DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று இயற்கையை வாழ்த்தியவர் யார்?
இளங்கோவடிகள்
- உலக சுற்றுச்சூழல் நாள் எது?
ஜூன் 5
- “நீரின்று அமையாது உலகு” என கூறியவர் யார்?
திருவள்ளுவர்
- “மழை உழவுக்கு உதவுகிறது,விதைத்த விதை ஆயிரமாக பெருகுகிறது.நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளருகின்றன” இவ்வாறு கூறியவர் யார்?
மாங்குடி மருதனார்
- பாண்டிய மண்டலத்து நிலப்பகுதிகளில் ஏரியை எவ்வாறு அழைப்பர்?
கண்மாய்
- மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு என்ன பெயர்?
உறைகிணறு
- மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு என்ன பெயர்?
ஊருணி
- கல்லணை யாரால் கட்டப்பட்டது?
கரிகாலச்சோழன்
- கல்லணையின் நீளம் அகலம் உயரம் எவ்வளவு?
நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி உயரம் 15 முதல் 18 அடி
- நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருபவர் யார்?
திருவள்ளுவர்
- இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சர் ஆர்தர் காட்டன்
- சர் ஆர்தர் காட்டன் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் எந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்?
1829
- சர் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு என்ன பெயரை சூட்டினார்?
கிராண்ட் அணைக்கட்
- சர் ஆர்தர் காட்டன் எந்த ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்?
கோதாவரி
- சர் ஆர்தர் காட்டன் எந்த ஆண்டு தௌலீஸ்வரம் அணையை கட்டினார்?
1873
- “தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப் பட்டவையாக விளங்குகின்றன “எனக் கூறியவர் யார்?
தொ.பரமசிவன்
- குளித்தல் என்பதற்கு பொருள் என்ன?
வெப்பமடைந்த உடலை குளிர வைத்தல் அல்லது குளிர்த்தல்
- “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” எனக் கூறியவர் யார்?
ஆண்டாள்
- தெய்வச் சிலைகளை குளிர்க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்?
திருமஞ்சனம் ஆடல்
- எந்த சிற்றிலக்கியத்தில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உண்டு?
பிள்ளைத்தமிழ்
- இறப்புச் சடங்கில் உடலை நீராட்டுவதற்கு என்ன பெயர்?
நீர்மாலை எடுத்து வருதல்
- சனி நீராடு என்பது யாருடைய வாக்கு?
ஔவையார்
- கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண் எவ்வாறு அழைக்கப்படும்?
அகழி
- மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டு குதிப்பதற்கு என்ன பெயர்?
அருவி
- கடல் அருகே தோண்டி கட்டிய கிணறு என்ன? பெயர்
ஆழிக்கிணறு
- பெருகி ஓடும் நதிக்கு என்ன பெயர்?
ஆறு
- பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் எவ்வாறு அழைக்கப்படும்
இலஞ்சி
- அடியில் இருந்து நீர் வருவதற்கு என்ன பெயர்
ஊற்று
- வேளாண்மை பாசன நீர் தேக்கம் எவ்வாறு அழைக்கப்படும்
ஏரி
- சரளை நிலத்தில் தோண்டி கல் செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு எவ்வாறு அழைக்கப்படும்?
கட்டுக்கிணறு
- சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலைக்கு என்ன பெயர்?
குண்டம்
- குளிப்பதற்கு ஏற்ற சிறு குளத்திற்கு என்ன பெயர்?
குண்டு
- அடிநிலத்து நீர் நில மட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்றுக்கு என்ன பெயர்?
குமிழிஊற்று
- உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலைக்கு என்ன பெயர்?
கூவல்
- அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு எவ்வாறு அழைக்கப்படும்?
கேணி
- தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை எவ்வாறு அழைக்கப்படும்?
சிறை
- நீர்வரத்து மடையின்றி மழை நீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலைக்கு என்ன பெயர்?
புணற்குளம்
- கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு?
பூட்டைக் கிணறு
- முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்?
ஜான் பென்னிகுயிக்
- ” பாடும் பறவைகள் கூடி உனக்கு ஒரு பாடல் புனைந்ததுவும்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தமிழ்ஒளியின் கவிதைகள்
- கவிஞர் தமிழ்ஒளியின் காலம் என்ன?
