DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- எந்த ஆண்டு ஆங்கிலப்படைகள் மலேசியாவில் ஜப்பானிடம் சரண் அடைந்தனர்?
1942, பிப்ரவரி 15
- சரணடைந்த வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்று படையை உருவாக்கினர்?
மோகன்சிங்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்க எத்தனை நாட்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார்?
91 நாட்கள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை எப்போது ஏற்றார்?
ஜூலை 9 ,1943
- “டெல்லி சலோ” என முழங்கியவர் யார்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- “தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்” எனக் கூறியவர்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- “நேதாஜி,தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்” எனக் கூறியதாகக் கூறியவர்?
பசும்பொன் முத்துராமலிங்கனார்
- “இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என கூறியவர்?
இந்திய தேசிய ராணுவப் படைத் தலைவராக இருந்த தில்லான்
- இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படை தாக்குதலுக்கான சிறப்பு பயிற்சி பெறுவதற்காக 45 வீரர்கள் எங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்?
ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகாடமி
- நேதாஜியால் தேர்வு செய்யப்பட்ட 45 பேர் கொண்ட பயிற்சி பிரிவின் பெயர் என்ன?
டோக்கியோ கேடட்ஸ்
- இந்திய தேசிய ராணுவத்தில் யாருடைய பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது?
ஜான்சிராணி
- இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சிராணி பெண்கள் படையின் தலைவர் யார்?
டாக்டர் லட்சுமி
- டோக்கியோ கேடட்ஸ் பிரிவில் பயிற்சி பெற்று,பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராக பணியாற்றியவர் யார்?
கேப்டன் தாசன்
- “மலேசியாவில் உள்ள தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது ” எனக் கூறியவர் யார்?
சர்ச்சில்
- “தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்” எனக் கூறியவர் யார்?
நேதாஜி
- “அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம்தருதல் மிகப்பெரிய குற்றமாகும்.நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும்.எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்கு போராடுவதே மிகச்சிறந்த நோய் குணமாகும்” இக்கூற்றை கூறியவர்?
நேதாஜி
- “மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்டநேரங்களில் வாழ கற்றுக்கொள்” இவரிகளை கூறியவர்?
நேதாஜி
- “விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்” இக்கூற்றை கூறியவர்?
நேதாஜி
- இந்திய தேசிய ராணுவம் எப்போது ஆங்கிலேயரை வென்று மணிப்பூர் பகுதியில் “மொய்ராங்” என்ற இடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியது?
மார்ச் 18,1944
- “நான் என் உயிரை கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப் படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை” எனக் கூறியவர்?
இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த இராமு
- ‘வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலையை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” எனக் கூறியவர்?
அப்துல்காதர்
- “இந்திய தேசிய ராணுவம் தமிழர் பங்கு” எனும் நூலை எழுதியவர்?
பேராசிரியர் மா.சு .அண்ணாமலை
- “வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட கொழுநிதிக் இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சீவக சிந்தாமணி
- “அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்..”இவர்கள் இடம் பெற்ற நூல்?
சீவக சிந்தாமணி
- சீவகசிந்தாமணியில் உள்ள இலம்பகம் எத்தனை?
13
- சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் என்னன்ன?
நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம்,குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம், கேமசரியார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம்,விமலையார் இலம்பகம், சுரமஞ்சரியார் இலம்பகம், மண்மகள் இலம்பகம் ,பூமகள் இலம்பகம் ,இலக்கணையார் இலம்பகம் ,முத்தி இலம்பகம்
- விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
சீவகசிந்தாமணி
- சீவக சிந்தாமணிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
மணநூல்
- சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
திருத்தக்க தேவர்
- சீவக சிந்தாமணியின் காலம் என்ன?
ஒன்பதாம் நூற்றாண்டு
- சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக இயற்றப்பட்ட நூல் எது?
நரிவிருத்தம்