தூதுவின் பாட்டுடைத் தலைவன் யார்?
மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்
- தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?
268 கண்ணிகள்
- தமிழ் விடுதூது நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
உ.வே.சா
- தமிழ்விடு தூது எந்த ஆண்டு முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது?
1930
- “காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்மீதொளிர் சிந்தாமணியும்…. நீதி ஒளிர் செங்கோலை திருக்குறளை தாங்குதமிழ் நீடு வாழ்க”இவ்வரிகளை எழுதியவர்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
- கீழுள்ளவற்றின் தமிழ்ச் சொற்களை குறிப்பிடுக:
சாப்ட்வேர்(software)-மென்பொருள்
- பிரவுசர்(browser)-உலவி
- க்ராப்(crop)- செதுக்கி
- கர்சர்(cursor)-ஏவி அல்லது சுட்டி
- சைபர்ஸ்பேஸ்(cyberspace)-இணையவெளி
- சர்வர்(server)-வையகவிரிவு வலை
- போல்டர்(folder)-உறை
- லேப்டாப்(laptop)-மடிக்கணினி
- கீழ்க்கண்டவற்றில் என்ன அளவின் தமிழ் பெயர்களை குறிப்பிடுக?
1/320-முந்திரி
- 1/160-அரைக்காணி
- 3/320-அரைக்காணி முந்திரி
- 1/80-காணி
- 1/64-கால் வீசம்
- 1/40-அரைமா
- 1/32-அரை வீசம்
- 3/80-முக்காணி
- 3/64-முக்கால் வீசம்
- 1/20-ஒருமா
- 1/16-மாகாணி(வீசம்)
- 1/10-இருமா
- ⅛-அரைக்கால்
- 3/20-மூன்றுமா
- 3/16-மூன்று வீசம்
- ⅕– நாலுமா
- தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பது எந்த மொழியில் நேவி என ஆகியுள்ளது?
ஆங்கிலம்
- எந்த உலகின் தொன்மையான மொழியில் தமிழ் கடல் சார்ந்த சொற்கள் இடம் பெற்றுள்ளன?
கிரேக்கம்
- தமிழில் உள்ள பா கிரேக்க மொழியில் எந்த தொன்மையான காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இலியாத்
- தமிழில் உள்ள பா கிரேக்கத்தில் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
பாய்யியோனா
- வெண்பாவின் ஓசை என்ன?
செப்பலோசை
- கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சாப்போ
- சாப்போ ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
சேப்பிக் ஸ்டேன்சா
- இலக்கணத் தமிழில் துன்ப சுவையினை எவ்வாறு அழைப்பர்?
இளிவரல்
- கிரேக்கத்தில் துன்ப சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
இளிகியா
- இலியாத் காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது?
கிமு எட்டாம் நூற்றாண்டு
- எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் எனும் நூல் எந்த மொழியை சார்ந்தது?
கிரேக்கம்
- “விறகுநான் வண்டமிழே! உன்னருள் வாய்த்த பிறகு நான் வீணையாய் போனேன்”- இவ்வரிகளை எழுதியவர் யார்?
கவிஞர் வாலி
- “ஒருவாய் உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக் கணவாய் வழி வரும் காற்று”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
கவிஞர் வாலி
- கால் முளைத்த கதைகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
எஸ் ராமகிருஷ்ணன்
- மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் என்ற நூலை எழுதியவர் யார்?
மணவை முஸ்தபா
- மாணவர்களுக்கான தமிழ் எனும் நூலை எழுதியவர் யார்?
என் .சொக்கன்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?
ராபர்ட் கால்டுவெல்