1924 -1965
- கவிஞர் தமிழ்ஒளி எங்கு பிறந்தார்?
புதுவை
- கவிஞர் தமிழ்ஒளி யாருடைய மாணவராக விளங்கியவர்?
பாரதிதாசன்
- “பூவிரித்த புதுமதுப் பொங்கிட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பெரிய புராணம்
- “… காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு..”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பெரிய புராணம்
- “நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பெரிய புராணம்
- அடியவர் பெருமையை ஓரடியில் கூறும் நூல் எது
திருத்தொண்டத்தொகை
- திருத்தொண்டத்தொகை நூலை எழுதியவர் யார்
சுந்தரர்
- திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்
நம்பியாண்டார் நம்பி
- பெரிய புராணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
சேக்கிழார்
- சேக்கிழார் எந்த இரண்டு நூல்களை அடிப்படையாகக் கொண்டு பெரிய புராணத்தை இயற்றினார்?
திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி
- பெரியபுராணத்தில் எத்தனை சிவனடியார்களின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டுள்ளது?
63 சிவனடியார்கள்
- பெரியபுராணம் என அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன?
இதன் பெருமை காரணமாக
- சேக்கிழாரின் காலம் என்ன
கிபி 12ஆம் நூற்றாண்டு
- சேக்கிழார் யாருடைய அவையில் முதலமைச்சராக இருந்தார்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
- “பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ” என்று சேக்கிழாரை பாடியவர் யார்?
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- “வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ” இவ்வரிகளை எழுதியவர் யார்?
பாரதியார்
- முன்னோர்கள் “நீர்நிலைகளை உருவாக்குபவர்களை” எவ்வாறு போற்றினர்?
உயிரை உருவாக்குபவர்கள்
- “மல்லல் மூதூர் வய வேந்தே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- “நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” இவரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “உண்டி முதற்றே உணவின் பிண்டம்”இவரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”இவரிகள் எழுதியவர் யார்?
குடபுலவியனார்
- “மல்லல் மூதூர் வய வேந்தே”இப் புறநானூற்றுப் பாடலில் குடபுலவியனார் யாரைப் பற்றிப் பாடினால்?
பாண்டியன் நெடுஞ்செழியன்
- எந்த நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது?
புறநானூறு
- “குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து உடன்தொட்டு உழுவயல் ஆக்கி”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
சிறுபஞ்சமூலம்
- “உண்பது நாழி உடுப்பவை இரண்டே ” வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “உண்பது நாழி உடுப்பவை இரண்டே “இவ்வரிகள் எழுதியவர் யார்?
நக்கீரர்
- “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “யாதும் ஊரே யாவரும் கேளிர்”இவ்வரிகளை எழுதியவர் யார்?
கனியன் பூங்குன்றனார்
- “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!” இவ்வரிகள் இயற்றியவர் யார்?
பொன்முடியார்
- “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- தண்ணீர் என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
கந்தர்வன்
- கந்தர்வனின் இயற்பெயர் என்ன?
நாகலிங்கம்
- கந்தர்வன் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்
இராமநாதபுரம்
- கந்தர்வனின் சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?
சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்
- குமுளி எனும் கவிதையை எழுதியவர் யார்?
யூமா வாசுகி
- “கல்லும் மலையும் குதித்து வந்தேன் – பெரும் காடும் செடியும் கடந்து வந்தேன்” இவ்வரிகளை எழுதியவர் யார்?
கவிமணி
- அழகின் சிரிப்பு -ஆசிரியர் யார்?
பாவேந்தர் பாரதிதாசன்
- தண்ணீர் தண்ணீர் -ஆசிரியர் யார்?
கோமல் சுவாமிநாதன்
- தண்ணீர் தேசம் -ஆசிரியர் யார்
வைரமுத்து
- வாய்க்கால் மீன்கள் -ஆசிரியர்?
வெ.இறையன்பு
- மழைக்காலமும் குயிலோசையும்- ஆசிரியர் யார்?
மா.கிருஷ்ணன்
- ஒரு கிலோ ஆப்பிள் உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது?
822 லிட்டர்
- ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது
1780 லிட்டர்
- ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது
2500 லிட்டர்
- ஒரு கிலோ காபி கொட்டையை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது?
18,900 மீட்டர்
- “கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்” ஆசிரியர் யார்
மா.அமரேசன்