DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- எகிப்து அரசி கிளியோபட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக யார் தம்முடைய குறிப்பில் பதிவு செய்துள்ளார்?
பிளினி
- பிளினி எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
கிமு முதல் நூற்றாண்டு
- பிளினி எந்த நாட்டைச் சார்ந்தவர்?
இத்தாலி
- கொற்கை முத்தின் சிறப்பினைக் கூறும் நூல் எது?
அர்த்தசாஸ்திரம்
- வணிகத்திற்காக தமிழகத்திற்கு வந்து சென்றவர்கள் யார்?
கிரேக்கர்கள், ரோமானியர்கள், சாவகத்தீவினர்
- கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் எவை?
கொல்லந்துறை,எயிற்பட்டினம், அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், தொண்டி, மருங்கை ,கொற்கை
- மேற்கு கடற்கரை துறைமுக பகுதிகள் எவை?
மங்களூர் , நறவு ,தொண்டி ,மாந்தை, முசிறி,வைக்கரை,விழிஞம்
- தமிழ்நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ்பெற்ற துறைமுகம் எது?
முசிறி
- முசிறி துறைமுகம் எந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இயற்கையாய் உருவான துறைமுகமாகும்?
பேரியாறு
- காந்த ஊசி பற்றிய செய்தி எந்த நூலில் உள்ளது?
மணிமேகலை
- வஞ்சி எந்தத் துறை முகப் பட்டினத்திற்கு அருகில் அமைந்திருந்தது?
முசிறி
- யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு என்ன பெயர் ஏற்பட்டது?
யவனப்பிரியா
- “சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
- “பொன்னோடு வந்து கறியோடு பெயரும் வளங்கெழு முசிறி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
- சேரநாட்டு மிளகை அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் விற்றவர்கள் யார்?
அரேபியர்கள்
- முசிறி துறைமுகம் பட்டினத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத்திற்கு என்ன பெயர்?
பந்தர்
- பந்தர் என்பதன் பொருள் என்ன?
கடைவீதி
- முசிறி துறைமுகத்தில் யவனர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?
பவளம், கண்ணாடி ,செம்பு ,தங்கம், ஈயம்
- முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் எப்போது ஏற்படுத்தப்பட்டது ஆகும்?
கி.மு.150
- “நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” – இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து
- ” பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” – இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து
- ” பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து
- முசிறி அலெக்ஸாண்ட்ரியா ஒப்பந்தத்தின்படி கப்பலில் ஒருமுறை கொண்டு சென்ற வணிக பொருள்களின் பண மதிப்பீடு எத்தனை கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது எனக் குறிக்கப்பட்டுள்ளது?
2,94,84,000
- காவிரி ஆறு கடலில் கலக்கின்ற இடத்தில் வடகரையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகம் எது?
காவிரிபூம்பட்டினம்
- காவிரிப்பூம்பட்டினம் என்ன இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம்
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடு எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
ராமநாதபுரம், அழகன்குளம்
- அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டில் இடம்பெற்றுள்ள கீறல் கோட்டோவியம் எதனை குறிக்கிறது?
வணிகக் கப்பல்
- பொருள்களை பாதுகாப்பாக வைக்க நல்ல அகன்ற கிடங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன என்றும் ,பொருள்களுக்கு சுங்கத்தீர்வை அங்கேயே வசூலிக்கப்பட்டன என்றும் எந்த நூல் தெரிவிக்கிறது?
பட்டினப்பாலை
- சோழப் பேரரசின் இலச்சினையான புலிச்சின்னம் அடையாளமிட்டு வெளியே அனுப்புவதற்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் மலைப்போல் தோற்றம் தரும் எனக் கூறும் நூல் எது?
பட்டினப்பாலை
- கோவலன் கண்ணகி மாதவி மணிமேகலை ஆகியோர் யாருடைய ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன?
இளவரசன் கிள்ளிவளவன்
- தாமிரபரணி ஆறு கடலில் கடக்கும் இடத்தில் ஆற்றின் மேற்கு கரையில் அமைந்த இயற்கை துறைமுக நகரம் எது?
கொற்கை
- எந்த அரசன் உயிர் துறந்த பின் கொற்கையில் இருந்த பட்டத்து இளவரசன் வெற்றிவேற் செழியன் மதுரை வந்து அரியணை ஏறினான்?
பாண்டியன் நெடுஞ்செழியன்
- வெற்றிவேற்செழியன் அரியணையேறிய செய்தியை குறிப்பிடும் நூல் எது?
நீர்ப்படைக்காதை சிலப்பதிகாரம்
- பாண்டியர்களின் கப்பற்படை தளமாகவும் விளங்கிய துறைமுக நகரம் எது?
கொற்கை
- கொற்கைத் துறைமுகத்தில் செல்வர் ஏறிவரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக்கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்தன எனக் குறிப்பிடும் நூல்?
அகநானூறு
- “…கவர்நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்துறை”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
- “…கவர்நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்துறை” இது யாருடைய பாடல்?
வெண்கண்ணனார்
- வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக வந்தவை எவை?
குதிரைகள்
- உள்நாட்டில் இருந்து தரை வழியில் வந்தவை?
கறி (மிளகு)
- வட மலையில் இருந்து வந்தவை?
மெருகிடப்பட்ட பொன், மணிக்கற்கள்
- மேற்கு மலையில் இருந்து வந்தவை?
சந்தனம் ,ஆரம்
- தென் கடலில் இருந்து கிடைத்தவை?
முத்து
- கீழ்க் கடலில் விளைந்தவை?
பவளம்
- முசிறி துறைமுகத்துக்கு பருவக் காற்றின் உதவியால் நேரே நடுக் கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியை கண்டுபிடித்தவர் யார்?
ஹிப்பல்ஸ்
- ஹிப்பல்ஸ் எந்த நாட்டின் மாலுமி?
கிரேக்கம்
- முசிறி துறைமுகத்துக்கு ஹிப்பல்ஸ் பருவக்காற்றின் புதிய வழியைக் கண்டுபிடித்தது எப்போது?
கிமு முதல் நூற்றாண்டு
- முதல் நூற்றாண்டில் உரோமப் பேரரசை ஆண்டவர் யார்?
அகஸ்டஸ் சீசர்
- யவனர்- தமிழர் வணிகத்தை விரிவுபடுத்திய ரோமப் பேரரசை ஆண்ட பேரரசர்?
அகஸ்டஸ் சீசர்
- “வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
அகநானூறு 350 வது பாடல்
- கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் உரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு முத்துகளை பரிசாக அளித்தார்கள் என்று எந்த வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்?
ஸ்டிராபோ
- பாண்டிய மன்னர்களின் குதிரைப் படைகளுக்காக ஆண்டுதோறும் கொற்கை துறைமுகத்தில் எத்தனை அரேபிய குதிரைகள் வந்து இறங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்?
16000 அரேபிய குதிரைகள்
- பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த தெருவின் பெயர் என்ன?
அஃகசாலை
- மதுரையைக் குறித்து கூறியவர்கள் யார்?
கௌடில்யர், கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ்
- ஓசை நயத்துடன் பாடக்கூடிய பா வகையின் பெயர் என்ன?
சிந்து
- நாட்டுப்புறப்பாடல் அமைப்பில் இருந்து தோன்றிய சிந்து வடிவம் எந்த இலக்கிய காலத்தில் இருந்து வழக்கில் இருக்கிறது?
சிலப்பதிகாரம்
- ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவுக்கு வருவது எந்த பாவகை?
சிந்து
- பாரதியார் எந்த பாவகையினை அதிகமாக கையாண்டிருக்கிறார்?
சிந்து
- சிந்துக்குத் தந்தை என போற்றப்படுபவர் யார்?
பாரதியார்
- மதுரையை சிறப்பித்துப் பாடிய நூல்களுள் பதினெண்மேற்கணக்கில் முதன்மையான நூல் எது? மதுரைக்காஞ்சி
- “மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின் விண்உற ஓங்கிய…”எனத் தொடங்கும் மதுரைக்காஞ்சி பாடலை இயற்றியவர் யார்?
மாங்குடி மருதனார்
- “மாகால் எடுத்த முந்நீர் போல” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
மதுரைக்காஞ்சி
- “பொறிமயிர் வாரணம்…கூட்டுறை வயமாப் புலியொடு குழும”இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
மதுரைக்காஞ்சி
- மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை எந்த இலக்கியம் மூலம் அறியலாம்?
மதுரைக்காஞ்சி
- பத்துப்பாட்டு ஆராய்ச்சி எனும் நூலை எழுதியவர் யார்?
மா.இராசமாணிக்கனார்
- காஞ்சி என்றால் என்ன பொருள்?
நிலையாமை
- மதுரைக்காஞ்சி பெயர்க்காரணம் என்ன?
மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றி கூறுவதாலும்
- மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளைக் கொண்டது?
782
- மதுரைக்காஞ்சி நூலில் எத்தனை அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன?
354 அடிகள்
- மதுரைக்காஞ்சி எவ்வாறு சிறப்பித்துக் கூறப்படுகிறது? பெருகுவளமதுரைகாஞ்சி
- மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்? தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
- மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?
மாங்குடி மருதனார்
- மருதனார் எங்கு பிறந்தார்?
மாங்குடி ,திருநெல்வேலி மாவட்டம்
- மாங்குடி மருதனார் எட்டுத் தொகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
13
- பகலில் செயல்படும் கடை வீதிகளுக்கு பெயரென்ன? நாளங்காடி
- இரவில் செயல்படும் கடை வீதிகளுக்கு என்ன பெயர்? அல்லங்காடி
- அல் என்பதன் பொருள் என்ன?
இரவு
- போச்சம்பள்ளி சந்தை எந்த மாவட்டத்தில் நடைபெறுகிறது?
கிருஷ்ணகிரி மாவட்டம்
- மாட்டுத்தாவணி என்பதில் தாவணி என்பதன் பொருள் என்ன?
சந்தை
- மாட்டுச் சந்தைக்கு பேர்போன இடம் எது?
மணப்பாறை
- ஆட்டுச் சந்தைக்கு பேர்போன இடம் எது?
அய்யலுர்
- காய்கறி சந்தைக்கு பேர் போன இடம் எது?
ஒட்டன்சத்திரம்
- பூச்சந்தைக்கு பேர்போன இடம் எது? தோவாளை,நாகர்கோவில்
- ஜவுளி சந்தைக்கு பேர் போன இடம் எது?
ஈரோடு
- கருவாட்டுச் சந்தைக்கு பேர்போன இடம் எது? காராமணிக்குப்பம் ,கடலூர்
- மீன் சந்தைக்கு பேர்போன இடம் எது?
நாகப்பட்டினம்
- பலவகை தானியங்கள் விற்கும் கடைக்கு பெயர் என்ன?
கூலக்கடை
- காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் கூலங்குவித்த கூல வீதிகள் இருந்தன எனக் கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
- சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
ரா பி சேதுப்பிள்ளை
- நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் எனும் நூலை எழுதியவர்?
முனைவர் சு சக்திவேல்
- தரங்கம்பாடி தங்கப் புதையல் என்ற நூலை எழுதியவர்?
பெ.தூரன்
- இருட்டு எனக்கு பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) ஆசிரியர் யார்?
ச.தமிழ்ச்செல்வன்